Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 8

An-Nisa

(an-Nisāʾ)

௭௧

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِيْعًا ٧١

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
khudhū
خُذُوا۟
பற்றிப் பிடியுங்கள்
ḥidh'rakum
حِذْرَكُمْ
எச்சரிக்கையை/உங்கள்
fa-infirū
فَٱنفِرُوا۟
புறப்படுங்கள்
thubātin
ثُبَاتٍ
சிறு கூட்டங்களாக
awi
أَوِ
அல்லது
infirū
ٱنفِرُوا۟
புறப்படுங்கள்
jamīʿan
جَمِيعًا
அனைவருமாக
நம்பிக்கையாளர்களே! (எதிரிகளிடம் எப்பொழுதும்) எச்சரிக்கையாகவே இருங்கள் உங்களின் தற்காப்பு சாதனங்களை உங்களுடன் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு சிறு கூட்டங்களாகவோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தோ போருக்கு புறப்படுங்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭௧)
Tafseer
௭௨

وَاِنَّ مِنْكُمْ لَمَنْ لَّيُبَطِّئَنَّۚ فَاِنْ اَصَابَتْكُمْ مُّصِيْبَةٌ قَالَ قَدْ اَنْعَمَ اللّٰهُ عَلَيَّ اِذْ لَمْ اَكُنْ مَّعَهُمْ شَهِيْدًا ٧٢

wa-inna minkum
وَإِنَّ مِنكُمْ
நிச்சயமாக/உங்களில்
laman
لَمَن
திட்டமாக எவர்
layubaṭṭi-anna
لَّيُبَطِّئَنَّ
நிச்சயமாக பின்தங்கிவிடுகிறான்
fa-in aṣābatkum
فَإِنْ أَصَٰبَتْكُم
ஏற்பட்டால்/உங்களுக்கு
muṣībatun
مُّصِيبَةٌ
ஒரு சோதனை
qāla
قَالَ
கூறுகிறான்
qad
قَدْ
திட்டமாக
anʿama
أَنْعَمَ
அருள் புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayya
عَلَىَّ
என் மீது
idh
إِذْ
ஏனெனில்
lam akun
لَمْ أَكُن
நான் இருக்கவில்லை
maʿahum
مَّعَهُمْ
அவர்களுடன்
shahīdan
شَهِيدًا
பிரசன்னமாகி இருப் பவன்
(போருக்கு வராது) பின்தங்கி விடுபவர்களும் நிச்சயமாக உங்களில் சிலர் இருக்கின்றனர். (அவர்கள் நயவஞ்சகர்களே! ஏனெனில், போருக்குச் சென்ற) உங்களுக்கு யாதொரு கஷ்டமேற்பட்டாலோ (அவர்கள்) "நாங்கள் உங்களுடன் வராமல் இருந்தது அல்லாஹ் எங்கள் மீது புரிந்த அருள்தான்" என்று கூறுகின்றார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭௨)
Tafseer
௭௩

وَلَىِٕنْ اَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللّٰهِ لَيَقُوْلَنَّ كَاَنْ لَّمْ تَكُنْۢ بَيْنَكُمْ وَبَيْنَهٗ مَوَدَّةٌ يّٰلَيْتَنِيْ كُنْتُ مَعَهُمْ فَاَفُوْزَ فَوْزًا عَظِيْمًا ٧٣

wala-in
وَلَئِنْ
aṣābakum
أَصَٰبَكُمْ
அடைந்தால்/உங்களை
faḍlun
فَضْلٌ
ஓர் அருள்
mina
مِّنَ
இருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
layaqūlanna
لَيَقُولَنَّ
நிச்சயமாக கூறுகிறான்
ka-an
كَأَن
போன்று
lam takun
لَّمْ تَكُنۢ
இருக்கவில்லை
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
wabaynahu
وَبَيْنَهُۥ
இன்னும் அவனுக்கிடையில்
mawaddatun
مَوَدَّةٌ
நட்பு
yālaytanī kuntu
يَٰلَيْتَنِى كُنتُ
நான் இருந்திருக்க வேண்டுமே
maʿahum
مَعَهُمْ
அவர்களுடன்
fa-afūza
فَأَفُوزَ
வெற்றிபெற்றிருப்பேன்
fawzan
فَوْزًا
வெற்றி
ʿaẓīman
عَظِيمًا
மகத்தானது
அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்குக் கிடைத்தாலோ "நானும் உங்களுடன் இருந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இருந்திருந்தால் பெரும் பாக்கியத்தை நானும் அடைந்திருப்பேனே!" என்று உங்களுடன் சம்பந்தம் இல்லாதவர்கள் கூறுவதைப்போல் அவர்கள் கூறுகின்றனர். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭௩)
Tafseer
௭௪

