Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧

Qur'an Surah Al-An'am Verse 1

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوْرَ ەۗ ثُمَّ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ يَعْدِلُوْنَ (الأنعام : ٦)

al-ḥamdu
ٱلْحَمْدُ
(All) the praises and thanks
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
(be) to Allah
அல்லாஹ்வுக்குரியதே
alladhī
ٱلَّذِى
the One Who
எவன்
khalaqa
خَلَقَ
created
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
இன்னும் பூமியை
wajaʿala
وَجَعَلَ
and made
இன்னும் உண்டாக்கினான்
l-ẓulumāti
ٱلظُّلُمَٰتِ
the darkness[es]
இருள்களை
wal-nūra
وَٱلنُّورَۖ
and the light
இன்னும் ஒளியை
thumma
ثُمَّ
Then
பிறகு
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தார்கள்
birabbihim
بِرَبِّهِمْ
in their Lord
தங்கள் இறைவனுக்கு
yaʿdilūna
يَعْدِلُونَ
equate others with Him
சமமாக்குகின்றனர்

Transliteration:

Alhamdu lillaahil lazee khalaqas samaawaati wal arda wa ja'alaz zulumaati wannoor; summal lazeena kafaroo bi Rabbihim ya'diloon (QS. al-ʾAnʿām:1)

English Sahih International:

[All] praise is [due] to Allah, who created the heavens and the earth and made the darkness and the light. Then those who disbelieve equate [others] with their Lord. (QS. Al-An'am, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியதே! அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். மேலும் இருள்களையும், ஒளியையும் உண்டாக்கினான். இவ்வாறிருந்தும் நிராகரிப்பவர்கள் (அல்லாஹ்வாகிய) தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை) சமமாக்குகின்றனர். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧)

Jan Trust Foundation

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

புகழ் (எல்லாம்) வானங்களையும், பூமியையும் படைத்த, இருள்களையும், ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்வுக்குரியதே! (இதற்குப்) பிறகு(ம்), நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு (பொய் தெய்வங்களை) சமமாக்குகின்றனர்.