Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Word by Word

Al-Ma'idah

(al-Māʾidah)

bismillaahirrahmaanirrahiim

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَوْفُوْا بِالْعُقُوْدِۗ اُحِلَّتْ لَكُمْ بَهِيْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا يُتْلٰى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّى الصَّيْدِ وَاَنْتُمْ حُرُمٌۗ اِنَّ اللّٰهَ يَحْكُمُ مَا يُرِيْدُ ١

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
awfū
أَوْفُوا۟
நிறைவேற்றுங்கள்
bil-ʿuqūdi
بِٱلْعُقُودِۚ
உடன்படிக்கைகளை
uḥillat
أُحِلَّتْ
ஆகுமாக்கப்பட்டன
lakum
لَكُم
உங்களுக்கு
bahīmatu l-anʿāmi
بَهِيمَةُ ٱلْأَنْعَٰمِ
கால்நடைகள்
illā
إِلَّا
தவிர
مَا
எவை
yut'lā
يُتْلَىٰ
ஓதிக்காட்டப்படுகிறது
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ghayra muḥillī
غَيْرَ مُحِلِّى
ஆகுமாக்காதீர்கள்
l-ṣaydi
ٱلصَّيْدِ
வேட்டையாடுவதை
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
ḥurumun
حُرُمٌۗ
இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போது
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yaḥkumu
يَحْكُمُ
சட்டமாக்குகிறான்
مَا
எதை
yurīdu
يُرِيدُ
நாடுகிறான்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். அன்றி, உங்களுக்கு (பின்வரும் 3ஆம் வசனத்தில்) ஓதி காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டிருக் கின்றன. (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம்; வேட்டையாடலாம். எனினும்) நீங்கள் இஹ்ராம் (ஹஜ் பயண உடை) அணிந்திருக்கும் சமயத்தில் (இவைகளை) வேட்டையாடுவது உங்களுக்கு ஆகுமானதல்ல, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதை (உங்களுக்குக்) கட்டளையிடுகின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَاۤىِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَاۤىِٕدَ وَلَآ اٰۤمِّيْنَ الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا ۗوَاِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوْا ۗوَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ اَنْ تَعْتَدُوْۘا وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰىۖ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ ۖوَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ٢

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā tuḥillū
لَا تُحِلُّوا۟
ஆகுமாக்காதீர்கள்
shaʿāira
شَعَٰٓئِرَ
அடையாளங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walā l-shahra
وَلَا ٱلشَّهْرَ
இன்னும் மாதத்தை
l-ḥarāma
ٱلْحَرَامَ
புனிதமானது
walā l-hadya
وَلَا ٱلْهَدْىَ
இன்னும் குர்பானியை
walā l-qalāida
وَلَا ٱلْقَلَٰٓئِدَ
இன்னும் மாலையிடப்பட்ட குர்பானிகளை
walā āmmīna
وَلَآ ءَآمِّينَ
இன்னும் நாடுபவர்களை
l-bayta
ٱلْبَيْتَ
(கஅபா)ஆலயத்தை
l-ḥarāma
ٱلْحَرَامَ
புனிதமானது
yabtaghūna
يَبْتَغُونَ
தேடியவர்களாக
faḍlan
فَضْلًا
அருளை
min rabbihim
مِّن رَّبِّهِمْ
தங்கள் இறைவனிடமிருந்து
wariḍ'wānan
وَرِضْوَٰنًاۚ
இன்னும் பொருத்தத்தை
wa-idhā ḥalaltum
وَإِذَا حَلَلْتُمْ
நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால்
fa-iṣ'ṭādū
فَٱصْطَادُوا۟ۚ
வேட்டையாடுங்கள்
walā yajrimannakum
وَلَا يَجْرِمَنَّكُمْ
உங்களை தூண்ட வேண்டாம்
shanaānu
شَنَـَٔانُ
துவேஷம்
qawmin
قَوْمٍ
சமுதாயத்தின்
an
أَن
அவர்களை தடுத்த காரணத்தால்
ṣaddūkum
صَدُّوكُمْ
அவர்களை தடுத்த காரணத்தால் உங்களை
ʿani l-masjidi
عَنِ ٱلْمَسْجِدِ
மஸ்ஜிதை விட்டு
l-ḥarāmi
ٱلْحَرَامِ
புனிதமானது
an taʿtadū
أَن تَعْتَدُواۘ
நீங்கள் வரம்புமீறுவது
wataʿāwanū
وَتَعَاوَنُوا۟
ஒருவருக்கொருவர் உதவுங்கள்
ʿalā l-biri
عَلَى ٱلْبِرِّ
நன்மைக்கு
wal-taqwā
وَٱلتَّقْوَىٰۖ
இன்னும் இறையச்சம்
walā taʿāwanū
وَلَا تَعَاوَنُوا۟
ஒருவருக்கொருவர் உதவாதீர்கள்
ʿalā l-ith'mi
عَلَى ٱلْإِثْمِ
பாவத்திற்கு
wal-ʿud'wāni
وَٱلْعُدْوَٰنِۚ
இன்னும் அநியாயம்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۖ
அல்லாஹ்வை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டனை
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களையும் (ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (குர்பானிகளுக்காக) அடையாளம் கட்டப்பட்டவைகளையும், தங்கள் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் அடையக்கருதி கண்ணியமான அவனுடைய ஆலயத்தை நாடிச் செல்பவர்களையும் (அவமதிப்பதை) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் இஹ்ராமை நீக்கிவிட்டால் (அனுமதிக்கப்பட்டவைகளை) நீங்கள் வேட்டையாடலாம். கண்ணியமான மஸ்ஜிதுக்குச் செல்லாது உங்களைத் தடுத்துக்கொண்ட வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் (அவர்கள்மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டாதிருக்கவும். அன்றி, நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௨)
Tafseer

