Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௫

Qur'an Surah Al-An'am Verse 25

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَ ۚوَجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِيْٓ اٰذَانِهِمْ وَقْرًا ۗوَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا ۗحَتّٰٓى اِذَا جَاۤءُوْكَ يُجَادِلُوْنَكَ يَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ (الأنعام : ٦)

wamin'hum
وَمِنْهُم
And among them
அவர்களில்
man
مَّن
(are those) who
எவர்
yastamiʿu
يَسْتَمِعُ
listen
செவி சாய்ப்பார்
ilayka
إِلَيْكَۖ
to you
உம் பக்கம்
wajaʿalnā
وَجَعَلْنَا
but We have placed
இன்னும் ஆக்கினோம்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
over their hearts
அவர்களின் உள்ளங்கள் மீது
akinnatan
أَكِنَّةً
coverings
திரைகளை
an yafqahūhu
أَن يَفْقَهُوهُ
lest they understand it
அதை புரிந்துகொள்வதற்கு
wafī ādhānihim
وَفِىٓ ءَاذَانِهِمْ
and in their ears
இன்னும் காதுகளில்/அவர்களுடைய
waqran
وَقْرًاۚ
deafness
செவிட்டை
wa-in yaraw
وَإِن يَرَوْا۟
And if they see
அவர்கள் பார்த்தாலும்
kulla
كُلَّ
every
எல்லா(ம்)
āyatin
ءَايَةٍ
sign
அத்தாட்சி(களையும்)
lā yu'minū bihā
لَّا يُؤْمِنُوا۟ بِهَاۚ
not will they believe in it
நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்/அவற்றை
ḥattā
حَتَّىٰٓ
Until
முடிவாக
idhā jāūka
إِذَا جَآءُوكَ
when they come to you
அவர்கள் வந்தால்/உம்மிடம்
yujādilūnaka
يُجَٰدِلُونَكَ
and argue with you
தர்க்கித்தவர்களாக/உம்மிடம்
yaqūlu
يَقُولُ
say
கூறுவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
disbelieved
நிராகரித்தார்கள்
in
إِنْ
"Not
இல்லை
hādhā
هَٰذَآ
"(is) this
இவை
illā
إِلَّآ
but
தவிர
asāṭīru
أَسَٰطِيرُ
(the) tales
கட்டுக் கதைகளை
l-awalīna
ٱلْأَوَّلِينَ
(of) the former (people)"
முன்னோர்கள்

Transliteration:

Wa minhum mai yastami'u ilaika wa ja'alnaa 'alaa quloobihim akinnatan ai yafqahoohu wa feee aazaanihim waqraa; wa ai yaraw kulla Aayatil laa yu'minoo bihaa; hattaaa izaa jaaa'oka yujaadiloonaka yaqoolul lazeena kafaroo in haazaa illaaa asaateerul awwaleen (QS. al-ʾAnʿām:25)

English Sahih International:

And among them are those who listen to you, but We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And if they should see every sign, they will not believe in it. Even when they come to you arguing with you, those who disbelieve say, "This is not but legends of the former peoples." (QS. Al-An'am, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களுக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீங்கள் கூறுவதைக் கேட்க) உங்களுக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதனை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்தி விட்டோம். ஆகவே, (இத்தகையவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் யாவையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உங்களிடம் வந்த போதிலும், உங்களுடன் தர்க்கித்து "இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௨௫)

Jan Trust Foundation

அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; “இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை” என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உம் பக்கம் செவிசாய்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்களுடைய உள்ளங்களில் அதை புரிந்துகொள்வதற்கு (தடையாக) திரைகளையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் ஆக்கினோம். எல்லா அத்தாட்சிகளையும் அவர்கள் பார்த்தாலும் அவற்றை (அவர்கள்) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (நபியே!) முடிவாக, அவர்கள் உம்மிடம் தர்க்கித்தவர்களாக வந்தால் நிராகரித்த (அ)வர்கள், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளைத் தவிர (வேறு) இல்லை” என்றே கூறுவார்கள்.