Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 7

An-Nisa

(an-Nisāʾ)

௬௧

وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَآ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ رَاَيْتَ الْمُنٰفِقِيْنَ يَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًاۚ ٦١

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
taʿālaw
تَعَالَوْا۟
வாருங்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
mā anzala
مَآ أَنزَلَ
எதை/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
wa-ilā l-rasūli
وَإِلَى ٱلرَّسُولِ
இன்னும் பக்கம்/தூதர்
ra-ayta
رَأَيْتَ
காண்பீர்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களை
yaṣuddūna
يَصُدُّونَ
புறக்கணிக்கிறார்கள்
ʿanka
عَنكَ
உம்மை விட்டு
ṣudūdan
صُدُودًا
புறக்கணித்தல்
"(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந் நயவஞ்சகர்கள் உங்களைவிட்டு முற்றிலும் விலகிவிடுவதையே நீங்கள் காண்பீர்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬௧)
Tafseer
௬௨

فَكَيْفَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ ثُمَّ جَاۤءُوْكَ يَحْلِفُوْنَ بِاللّٰهِ ۖاِنْ اَرَدْنَآ اِلَّآ اِحْسَانًا وَّتَوْفِيْقًا ٦٢

fakayfa
فَكَيْفَ
எவ்வாறு
idhā aṣābathum
إِذَآ أَصَٰبَتْهُم
அவர்களுக்கு ஏற்பட்டால்
muṣībatun
مُّصِيبَةٌۢ
ஒரு கஷ்டம்
bimā
بِمَا
எதன் காரணமாக
qaddamat
قَدَّمَتْ
முற்படுத்தியன
aydīhim
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
thumma
ثُمَّ
பிறகு
jāūka
جَآءُوكَ
உம்மிடம் வந்தனர்
yaḥlifūna
يَحْلِفُونَ
சத்தியம் செய்கின்றனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
in aradnā
إِنْ أَرَدْنَآ
நாங்கள் நாடவில்லை
illā
إِلَّآ
அன்றி
iḥ'sānan
إِحْسَٰنًا
நன்மையை
watawfīqan
وَتَوْفِيقًا
இன்னும் ஒற்றுமையை
(நபியே!) அவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் (அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீங்கள் கவனியுங்கள்.) பின்னர் அவர்கள் உங்களிடமே வந்து "(அந்த ஷைத்தானிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் கருதியேயன்றி, வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை" என்று அல்லாஹ்வின் பேரால் சத்தியம் செய்கின்றனர். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬௨)
Tafseer
௬௩

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ يَعْلَمُ اللّٰهُ مَا فِيْ قُلُوْبِهِمْ فَاَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِيْٓ اَنْفُسِهِمْ قَوْلًا ۢ بَلِيْغًا ٦٣

ulāika
أُو۟لَٰٓئِكَ
alladhīna
ٱلَّذِينَ
இவர்கள்/எவர்கள்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
مَا
எதை
fī qulūbihim
فِى قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்களில்
fa-aʿriḍ
فَأَعْرِضْ
ஆகவே புறக்கணிப்பீராக
ʿanhum
عَنْهُمْ
அவர்களை
waʿiẓ'hum
وَعِظْهُمْ
இன்னும் உபதேசிப்பீராக/அவர்களுக்கு
waqul
وَقُل
கூறுவீராக
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
fī anfusihim
فِىٓ أَنفُسِهِمْ
அவர்களுடைய உள்ளங்களில்
qawlan balīghan
قَوْلًۢا بَلِيغًا
கூற்றை/தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய
இத்தகையவர்களின் உள்ளங்களில் இருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்(களின் குற்றங்)களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அன்றி (அவர்களில் உள்ள கெடுதல்களை) அவர்களுக்கு மனதில் படும்படித் தெளிவாக எடுத்துக் கூறுங்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬௩)
Tafseer
௬௪

وَمَآ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِيُطَاعَ بِاِذْنِ اللّٰهِ ۗوَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْٓا اَنْفُسَهُمْ جَاۤءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا ٦٤