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَآ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْۗ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِۗ ذٰلِكُمْ فِسْقٌۗ اَلْيَوْمَ يَىِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِۗ اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِيْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْنًاۗ فَمَنِ اضْطُرَّ فِيْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ٣

ḥurrimat
حُرِّمَتْ
விலக்கப்பட்டன
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்களுக்கு
l-maytatu
ٱلْمَيْتَةُ
செத்தது
wal-damu
وَٱلدَّمُ
இன்னும் இரத்தம்
walaḥmu l-khinzīri
وَلَحْمُ ٱلْخِنزِيرِ
இன்னும் இறைச்சி/பன்றி
wamā
وَمَآ
இன்னும் எது
uhilla
أُهِلَّ
பெயர் கூறப்பட்டது
lighayri
لِغَيْرِ
அல்லாதவற்றிற்காக
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
bihi
بِهِۦ
அதை
wal-mun'khaniqatu
وَٱلْمُنْخَنِقَةُ
இன்னும் கழுத்து நெருக்கிச் செத்தது
wal-mawqūdhatu
وَٱلْمَوْقُوذَةُ
இன்னும் அடிப்பட்டுச் செத்தது
wal-mutaradiyatu
وَٱلْمُتَرَدِّيَةُ
இன்னும் விழுந்து செத்தது
wal-naṭīḥatu
وَٱلنَّطِيحَةُ
இன்னும் கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது
wamā akala
وَمَآ أَكَلَ
இன்னும் எதை/தின்றது
l-sabuʿu
ٱلسَّبُعُ
மிருகங்கள்
illā
إِلَّا
தவிர
mā dhakkaytum
مَا ذَكَّيْتُمْ
எதை/அறுத்தீர்கள்
wamā dhubiḥa
وَمَا ذُبِحَ
இன்னும் எது/அறுக்கப்பட்டது
ʿalā l-nuṣubi
عَلَى ٱلنُّصُبِ
மீது/நடப்பட்டவை, சிலைகள்
wa-an tastaqsimū
وَأَن تَسْتَقْسِمُوا۟
இன்னும் பாகம் பிரித்துக் கொள்வது
bil-azlāmi
بِٱلْأَزْلَٰمِۚ
அம்புகளைக்கொண்டு
dhālikum
ذَٰلِكُمْ
இவை
fis'qun l-yawma
فِسْقٌۗ ٱلْيَوْمَ
பாவம்/இன்று
ya-isa
يَئِسَ
நம்பிக்கை இழந்தனர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
min
مِن
விட்டு
dīnikum
دِينِكُمْ
உங்கள் மார்க்கம்
falā
فَلَا
ஆகவே பயப்படாதீர்கள்
takhshawhum
تَخْشَوْهُمْ
ஆகவே பயப்படாதீர்கள் அவர்களை
wa-ikh'shawni
وَٱخْشَوْنِۚ
என்னை பயப்படுங்கள்
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
akmaltu
أَكْمَلْتُ
முழுமையாக்கினேன்
lakum
لَكُمْ
உங்களுக்கு
dīnakum
دِينَكُمْ
உங்கள் மார்க்கத்தை
wa-atmamtu
وَأَتْمَمْتُ
இன்னும் முழுமையாக்கினேன்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
niʿ'matī
نِعْمَتِى
என் அருளை
waraḍītu
