Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௪

Qur'an Surah Al-Ma'idah Verse 4

ஸூரத்துல் மாயிதா [௫]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَسْـَٔلُوْنَكَ مَاذَآ اُحِلَّ لَهُمْۗ قُلْ اُحِلَّ لَكُمُ الطَّيِّبٰتُۙ وَمَا عَلَّمْتُمْ مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِيْنَ تُعَلِّمُوْنَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللّٰهُ فَكُلُوْا مِمَّآ اَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهِ ۖوَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ (المائدة : ٥)

yasalūnaka
يَسْـَٔلُونَكَ
They ask you
கேட்கின்றனர்/உம்மிடம்
mādhā
مَاذَآ
what
எவை
uḥilla
أُحِلَّ
(is) made lawful
ஆகுமாக்கப்பட்டன
lahum
لَهُمْۖ
for them
அவர்களுக்கு
qul
قُلْ
Say
கூறுவீராக
uḥilla
أُحِلَّ
"Are made lawful
ஆகுமாக்கப்பட்டன
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
l-ṭayibātu
ٱلطَّيِّبَٰتُۙ
the good things
நல்லவை
wamā
وَمَا
and what
இன்னும் எவை
ʿallamtum
عَلَّمْتُم
you have taught
கற்றுக் கொடுத்தீர்கள்
mina l-jawāriḥi
مِّنَ ٱلْجَوَارِحِ
of (your) hunting animals
மிருகங்களில்
mukallibīna
مُكَلِّبِينَ
ones who train animals to hunt
வேட்டையாட பயிற்சி அளியுங்கள்
tuʿallimūnahunna
تُعَلِّمُونَهُنَّ
you teach them
கற்று கொடுங்கள்/அவற்றுக்கு
mimmā
مِمَّا
of what
எவற்றிலிருந்து
ʿallamakumu
عَلَّمَكُمُ
has taught you
கற்பித்தான்/உங்களுக்கு
l-lahu
ٱللَّهُۖ
Allah
அல்லாஹ்
fakulū
فَكُلُوا۟
So eat
ஆகவே புசியுங்கள்
mimmā
مِمَّآ
of what
எவற்றிலிருந்து
amsakna
أَمْسَكْنَ
they catch
அவை தடுத்தன
ʿalaykum
عَلَيْكُمْ
for you
உங்களுக்காக
wa-udh'kurū
وَٱذْكُرُوا۟
but mention
இன்னும் கூறுங்கள்
is'ma
ٱسْمَ
(the) name
பெயரை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ʿalayhi
عَلَيْهِۖ
on it
அவற்றின் மீது
wa-ittaqū
وَٱتَّقُوا۟
and fear
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۚ
Allah
அல்லாஹ்வை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
sarīʿu
سَرِيعُ
is swift
தீவிரமானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
(in taking) account
கணக்கிடுவதில்

Transliteration:

Yas'aloonaka maazaaa uhilla lahum; qul uhilla lakumuttaiyibaatu wa maa'allamtum minal jawaarihi mukallibeena tu'allimoonahunnamimmaa 'allamakumul laahu fakuloo mimmaaa amsakna 'alaikum wazkurus mal laahi 'alaih; wattaqul laah; innal laaha saree'ul hisaab (QS. al-Māʾidah:4)

English Sahih International:

They ask you, [O Muhammad], what has been made lawful for them. Say, "Lawful for you are [all] good foods and [game caught by] what you have trained of hunting animals which you train as Allah has taught you. So eat of what they catch for you, and mention the name of Allah upon it, and fear Allah." Indeed, Allah is swift in account. (QS. Al-Ma'idah, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என்று அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "(சுத்தமான) நல்லவைகள், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி நீங்கள் வேட்டையாடும் (நாய், சிறுத்தை போன்ற) மிருகங்களுக்கு(ம், ராஜாளி போன்ற பறவைகளுக்கும்) வேட்டையாடக் கற்பித்து அவை (வேட்டையாடி,) உங்களுக்காகத் தடுத்(து வைத்)திருப்பவற்றையும், (அவை இறந்துவிட்டபோதிலும்) நீங்கள் புசிக்கலாம் (உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது). (எனினும், அவற்றை வேட்டைக்கு விடும்பொழுது "பிஸ்மில்லாஹ்" என்று) அல்லாஹ்வின் பெயரைக் கூறியே விடுங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௪)

Jan Trust Foundation

(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்| உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்; எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு ஆகுமாக்கப்பட்டது எது என்று உம்மிடம் கேட்கின்றனர். கூறுவீராக: "நல்லவை இன்னும் (வேட்டையாடுகின்ற) மிருகங்களில் நீங்கள் கற்றுக் கொடுத்தவை வேட்டையாடியதும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்தவற்றிலிருந்து அவற்றுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள், வேட்டையாட பயிற்சி அளியுங்கள். ஆக, அவை உங்களுக்காகத் தடுத்தவற்றிலிருந்து (அவை இறந்தாலும்) புசியுங்கள். (அவற்றை ஏவிவிடும் போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கிடுவதில் தீவிரமானவன்.