Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௯

Qur'an Surah Al-An'am Verse 9

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ جَعَلْنٰهُ مَلَكًا لَّجَعَلْنٰهُ رَجُلًا وَّلَلَبَسْنَا عَلَيْهِمْ مَّا يَلْبِسُوْنَ (الأنعام : ٦)

walaw jaʿalnāhu
وَلَوْ جَعَلْنَٰهُ
And if We had made him
நாம் ஆக்கினால்/அவரை
malakan
مَلَكًا
an Angel
ஒரு வானவராக
lajaʿalnāhu
لَّجَعَلْنَٰهُ
certainly We (would) have made him
ஆக்குவோம்/அவரை
rajulan
رَجُلًا
a man
ஓர் ஆடவராக
walalabasnā
وَلَلَبَسْنَا
and certainly We (would) have obscured
இன்னும் குழப்பிவிடுவோம்
ʿalayhim
عَلَيْهِم
to them
அவர்கள் மீது
mā yalbisūna
مَّا يَلْبِسُونَ
what they are obscuring
எதை/குழப்புகிறார்கள்

Transliteration:

Wa law ja'alnaahu malakal laja'alnaahu rajulanw wa lalabasnaa 'alaihim maa yalbisoon (QS. al-ʾAnʿām:9)

English Sahih International:

And if We had made him [i.e., the messenger] an angel, We would have made him [appear as] a man, and We would have covered them with that in which they cover themselves [i.e., confusion and doubt]. (QS. Al-An'am, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(அல்லது நம்முடைய) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு மலக்குகளைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் ஒரு மனிதனுடைய ரூபத்தில்தான் நாம் அனுப்புவோம். (அது சமயத்தில்) இப்போது இருக்கும் சந்தேகத்தையே அவர்களுக்கு நாம் உண்டு பண்ணியவராவோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௯)

Jan Trust Foundation

நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(தூதருக்கு துணையாக அனுப்பப்படும்) அவரை ஒரு வானவராக ஆக்கினாலும், அவரை(யும்) ஒரு ஆடவராகத்தான் ஆக்குவோம்; (ஏனெனில் வானவரை அவருடைய அசல் உருவத்தில் இவர்களால் பார்க்க முடியாது. அப்போது) அவர்கள் எதை (தங்கள் மீது) குழப்புகிறார்களோ அதையே அவர்கள் மீது (நாமும்) குழப்பிவிடுவோம். (மீண்டும் பழைய சந்தேகத்திற்கே அவர்கள் ஆளாகி விடுவர்.)