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
min rasūlin
مِن رَّسُولٍ
எந்த தூதரையும்
illā liyuṭāʿa
إِلَّا لِيُطَاعَ
தவிர / அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
walaw annahum
وَلَوْ أَنَّهُمْ
இருந்தால் / நிச்சயமாகஅவர்கள்
idh ẓalamū
إِذ ظَّلَمُوٓا۟
போது / தீங்கிழைத்தார்கள்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கு
jāūka
جَآءُوكَ
உம்மிடம் வந்தனர்
fa-is'taghfarū
فَٱسْتَغْفَرُوا۟
இன்னும் பாவமன்னிப்பு கோரினர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
wa-is'taghfara
وَٱسْتَغْفَرَ
இன்னும் பாவமன்னிப்பு கோரினார்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-rasūlu
ٱلرَّسُولُ
தூதர்
lawajadū
لَوَجَدُوا۟
கண்டிருப்பார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
tawwāban
تَوَّابًا
பிழை பொறுப்பவனாக
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்பைக் கோரினால் அன்புடையவனாகவும், மன்னிப்பு டையவனாகவுமே அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬௪)
Tafseer
௬௫

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِيْٓ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا ٦٥

falā
فَلَا
ஆகவே, இல்லை
warabbika
وَرَبِّكَ
உம் இறைவன் மீது சத்தியமாக
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கையாளராக ஆகமாட்டார்கள்
ḥattā yuḥakkimūka
حَتَّىٰ يُحَكِّمُوكَ
வரை/அவர்கள் தீர்ப்பாளராக்குவது/உம்மை
fīmā
فِيمَا
எதில்
shajara
شَجَرَ
சச்சரவு ஏற்பட்டது
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கிடையில்
thumma
ثُمَّ
பிறகு
lā yajidū
لَا يَجِدُوا۟
காணமாட்டார்கள்
fī anfusihim
فِىٓ أَنفُسِهِمْ
தங்கள் உள்ளங்களில்
ḥarajan
حَرَجًا
அதிருப்தி
mimmā qaḍayta
مِّمَّا قَضَيْتَ
நீர் தீர்ப்பளித்ததில்
wayusallimū
وَيُسَلِّمُوا۟
பணிவார்கள்
taslīman
تَسْلِيمًا
முழுமையாக பணிதல்
உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உங்களை நீதிபதியாக நியமித்து நீங்கள் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக மாட்டார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬௫)
Tafseer
௬௬

وَلَوْ اَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ اَنِ اقْتُلُوْٓا اَنْفُسَكُمْ اَوِ اخْرُجُوْا مِنْ دِيَارِكُمْ مَّا فَعَلُوْهُ اِلَّا قَلِيْلٌ مِّنْهُمْ ۗوَلَوْ اَنَّهُمْ فَعَلُوْا مَا يُوْعَظُوْنَ بِهٖ لَكَانَ خَيْرًا لَّهُمْ وَاَشَدَّ تَثْبِيْتًاۙ ٦٦

walaw annā
وَلَوْ أَنَّا
இருந்தால்/நிச்சயமாக நாம்
katabnā
كَتَبْنَا
விதித்தோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ani uq'tulū
أَنِ ٱقْتُلُوٓا۟
கொல்லுங்கள்
anfusakum
أَنفُسَكُمْ
உங்களை
awi
أَوِ
அல்லது
ukh'rujū
ٱخْرُجُوا۟
வெளியேறுங்கள்
min
مِن
இருந்து
diyārikum
دِيَٰرِكُم
உங்கள் இல்லங்கள்
mā faʿalūhu
مَّا فَعَلُوهُ
செய்திருக்க மாட்டார்கள்/அதை
illā qalīlun
إِلَّا قَلِيلٌ
தவிர/குறைவானவர்
min'hum
مِّنْهُمْۖ
அவர்களில்
walaw
وَلَوْ
இருந்தால்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
faʿalū mā
فَعَلُوا۟ مَا
செய்தார்கள்/எதை
yūʿaẓūna
يُوعَظُونَ
உபதேசிக்கப்படுகிறார்கள்
bihi
بِهِۦ
அதை
lakāna
لَكَانَ
ஆகி இருக்கும்
khayran
خَيْرًا
மிக நன்றாக
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
wa-ashadda
وَأَشَدَّ
இன்னும் மிக வலுவானது
tathbītan
تَثْبِيتًا
உறுதிப்படுத்துவதில்
நாம் அவர்களை நோக்கி "(நிராகரிக்கும்) உங்(கள் மக்)களை நீங்கள் வெட்டுங்கள். அல்லது வீட்டை விட்டுப் (வேறு நாட்டுக்குப்) புறப்பட்டு விடுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்யவே மாட்டார்கள். எனினும், அனைவரும் தங்களுக்கு அறிவுறுத்தியபடி செய்திருப்பார்களேயானால் அது அவர்களுக்கே மிக்க நன்றாய் இருந்திருக்கும். அன்றி (நம்பிக்கையில் அவர்களை) மிக உறுதிப்படுத்தியும் இருக்கும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬௬)
Tafseer
௬௭

