Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௪௫

Qur'an Surah Al-A'raf Verse 145

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَتَبْنَا لَهٗ فِى الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِيْلًا لِّكُلِّ شَيْءٍۚ فَخُذْهَا بِقُوَّةٍ وَّأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوْا بِاَحْسَنِهَا ۗسَاُورِيْكُمْ دَارَ الْفٰسِقِيْنَ (الأعراف : ٧)

wakatabnā
وَكَتَبْنَا
And We ordained (laws)
இன்னும் எழுதினோம்
lahu
لَهُۥ
for him
அவருக்கு
fī l-alwāḥi
فِى ٱلْأَلْوَاحِ
in the tablets -
பலகைகளில்
min kulli shayin
مِن كُلِّ شَىْءٍ
of every thing
எல்லாவற்றின்
mawʿiẓatan
مَّوْعِظَةً
an instruction
(ஓர்) அறிவுரையை
watafṣīlan
وَتَفْصِيلًا
and explanation
இன்னும் விளக்கத்தை
likulli shayin
لِّكُلِّ شَىْءٍ
for every thing
எல்லாவற்றுக்குரிய
fakhudh'hā
فَخُذْهَا
"So take them
ஆகவே இவற்றைப் பற்றிப் பிடிப்பீராக
biquwwatin
بِقُوَّةٍ
with firmness
பலமாக
wamur
وَأْمُرْ
and order
இன்னும் ஏவுவீராக
qawmaka
قَوْمَكَ
your people
உம் சமுதாயத்தை
yakhudhū
يَأْخُذُوا۟
[to] take
அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும்
bi-aḥsanihā
بِأَحْسَنِهَاۚ
(the) best of it
அவற்றில் மிக அழகியவற்றை
sa-urīkum
سَأُو۟رِيكُمْ
I will show you
காண்பிப்பேன்/உங்களுக்கு
dāra
دَارَ
(the) home
இல்லத்தை
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
(of) the defiantly disobedient"
பாவிகளின்

Transliteration:

Wa katabnaa lahoo fil alwaahi minkulli shai'immaw 'izaanw wa tafseelal likulli shai'in fakhuzhaa biquwwatinw waamur qawmaka yaakhuzoo bi ahsanihaa; wa ooreekum daaral faasiqeen (QS. al-ʾAʿrāf:145)

English Sahih International:

And We wrote for him on the tablets [something] of all things – instruction and explanation for all things, [saying], "Take them with determination and order your people to take the best of it. I will show you the home of the defiantly disobedient." (QS. Al-A'raf, Ayah ௧௪௫)

Abdul Hameed Baqavi:

(நாம் அவருக்குக் கொடுத்த கற்)பலகைகளில் நல்லுபதேசங்கள் அனைத்தையும், ஒவ்வொரு கட்டளையின் விவரத்தையும் அவருக்காக நாம் எழுதி "நீங்கள் இதனைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு அதிலிருக்கும் மிக அழகியவைகளை எடுத்து நடக்கும்படி உங்களுடைய மக்களுக்கு நீங்கள் கட்டளையிடுங்கள். (உங்களுக்கு மாறு செய்யும்) பாவிகள் தங்கும் இடத்தை அதிசீக்கிரத்தில் நாம் உங்களுக்குக் காண்பிப்போம்" என்றும் (நாம் மூஸாவுக்குக் கூறினோம்.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௪௫)

Jan Trust Foundation

மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி| “அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என்று கூறினான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எல்லாவற்றின் அறிவுரையையும் எல்லாவற்றுக்குரிய விளக்கத்தையும் அவருக்கு பலகைகளில் எழுதினோம். ஆகவே, “நீங்கள் இவற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்து, உம் சமுதாயத்தை ஏவுவீராக. அவற்றில் மிக அழகியவற்றை அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும். பாவிகளின் இல்லத்தை உங்களுக்குக் காண்பிப்பேன்.”