وَرَضِيتُ
இன்னும் திருப்தியடைந்தேன்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-is'lāma
ٱلْإِسْلَٰمَ
இஸ்லாமை
dīnan
دِينًاۚ
மார்க்கமாக
famani
فَمَنِ
ஆகவே எவர்
uḍ'ṭurra
ٱضْطُرَّ
நிர்ப்பந்திக்கப்பட்டார்
fī makhmaṣatin
فِى مَخْمَصَةٍ
கடுமையான பசியில்
ghayra mutajānifin
غَيْرَ مُتَجَانِفٍ
சாயாதவராக
li-ith'min
لِّإِثْمٍۙ
பாவத்தின் பக்கம்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
(நம்பிக்கையாளர்களே! தானாக) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப்பட்டவை ஆகியவைகளும், அடிப்பட்டுச் செத்ததும், (மேலிருந்து) விழுந்து செத்ததும், கழுத்து நெருக்கிச் செத்ததும், கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததும், (சிங்கப்பல்லும், வீர நகமுள்ள மாமிசம் தின்னும் மிருகங்களாகிய சிங்கம், புலி, சிறுத்தை போன்ற) ஐவாய் மிருகங்கள் கடித்(துச் செத்)தவையும் உங்களுக்கு விலக்கப்பட்டிக்கின்றன. (எனினும், இம்மிருகங்கள் வேட்டையாடிய) அவைகளில் (உயிரோடிருப்பவற்றில்) முறைப்படி (பிஸ்மில்லாஹ் சொல்லி) அறுக்கப்பட்டவைகளைத் தவிர. (அவ்வாறு அறுக்கப் பட்டவைகளைப் புசிக்கலாம். பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (ஸ்தம்பம், கொடி, பாவட்டா, சிலை போன்ற)வைகளுக்காக அறுக்கப் பட்டவைகளும், அம்பு எய்து (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வதும் (உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன.) இவை அனைத்தும் பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இன்றைய தினம் இழந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் (ஒரு சிறிதும்) பயப்படவேண்டாம். எனக்கே பயப்படுங்கள். இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்) எவரேனும், பாவம் செய்யும் எண்ணமின்றி பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவைகளைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (நிர்ப்பந்தத்திற்குள்ளான அவருடைய குற்றங்களை) மிகவும் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩)
Tafseer

يَسْـَٔلُوْنَكَ مَاذَآ اُحِلَّ لَهُمْۗ قُلْ اُحِلَّ لَكُمُ الطَّيِّبٰتُۙ وَمَا عَلَّمْتُمْ مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِيْنَ تُعَلِّمُوْنَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللّٰهُ فَكُلُوْا مِمَّآ اَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهِ ۖوَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ ٤