۞ فَلْيُقَاتِلْ فِيْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يَشْرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ ۗ وَمَنْ يُّقَاتِلْ فِيْ سَبِيْلِ اللّٰهِ فَيُقْتَلْ اَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا ٧٤

falyuqātil
فَلْيُقَٰتِلْ
போரிடட்டும்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yashrūna
يَشْرُونَ
விற்கிறார்கள்
l-ḥayata
ٱلْحَيَوٰةَ
வாழ்க்கையை
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِۚ
மறுமைக்குப் பகரமாக
waman
وَمَن
இன்னும் எவர்
yuqātil
يُقَٰتِلْ
போரிடுவாரோ
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fayuq'tal
فَيُقْتَلْ
அவர் கொல்லப்பட்டாலும்
aw
أَوْ
அல்லது
yaghlib
يَغْلِبْ
வெற்றி பெற்றாலும்
fasawfa nu'tīhi
فَسَوْفَ نُؤْتِيهِ
கொடுப்போம்/அவருக்கு
ajran
أَجْرًا
கூலியை
ʿaẓīman
عَظِيمًا
மகத்தானது
மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வெட்டப் பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவர்களுக்கு அதிசீக்கிரத்தில் மகத்தான கூலியைக் கொடுப்போம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭௪)
Tafseer
௭௫

وَمَا لَكُمْ لَا تُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاۤءِ وَالْوِلْدَانِ الَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَآ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ اَهْلُهَاۚ وَاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ وَلِيًّاۚ وَاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا ٧٥

wamā lakum
وَمَا لَكُمْ
உங்களுக்கு என்ன
lā tuqātilūna
لَا تُقَٰتِلُونَ
நீங்கள் போரிடாமல் இருக்க
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wal-mus'taḍʿafīna
وَٱلْمُسْتَضْعَفِينَ
பலவீனர்கள்
mina
مِنَ
இருந்து
l-rijāli
ٱلرِّجَالِ
ஆண்கள்
wal-nisāi
وَٱلنِّسَآءِ
இன்னும் பெண்கள்
wal-wil'dāni
وَٱلْوِلْدَٰنِ
இன்னும் சிறுவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaqūlūna
يَقُولُونَ
கூறுகின்றனர்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
akhrij'nā
أَخْرِجْنَا
வெளியேற்று/ எங்களை
min hādhihi
مِنْ هَٰذِهِ
இருந்து/இந்த
l-qaryati
ٱلْقَرْيَةِ
ஊர்
l-ẓālimi
ٱلظَّالِمِ
அநியாயக்காரர்(கள்)
ahluhā
أَهْلُهَا
இந்த ஊர் வாசிகள்
wa-ij'ʿal
وَٱجْعَل
இன்னும் ஏற்படுத்து
lanā
لَّنَا
எங்களுக்கு
min
مِن
இருந்து
ladunka
لَّدُنكَ
உன் புறம்
waliyyan
وَلِيًّا
ஒரு பாதுகாவலரை
wa-ij'ʿal
وَٱجْعَل
இன்னும் ஏற்படுத்து
lanā
لَّنَا
எங்களுக்கு
min
مِن
இருந்து
ladunka
لَّدُنكَ
உன் புறம்
naṣīran
نَصِيرًا
ஓர் உதவியாளரை
பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்துவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭௫)
Tafseer
௭௬

اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۚ وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْٓا اَوْلِيَاۤءَ الشَّيْطٰنِ ۚ اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا ۚ ࣖ ٧٦

alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்கள்
yuqātilūna
يُقَٰتِلُونَ
போரிடுவார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوا۟
இன்னும் நிராகரிப்பாளர்கள்
yuqātilūna
يُقَٰتِلُونَ
போரிடுவார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-ṭāghūti
ٱلطَّٰغُوتِ
ஷைத்தானின்
faqātilū
فَقَٰتِلُوٓا۟
ஆகவே போரிடுங்கள்
awliyāa
أَوْلِيَآءَ
நண்பர்களிடம்
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِۖ
ஷைத்தானின்
inna kayda
إِنَّ كَيْدَ
நிச்சயமாக சூழ்ச்சி
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானின்
kāna ḍaʿīfan
كَانَ ضَعِيفًا
இருக்கிறது/பலவீனமாக
(ஆகவே, இத்தகைய சமயத்தில்) உண்மை நம்பிக்கை யாளர்கள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) போர்புரிவார்கள். நிராகரிப்பவர்களோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில்தான் போர்புரிவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களுடன் நீங்கள் போர்புரியுங்கள். (அவர்களின் தொகை அதிகமாக இருக்கின்றதே என்று தயங்காதீர்கள்.) நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதே! ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭௬)
Tafseer
௭௭

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ قِيْلَ لَهُمْ كُفُّوْٓا اَيْدِيَكُمْ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَۚ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَۚ لَوْلَآ اَخَّرْتَنَآ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۗ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيْلٌۚ وَالْاٰخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقٰىۗ وَلَا تُظْلَمُوْنَ فَتِيْلًا ٧٧

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
ilā alladhīna
إِلَى ٱلَّذِينَ
எவர்களை
qīla
قِيلَ
கூறப்பட்டது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
kuffū
كُفُّوٓا۟
தடுத்துக் கொள்ளுங்கள்
aydiyakum
أَيْدِيَكُمْ
உங்கள் கரங்களை
wa-aqīmū
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
falammā kutiba
فَلَمَّا كُتِبَ
விதிக்கப்பட்ட போது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது/
l-qitālu idhā
ٱلْقِتَالُ إِذَا
போர்/அப்போது
farīqun
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
yakhshawna
يَخْشَوْنَ
பயப்படுகின்றனர்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
kakhashyati
كَخَشْيَةِ
பயப்படுவதுபோல்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
aw
أَوْ
அல்லது
ashadda
أَشَدَّ
மிகக் கடுமையாக
khashyatan
خَشْيَةًۚ
பயத்தால்
waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
lima katabta
لِمَ كَتَبْتَ
ஏன் விதித்தாய்
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
l-qitāla
ٱلْقِتَالَ
போரை
lawlā akhartanā
لَوْلَآ أَخَّرْتَنَآ
எங்களை நீ பிற்படுத்த வேண்டாமா?
ilā
إِلَىٰٓ
வரை
ajalin
أَجَلٍ
ஒரு தவணை
qarībin
قَرِيبٍۗ
சமீபமாக
qul
قُلْ
கூறுவீராக
matāʿu
مَتَٰعُ
இன்பம்
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகத்தின்
qalīlun
قَلِيلٌ
அற்பமானது
wal-ākhiratu
وَٱلْءَاخِرَةُ
மறுமை
khayrun
خَيْرٌ
மேலானது
limani
لِّمَنِ
எவருக்கு
ittaqā
ٱتَّقَىٰ
அஞ்சினார்
walā tuẓ'lamūna
وَلَا تُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
fatīlan
فَتِيلًا
ஒரு நூலும்
உங்களுடைய கைகளைத் (தற்சமயம் போர் புரியாது) தடுத்துக் கொண்டும், தொழுகையை உறுதியாகக் கடைப்பிடித்தும், ஜகாத்தைக் கொடுத்தும் வாருங்களென்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? போர்புரிய அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயந்து "எங்கள் இறைவனே! ஏன் எங்கள் மீது போரைக் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலத்திற்கு இதனைப் பிற்படுத்த வேண்டாமா?" என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள். (இதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! எவன் (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கின்றானோ அவனுக்கு மறுமை(யின் வாழ்க்கை)தான் மிக மேலானது. (உங்களுடைய நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஓர் நூலளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭௭)
Tafseer
௭௮

اَيْنَمَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِيْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ ۗ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ ۗ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ ۗ فَمَالِ هٰٓؤُلَاۤءِ الْقَوْمِ لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ حَدِيْثًا ٧٨

