الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَاۚ فَالْيَوْمَ نَنْسٰىهُمْ كَمَا نَسُوْا لِقَاۤءَ يَوْمِهِمْ هٰذَاۙ وَمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ ٥١
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ittakhadhū
- ٱتَّخَذُوا۟
- எடுத்துக் கொண்டனர்
- dīnahum
- دِينَهُمْ
- தங்கள் மார்க்கத்தை
- lahwan
- لَهْوًا
- கேளிக்கையாக
- walaʿiban
- وَلَعِبًا
- இன்னும் விளையாட்டாக
- wagharrathumu
- وَغَرَّتْهُمُ
- இன்னும் மயக்கியது/அவர்களை
- l-ḥayatu
- ٱلْحَيَوٰةُ
- வாழ்க்கை
- l-dun'yā
- ٱلدُّنْيَاۚ
- உலகம்
- fal-yawma
- فَٱلْيَوْمَ
- இன்று
- nansāhum
- نَنسَىٰهُمْ
- மறப்போம்/அவர்களை
- kamā nasū
- كَمَا نَسُوا۟
- அவர்கள் மறந்ததினால்
- liqāa
- لِقَآءَ
- சந்திப்பை
- yawmihim hādhā
- يَوْمِهِمْ هَٰذَا
- அவர்களுடைய இந்நாளின்
- wamā kānū
- وَمَا كَانُوا۟
- இன்னும் அவர்கள் இருந்த காரணத்தால்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நம் வசனங்களை
- yajḥadūna
- يَجْحَدُونَ
- மறுப்பார்கள்
இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்களுடைய மார்க்கத்தை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௧)Tafseer
وَلَقَدْ جِئْنٰهُمْ بِكِتٰبٍ فَصَّلْنٰهُ عَلٰى عِلْمٍ هُدًى وَّرَحْمَةً لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٥٢
- walaqad ji'nāhum
- وَلَقَدْ جِئْنَٰهُم
- திட்டவட்டமாக/வந்தோம்/அவர்களிடம்
- bikitābin
- بِكِتَٰبٍ
- ஒரு வேதத்தைக் கொண்டு
- faṣṣalnāhu
- فَصَّلْنَٰهُ
- விவரித்தோம்/அதை
- ʿalā ʿil'min
- عَلَىٰ عِلْمٍ
- அறிந்து
- hudan
- هُدًى
- நேர்வழியாக
- waraḥmatan
- وَرَحْمَةً
- இன்னும் கருணையாக
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்கிறார்கள்
நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் ஞான முறையில் விவரித்திருக்கின்றோம். (அன்றி அது) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கின்றது. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௨)Tafseer
هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَأْوِيْلَهٗۗ يَوْمَ يَأْتِيْ تَأْوِيْلُهٗ يَقُوْلُ الَّذِيْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَاۤءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّۚ فَهَلْ لَّنَا مِنْ شُفَعَاۤءَ فَيَشْفَعُوْا لَنَآ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِيْ كُنَّا نَعْمَلُۗ قَدْ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ࣖ ٥٣
- hal yanẓurūna
- هَلْ يَنظُرُونَ
- எதிர்பார்க்கின்றனரா?
- illā
- إِلَّا
- தவிர
- tawīlahu
- تَأْوِيلَهُۥۚ
- அதன் முடிவை
- yawma
- يَوْمَ
- நாள்
- yatī
- يَأْتِى
- வரும்
- tawīluhu
- تَأْوِيلُهُۥ
- அதன் முடிவு
- yaqūlu
- يَقُولُ
- கூறுவார்(கள்)
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- nasūhu
- نَسُوهُ
- மறந்தனர்/அதை
- min qablu
- مِن قَبْلُ
- முன்னர்
- qad jāat
- قَدْ جَآءَتْ
- வந்தா(ர்க)ள்
- rusulu
- رُسُلُ
- தூதர்கள்
- rabbinā
- رَبِّنَا
- எங்கள் இறைவனின்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- உண்மையைக் கொண்டு
- fahal lanā
- فَهَل لَّنَا
- எங்களுக்கு உண்டா?
