Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௪௨

Qur'an Surah Al-A'raf Verse 142

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَوٰعَدْنَا مُوْسٰى ثَلٰثِيْنَ لَيْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيْقَاتُ رَبِّهٖٓ اَرْبَعِيْنَ لَيْلَةً ۚوَقَالَ مُوْسٰى لِاَخِيْهِ هٰرُوْنَ اخْلُفْنِيْ فِيْ قَوْمِيْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيْلَ الْمُفْسِدِيْنَ (الأعراف : ٧)

wawāʿadnā
وَوَٰعَدْنَا
And We appointed
வாக்களித்தோம்
mūsā
مُوسَىٰ
(for) Musa
மூஸாவுக்கு
thalāthīna
ثَلَٰثِينَ
thirty
முப்பது
laylatan
لَيْلَةً
nights
இரவு(களை)
wa-atmamnāhā
وَأَتْمَمْنَٰهَا
and We completed them
இன்னும் முழுமைப்படுத்தினோம்/அதை
biʿashrin
بِعَشْرٍ
with ten (more)
பத்து இரவுகளைக் கொண்டு
fatamma
فَتَمَّ
so was completed
ஆகவே முழுமையடைந்தது
mīqātu
مِيقَٰتُ
(the) set term
குறிப்பிட்ட காலம்
rabbihi
رَبِّهِۦٓ
(of) his Lord
அவருடைய இறைவனின்
arbaʿīna
أَرْبَعِينَ
(of) forty
நாற்பது
laylatan
لَيْلَةًۚ
night(s)
இரவு(களாக)
waqāla mūsā
وَقَالَ مُوسَىٰ
And said Musa
கூறினார்/மூஸா
li-akhīhi
لِأَخِيهِ
to his brother
தன் சகோதரருக்கு
hārūna
هَٰرُونَ
Harun
ஹாரூன்
ukh'luf'nī
ٱخْلُفْنِى
"Take my place
நீர் எனக்கு பிரதிநிதியாக இரு
fī qawmī
فِى قَوْمِى
in my people
என் சமுதாயத்தில்
wa-aṣliḥ
وَأَصْلِحْ
and do right
இன்னும் சீர்திருத்து
walā tattabiʿ
وَلَا تَتَّبِعْ
and (do) not follow
பின்பற்றாதே
sabīla
سَبِيلَ
(the) way
பாதையை
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
(of) the corrupters"
விஷமிகளுடைய

Transliteration:

Wa waa'adnaa Moosaa salaaseena lailatanw wa at mamnaahaa bi'ashrim fatamma meeqaatu Rabbihee arba'eena lailah; wa qaala Moosaa liakheehi Haaroonakh lufnee fee qawmee wa aslih wa laa tattabi' sabeelal mufsideen (QS. al-ʾAʿrāf:142)

English Sahih International:

And We made an appointment with Moses for thirty nights and perfected them by [the addition of] ten; so the term of his Lord was completed as forty nights. And Moses said to his brother Aaron, "Take my place among my people, do right [by them], and do not follow the way of the corrupters." (QS. Al-A'raf, Ayah ௧௪௨)

Abdul Hameed Baqavi:

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி "நீங்கள் நம்முடைய மக்களிடையே என்னுடைய இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துங்கள். அன்றி விஷமிகளுடைய வழியை நீங்கள் பின்பற்றாதீர்கள்" என்று கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௪௨)

Jan Trust Foundation

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம். இன்னும் அதை பத்து இரவுகளைக் கொண்டு முழுமைப்படுத்தினோம். ஆகவே, அவருடைய இறைவனின் குறிப்பிட்ட காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது. ஹாரூனாகிய தன் சகோதரருக்கு மூஸா கூறினார்: “நீர் என் சமுதாயத்தில் எனக்கு பிரதிநிதியாக இரு! சீர்திருத்து! விஷமிகளுடைய பாதையை பின்பற்றாதே!”