Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 15

Al-A'raf

(al-ʾAʿrāf)

௧௪௧

وَاِذْ اَنْجَيْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَكُمْ سُوْۤءَ الْعَذَابِۚ يُقَتِّلُوْنَ اَبْنَاۤءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَاۤءَكُمْۗ وَفِيْ ذٰلِكُمْ بَلَاۤءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ ࣖ ١٤١

wa-idh anjaynākum
وَإِذْ أَنجَيْنَٰكُم
சமயம்/காப்பாற்றினோம்/உங்களை
min
مِّنْ
இருந்து
āli
ءَالِ
குடும்பத்தார்
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
yasūmūnakum
يَسُومُونَكُمْ
துன்புறுத்துகின்றனர்/உங்களை
sūa l-ʿadhābi
سُوٓءَ ٱلْعَذَابِۖ
கொடியவேதனையால்
yuqattilūna
يُقَتِّلُونَ
கொன்றுகுவிப்பார்கள்
abnāakum
أَبْنَآءَكُمْ
உங்கள் மகன்களை
wayastaḥyūna
وَيَسْتَحْيُونَ
இன்னும் வாழவிடுவார்கள்
nisāakum
نِسَآءَكُمْۚ
உங்கள்பெண்களை
wafī dhālikum
وَفِى ذَٰلِكُم
இதில்
balāon
بَلَآءٌ
சோதனை
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
ʿaẓīmun
عَظِيمٌ
பெரியது
(இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௪௧)
Tafseer
௧௪௨

۞ وَوٰعَدْنَا مُوْسٰى ثَلٰثِيْنَ لَيْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيْقَاتُ رَبِّهٖٓ اَرْبَعِيْنَ لَيْلَةً ۚوَقَالَ مُوْسٰى لِاَخِيْهِ هٰرُوْنَ اخْلُفْنِيْ فِيْ قَوْمِيْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيْلَ الْمُفْسِدِيْنَ ١٤٢

wawāʿadnā
وَوَٰعَدْنَا
வாக்களித்தோம்
mūsā
مُوسَىٰ
மூஸாவுக்கு
thalāthīna
ثَلَٰثِينَ
முப்பது
laylatan
لَيْلَةً
இரவு(களை)
wa-atmamnāhā
وَأَتْمَمْنَٰهَا
இன்னும் முழுமைப்படுத்தினோம்/அதை
biʿashrin
بِعَشْرٍ
பத்து இரவுகளைக் கொண்டு
fatamma
فَتَمَّ
ஆகவே முழுமையடைந்தது
mīqātu
مِيقَٰتُ
குறிப்பிட்ட காலம்
rabbihi
رَبِّهِۦٓ
அவருடைய இறைவனின்
arbaʿīna
أَرْبَعِينَ
நாற்பது
laylatan
لَيْلَةًۚ
இரவு(களாக)
waqāla mūsā
وَقَالَ مُوسَىٰ
கூறினார்/மூஸா
li-akhīhi
لِأَخِيهِ
தன் சகோதரருக்கு
hārūna
هَٰرُونَ
ஹாரூன்
ukh'luf'nī
ٱخْلُفْنِى
நீர் எனக்கு பிரதிநிதியாக இரு
fī qawmī
فِى قَوْمِى
என் சமுதாயத்தில்
wa-aṣliḥ
وَأَصْلِحْ
இன்னும் சீர்திருத்து
walā tattabiʿ
وَلَا تَتَّبِعْ
பின்பற்றாதே
sabīla
سَبِيلَ
பாதையை
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
விஷமிகளுடைய
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி "நீங்கள் நம்முடைய மக்களிடையே என்னுடைய இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துங்கள். அன்றி விஷமிகளுடைய வழியை நீங்கள் பின்பற்றாதீர்கள்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௪௨)
Tafseer
௧௪௩