- min shufaʿāa
- مِن شُفَعَآءَ
- சிபாரிசு செய்பவர்களில்
- fayashfaʿū
- فَيَشْفَعُوا۟
- சிபாரிசு செய்வார்கள்
- lanā
- لَنَآ
- எங்களுக்கு
- aw
- أَوْ
- அல்லது
- nuraddu
- نُرَدُّ
- நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால்
- fanaʿmala
- فَنَعْمَلَ
- செய்வோமே
- ghayra alladhī
- غَيْرَ ٱلَّذِى
- அல்லாததை
- kunnā naʿmalu
- كُنَّا نَعْمَلُۚ
- இருந்தோம்/செய்வோம்
- qad khasirū
- قَدْ خَسِرُوٓا۟
- நஷ்டமிழைத்துக் கொண்டனர்
- anfusahum
- أَنفُسَهُمْ
- தங்களுக்கே
- waḍalla
- وَضَلَّ
- இன்னும் மறைந்துவிட்டன
- ʿanhum
- عَنْهُم
- அவர்களை விட்டு
- mā kānū
- مَّا كَانُوا۟
- எவை/இருந்தனர்
- yaftarūna
- يَفْتَرُونَ
- இட்டுக்கட்டுவார்கள்
(மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதையன்றி (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள் "நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப் பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவைகளைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்" என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். அன்றி இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௩)Tafseer
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِۗ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًاۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖٓ ۙاَلَا لَهُ الْخَلْقُ وَالْاَمْرُۗ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ٥٤
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbakumu
- رَبَّكُمُ
- உங்கள் இறைவன்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhī khalaqa
- ٱلَّذِى خَلَقَ
- எவன் படைத்தான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களை
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- இன்னும் பூமியை
- fī sittati ayyāmin
- فِى سِتَّةِ أَيَّامٍ
- ஆறு நாட்களில்
- thumma
- ثُمَّ
- பிறகு
- is'tawā
- ٱسْتَوَىٰ
- உயர்ந்து விட்டான்
- ʿalā l-ʿarshi
- عَلَى ٱلْعَرْشِ
- அர்ஷின் மீது
- yugh'shī
- يُغْشِى
- மூடுகிறான்
- al-layla
- ٱلَّيْلَ
- இரவால்
- l-nahāra
- ٱلنَّهَارَ
- பகலை
- yaṭlubuhu
- يَطْلُبُهُۥ
- தேடுகிறது/அதை
- ḥathīthan
- حَثِيثًا
- தீவிரமாக
- wal-shamsa
- وَٱلشَّمْسَ
- இன்னும் சூரியனை
- wal-qamara
- وَٱلْقَمَرَ
- இன்னும் சந்திரனை
- wal-nujūma
- وَٱلنُّجُومَ
- இன்னும் நட்சத்திரங்களை
- musakharātin
- مُسَخَّرَٰتٍۭ
- வசப்படுத்தப்பட்டவையாக
- bi-amrihi
- بِأَمْرِهِۦٓۗ
- தனது கட்டளைக் கொண்டு
- alā
- أَلَا
- அறிந்துகொள்ளுங்கள்!
- lahu
- لَهُ
- அவனுக்கே
- l-khalqu
- ٱلْخَلْقُ
- படைத்தல்
- wal-amru
- وَٱلْأَمْرُۗ
- இன்னும் அதிகாரம்
- tabāraka
- تَبَارَكَ
- அருள் வளமிக்கவன்
- l-lahu rabbu
- ٱللَّهُ رَبُّ
- அல்லாஹ்/இறைவன்
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதனைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு உட்பட்டவைகளே. படைப்பினங்களும் (படைத்தலும்) அதன் ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௪)Tafseer
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً ۗاِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَۚ ٥٥
- id'ʿū
- ٱدْعُوا۟
- அழையுங்கள்
- rabbakum
- رَبَّكُمْ
- உங்கள் இறைவனை
- taḍarruʿan
- تَضَرُّعًا
- தாழ்மையாக
- wakhuf'yatan
- وَخُفْيَةًۚ
- இன்னும் மறைவாக
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- l-muʿ'tadīna
- ٱلْمُعْتَدِينَ
- வரம்பு மீறுபவர்களை
ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௫)Tafseer
وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًاۗ اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ ٥٦
- walā tuf'sidū
- وَلَا تُفْسِدُوا۟
- கலகம் செய்யாதீர்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- iṣ'lāḥihā
- إِصْلَٰحِهَا
- அது சீர்திருத்தப்பட்ட
- wa-id'ʿūhu
- وَٱدْعُوهُ
- அழையுங்கள்/அவனை
- khawfan
- خَوْفًا
- பயத்துடன்
- waṭamaʿan
- وَطَمَعًاۚ
- இன்னும் ஆசையுடன்
- inna raḥmata
- إِنَّ رَحْمَتَ
- நிச்சயமாக கருணை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- qarībun
- قَرِيبٌ
- சமீபமானது
- mina l-muḥ'sinīna
- مِّنَ ٱلْمُحْسِنِينَ
- நல்லறம் புரிவோருக்கு
(மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) நாடு சீர்திருந்திய பின்னர் அதில் விஷமம் செய்து கொண்டலையாதீர்கள். (இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய சன்மானத்தை) விரும்பியும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௬)Tafseer
وَهُوَ الَّذِيْ يُرْسِلُ الرِّيٰحَ بُشْرًاۢ بَيْنَ يَدَيْ رَحْمَتِهٖۗ حَتّٰٓى اِذَآ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَاۤءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِۗ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ٥٧