aynamā takūnū
أَيْنَمَا تَكُونُوا۟
நீங்கள் எங்கிருந்தாலும்
yud'rikkumu
يُدْرِككُّمُ
அடையும்/உங்களை
l-mawtu
ٱلْمَوْتُ
மரணம்
walaw kuntum
وَلَوْ كُنتُمْ
நீங்கள் இருந்தாலும்
fī burūjin
فِى بُرُوجٍ
கோபுரங்களில்
mushayyadatin
مُّشَيَّدَةٍۗ
பலமான
wa-in tuṣib'hum
وَإِن تُصِبْهُمْ
அவர்களை அடைந்தால்
ḥasanatun
حَسَنَةٌ
ஒரு நன்மை
yaqūlū
يَقُولُوا۟
கூறுகின்றனர்
hādhihi min
هَٰذِهِۦ مِنْ
இது/இருந்து
ʿindi l-lahi
عِندِ ٱللَّهِۖ
அல்லாஹ்விடம்
wa-in tuṣib'hum
وَإِن تُصِبْهُمْ
அவர்களை அடைந்தால்
sayyi-atun
سَيِّئَةٌ
ஒரு தீங்கு
yaqūlū
يَقُولُوا۟
கூறுகின்றனர்
hādhihi
هَٰذِهِۦ
இது
min
مِنْ
இருந்து
ʿindika
عِندِكَۚ
உம்மிடம்
qul
قُلْ
கூறுவீராக
kullun min
كُلٌّ مِّنْ
எல்லாம்/இருந்து
ʿindi l-lahi
عِندِ ٱللَّهِۖ
அல்லாஹ்விடம்
famāli hāulāi l-qawmi
فَمَالِ هَٰٓؤُلَآءِ ٱلْقَوْمِ
இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது?
lā yakādūna yafqahūna
لَا يَكَادُونَ يَفْقَهُونَ
அவர்கள் விரைவாக விளங்குவதில்லையே
ḥadīthan
حَدِيثًا
ஒரு பேச்சை
நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உங்களுடைய கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை யாதொரு நன்மையடையும் பட்சத்தில் "இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது" எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டு விட்டாலோ "(நபியே!) இது உங்களால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)" எனக் கூறுகின்றனர். (ஆகவே) நீங்கள் கூறுங்கள்: "(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லையே! ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭௮)
Tafseer
௭௯

مَآ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ ۖ وَمَآ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّفْسِكَ ۗ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا ۗ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا ٧٩

مَّآ
எது
aṣābaka
أَصَابَكَ
அடைந்தது/உம்மை
min ḥasanatin
مِنْ حَسَنَةٍ
இருந்து/நன்மை
famina
فَمِنَ
இருந்து
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்
wamā
وَمَآ
இன்னும் எது
aṣābaka
أَصَابَكَ
அடைந்தது/உம்மை
min sayyi-atin
مِن سَيِّئَةٍ
இருந்து/தீமை
famin nafsika
فَمِن نَّفْسِكَۚ
உன்னிலிருந்து
wa-arsalnāka
وَأَرْسَلْنَٰكَ
அனுப்பினோம்/உம்மை
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
rasūlan
رَسُولًاۚ
தூதராக
wakafā
وَكَفَىٰ
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்
shahīdan
شَهِيدًا
சாட்சியாளனாக
அன்றி, (இவ்வாறு கூறுகின்றவனை நோக்கி) "உனக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது" என்றும் "உனக்கு யாதொரு தீங்கேற்பட்டால் அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் வந்தது" என்றும் (கூறுங்கள். நபியே!) நாம் உங்களை ஒரு தூதராகவே மனிதர்களுக்கு அனுப்பியிருக்கின்றோம். (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭௯)
Tafseer
௮௦

مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ وَمَنْ تَوَلّٰى فَمَآ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا ۗ ٨٠

man
مَّن
எவர்
yuṭiʿi
يُطِعِ
கீழ்ப்படிகிறார்
l-rasūla
ٱلرَّسُولَ
தூதருக்கு
faqad
فَقَدْ
திட்டமாக
aṭāʿa
أَطَاعَ
கீழ்ப்படிந்தார்
l-laha
ٱللَّهَۖ
அல்லாஹ்விற்கு
waman
وَمَن
இன்னும் எவர்(கள்)
tawallā
تَوَلَّىٰ
திரும்பினார்(கள்)
famā arsalnāka
فَمَآ أَرْسَلْنَٰكَ
அனுப்பவில்லை/உம்மை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ḥafīẓan
حَفِيظًا
பாதுகாவலராக
எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கட்டுப்ப(ட்)டு (நடக்)கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டார். ஆகவே (நபியே! உங்களை) எவனும் புறக்கணித்தால் (அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்.) அவர்களை கண்காணிப்பவராக உங்களை நாம் அனுப்பவில்லை. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮௦)
Tafseer