yasalūnaka
يَسْـَٔلُونَكَ
கேட்கின்றனர்/உம்மிடம்
mādhā
مَاذَآ
எவை
uḥilla
أُحِلَّ
ஆகுமாக்கப்பட்டன
lahum
لَهُمْۖ
அவர்களுக்கு
qul
قُلْ
கூறுவீராக
uḥilla
أُحِلَّ
ஆகுமாக்கப்பட்டன
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-ṭayibātu
ٱلطَّيِّبَٰتُۙ
நல்லவை
wamā
وَمَا
இன்னும் எவை
ʿallamtum
عَلَّمْتُم
கற்றுக் கொடுத்தீர்கள்
mina l-jawāriḥi
مِّنَ ٱلْجَوَارِحِ
மிருகங்களில்
mukallibīna
مُكَلِّبِينَ
வேட்டையாட பயிற்சி அளியுங்கள்
tuʿallimūnahunna
تُعَلِّمُونَهُنَّ
கற்று கொடுங்கள்/அவற்றுக்கு
mimmā
مِمَّا
எவற்றிலிருந்து
ʿallamakumu
عَلَّمَكُمُ
கற்பித்தான்/உங்களுக்கு
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
fakulū
فَكُلُوا۟
ஆகவே புசியுங்கள்
mimmā
مِمَّآ
எவற்றிலிருந்து
amsakna
أَمْسَكْنَ
அவை தடுத்தன
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்காக
wa-udh'kurū
وَٱذْكُرُوا۟
இன்னும் கூறுங்கள்
is'ma
ٱسْمَ
பெயரை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalayhi
عَلَيْهِۖ
அவற்றின் மீது
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
sarīʿu
سَرِيعُ
தீவிரமானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
கணக்கிடுவதில்
(நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என்று அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "(சுத்தமான) நல்லவைகள், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி நீங்கள் வேட்டையாடும் (நாய், சிறுத்தை போன்ற) மிருகங்களுக்கு(ம், ராஜாளி போன்ற பறவைகளுக்கும்) வேட்டையாடக் கற்பித்து அவை (வேட்டையாடி,) உங்களுக்காகத் தடுத்(து வைத்)திருப்பவற்றையும், (அவை இறந்துவிட்டபோதிலும்) நீங்கள் புசிக்கலாம் (உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது). (எனினும், அவற்றை வேட்டைக்கு விடும்பொழுது "பிஸ்மில்லாஹ்" என்று) அல்லாஹ்வின் பெயரைக் கூறியே விடுங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪)
Tafseer

اَلْيَوْمَ اُحِلَّ لَكُمُ الطَّيِّبٰتُۗ وَطَعَامُ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ حِلٌّ لَّكُمْ ۖوَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ۖوَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰتِ وَالْمُحْصَنٰتُ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ اِذَآ اٰتَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ مُحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ وَلَا مُتَّخِذِيْٓ اَخْدَانٍۗ وَمَنْ يَّكْفُرْ بِالْاِيْمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهٗ ۖوَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ ࣖ ٥

al-yawma
ٱلْيَوْمَ
இன்று
uḥilla
أُحِلَّ
ஆகுமாக்கப்பட்டன
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-ṭayibātu
ٱلطَّيِّبَٰتُۖ
நல்லவை
waṭaʿāmu
وَطَعَامُ
இன்னும் உணவும்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களின்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
ḥillun
حِلٌّ
ஆகுமானது
lakum
لَّكُمْ
உங்களுக்கு
waṭaʿāmukum
وَطَعَامُكُمْ
இன்னும் உங்கள் உணவு
ḥillun
حِلٌّ
ஆகுமானது
lahum
لَّهُمْۖ
அவர்களுக்கு
wal-muḥ'ṣanātu
وَٱلْمُحْصَنَٰتُ
கற்புள்ள பெண்கள்
mina
مِنَ
இருந்து
l-mu'mināti
ٱلْمُؤْمِنَٰتِ
ஈமான் கொண்ட பெண்கள்
wal-muḥ'ṣanātu
وَٱلْمُحْصَنَٰتُ
இன்னும் கற்புள்ள பெண்கள்
mina alladhīna
مِنَ ٱلَّذِينَ
எவர்களில்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
min qablikum
مِن قَبْلِكُمْ
உங்களுக்குமுன்னர்
idhā
إِذَآ
நீங்கள்கொடுத்தால்
ātaytumūhunna
ءَاتَيْتُمُوهُنَّ
நீங்கள்கொடுத்தால் அவர்களுக்கு
ujūrahunna
أُجُورَهُنَّ
மணக்கொடைகளை அவர்களுடைய
muḥ'ṣinīna
مُحْصِنِينَ
கற்புள்ளவர்களாக
ghayra
غَيْرَ
அன்றி
musāfiḥīna
مُسَٰفِحِينَ
விபச்சாரர்களாக
walā muttakhidhī
وَلَا مُتَّخِذِىٓ
இன்னும் ஆக்காதவர்களாக
akhdānin
أَخْدَانٍۗ
இரகசிய தோழிகளை
waman
وَمَن
எவர்
yakfur
يَكْفُرْ
மறுக்கிறார்
bil-īmāni
بِٱلْإِيمَٰنِ
நம்பிக்கை கொள்ள
faqad
فَقَدْ
திட்டமாக
ḥabiṭa
حَبِطَ
அழிந்து விடும்
ʿamaluhu
عَمَلُهُۥ
அவருடைய செயல்
wahuwa
وَهُوَ
அவர்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
mina l-khāsirīna
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்
(நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவைகள் அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டுவிட்டன. வேதத்தையுடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்களுடைய உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்.) அன்றி, எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இவற்றை) நிராகரிக்கின்றானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவனாகவே இருப்பான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௫)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْكَعْبَيْنِۗ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْاۗ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰٓى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَاۤءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَاۤىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَاۤءَ فَلَمْ تَجِدُوْا مَاۤءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ ۗمَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٦

