Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௭௬

Qur'an Surah An-Nisa Verse 76

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۚ وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْٓا اَوْلِيَاۤءَ الشَّيْطٰنِ ۚ اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا ۚ ࣖ (النساء : ٤)

alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
Those who believe
நம்பிக்கையாளர்கள்
yuqātilūna
يُقَٰتِلُونَ
they fight
போரிடுவார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِۖ
(of) Allah;
அல்லாஹ்வின்
wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوا۟
and those who disbelieve
இன்னும் நிராகரிப்பாளர்கள்
yuqātilūna
يُقَٰتِلُونَ
they fight
போரிடுவார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-ṭāghūti
ٱلطَّٰغُوتِ
(of) the false deities
ஷைத்தானின்
faqātilū
فَقَٰتِلُوٓا۟
So fight (against)
ஆகவே போரிடுங்கள்
awliyāa
أَوْلِيَآءَ
(the) friends
நண்பர்களிடம்
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِۖ
(of) the Shaitaan
ஷைத்தானின்
inna kayda
إِنَّ كَيْدَ
Indeed (the) strategy
நிச்சயமாக சூழ்ச்சி
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
(of) the Shaitaan
ஷைத்தானின்
kāna ḍaʿīfan
كَانَ ضَعِيفًا
is weak
இருக்கிறது/பலவீனமாக

Transliteration:

Allazeena aamanoo yuqaatiloona fee sabeelil laahi wallazeena kafaroo yuqaatiloona fee sabeelit Taaghoot faqaatiloo awliyaaa'ash Shaitaan; inna kaidash Shairaani kaana da'eefa (QS. an-Nisāʾ:76)

English Sahih International:

Those who believe fight in the cause of Allah, and those who disbelieve fight in the cause of Taghut. So fight against the allies of Satan. Indeed, the plot of Satan has ever been weak. (QS. An-Nisa, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, இத்தகைய சமயத்தில்) உண்மை நம்பிக்கை யாளர்கள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) போர்புரிவார்கள். நிராகரிப்பவர்களோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில்தான் போர்புரிவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களுடன் நீங்கள் போர்புரியுங்கள். (அவர்களின் தொகை அதிகமாக இருக்கின்றதே என்று தயங்காதீர்கள்.) நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதே! (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௭௬)

Jan Trust Foundation

நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். நிராகரிப்பாளர்கள் ஷைத்தானின் பாதையில் போரிடுவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களிடம் போரிடுங்கள். நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி மிக பலவீனமாக இருக்கிறது!