Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௫௯

Qur'an Surah Al-A'raf Verse 59

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ اِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ (الأعراف : ٧)

laqad
لَقَدْ
Certainly
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
We sent
அனுப்பினோம்
nūḥan
نُوحًا
Nuh
நூஹை
ilā qawmihi
إِلَىٰ قَوْمِهِۦ
to his people
அவருடைய சமுதாயத்திற்கு
faqāla
فَقَالَ
and he said
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் சமுதாயமே
uʿ'budū
ٱعْبُدُوا۟
Worship
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
مَا
not
இல்லை
lakum
لَكُم
for you
உங்களுக்கு
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
any god
வணங்கப்படும் ஒரு கடவுளும்
ghayruhu
غَيْرُهُۥٓ
other than Him
அவனையன்றி
innī
إِنِّىٓ
Indeed I
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
[I] fear
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
for you
உங்கள் மீது
ʿadhāba
عَذَابَ
punishment
வேதனையை
yawmin ʿaẓīmin
يَوْمٍ عَظِيمٍ
(of the) Day Great"
மகத்தான நாளின்

Transliteration:

Laqad arsalnaa noohan ilaa qawmihee faqaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahin ghairuhoo inneee akhaafu 'alaikum 'azaaba Yawmin 'Azeem (QS. al-ʾAʿrāf:59)

English Sahih International:

We had certainly sent Noah to his people, and he said, "O my people, worship Allah; you have no deity other than Him. Indeed, I fear for you the punishment of a tremendous Day." (QS. Al-A'raf, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்முடைய) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்" என்று கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௫௯)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக நூஹை அவருடைய சமுதாயத்திற்கு அனுப்பினோம். (அவர்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி வணங்கப்படும் எந்த ஒரு கடவுளும் உங்களுக்கில்லை. உங்கள் மீது மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்”என்று கூறினார்.