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
idhā qum'tum
إِذَا قُمْتُمْ
நீங்கள் நின்றால்
ilā l-ṣalati
إِلَى ٱلصَّلَوٰةِ
தொழுகைக்கு
fa-igh'silū
فَٱغْسِلُوا۟
கழுகுங்கள்
wujūhakum
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
wa-aydiyakum
وَأَيْدِيَكُمْ
இன்னும் கைகளை/உங்கள்
ilā
إِلَى
வரை
l-marāfiqi
ٱلْمَرَافِقِ
முழங்கைகள்
wa-im'saḥū
وَٱمْسَحُوا۟
இன்னும் தடவுங்கள்
biruūsikum
بِرُءُوسِكُمْ
உங்கள் தலைகளில்
wa-arjulakum
وَأَرْجُلَكُمْ
இன்னும் உங்கள் கால்களை
ilā
إِلَى
வரை
l-kaʿbayni
ٱلْكَعْبَيْنِۚ
இரு கணுக்கால்கள்
wa-in kuntum
وَإِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
junuban
جُنُبًا
முழுக்காளிகளாக
fa-iṭṭahharū
فَٱطَّهَّرُوا۟ۚ
நன்கு சுத்தமாகுங்கள்
wa-in kuntum
وَإِن كُنتُم
இன்னும் நீங்கள் இருந்தால்
marḍā
مَّرْضَىٰٓ
நோயாளிகளாக
aw
أَوْ
அல்லது
ʿalā safarin
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
aw
أَوْ
அல்லது
jāa
جَآءَ
வந்தார்
aḥadun
أَحَدٌ
ஒருவர்
minkum
مِّنكُم
உங்களில்
mina
مِّنَ
இருந்து
l-ghāiṭi
ٱلْغَآئِطِ
மலஜல பாதை
aw
أَوْ
அல்லது
lāmastumu
لَٰمَسْتُمُ
உறவு கொண்டீர்கள்
l-nisāa
ٱلنِّسَآءَ
பெண்களுடன்
falam tajidū
فَلَمْ تَجِدُوا۟
பெறவில்லை
māan
مَآءً
தண்ணீரை
fatayammamū
فَتَيَمَّمُوا۟
நாடுங்கள்
ṣaʿīdan
صَعِيدًا
மண்ணை
ṭayyiban
طَيِّبًا
சுத்தமானது
fa-im'saḥū
فَٱمْسَحُوا۟
இன்னும் தடவுங்கள்
biwujūhikum
بِوُجُوهِكُمْ
முகங்களை/உங்கள்
wa-aydīkum
وَأَيْدِيكُم
இன்னும் கைகளை/உங்கள்
min'hu
مِّنْهُۚ
அதில்
mā yurīdu
مَا يُرِيدُ
நாடமாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyajʿala
لِيَجْعَلَ
ஆக்குவதற்கு
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
min ḥarajin
مِّنْ حَرَجٍ
சிரமத்தை
walākin
وَلَٰكِن
எனினும்
yurīdu
يُرِيدُ
நாடுகிறான்
liyuṭahhirakum
لِيُطَهِّرَكُمْ
உங்களைபரிசுத்தமாக்க
waliyutimma
وَلِيُتِمَّ
இன்னும் முழுமையாக்க
niʿ'matahu
نِعْمَتَهُۥ
தன் அருளை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
laʿallakum tashkurūna
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள். அன்றி, (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) "மஸஹு" செய்து கொள்ளுங்கள். நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் (கை கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி, நீங்கள் நோயாளிகளாக இருந்தோ அல்லது பயணத்தில் இருந்தோ அல்லது உங்களில் எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தோ அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தோ (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதனை)க் கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகின்றான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக! ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬)
Tafseer

وَاذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ وَمِيْثَاقَهُ الَّذِيْ وَاثَقَكُمْ بِهٖٓ ۙاِذْ قُلْتُمْ سَمِعْنَا وَاَطَعْنَا ۖوَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ٧

wa-udh'kurū
وَٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
niʿ'mata
نِعْمَةَ
அருளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
wamīthāqahu
وَمِيثَٰقَهُ
இன்னும் அவனுடைய உறுதிமொழியை
alladhī
ٱلَّذِى
எது/உங்களிடம் உறுதி மொழி வாங்கினான்
wāthaqakum
وَاثَقَكُم
அதை
bihi
بِهِۦٓ
போது
idh qul'tum
إِذْ قُلْتُمْ
கூறினீர்கள்
samiʿ'nā
سَمِعْنَا
செவிமடுத்தோம்
wa-aṭaʿnā
وَأَطَعْنَاۖ
இன்னும் கீழ்ப்படிந்தோம்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bidhāti
بِذَاتِ
உள்ளவற்றை
l-ṣudūri
ٱلصُّدُورِ
நெஞ்சங்களில்
(யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் (உங்களிடம்) வாக்குறுதி வாங்கியபொழுது அதனை நீங்கள் உறுதிப்படுத்தி "நாங்கள் செவிசாய்த்தோம். (உனக்கு) வழிப்பட்டோம்" என்று நீங்கள் கூறியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௭)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ لِلّٰهِ شُهَدَاۤءَ بِالْقِسْطِۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَلَّا تَعْدِلُوْا ۗاِعْدِلُوْاۗ هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰىۖ وَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ ٨

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
kūnū
كُونُوا۟
இருங்கள்
qawwāmīna
قَوَّٰمِينَ
நிலைநின்றவர்களாக
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்காக
shuhadāa
شُهَدَآءَ
சாட்சி கூறுபவர்களாக
bil-qis'ṭi
بِٱلْقِسْطِۖ
நீதிக்கு
walā yajrimannakum
وَلَا يَجْرِمَنَّكُمْ
உங்களை தூண்ட வேண்டாம்
shanaānu
شَنَـَٔانُ
துவேஷம்
qawmin
قَوْمٍ
ஒரு சமுதாயத்தின்
ʿalā
عَلَىٰٓ
மீது
allā taʿdilū
أَلَّا تَعْدِلُوا۟ۚ
நீங்கள் நீதமாக நடக்காதிருக்க
iʿ'dilū
ٱعْدِلُوا۟
நீதமாக இருங்கள்
huwa
هُوَ
அது
aqrabu
أَقْرَبُ
மிக நெருக்கமானது
lilttaqwā
لِلتَّقْوَىٰۖ
இறையச்சத்திற்கு
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
khabīrun
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிந்தவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
எதை/செய்கிறீர்கள்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதமாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮)
Tafseer

وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ ٩

waʿada
وَعَدَ
வாக்களித்தான்
l-lahu alladhīna
ٱللَّهُ ٱلَّذِينَ
அல்லாஹ்/எவர்களுக்கு
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِۙ
நற்செயல்களை
lahum
لَهُم
அவர்களுக்கு
maghfiratun
مَّغْفِرَةٌ
மன்னிப்பு
wa-ajrun ʿaẓīmun
وَأَجْرٌ عَظِيمٌ
இன்னும் கூலி/மகத்தானது
எவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார் களோ அவர்களுக்கு பாவமன்னிப்பையும், மகத்தான (நற்) கூலியையும் (தருவதாக) அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯)
Tafseer
௧௦

وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ ١٠

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
wakadhabū
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
நம் வசனங்களை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu
أَصْحَٰبُ
வாசிகள்
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
நரக
எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நரகவாசிகள்தான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦)
Tafseer