Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Word by Word

Al-An'am

(al-ʾAnʿām)

bismillaahirrahmaanirrahiim

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوْرَ ەۗ ثُمَّ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ يَعْدِلُوْنَ ١

al-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
alladhī
ٱلَّذِى
எவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் உண்டாக்கினான்
l-ẓulumāti
ٱلظُّلُمَٰتِ
இருள்களை
wal-nūra
وَٱلنُّورَۖ
இன்னும் ஒளியை
thumma
ثُمَّ
பிறகு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
birabbihim
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
yaʿdilūna
يَعْدِلُونَ
சமமாக்குகின்றனர்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியதே! அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். மேலும் இருள்களையும், ஒளியையும் உண்டாக்கினான். இவ்வாறிருந்தும் நிராகரிப்பவர்கள் (அல்லாஹ்வாகிய) தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை) சமமாக்குகின்றனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧)
Tafseer

هُوَ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ طِيْنٍ ثُمَّ قَضٰٓى اَجَلًا ۗوَاَجَلٌ مُّسَمًّى عِنْدَهٗ ثُمَّ اَنْتُمْ تَمْتَرُوْنَ ٢

huwa
هُوَ
அவன்
alladhī
ٱلَّذِى
எவன்
khalaqakum
خَلَقَكُم
உங்களைப் படைத்தான்
min
مِّن
இருந்து
ṭīnin
طِينٍ
களிமண்
thumma
ثُمَّ
பிறகு
qaḍā
قَضَىٰٓ
விதித்தான்
ajalan
أَجَلًاۖ
ஒரு தவணையை
wa-ajalun
وَأَجَلٌ
இன்னும் ஒரு தவணை
musamman
مُّسَمًّى
குறிப்பிட்டது
ʿindahu
عِندَهُۥۖ
அவனிடம்
thumma
ثُمَّ
பிறகு
antum
أَنتُمْ
நீங்கள்
tamtarūna
تَمْتَرُونَ
சந்தேகிக்கிறீர்கள்
அவன்தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) வாழ்நாளைக் (குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. இவ்வாறிருந்தும் நீங்கள் (அவனுடைய இறைத் தன்மையை) சந்தேகிக்கின்றீர்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௨)
Tafseer

وَهُوَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَفِى الْاَرْضِۗ يَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُوْنَ ٣

wahuwa
وَهُوَ
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wafī l-arḍi
وَفِى ٱلْأَرْضِۖ
இன்னும் பூமியில்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
sirrakum
سِرَّكُمْ
இரகசியத்தை/உங்கள்
wajahrakum
وَجَهْرَكُمْ
இன்னும் பகிரங்கத்தை/உங்கள்
wayaʿlamu
وَيَعْلَمُ
இன்னும் நன்கறிவான்
mā taksibūna
مَا تَكْسِبُونَ
எதை/நீங்கள் செய்கிறீர்கள்
வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ் அவன்தான். அவன் உங்களுடைய இரகசியத்தையும் வெளிப்படை யானதையும் நன்கறிவான். (நன்மையோ, தீமையோ) நீங்கள் செய்யும் அனைத்தையும் நன்கறிவான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௩)
Tafseer

وَمَا تَأْتِيْهِمْ مِّنْ اٰيَةٍ مِّنْ اٰيٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَ ٤

wamā tatīhim
وَمَا تَأْتِيهِم
வருவதில்லை/அவர்களிடம்
min
مِّنْ
இருந்து
āyatin
ءَايَةٍ
ஒரு வசனம்
min
مِّنْ
இருந்து
āyāti
ءَايَٰتِ
வசனங்கள்
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
illā
إِلَّا
தவிர
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
ʿanhā
عَنْهَا
அதை
muʿ'riḍīna
مُعْرِضِينَ
புறக்கணிப்பவர்களாக
(இவ்வாறிருந்தும், நிராகரிப்பவர்களோ) தங்கள் இறைவனின் வசனங்களில் எது வந்தபோதிலும் அதனை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪)
Tafseer

فَقَدْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَاۤءَهُمْۗ فَسَوْفَ يَأْتِيْهِمْ اَنْۢبـٰۤؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ٥

faqad
فَقَدْ
ஆகவே, திட்டமாக
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்தை
lammā
لَمَّا
போது
jāahum
جَآءَهُمْۖ
வந்தது/அவர்களிடம்
fasawfa yatīhim
فَسَوْفَ يَأْتِيهِمْ
வரும்/அவர்களிடம்
anbāu
أَنۢبَٰٓؤُا۟
செய்திகள்
مَا
எது
kānū
كَانُوا۟
இருந்தனர்
bihi
بِهِۦ
அதை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
பரிகசிக்கிறார்கள்
ஆகவே, அவர்களிடம் வந்திருக்கும் இந்த சத்திய (வேத)த்தையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். ஆனால் எவ்விஷயங்கள் பற்றி (அவை பொய்யானவை என) அவர்கள் பரிகசித்து கொண்டிருக்கின்றனரோ அவை (உண்மையாகவே) அவர்களிடம் வந்தே தீரும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫)
Tafseer

اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّكُمْ وَاَرْسَلْنَا السَّمَاۤءَ عَلَيْهِمْ مِّدْرَارًا ۖوَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِيْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَأْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ ٦

alam yaraw
أَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
kam
كَمْ
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
அழித்தோம்
min qablihim
مِن قَبْلِهِم
அவர்களுக்கு முன்னர்
min qarnin
مِّن قَرْنٍ
சமுதாயத்தில்
makkannāhum
مَّكَّنَّٰهُمْ
வசதி அளித்தோம்/அவர்களுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مَا
எந்தளவு
lam numakkin
لَمْ نُمَكِّن
வசதியளிக்கவில்லை
lakum
لَّكُمْ
உங்களுக்கு
wa-arsalnā
وَأَرْسَلْنَا
இன்னும் அனுப்பினோம்
l-samāa
ٱلسَّمَآءَ
மழையை
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
mid'rāran
مِّدْرَارًا
தாரை தாரையாக
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
l-anhāra
ٱلْأَنْهَٰرَ
நதிகளை
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihim
مِن تَحْتِهِمْ
அவர்களுக்குக் கீழ்
fa-ahlaknāhum
فَأَهْلَكْنَٰهُم
ஆகவே அழித்தோம்/ அவர்களை
bidhunūbihim
بِذُنُوبِهِمْ
பாவங்களினால்/அவர்களுடைய
wa-anshanā
وَأَنشَأْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
min
مِنۢ
பின்னர்
baʿdihim
بَعْدِهِمْ
பின்னர் அவர்களுக்கு
qarnan
قَرْنًا
சமுதாயத்தை
ākharīna
ءَاخَرِينَ
மற்றெறாரு
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம். வானத்திலிருந்து தாரை தாரையாக மழை பெய்யும்படிச் செய்து அவர்களின் (ஆதிக்கத்தின்) கீழ் நீரருவிகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்படி செய்தோம். (எனினும் அவர்கள் பாவத்திலேயே ஆழ்ந்துவிட்டனர்.) ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அழித்து விட்டோம். அவர்களுக்குப் பின்னர் மற்றொரு கூட்டத்தாரை நாம் உற்பத்தி செய்தோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬)
Tafseer

وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتٰبًا فِيْ قِرْطَاسٍ فَلَمَسُوْهُ بِاَيْدِيْهِمْ لَقَالَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ ٧

walaw nazzalnā
وَلَوْ نَزَّلْنَا
நாம் இறக்கிவைத்தால்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
kitāban
كِتَٰبًا
ஒரு வேதத்தை
fī qir'ṭāsin
فِى قِرْطَاسٍ
ஓர் ஓளையில்
falamasūhu
فَلَمَسُوهُ
தொட்டுப் பார்த்தனர்/அதை
bi-aydīhim
بِأَيْدِيهِمْ
தங்கள் கரங்களால்
laqāla
لَقَالَ
திட்டமாக கூறுவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
in
إِنْ
இல்லை
hādhā
هَٰذَآ
இது
illā
إِلَّا
தவிர
siḥ'run
سِحْرٌ
சூனியம்
mubīnun
مُّبِينٌ
தெளிவானது
கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உங்கள்மீது இறக்கி வைத்து அதனை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் "இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்றே நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭)
Tafseer

وَقَالُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ مَلَكٌ ۗوَلَوْ اَنْزَلْنَا مَلَكًا لَّقُضِيَ الْاَمْرُ ثُمَّ لَا يُنْظَرُوْنَ ٨

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினர்
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
malakun
مَلَكٌۖ
ஒரு வானவர்
walaw anzalnā
وَلَوْ أَنزَلْنَا
நாம் இறக்கினால்
malakan
مَلَكًا
ஒரு வானவரை
laquḍiya
لَّقُضِىَ
முடிக்கப்பட்டுவிடும்
l-amru
ٱلْأَمْرُ
காரியம்
thumma
ثُمَّ
பிறகு
lā yunẓarūna
لَا يُنظَرُونَ
அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்
(அன்றி, "இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு மலக்கு அனுப்பப்பட வேண்டாமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் விரும்புகிறபடி) நாம் ஒரு மலக்கை அனுப்பி வைத்திருந்தால் (அவர்களின்) காரியம் முடிவு பெற்றிருக்கும். பிறகு (அதில்) அவர் களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௮)
Tafseer

وَلَوْ جَعَلْنٰهُ مَلَكًا لَّجَعَلْنٰهُ رَجُلًا وَّلَلَبَسْنَا عَلَيْهِمْ مَّا يَلْبِسُوْنَ ٩

walaw jaʿalnāhu
وَلَوْ جَعَلْنَٰهُ
நாம் ஆக்கினால்/அவரை
malakan
مَلَكًا
ஒரு வானவராக
lajaʿalnāhu
لَّجَعَلْنَٰهُ
ஆக்குவோம்/அவரை
rajulan
رَجُلًا
ஓர் ஆடவராக
walalabasnā
وَلَلَبَسْنَا
இன்னும் குழப்பிவிடுவோம்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
mā yalbisūna
مَّا يَلْبِسُونَ
எதை/குழப்புகிறார்கள்
(அல்லது நம்முடைய) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு மலக்குகளைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் ஒரு மனிதனுடைய ரூபத்தில்தான் நாம் அனுப்புவோம். (அது சமயத்தில்) இப்போது இருக்கும் சந்தேகத்தையே அவர்களுக்கு நாம் உண்டு பண்ணியவராவோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯)
Tafseer
௧௦

وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِيْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ࣖ ١٠

walaqadi
وَلَقَدِ
திட்டவட்டமாக
us'tuh'zi-a
ٱسْتُهْزِئَ
பரிகசிக்கப்பட்டனர்
birusulin
بِرُسُلٍ
தூதர்கள்
min qablika
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
faḥāqa
فَحَاقَ
சூழ்ந்தது
bi-alladhīna
بِٱلَّذِينَ
எவர்களை
sakhirū
سَخِرُوا۟
ஏளனம் செய்தனர்
min'hum
مِنْهُم
அவர்களில்
مَّا
எது
kānū
كَانُوا۟
இருந்தனர்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
yastahziūna
يَسْتَهْزِءُونَ
பரிகசிக்கின்றனர்
(நபியே!) உங்களுக்கு முன்னர் வந்த (நம்முடைய மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில் அவர்கள் (எந்த வேதனையைப்) பரிகசித்துக் கொண்டிருந்த(னரோ அ)து அவர்களை வந்து சூழ்ந்துகொண்டது. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦)
Tafseer