وَلَمَّا جَاۤءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗۙ قَالَ رَبِّ اَرِنِيْٓ اَنْظُرْ اِلَيْكَۗ قَالَ لَنْ تَرٰىنِيْ وَلٰكِنِ انْظُرْ اِلَى الْجَبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰىنِيْۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًاۚ فَلَمَّآ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا۠ اَوَّلُ الْمُؤْمِنِيْنَ ١٤٣

walammā jāa
وَلَمَّا جَآءَ
போது/வந்தார்
mūsā
مُوسَىٰ
மூஸா
limīqātinā
لِمِيقَٰتِنَا
நமது குறித்தநேரத்திற்கு
wakallamahu
وَكَلَّمَهُۥ
இன்னும் பேசினாu/அவருடன்
rabbuhu
رَبُّهُۥ
அவருடைய இறைவன்
qāla
قَالَ
கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
arinī
أَرِنِىٓ
நீ காண்பி/எனக்கு
anẓur
أَنظُرْ
பார்ப்பேன்
ilayka
إِلَيْكَۚ
உன்னை
qāla
قَالَ
கூறினான்
lan tarānī
لَن تَرَىٰنِى
என்னை நீர் அறவே பார்க்க மாட்டீர்
walākini
وَلَٰكِنِ
எனினும்
unẓur
ٱنظُرْ
பார்ப்பீராக!
ilā l-jabali
إِلَى ٱلْجَبَلِ
மலையை
fa-ini is'taqarra
فَإِنِ ٱسْتَقَرَّ
அது நிலைத்தால்
makānahu
مَكَانَهُۥ
தன் இடத்தில்
fasawfa tarānī
فَسَوْفَ تَرَىٰنِىۚ
நீர் என்னைப் பார்ப்பீர்
falammā
فَلَمَّا
போது
tajallā
تَجَلَّىٰ
வெளிப்பட்டான்
rabbuhu
رَبُّهُۥ
அவருடைய இறைவன்
lil'jabali
لِلْجَبَلِ
அம்மலை மீது
jaʿalahu
جَعَلَهُۥ
ஆக்கினான்/அதை
dakkan
دَكًّا
துகளாக
wakharra
وَخَرَّ
இன்னும் விழுந்தார்
mūsā
مُوسَىٰ
மூஸா
ṣaʿiqan
صَعِقًاۚ
மூர்ச்சையானவராக
falammā
فَلَمَّآ
போது
afāqa
أَفَاقَ
தெளிவுபெற்றார்
qāla
قَالَ
கூறினார்
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
நீ மிகப் பரிசுத்தமானவன்
tub'tu
تُبْتُ
நான் திருந்தி திரும்புகிறேன்
ilayka
إِلَيْكَ
உன் பக்கம்
wa-anā awwalu
وَأَنَا۠ أَوَّلُ
நான்/முதலாமவன்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொள்பவர்களில்
நாம் (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்தபொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். (அப்பொழுது மூஸா தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நான் உன்னை (என் கண்ணால்) பார்க்க (விரும்புகின்றேன்.) நீ உன்னை எனக்கு காண்பி" என்று கூறினார். (அதற்கு இறைவன் "நேர்முகமாக) என்னைக் காண உங்களால் ஒருக்காலும் முடியாது. எனினும் இம்மலையை நீங்கள் நோக்குங்கள். அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் நீங்கள் என்னைக் காண்பீர்கள்" என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தோற்றமளிக்கவே அது தவிடு பொடியாயிற்று. மூஸா திடுக்கிட்டு (மூர்ச்சையாகி) விழுந்தார். அவர் தெளிவுபெறவே (இறைவனை நோக்கி) "நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி) உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றேன். அன்றி, உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மையானவன்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௪௩)
Tafseer
௧௪௪

قَالَ يٰمُوْسٰٓى اِنِّى اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ بِرِسٰلٰتِيْ وَبِكَلَامِيْ ۖفَخُذْ مَآ اٰتَيْتُكَ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ ١٤٤

qāla
قَالَ
கூறினான்
yāmūsā
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
iṣ'ṭafaytuka
ٱصْطَفَيْتُكَ
தேர்ந்தெடுத்தேன்/ உம்மை
ʿalā l-nāsi
عَلَى ٱلنَّاسِ
மக்களை விட
birisālātī
بِرِسَٰلَٰتِى
என் தூதுகளுக்கும்
wabikalāmī
وَبِكَلَٰمِى
இன்னும் என் பேச்சுக்கும்
fakhudh
فَخُذْ
ஆகவே பற்றிப்பிடிப்பீராக
mā ātaytuka
مَآ ءَاتَيْتُكَ
எதை/கொடுத்தேன்/உமக்கு
wakun
وَكُن
ஆகிவிடுவீராக
mina l-shākirīna
مِّنَ ٱلشَّٰكِرِينَ
நன்றிசெலுத்துவோரில்
(அதற்கு இறைவன்) "மூஸாவே! என்னுடைய தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்களது காலத்தில் உள்ள) மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றேன். ஆகவே, நான் உங்களுக்குக் கொடுப்பதை (பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும், (அதற்காக) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராக) நீங்களும் இருங்கள்" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௪௪)
Tafseer
௧௪௫

