Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௮௬

Qur'an Surah Al-A'raf Verse 86

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًاۚ وَاذْكُرُوْٓا اِذْ كُنْتُمْ قَلِيْلًا فَكَثَّرَكُمْۖ وَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ (الأعراف : ٧)

walā taqʿudū
وَلَا تَقْعُدُوا۟
And (do) not sit
அமராதீர்கள்
bikulli ṣirāṭin
بِكُلِّ صِرَٰطٍ
on every path
எல்லாப் பாதையிலும்
tūʿidūna
تُوعِدُونَ
threatening
அச்சுறுத்தியவர்களாக
wataṣuddūna
وَتَصُدُّونَ
and hindering
இன்னும் தடுப்பவர்களாக
ʿan sabīli
عَن سَبِيلِ
from (the) way
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
man āmana
مَنْ ءَامَنَ
(those) who believe
எவரை/ நம்பிக்கைகொண்டார்
bihi
بِهِۦ
in Him
அவனை
watabghūnahā
وَتَبْغُونَهَا
and seeking (to make) it
இன்னும் அதில் தேடியவர்களாக
ʿiwajan
عِوَجًاۚ
crooked
கோணலை
wa-udh'kurū
وَٱذْكُرُوٓا۟
And remember
நினைவு கூருங்கள்
idh
إِذْ
when
சமயம்
kuntum
كُنتُمْ
you were
இருந்தீர்கள்
qalīlan
قَلِيلًا
few
குறைவாக
fakatharakum
فَكَثَّرَكُمْۖ
and He increased you
அதிகமாக்கினான் உங்களை
wa-unẓurū
وَٱنظُرُوا۟
And see
இன்னும் கவனியுங்கள்
kayfa
كَيْفَ
how
எவ்வாறு
kāna
كَانَ
was
இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
(the) end
முடிவு
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
(of) the corrupters
கலகம் செய்பவர்களின்

Transliteration:

Wa laa taq'udoo bikulli siraatin too'idoona wa tasuddoona 'an sabeelil laahi man aamana bihee wa abghoonahaa 'iwajaa; waz kurooo iz kuntum qaleelan fakassarakum wanzuroo kaifa kaana 'aaqibatul mufsideen (QS. al-ʾAʿrāf:86)

English Sahih International:

And do not sit on every path, threatening and averting from the way of Allah those who believe in Him, seeking to make it [seem] deviant. And remember when you were few and He increased you. And see how was the end of the corrupters. (QS. Al-A'raf, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்துகொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்துகொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக!" (என்றும் கூறினார்.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௮௬)

Jan Trust Foundation

“மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக” (என்றும் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நீங்கள் எல்லாப் பாதையிலும் அச்சுறுத்தியவர்களாகவும் அல்லாஹ்வின் பாதையை விட்டு அவனை நம்பிக்கை கொண்டவரை தடுப்பவர்களாகவும் இன்னும் அதில் கோணலைத் தேடியவர்களாகவும் அமராதீர்கள். நீங்கள் குறைவாக இருந்தபோது அவன் உங்க(ள் எண்ணிக்கைக)ளை அதிகமாக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். கலகம் செய்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று கவனியுங்கள்!”