- wahuwa
- وَهُوَ
- அவன்
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- yur'silu
- يُرْسِلُ
- அனுப்புகிறான்
- l-riyāḥa
- ٱلرِّيَٰحَ
- காற்றுகளை
- bush'ran
- بُشْرًۢا
- நற்செய்தியாக
- bayna yaday
- بَيْنَ يَدَىْ
- முன்னர்
- raḥmatihi
- رَحْمَتِهِۦۖ
- தனது கருணைக்கு
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā aqallat
- إِذَآ أَقَلَّتْ
- அது சுமந்தால்
- saḥāban
- سَحَابًا
- மேகத்தை
- thiqālan
- ثِقَالًا
- கன(மான)
- suq'nāhu
- سُقْنَٰهُ
- ஓட்டுகிறோம்/அதை
- libaladin
- لِبَلَدٍ
- பூமியின் பக்கம்
- mayyitin
- مَّيِّتٍ
- இறந்தது
- fa-anzalnā
- فَأَنزَلْنَا
- இன்னும் இறக்குகிறோம்
- bihi
- بِهِ
- அதிலிருந்து
- l-māa
- ٱلْمَآءَ
- மழையை
- fa-akhrajnā
- فَأَخْرَجْنَا
- இன்னும் வெளியாக்குகிறோம்
- bihi
- بِهِۦ
- அதன் மூலம்
- min
- مِن
- இருந்து
- kulli
- كُلِّ
- எல்லாம்
- l-thamarāti
- ٱلثَّمَرَٰتِۚ
- கனிகள்
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறே
- nukh'riju
- نُخْرِجُ
- வெளியாக்குவோம்
- l-mawtā
- ٱلْمَوْتَىٰ
- மரணித்தவர்களை
- laʿallakum tadhakkarūna
- لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
- நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
அவன்தான் அவனுடைய அருள்மழைக்கு (முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பி வைக்கின்றான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர் அதனை நாம் (வரண்டு) இறந்த பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கின்றோம். பின்னர் அதைக் கொண்டு எல்லா வகைக் கனிகளையும் வெளியாக்குகின்றோம். இவ்வாறே மரணித்தவர்களையும் (அவர்களின் சமாதிகளிலிருந்து) வெளியாக்குவோம். (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக! ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௭)Tafseer
وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖۚ وَالَّذِيْ خَبُثَ لَا يَخْرُجُ اِلَّا نَكِدًاۗ كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّشْكُرُوْنَ ࣖ ٥٨
- wal-baladu
- وَٱلْبَلَدُ
- பூமி
- l-ṭayibu
- ٱلطَّيِّبُ
- நல்லது
- yakhruju
- يَخْرُجُ
- வெளியாகிறது
- nabātuhu
- نَبَاتُهُۥ
- அதன் தாவரம்
- bi-idh'ni
- بِإِذْنِ
- அனுமதி கொண்டு
- rabbihi
- رَبِّهِۦۖ
- தன் இறைவனின்
- wa-alladhī
- وَٱلَّذِى
- எது
- khabutha
- خَبُثَ
- கெட்டுவிட்டது
- lā yakhruju
- لَا يَخْرُجُ
- வெளியாகாது
- illā
- إِلَّا
- தவிர
- nakidan
- نَكِدًاۚ
- வெகு சொற்பமாக
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறு
- nuṣarrifu
- نُصَرِّفُ
- விவரிக்கிறோம்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- வசனங்களை
- liqawmin
- لِقَوْمٍ
- மக்களுக்கு
- yashkurūna
- يَشْكُرُونَ
- நன்றி செலுத்துகிறார்கள்
(ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௮)Tafseer
لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ اِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ ٥٩
- laqad
- لَقَدْ
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- அனுப்பினோம்
- nūḥan
- نُوحًا
- நூஹை
- ilā qawmihi
- إِلَىٰ قَوْمِهِۦ
- அவருடைய சமுதாயத்திற்கு
- faqāla
- فَقَالَ
- கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- என் சமுதாயமே
- uʿ'budū
- ٱعْبُدُوا۟
- வணங்குங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- mā
- مَا
- இல்லை
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- min ilāhin
- مِّنْ إِلَٰهٍ
- வணங்கப்படும் ஒரு கடவுளும்
- ghayruhu
- غَيْرُهُۥٓ
- அவனையன்றி
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- akhāfu
- أَخَافُ
- பயப்படுகிறேன்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- ʿadhāba
- عَذَابَ
- வேதனையை
- yawmin ʿaẓīmin
- يَوْمٍ عَظِيمٍ
- மகத்தான நாளின்
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்முடைய) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௯)Tafseer
قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖٓ اِنَّا لَنَرٰىكَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٦٠
- qāla
- قَالَ
- கூறினர்
- l-mala-u
- ٱلْمَلَأُ
- தலைவர்கள் (முக்கியஸ்தர்கள்)
- min qawmihi
- مِن قَوْمِهِۦٓ
- இருந்து/சமுதாயம்/அவருடைய
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- lanarāka
- لَنَرَىٰكَ
- உம்மை காண்கிறோம்
- fī ḍalālin
- فِى ضَلَٰلٍ
- வழிகேட்டில்
- mubīnin
- مُّبِينٍ
- தெளிவானது
அதற்கு அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நீங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கின்றோம்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬௦)Tafseer