وَكَتَبْنَا لَهٗ فِى الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِيْلًا لِّكُلِّ شَيْءٍۚ فَخُذْهَا بِقُوَّةٍ وَّأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوْا بِاَحْسَنِهَا ۗسَاُورِيْكُمْ دَارَ الْفٰسِقِيْنَ ١٤٥

wakatabnā
وَكَتَبْنَا
இன்னும் எழுதினோம்
lahu
لَهُۥ
அவருக்கு
fī l-alwāḥi
فِى ٱلْأَلْوَاحِ
பலகைகளில்
min kulli shayin
مِن كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
mawʿiẓatan
مَّوْعِظَةً
(ஓர்) அறிவுரையை
watafṣīlan
وَتَفْصِيلًا
இன்னும் விளக்கத்தை
likulli shayin
لِّكُلِّ شَىْءٍ
எல்லாவற்றுக்குரிய
fakhudh'hā
فَخُذْهَا
ஆகவே இவற்றைப் பற்றிப் பிடிப்பீராக
biquwwatin
بِقُوَّةٍ
பலமாக
wamur
وَأْمُرْ
இன்னும் ஏவுவீராக
qawmaka
قَوْمَكَ
உம் சமுதாயத்தை
yakhudhū
يَأْخُذُوا۟
அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும்
bi-aḥsanihā
بِأَحْسَنِهَاۚ
அவற்றில் மிக அழகியவற்றை
sa-urīkum
سَأُو۟رِيكُمْ
காண்பிப்பேன்/உங்களுக்கு
dāra
دَارَ
இல்லத்தை
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
பாவிகளின்
(நாம் அவருக்குக் கொடுத்த கற்)பலகைகளில் நல்லுபதேசங்கள் அனைத்தையும், ஒவ்வொரு கட்டளையின் விவரத்தையும் அவருக்காக நாம் எழுதி "நீங்கள் இதனைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு அதிலிருக்கும் மிக அழகியவைகளை எடுத்து நடக்கும்படி உங்களுடைய மக்களுக்கு நீங்கள் கட்டளையிடுங்கள். (உங்களுக்கு மாறு செய்யும்) பாவிகள் தங்கும் இடத்தை அதிசீக்கிரத்தில் நாம் உங்களுக்குக் காண்பிப்போம்" என்றும் (நாம் மூஸாவுக்குக் கூறினோம்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௪௫)
Tafseer
௧௪௬

سَاَصْرِفُ عَنْ اٰيٰتِيَ الَّذِيْنَ يَتَكَبَّرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّۗ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَاۚ وَاِنْ يَّرَوْا سَبِيْلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوْهُ سَبِيْلًاۚ وَاِنْ يَّرَوْا سَبِيْلَ الْغَيِّ يَتَّخِذُوْهُ سَبِيْلًاۗ ذٰلِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ ١٤٦