وَّاِذًا لَّاٰ تَيْنٰهُمْ مِّنْ لَّدُنَّآ اَجْرًا عَظِيْمًاۙ ٦٧

wa-idhan
وَإِذًا
இன்னும் அப்போது
laātaynāhum
لَّءَاتَيْنَٰهُم
கொடுத்திருப்போம்/அவர்களுக்கு
min
مِّن
இருந்து
ladunnā
لَّدُنَّآ
நம்மிடம்
ajran
أَجْرًا
கூலியை
ʿaẓīman
عَظِيمًا
மகத்தானது
அது சமயம் அவர்களுக்கு நம்மிடமிருந்து மேற்கொண்டும் மகத்தான ஒரு கூலியை நிச்சயமாக நாம் கொடுத்திருப்போம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬௭)
Tafseer
௬௮

وَّلَهَدَيْنٰهُمْ صِرَاطًا مُّسْتَقِيْمًا ٦٨

walahadaynāhum
وَلَهَدَيْنَٰهُمْ
இன்னும் நேர்வழி செலுத்தியிருப்போம்/அவர்களை
ṣirāṭan
صِرَٰطًا
பாதையில்
mus'taqīman
مُّسْتَقِيمًا
நேரானது
மேலும், அவர்களை நாம் நேரான வழியில் செலுத்தியுமிருப்போம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬௮)
Tafseer
௬௯

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰۤىِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَاۤءِ وَالصّٰلِحِيْنَ ۚ وَحَسُنَ اُولٰۤىِٕكَ رَفِيْقًا ٦٩

waman
وَمَن
எவர்(கள்)
yuṭiʿi
يُطِعِ
கீழ்ப்படிகிறார்(கள்)
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
wal-rasūla
وَٱلرَّسُولَ
இன்னும் தூதருக்கு
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
maʿa alladhīna
مَعَ ٱلَّذِينَ
உடன்/எவர்கள்
anʿama
أَنْعَمَ
அருள் புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
mina l-nabiyīna
مِّنَ ٱلنَّبِيِّۦنَ
இருந்து/நபிமார்கள்
wal-ṣidīqīna
وَٱلصِّدِّيقِينَ
இன்னும் சத்தியவான்கள்
wal-shuhadāi
وَٱلشُّهَدَآءِ
இன்னும் உயிர்நீத்த தியாகிகள்
wal-ṣāliḥīna
وَٱلصَّٰلِحِينَۚ
இன்னும் நல்லவர்கள்
waḥasuna
وَحَسُنَ
அழகிய
ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
rafīqan
رَفِيقًا
தோழர்கள்
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬௯)
Tafseer
௭௦

ذٰلِكَ الْفَضْلُ مِنَ اللّٰهِ ۗوَكَفٰى بِاللّٰهِ عَلِيْمًا ࣖ ٧٠

dhālika
ذَٰلِكَ
இது
l-faḍlu
ٱلْفَضْلُ
அருள்
mina l-lahi
مِنَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடமிருந்து
wakafā
وَكَفَىٰ
போதுமாகி விட்டான்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
ʿalīman
عَلِيمًا
நன்கறிபவனாக
இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும். அல்லாஹ்வே நிறைவான அறிஞனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭௦)
Tafseer