Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 3

Al-An'am

(al-ʾAnʿām)

௨௧

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖۗ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ ٢١

waman
وَمَنْ
யார்
aẓlamu
أَظْلَمُ
மகா அநியாயக்காரன்
mimmani
مِمَّنِ
எவரைவிட
if'tarā
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
kadhiban
كَذِبًا
ஒரு பொய்யை
aw
أَوْ
அல்லது
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தான்
biāyātihi
بِـَٔايَٰتِهِۦٓۗ
அவனுடைய வசனங்களை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக
lā yuf'liḥu
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்(கள்)
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
அல்லாஹ்வைப் பற்றிக் கற்பனையாகப் பொய் கூறியவனை விடவோ, அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவனைவிடவோ அநியாயக்காரன் யார்? நிச்சயமாக இந்த அநியாயக்காரர்கள் வெற்றி அடையமாட்டார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௨௧)
Tafseer
௨௨

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْٓا اَيْنَ شُرَكَاۤؤُكُمُ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ٢٢

wayawma
وَيَوْمَ
நாள்
naḥshuruhum
نَحْشُرُهُمْ
ஒன்று திரட்டுவோம் அவர்கள்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
thumma
ثُمَّ
பிறகு
naqūlu
نَقُولُ
கூறுவோம்
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
ashrakū
أَشْرَكُوٓا۟
இணைவைத்தனர்
ayna
أَيْنَ
எங்கே
shurakāukumu
شُرَكَآؤُكُمُ
இணைகள் உங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kuntum tazʿumūna
كُنتُمْ تَزْعُمُونَ
நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்
நாம் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் (இவர்களில்) இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி "(ஆண்டவனுக்கு) இணையானவை என நீங்கள் எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவை எங்கே?" என்று நாம் கேட்போம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௨௨)
Tafseer
௨௩

ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ اِلَّآ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِيْنَ ٢٣

thumma
ثُمَّ
பிறகு
lam takun
لَمْ تَكُن
இருக்காது
fit'natuhum
فِتْنَتُهُمْ
அவர்களுடைய சோதனை
illā
إِلَّآ
தவிர
an qālū
أَن قَالُوا۟
அவர்கள் கூறுவதை
wal-lahi
وَٱللَّهِ
அல்லாஹ் மீது சத்தியமாக
rabbinā
رَبِّنَا
எங்கள் இறைவா
mā kunnā
مَا كُنَّا
நாங்கள் இருக்கவில்லை
mush'rikīna
مُشْرِكِينَ
இணைவைப்பவர்களாக
(அது சமயம்) அவர்கள் "அல்லாஹ்தான் எங்கள் இறைவன்; நாங்கள் (அவனுக்கு யாதொன்றையும்) இணையாக்கவில்லையே!" என்று (பொய்யாகப்) புகல் கூறுவதைத் தவிர (பதில்) வேறொன்றுமிராது. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௨௩)
Tafseer
௨௪

اُنْظُرْ كَيْفَ كَذَبُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ٢٤

unẓur
ٱنظُرْ
கவனிப்பீராக
kayfa
كَيْفَ
எவ்வாறு
kadhabū
كَذَبُوا۟
பொய் கூறினர்
ʿalā
عَلَىٰٓ
மீதே
anfusihim
أَنفُسِهِمْۚ
தங்கள்
waḍalla
وَضَلَّ
இன்னும் மறைந்துவிட்டன
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டு
mā kānū
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
yaftarūna
يَفْتَرُونَ
இட்டுக் கட்டுகிறார்கள்
தங்களைப் பற்றியே அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (ஆண்டவனுக்கு இணையானவை என்று) அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௨௪)
Tafseer
௨௫

وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَ ۚوَجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِيْٓ اٰذَانِهِمْ وَقْرًا ۗوَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا ۗحَتّٰٓى اِذَا جَاۤءُوْكَ يُجَادِلُوْنَكَ يَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ ٢٥

wamin'hum
وَمِنْهُم
அவர்களில்
man
مَّن
எவர்
yastamiʿu
يَسْتَمِعُ
செவி சாய்ப்பார்
ilayka
إِلَيْكَۖ
உம் பக்கம்
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
akinnatan
أَكِنَّةً
திரைகளை
an yafqahūhu
أَن يَفْقَهُوهُ
அதை புரிந்துகொள்வதற்கு
wafī ādhānihim
وَفِىٓ ءَاذَانِهِمْ
இன்னும் காதுகளில்/அவர்களுடைய
waqran
وَقْرًاۚ
செவிட்டை
wa-in yaraw
وَإِن يَرَوْا۟
அவர்கள் பார்த்தாலும்
kulla
كُلَّ
எல்லா(ம்)
āyatin
ءَايَةٍ
அத்தாட்சி(களையும்)
lā yu'minū bihā
لَّا يُؤْمِنُوا۟ بِهَاۚ
நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்/அவற்றை
ḥattā
حَتَّىٰٓ
முடிவாக
idhā jāūka
إِذَا جَآءُوكَ
அவர்கள் வந்தால்/உம்மிடம்
yujādilūnaka
يُجَٰدِلُونَكَ
தர்க்கித்தவர்களாக/உம்மிடம்
yaqūlu
يَقُولُ
கூறுவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
in
إِنْ
இல்லை
hādhā
هَٰذَآ
இவை
illā
إِلَّآ
தவிர
asāṭīru
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகளை
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்கள்
(நபியே! உங்களுக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீங்கள் கூறுவதைக் கேட்க) உங்களுக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதனை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்தி விட்டோம். ஆகவே, (இத்தகையவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் யாவையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உங்களிடம் வந்த போதிலும், உங்களுடன் தர்க்கித்து "இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௨௫)
Tafseer
௨௬

وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ وَيَنْـَٔوْنَ عَنْهُ ۚوَاِنْ يُّهْلِكُوْنَ اِلَّآ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ ٢٦

wahum
وَهُمْ
அவர்கள்
yanhawna
يَنْهَوْنَ
தடுக்கின்றனர்
ʿanhu
عَنْهُ
இதிலிருந்து
wayanawna
وَيَنْـَٔوْنَ
இன்னும் தூரமாகின்றனர்
ʿanhu
عَنْهُۖ
இதை விட்டு
wa-in yuh'likūna
وَإِن يُهْلِكُونَ
அவர்கள் அழித்துக் கொள்வதில்லை
illā
إِلَّآ
தவிர
anfusahum
أَنفُسَهُمْ
தங்களை
wamā yashʿurūna
وَمَا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்
அன்றி அவர்கள் (மற்றவர்களையும்) இ(தைக்கேட்ப)தில் இருந்து தடுத்துத் தாங்களும் இதைவிட்டு வெருண்டோடுவார்கள். (இதனால்) அவர்கள் தங்களையே நாசமாக்கிக் கொள்கிறார்கள். (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௨௬)
Tafseer
௨௭

وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلَى النَّارِ فَقَالُوْا يٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰيٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ ٢٧

walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
idh
إِذْ
போது
wuqifū
وُقِفُوا۟
நிறுத்தப்பட்டனர்
ʿalā l-nāri
عَلَى ٱلنَّارِ
நரகத்தின் முன்
faqālū
فَقَالُوا۟
கூறுவார்கள்
yālaytanā nuraddu
يَٰلَيْتَنَا نُرَدُّ
நாங்கள் திருப்பப்பட வேண்டுமே
walā nukadhiba
وَلَا نُكَذِّبَ
பொய்ப்பிக்க மாட்டோமே
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
rabbinā
رَبِّنَا
எங்கள் இறைவனின்
wanakūna
وَنَكُونَ
இன்னும் ஆகிவிடுவோமே
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
(நரக) நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும் பொழுது, (நபியே!) நீங்கள் (அவர்களைப்) பார்த்தால் "நாங்கள் (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப் படவேண்டுமே! (அவ்வாறாயின்) எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்காமல், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்" என்று அவர்கள் புலம்புவார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௨௭)
Tafseer
௨௮

بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ ۗوَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ٢٨

bal
بَلْ
அல்ல
badā lahum
بَدَا لَهُم
வெளிப்படும்/ அவர்களுக்கு
mā kānū
مَّا كَانُوا۟
எது/இருந்தனர்
yukh'fūna
يُخْفُونَ
மறைக்கிறார்கள்
min qablu
مِن قَبْلُۖ
முன்னர்
walaw ruddū
وَلَوْ رُدُّوا۟
அவர்கள் திருப்பப்பட்டால்
laʿādū
لَعَادُوا۟
மீளுவார்கள்
limā nuhū
لِمَا نُهُوا۟
எதற்கு/ தடுக்கப்பட்டனர்
ʿanhu
عَنْهُ
அதை விட்டு
wa-innahum
وَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்
(இதுவும் அவர்கள் மனமாறக் கூறுவது) அன்று! இதற்கு முன்னர் (அவர்கள் தங்களுக்குள்) மறைத்து வைத்திருந்ததுதான் அவர்களிடம் தென்பட்டது. (ஏனென்றால்,) அவர்கள் (இவ்வுலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்பட்டால், அவர்களுக்குத் தடை செய்திருந்தவற்றின் பக்கமே மீண்டும் செல்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களாகவே இருக்கின்றனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௨௮)
Tafseer
௨௯

وَقَالُوْٓا اِنْ هِيَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ ٢٩

waqālū
وَقَالُوٓا۟
இன்னும் கூறினர்
in hiya
إِنْ هِىَ
இல்லை/இது
illā
إِلَّا
தவிர
ḥayātunā
حَيَاتُنَا
நம் வாழ்க்கை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
wamā naḥnu
وَمَا نَحْنُ
இன்னும் இல்லை/நாம்
bimabʿūthīna
بِمَبْعُوثِينَ
எழுப்பப்படுபவர்களாக
அன்றி "இவ்வுலகத்தில் நாம் வாழ்வதைத் தவிர (இறந்த பின் வேறு வாழ்க்கை) இல்லை; ஆகவே (இறந்தபின்) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்! ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௨௯)
Tafseer
௩௦

وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلٰى رَبِّهِمْ ۗ قَالَ اَلَيْسَ هٰذَا بِالْحَقِّ ۗقَالُوْا بَلٰى وَرَبِّنَا ۗقَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ࣖ ٣٠

walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
idh wuqifū
إِذْ وُقِفُوا۟
போது/ நிறுத்தப்பட்டனர்
ʿalā rabbihim
عَلَىٰ رَبِّهِمْۚ
தங்கள் இறைவனுக்கு முன்
qāla
قَالَ
கூறுவான்
alaysa
أَلَيْسَ
இல்லையா?
hādhā
هَٰذَا
இது
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
உண்மை
qālū
قَالُوا۟
கூறுவர்
balā
بَلَىٰ
ஏனில்லை
warabbinā
وَرَبِّنَاۚ
எங்கள் இறைவன் சத்தியமாக
qāla
قَالَ
கூறுவான்
fadhūqū
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
bimā kuntum takfurūna
بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால்
(இவ்வாறு கூறும்) அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) தங்கள் இறைவனின் சந்நிதியில் நிறுத்தப்படும்பொழுது (நபியே! நீங்கள் அவர்களைக்) காண்பீராயின், (அது சமயம் இறைவன் அவர்களை நோக்கி "விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா?" என்று கேட்பான். (அதற்கு) அவர்கள் "எங்கள் இறைவனே! உண்மைதான்" எனக் கூறுவார்கள். (அதற்கு) அவன் ("இதனை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௩௦)
Tafseer