sa-aṣrifu
سَأَصْرِفُ
திருப்புவேன்
ʿan
عَنْ
விட்டு
āyātiya
ءَايَٰتِىَ
என் அத்தாட்சிகள், என் வசனங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yatakabbarūna
يَتَكَبَّرُونَ
பெருமையடிப்பார்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
bighayri l-ḥaqi
بِغَيْرِ ٱلْحَقِّ
நியாயமின்றி
wa-in yaraw
وَإِن يَرَوْا۟
அவர்கள் பார்த்தால்
kulla āyatin
كُلَّ ءَايَةٍ
எல்லாம்/அத்தாட்சி
lā yu'minū
لَّا يُؤْمِنُوا۟
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bihā
بِهَا
அவற்றை
wa-in yaraw
وَإِن يَرَوْا۟
இன்னும் அவர்கள் பார்த்தால்
sabīla
سَبِيلَ
பாதையை
l-rush'di
ٱلرُّشْدِ
நேரிய
lā yattakhidhūhu
لَا يَتَّخِذُوهُ
எடுத்துக் கொள்ள மாட்டார்கள்/அதை
sabīlan
سَبِيلًا
பாதையாக
wa-in yaraw
وَإِن يَرَوْا۟
அவர்கள் பார்த்தால்
sabīla
سَبِيلَ
பாதையை
l-ghayi
ٱلْغَىِّ
வழிகேட்டின்
yattakhidhūhu
يَتَّخِذُوهُ
எடுத்துக் கொள்வார்கள்/அதை
sabīlan
سَبِيلًاۚ
பாதையாக
dhālika
ذَٰلِكَ
அது
bi-annahum
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
wakānū
وَكَانُوا۟
இருந்தார்கள்
ʿanhā
عَنْهَا
அவற்றை விட்டு
ghāfilīna
غَٰفِلِينَ
கவனமற்றவர்களாக
நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவைகளை நம்பவே மாட்டார்கள். அவ்வாறே நேரான வழியை அவர்கள் கண்டபோதிலும் அவர்கள் அதனை (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும், தவறான வழியைக் கண்டாலோ அதனையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவைகளைப் புறக்கணித்து பராமுகமாயிருந்ததே இதற்குரிய காரணமாகும். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௪௬)
Tafseer
௧௪௭

وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَلِقَاۤءِ الْاٰخِرَةِ حَبِطَتْ اَعْمَالُهُمْۗ هَلْ يُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ ࣖ ١٤٧

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
waliqāi
وَلِقَآءِ
இன்னும் சந்திப்பை
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
ḥabiṭat
حَبِطَتْ
பாழாகின
aʿmāluhum
أَعْمَٰلُهُمْۚ
(நற்)செயல்கள்/அவர்களுடைய
hal yuj'zawna
هَلْ يُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவார்களா?
illā mā kānū yaʿmalūna
إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ
தவிர/எவற்றை/இருந்தனர்/செய்வார்கள்
ஆகவே, எவர்கள் நம்முடைய வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகின்றார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப் படுவார்களா? ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௪௭)
Tafseer
௧௪௮

وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰى مِنْۢ بَعْدِهٖ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌۗ اَلَمْ يَرَوْا اَنَّهٗ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيْهِمْ سَبِيْلًاۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِيْنَ ١٤٨

wa-ittakhadha
وَٱتَّخَذَ
எடுத்துக் கொண்டனர்
qawmu
قَوْمُ
சமுதாயம்
mūsā
مُوسَىٰ
மூஸாவுடைய
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
min ḥuliyyihim
مِنْ حُلِيِّهِمْ
தங்கள் நகையிலிருந்து
ʿij'lan
عِجْلًا
ஒரு காளைக் கன்றை
jasadan lahu
جَسَدًا لَّهُۥ
ஓர் உடலை/அதற்கு
khuwārun
خُوَارٌۚ
மாட்டின் சப்தம்
alam yaraw
أَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
annahu lā yukallimuhum
أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمْ
நிச்சயமாக அது/பேசுவதுமில்லை/அவர்களுடன்
walā yahdīhim
وَلَا يَهْدِيهِمْ
(நேர்)வழி காட்டுவதுமில்லை/அவர்களுக்கு
sabīlan
سَبِيلًاۘ
பாதையை
ittakhadhūhu
ٱتَّخَذُوهُ
எடுத்துக் கொண்டார்கள்/அதை
wakānū
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிட்டனர்
ẓālimīna
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக
(தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு யாதொரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதனையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்கள் ஆனார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௪௮)
Tafseer
௧௪௯

وَلَمَّا سُقِطَ فِيْٓ اَيْدِيْهِمْ وَرَاَوْا اَنَّهُمْ قَدْ ضَلُّوْاۙ قَالُوْا لَىِٕنْ لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ ١٤٩

walammā
وَلَمَّا
போது
suqiṭa fī aydīhim
سُقِطَ فِىٓ أَيْدِيهِمْ
அவர்கள் கைசேதப் பட்டனர்
wara-aw
وَرَأَوْا۟
இன்னும் அறிந்தனர்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
qad ḍallū
قَدْ ضَلُّوا۟
வழிதவறிவிட்டனர்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
la-in lam yarḥamnā
لَئِن لَّمْ يَرْحَمْنَا
கருணைபுரியவில்லையென்றால்/எங்களுக்கு
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
wayaghfir lanā
وَيَغْفِرْ لَنَا
இன்னும் மன்னிக்க வில்லையென்றால்/எங்களை
lanakūnanna
لَنَكُونَنَّ
நிச்சயம் நாங்கள் ஆகிவிடுவோம்
mina l-khāsirīna
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்
அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது "எங்கள் இறைவன் எங்களுக்கு அருள்புரிந்து எங்கள் குற்றங்களை மன்னிக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௪௯)
Tafseer
௧௫௦

