Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௭௫

Qur'an Surah An-Nisa Verse 75

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا لَكُمْ لَا تُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاۤءِ وَالْوِلْدَانِ الَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَآ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ اَهْلُهَاۚ وَاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ وَلِيًّاۚ وَاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا (النساء : ٤)

wamā lakum
وَمَا لَكُمْ
And what for you
உங்களுக்கு என்ன
lā tuqātilūna
لَا تُقَٰتِلُونَ
(that) not you fight
நீங்கள் போரிடாமல் இருக்க
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
wal-mus'taḍʿafīna
وَٱلْمُسْتَضْعَفِينَ
and (for) those who are weak
பலவீனர்கள்
mina
مِنَ
among
இருந்து
l-rijāli
ٱلرِّجَالِ
the men
ஆண்கள்
wal-nisāi
وَٱلنِّسَآءِ
and the women
இன்னும் பெண்கள்
wal-wil'dāni
وَٱلْوِلْدَٰنِ
and the children
இன்னும் சிறுவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yaqūlūna
يَقُولُونَ
say
கூறுகின்றனர்
rabbanā
رَبَّنَآ
"Our Lord
எங்கள் இறைவா
akhrij'nā
أَخْرِجْنَا
take us out
வெளியேற்று/ எங்களை
min hādhihi
مِنْ هَٰذِهِ
of this
இருந்து/இந்த
l-qaryati
ٱلْقَرْيَةِ
[the] town
ஊர்
l-ẓālimi
ٱلظَّالِمِ
[the] oppressor(s)
அநியாயக்காரர்(கள்)
ahluhā
أَهْلُهَا
(are) its people
இந்த ஊர் வாசிகள்
wa-ij'ʿal
وَٱجْعَل
and appoint
இன்னும் ஏற்படுத்து
lanā
لَّنَا
for us
எங்களுக்கு
min
مِن
from
இருந்து
ladunka
لَّدُنكَ
Yourself
உன் புறம்
waliyyan
وَلِيًّا
a protector
ஒரு பாதுகாவலரை
wa-ij'ʿal
وَٱجْعَل
and appoint
இன்னும் ஏற்படுத்து
lanā
لَّنَا
for us
எங்களுக்கு
min
مِن
from
இருந்து
ladunka
لَّدُنكَ
Yourself
உன் புறம்
naṣīran
نَصِيرًا
a helper
ஓர் உதவியாளரை

Transliteration:

Wa maa lakum laa tuqaatiloona fee sabeelil laahi walmustad'afeena minar rijaali wannisaaa'i walwildaanil lazeena yaqooloona Rabbanaaa akhrijnaa min haazihil qaryatiz zaalimi ahluhaa waj'al lanaa mil ladunka waliyanw waj'al lanaa mil ladunka naseeraa (QS. an-Nisāʾ:75)

English Sahih International:

And what is [the matter] with you that you fight not in the cause of Allah and [for] the oppressed among men, women, and children who say, "Our Lord, take us out of this city of oppressive people and appoint for us from Yourself a protector and appoint for us from Yourself a helper"? (QS. An-Nisa, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்துவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௭௫)

Jan Trust Foundation

பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வுடைய பாதையிலும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகிய பலவீனர்களின் பாதையிலும் நீங்கள் போரிடாமல் இருக்க உங்களுக்கென்ன (நேர்ந்தது)? “எங்கள் இறைவா! எங்களை இவ்வூரிலிருந்து வெளியேற்று, இந்த ஊர்வாசிகள் அநியாயக்காரர்கள்; எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஏற்படுத்து! எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஓர் உதவியாளரை ஏற்படுத்து!” என்று (அவர்கள்) கூறுகின்றனர்.