Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௭

Qur'an Surah Al-An'am Verse 7

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتٰبًا فِيْ قِرْطَاسٍ فَلَمَسُوْهُ بِاَيْدِيْهِمْ لَقَالَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ (الأنعام : ٦)

walaw nazzalnā
وَلَوْ نَزَّلْنَا
And (even) if We (had) sent down
நாம் இறக்கிவைத்தால்
ʿalayka
عَلَيْكَ
to you
உம்மீது
kitāban
كِتَٰبًا
a written Scripture
ஒரு வேதத்தை
fī qir'ṭāsin
فِى قِرْطَاسٍ
in a parchment
ஓர் ஓளையில்
falamasūhu
فَلَمَسُوهُ
and they touched it
தொட்டுப் பார்த்தனர்/அதை
bi-aydīhim
بِأَيْدِيهِمْ
with their hands
தங்கள் கரங்களால்
laqāla
لَقَالَ
surely (would) have said
திட்டமாக கூறுவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
disbelieved
நிராகரித்தார்கள்
in
إِنْ
"Not
இல்லை
hādhā
هَٰذَآ
"(is) this
இது
illā
إِلَّا
but
தவிர
siḥ'run
سِحْرٌ
magic"
சூனியம்
mubīnun
مُّبِينٌ
clear"
தெளிவானது

Transliteration:

Wa law nazzalnaa 'alaika Kitaaban fee qirtaasin falamasoohu bi aideehim laqaalal lazeena kafarooo in haazaaa illaa sihrum mubeen (QS. al-ʾAnʿām:7)

English Sahih International:

And even if We had sent down to you, [O Muhammad], a written scripture on a page and they touched it with their hands, the disbelievers would say, "This is not but obvious magic." (QS. Al-An'am, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உங்கள்மீது இறக்கி வைத்து அதனை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் "இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்றே நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௭)

Jan Trust Foundation

காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், “இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை“ என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஓர் ஓளையில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கி, அதை அவர்கள் தங்கள் கரங்களால் தொட்டுப் பார்த்தாலும், “இது தெளிவான சூனியமே தவிர (உண்மையான வேதம்) இல்லை” என்று நிராகரிப்பவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்.