Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௪௩

Qur'an Surah Al-A'raf Verse 143

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا جَاۤءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗۙ قَالَ رَبِّ اَرِنِيْٓ اَنْظُرْ اِلَيْكَۗ قَالَ لَنْ تَرٰىنِيْ وَلٰكِنِ انْظُرْ اِلَى الْجَبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰىنِيْۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًاۚ فَلَمَّآ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا۠ اَوَّلُ الْمُؤْمِنِيْنَ (الأعراف : ٧)

walammā jāa
وَلَمَّا جَآءَ
And when came
போது/வந்தார்
mūsā
مُوسَىٰ
Musa
மூஸா
limīqātinā
لِمِيقَٰتِنَا
to Our appointed place
நமது குறித்தநேரத்திற்கு
wakallamahu
وَكَلَّمَهُۥ
and spoke to him
இன்னும் பேசினாu/அவருடன்
rabbuhu
رَبُّهُۥ
his Lord
அவருடைய இறைவன்
qāla
قَالَ
he said
கூறினார்
rabbi
رَبِّ
"O my Lord!
என் இறைவா
arinī
أَرِنِىٓ
Show me
நீ காண்பி/எனக்கு
anẓur
أَنظُرْ
(that) I may look
பார்ப்பேன்
ilayka
إِلَيْكَۚ
at You"
உன்னை
qāla
قَالَ
He said
கூறினான்
lan tarānī
لَن تَرَىٰنِى
"Never you (can) see Me
என்னை நீர் அறவே பார்க்க மாட்டீர்
walākini
وَلَٰكِنِ
but
எனினும்
unẓur
ٱنظُرْ
look
பார்ப்பீராக!
ilā l-jabali
إِلَى ٱلْجَبَلِ
at the mountain
மலையை
fa-ini is'taqarra
فَإِنِ ٱسْتَقَرَّ
[then] if it remains
அது நிலைத்தால்
makānahu
مَكَانَهُۥ
in its place
தன் இடத்தில்
fasawfa tarānī
فَسَوْفَ تَرَىٰنِىۚ
then" you (will) see Me"
நீர் என்னைப் பார்ப்பீர்
falammā
فَلَمَّا
But when
போது
tajallā
تَجَلَّىٰ
revealed (His) Glory
வெளிப்பட்டான்
rabbuhu
رَبُّهُۥ
his Lord
அவருடைய இறைவன்
lil'jabali
لِلْجَبَلِ
to the mountain
அம்மலை மீது
jaʿalahu
جَعَلَهُۥ
He made it
ஆக்கினான்/அதை
dakkan
دَكًّا
crumbled to dust
துகளாக
wakharra
وَخَرَّ
and fell down
இன்னும் விழுந்தார்
mūsā
مُوسَىٰ
Musa
மூஸா
ṣaʿiqan
صَعِقًاۚ
unconscious
மூர்ச்சையானவராக
falammā
فَلَمَّآ
And when
போது
afāqa
أَفَاقَ
he recovered
தெளிவுபெற்றார்
qāla
قَالَ
he said
கூறினார்
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
"Glory be to You!
நீ மிகப் பரிசுத்தமானவன்
tub'tu
تُبْتُ
I turn (in repentance)
நான் திருந்தி திரும்புகிறேன்
ilayka
إِلَيْكَ
to you
உன் பக்கம்
wa-anā awwalu
وَأَنَا۠ أَوَّلُ
and I am (the) first
நான்/முதலாமவன்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
(of) the believers"
நம்பிக்கை கொள்பவர்களில்

Transliteration:

Wa lammaa jaaa'a Moosa limeeqaatinaa wa kallamahoo Rabbuhoo qaala Rabbi arineee anzur ilaik; qaala lan taraanee wa laakininzur ilal jabali fa inistaqarra makaanahoo faswfa taraanee; falammaa tajallaa Rabbuhoo liljabali ja'alahoo dakkanw wa kharra Moosaa sa'iqaa; falammaaa afaaqa qaala Subhaanaka tubtu ilaika wa ana awwalul mu'mineen (QS. al-ʾAʿrāf:143)

English Sahih International:

And when Moses arrived at Our appointed time and his Lord spoke to him, he said, "My Lord, show me [Yourself] that I may look at You." [Allah] said, "You will not see Me, but look at the mountain; if it should remain in place, then you will see Me." But when his Lord appeared to the mountain, He rendered it level, and Moses fell unconscious. And when he awoke, he said, "Exalted are You! I have repented to You, and I am the first [among my people] of the believers." (QS. Al-A'raf, Ayah ௧௪௩)

Abdul Hameed Baqavi:

நாம் (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்தபொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். (அப்பொழுது மூஸா தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நான் உன்னை (என் கண்ணால்) பார்க்க (விரும்புகின்றேன்.) நீ உன்னை எனக்கு காண்பி" என்று கூறினார். (அதற்கு இறைவன் "நேர்முகமாக) என்னைக் காண உங்களால் ஒருக்காலும் முடியாது. எனினும் இம்மலையை நீங்கள் நோக்குங்கள். அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் நீங்கள் என்னைக் காண்பீர்கள்" என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தோற்றமளிக்கவே அது தவிடு பொடியாயிற்று. மூஸா திடுக்கிட்டு (மூர்ச்சையாகி) விழுந்தார். அவர் தெளிவுபெறவே (இறைவனை நோக்கி) "நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி) உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றேன். அன்றி, உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மையானவன்" என்று கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௪௩)

Jan Trust Foundation

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா| “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நமது (குறித்த இடத்தில்) குறித்த நேரத்திற்கு மூஸா வந்து, அவருடைய இறைவன் அவருடன் பேசியபோது “என் இறைவா! நீ (உன்னை) எனக்கு காண்பி, உன்னை பார்ப்பேன்” என்று கூறினார். என்னை நீர் அறவே பார்க்கமாட்டீர். எனினும் மலையைப் பார்ப்பீராக. அது தன் இடத்தில் நிலைத்தால் நீர் என்னைப் பார்ப்பீர்” என்று கூறினான் (இறைவன்). அவருடைய இறைவன் அம்மலை மீது வெளிப்பட்டபோது அதை அவன் துகளாக்கினான். மூஸா மூர்ச்சையானவராக விழுந்தார். அவர் தெளிவு பெற்றபோது “நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி, உன்னிடம் மன்னிப்புக் கோரி) உன் பக்கம் திருந்தி திரும்புகிறேன். உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதலாமவன்” என்று கூறினார்.