குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧
Qur'an Surah Al-Ma'idah Verse 1
ஸூரத்துல் மாயிதா [௫]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَوْفُوْا بِالْعُقُوْدِۗ اُحِلَّتْ لَكُمْ بَهِيْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا يُتْلٰى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّى الصَّيْدِ وَاَنْتُمْ حُرُمٌۗ اِنَّ اللّٰهَ يَحْكُمُ مَا يُرِيْدُ (المائدة : ٥)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- O you who believe!
- நம்பிக்கையாளர்களே
- awfū
- أَوْفُوا۟
- Fulfil
- நிறைவேற்றுங்கள்
- bil-ʿuqūdi
- بِٱلْعُقُودِۚ
- the contracts
- உடன்படிக்கைகளை
- uḥillat
- أُحِلَّتْ
- Are made lawful
- ஆகுமாக்கப்பட்டன
- lakum
- لَكُم
- for you
- உங்களுக்கு
- bahīmatu l-anʿāmi
- بَهِيمَةُ ٱلْأَنْعَٰمِ
- the quadruped (of) the grazing livestock
- கால்நடைகள்
- illā
- إِلَّا
- except
- தவிர
- mā
- مَا
- what
- எவை
- yut'lā
- يُتْلَىٰ
- is recited
- ஓதிக்காட்டப்படுகிறது
- ʿalaykum
- عَلَيْكُمْ
- on you
- உங்கள் மீது
- ghayra muḥillī
- غَيْرَ مُحِلِّى
- not being permitted
- ஆகுமாக்காதீர்கள்
- l-ṣaydi
- ٱلصَّيْدِ
- (to) hunt
- வேட்டையாடுவதை
- wa-antum
- وَأَنتُمْ
- while you
- நீங்கள்
- ḥurumun
- حُرُمٌۗ
- (are in) Ihram
- இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போது
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- yaḥkumu
- يَحْكُمُ
- decrees
- சட்டமாக்குகிறான்
- mā
- مَا
- what
- எதை
- yurīdu
- يُرِيدُ
- He wills
- நாடுகிறான்
Transliteration:
Yaaa aiyuhal lazeena aamanoo awfoo bil'uqood; uhillat lakum baheematul an'aami illaa maa yutlaa 'alaikum ghaira muhillis saidi wa antum hurum; innal laaha yahkumu maa yureed(QS. al-Māʾidah:1)
English Sahih International:
O you who have believed, fulfill [all] contracts. Lawful for you are the animals of grazing livestock except for that which is recited to you [in this Quran] – hunting not being permitted while you are in the state of ihram. Indeed, Allah ordains what He intends. (QS. Al-Ma'idah, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். அன்றி, உங்களுக்கு (பின்வரும் 3ஆம் வசனத்தில்) ஓதி காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டிருக் கின்றன. (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம்; வேட்டையாடலாம். எனினும்) நீங்கள் இஹ்ராம் (ஹஜ் பயண உடை) அணிந்திருக்கும் சமயத்தில் (இவைகளை) வேட்டையாடுவது உங்களுக்கு ஆகுமானதல்ல, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதை (உங்களுக்குக்) கட்டளையிடுகின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧)
Jan Trust Foundation
முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போது வேட்டையாடுவதை ஆகுமாக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதை சட்டமாக்குகிறான்.