Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௮௯

Qur'an Surah Al-A'raf Verse 89

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَدِ افْتَرَيْنَا عَلَى اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِيْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰىنَا اللّٰهُ مِنْهَاۗ وَمَا يَكُوْنُ لَنَآ اَنْ نَّعُوْدَ فِيْهَآ اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ رَبُّنَاۗ وَسِعَ رَبُّنَا كُلَّ شَيْءٍ عِلْمًاۗ عَلَى اللّٰهِ تَوَكَّلْنَاۗ رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَيْرُ الْفَاتِحِيْنَ (الأعراف : ٧)

qadi if'taraynā
قَدِ ٱفْتَرَيْنَا
Verily we would have fabricated
நாங்கள் இட்டுக்கட்டிவிடுவோம்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
against Allah
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًا
a lie
பொய்யை
in ʿud'nā
إِنْ عُدْنَا
if we returned
நாங்கள் திரும்பினால்
fī millatikum
فِى مِلَّتِكُم
in your religion
உங்கள் கொள்கைக்கு
baʿda
بَعْدَ
after
பின்னர்
idh
إِذْ
[when]
போது
najjānā
نَجَّىٰنَا
saved us
பாதுகாத்தான்/ எங்களை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
min'hā
مِنْهَاۚ
from it
அதிலிருந்து
wamā yakūnu lanā
وَمَا يَكُونُ لَنَآ
And not it is for us
ஆகாது/எங்களுக்கு
an naʿūda
أَن نَّعُودَ
that we return
நாங்கள் திரும்புவது
fīhā
فِيهَآ
in it
அதில்
illā
إِلَّآ
except
தவிர
an yashāa
أَن يَشَآءَ
that wills
நாடியே
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
rabbunā
رَبُّنَاۚ
our Lord
எங்கள் இறைவனாகிய
wasiʿa
وَسِعَ
Encompasses
விசாலமானவன்
rabbunā
رَبُّنَا
(by) Our Lord
எங்கள் இறைவன்
kulla shayin
كُلَّ شَىْءٍ
every thing
எல்லாவற்றையும்விட
ʿil'man
عِلْمًاۚ
(in) knowledge
ஞானத்தால்
ʿalā
عَلَى
Upon
மீதே
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்வின்
tawakkalnā
تَوَكَّلْنَاۚ
we put our trust
நம்பிக்கைவைத்தோம்
rabbanā
رَبَّنَا
Our Lord!
எங்கள் இறைவா
if'taḥ
ٱفْتَحْ
Decide
தீர்ப்பளி(முடிவுசெய்)
baynanā
بَيْنَنَا
between us
எங்களுக்கிடையில்
wabayna
وَبَيْنَ
and between
இன்னும் இடையில்
qawminā
قَوْمِنَا
our people
எங்கள் சமுதாயத்திற்கு
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in truth
நியாயமாக
wa-anta
وَأَنتَ
and You
நீ
khayru
خَيْرُ
(are the) Best
மிகச் சிறந்தவன்
l-fātiḥīna
ٱلْفَٰتِحِينَ
(of) those who Decide"
தீர்ப்பளிப்பவர்களில்

Transliteration:

Qadif tarainaa 'alal laahi kaziban in 'udnaa fee millatikum ba'da iz najjaanal laahu minhaa; wa maa yakoonu lanaaa an na'ooda feehaaa illaaa ai yashaaa'al laahu Rabbunaa; wasi'a Rabbunaa kulla shai'in 'ilmaa; 'alal laahi tawakkalnaa; Rabbanaf tah bainanaa wa baina qawminaa bilhaqqi wa Anta khairul faatiheen (QS. al-ʾAʿrāf:89)

English Sahih International:

We would have invented against Allah a lie if we returned to your religion after Allah had saved us from it. And it is not for us to return to it except that Allah, our Lord, should will. Our Lord has encompassed all things in knowledge. Upon Allah we have relied. Our Lord, decide between us and our people in truth, and You are the best of those who give decision." (QS. Al-A'raf, Ayah ௮௯)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்" (என்றும் கூறி, இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்" (என்றும் பிரார்த்தித்தார்.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௮௯)

Jan Trust Foundation

“உங்கள் மார்க்கத்தை விட்டு, அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதற்கு திரும்பவே மாட்டோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்“ (என்று கூறி), “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“உங்கள் கொள்கைக்கு நாங்கள் திரும்பினால் -அல்லாஹ் எங்களை அதிலிருந்து பாதுகாத்த பின்னர்- நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டி(யவர்களாகி) விடுவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடியே தவிர நாங்கள் அதில் திரும்புவது எங்களுக்கு ஆகாது. எங்கள் இறைவன் ஞானத்தால் எல்லாவற்றையும்விட விசாலமானவன். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்தோம். எங்கள் இறைவா! எங்களுக்கிடையிலும் எங்கள் சமுதாயத்திற்கிடையிலும் நியாயமாக தீர்ப்பளி! நீ தீர்ப்பளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்” என்று கூறினார் (ஷுஐபு).