وَلَمَّا رَجَعَ مُوْسٰٓى اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًاۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِيْ مِنْۢ بَعْدِيْۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْۚ وَاَلْقَى الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَأْسِ اَخِيْهِ يَجُرُّهٗٓ اِلَيْهِ ۗقَالَ ابْنَ اُمَّ اِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُوْنِيْ وَكَادُوْا يَقْتُلُوْنَنِيْۖ فَلَا تُشْمِتْ بِيَ الْاَعْدَاۤءَ وَلَا تَجْعَلْنِيْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ ١٥٠

walammā
وَلَمَّا
போது
rajaʿa
رَجَعَ
திரும்பினார்
mūsā
مُوسَىٰٓ
மூஸா
ilā qawmihi
إِلَىٰ قَوْمِهِۦ
தன் சமுதாயத்திடம்
ghaḍbāna
غَضْبَٰنَ
கோபித்தவராக
asifan
أَسِفًا
ஆவேசப்பட்டவராக, துக்கித்தவராக
qāla
قَالَ
கூறினார்
bi'samā
بِئْسَمَا
கெட்டுவிட்டது/எது
khalaftumūnī
خَلَفْتُمُونِى
நான் சென்றதற்குப்பிறகு செய்தீர்கள்/எனக்கு
min baʿdī
مِنۢ بَعْدِىٓۖ
எனக்குப் பின்னர்
aʿajil'tum
أَعَجِلْتُمْ
அவசரப்பட்டீர்களா
amra
أَمْرَ
கட்டளையை
rabbikum
رَبِّكُمْۖ
உங்கள் இறைவனின்
wa-alqā
وَأَلْقَى
எறிந்தார்
l-alwāḥa
ٱلْأَلْوَاحَ
பலகைகளை
wa-akhadha
وَأَخَذَ
இன்னும் பிடித்தார்
birasi
بِرَأْسِ
தலையை
akhīhi
أَخِيهِ
தன் சகோதரனின்
yajurruhu
يَجُرُّهُۥٓ
இழுத்தார்/அவரை
ilayhi
إِلَيْهِۚ
தன் பக்கம்
qāla
قَالَ
கூறினார்
ib'na umma
ٱبْنَ أُمَّ
என் தாயின் மகனே
inna l-qawma
إِنَّ ٱلْقَوْمَ
நிச்சயமாக/சமுதாயம்
is'taḍʿafūnī
ٱسْتَضْعَفُونِى
பலவீனப்படுத்தினர்/என்னை
wakādū
وَكَادُوا۟
இன்னும் முற்பட்டனர்
yaqtulūnanī
يَقْتُلُونَنِى
கொல்வார்கள்/என்னை
falā tush'mit
فَلَا تُشْمِتْ
நகைக்கச் செய்யாதீர்
biya
بِىَ
என்னைக் கொண்டு
l-aʿdāa
ٱلْأَعْدَآءَ
எதிரிகளை
walā tajʿalnī
وَلَا تَجْعَلْنِى
ஆக்கிவிடாதீர்/ என்னை
maʿa l-qawmi
مَعَ ٱلْقَوْمِ
மக்களுடன்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
(இதனைக் கேள்வியுற்ற) மூஸா கோபத்துடனும் துக்கத்துடனும் தன் மக்களிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகக் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளை(யாகிய வேதனை)யை நீங்கள் அவசரப்படுத்துகிறீர்களா?" என்று கூறி (இறைவனின் கட்டளைகள் எழுதப்பட்ட கற்)பலகைகளை எறிந்துவிட்டு தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார். அ(தற்க)வர் "என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்து விடவும் முற்பட்டனர். (ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) எதிரிகள் சந்தோஷப்படுமாறு நீங்கள் செய்து விடாதீர்கள். (இந்த) அநியாயக்கார மக்களுடனும் என்னை சேர்த்து விடாதீர்கள்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௫௦)
Tafseer