Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 5

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௪௧

قَالَ رَبِّ اجْعَلْ لِّيْٓ اٰيَةً ۗ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَيَّامٍ اِلَّا رَمْزًا ۗ وَاذْكُرْ رَّبَّكَ كَثِيْرًا وَّسَبِّحْ بِالْعَشِيِّ وَالْاِبْكَارِ ࣖ ٤١

qāla
قَالَ
கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
ij'ʿal lī
ٱجْعَل لِّىٓ
ஆக்கு/எனக்கு
āyatan
ءَايَةًۖ
ஓர் அத்தாட்சியை
qāla
قَالَ
கூறினான்
āyatuka
ءَايَتُكَ
உம் அத்தாட்சி
allā tukallima
أَلَّا تُكَلِّمَ
நீர் பேசமால் இருப்பது
l-nāsa
ٱلنَّاسَ
மக்களிடம்
thalāthata ayyāmin
ثَلَٰثَةَ أَيَّامٍ
மூன்று நாட்கள்
illā ramzan
إِلَّا رَمْزًاۗ
தவிர/சாடையாக
wa-udh'kur
وَٱذْكُر
இன்னும் நினைவு கூறுவீராக
rabbaka
رَّبَّكَ
உம் இறைவனை
kathīran
كَثِيرًا
அதிகம்
wasabbiḥ
وَسَبِّحْ
இன்னும் துதித்து தூய்மைப்படுத்துவீராக
bil-ʿashiyi
بِٱلْعَشِىِّ
மாலையில்
wal-ib'kāri
وَٱلْإِبْكَٰرِ
இன்னும் காலையில்
(அதற்கு) ஜகரிய்யா "என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக" என்று கேட்டார். அதற்கு (இறைவன்) "உங்களுக்களிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரையில் ஜாடையாகவே தவிர நீங்கள் மனிதர்களுடன் பேசமாட்டீர்கள். (அந்நாள்களில்) நீங்கள் உங்கள் இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருங்கள்" என்று கூறினான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௧)
Tafseer
௪௨

وَاِذْ قَالَتِ الْمَلٰۤىِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰىكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰىكِ عَلٰى نِسَاۤءِ الْعٰلَمِيْنَ ٤٢

wa-idh
وَإِذْ
சமயம்
qālati
قَالَتِ
கூறினா(ர்க)ள்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
yāmaryamu
يَٰمَرْيَمُ
மர்யமே!
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
iṣ'ṭafāki
ٱصْطَفَىٰكِ
உம்மைத் தேர்ந்தெடுத்தான்
waṭahharaki
وَطَهَّرَكِ
இன்னும் உம்மைப் பரிசுத்தப்படுத்தினான்
wa-iṣ'ṭafāki
وَٱصْطَفَىٰكِ
இன்னும் உம்மைத் தேர்ந்தெடுத்தான்
ʿalā nisāi
عَلَىٰ نِسَآءِ
பெண்களைவிட
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்
(நபியே! மர்யமை நோக்கி) மலக்குகள் கூறிய சமயத்தில் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத் திருக்கின்றான். உங்களை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கின்றான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உங்களை மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றான், (என்றும்) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௨)
Tafseer
௪௩

يٰمَرْيَمُ اقْنُتِيْ لِرَبِّكِ وَاسْجُدِيْ وَارْكَعِيْ مَعَ الرَّاكِعِيْنَ ٤٣

yāmaryamu
يَٰمَرْيَمُ
மர்யமே!
uq'nutī
ٱقْنُتِى
பணிவீராக
lirabbiki
لِرَبِّكِ
உம் இறைவனுக்கு
wa-us'judī
وَٱسْجُدِى
இன்னும் சிரம் தாழ்த்துவீராக
wa-ir'kaʿī
وَٱرْكَعِى
இன்னும் குனிவீராக
maʿa
مَعَ
உடன்
l-rākiʿīna
ٱلرَّٰكِعِينَ
குனிபவர்களுடன்
(ஆகவே) மர்யமே! நீங்கள் உங்களுடைய இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து (சிரம் பணிந்து) வணங்குபவர்களுடன் நீங்களும் குனிந்து (சிரம் பணிந்து) வணங்குங்கள்!" (என்று கூறினார்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௩)
Tafseer
௪௪

ذٰلِكَ مِنْ اَنْۢبَاۤءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَ ۗوَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَۖ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يَخْتَصِمُوْنَ ٤٤

dhālika
ذَٰلِكَ
இவை
min
مِنْ
இருந்து
anbāi
أَنۢبَآءِ
செய்திகள்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவானவை
nūḥīhi
نُوحِيهِ
இவற்றை வஹீ அறிவிக்கிறோம்
ilayka
إِلَيْكَۚ
உமக்கு
wamā kunta
وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
ladayhim
لَدَيْهِمْ
அவர்களிடம்
idh yul'qūna
إِذْ يُلْقُونَ
போது/எறிகிறார்கள்
aqlāmahum
أَقْلَٰمَهُمْ
தங்கள் எழுது கோல்களை
ayyuhum
أَيُّهُمْ
அவர்களில் யார்
yakfulu
يَكْفُلُ
பொறுப்பேற்பார்
maryama
مَرْيَمَ
மர்யமை
wamā kunta
وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
ladayhim
لَدَيْهِمْ
அவர்களிடம்
idh yakhtaṣimūna
إِذْ يَخْتَصِمُونَ
போது/ தர்க்கிக்கிறார்கள்
(நபியே!) இவை (அனைத்தும் நீங்கள் அறியாத) மறைவான விஷயங்களாகும். இவைகளை நாம் உங்களுக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். அன்றி, மர்யமை (வளர்க்க) யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௪)
Tafseer
௪௫

اِذْ قَالَتِ الْمَلٰۤىِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُۖ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ ٤٥

idh qālati
إِذْ قَالَتِ
கூறியசமயம்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
yāmaryamu
يَٰمَرْيَمُ
மர்யமே!
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yubashiruki
يُبَشِّرُكِ
உமக்கு நற்செய்தி கூறுகிறான்
bikalimatin
بِكَلِمَةٍ
ஒரு வார்த்தையைக் கொண்டு
min'hu
مِّنْهُ
அவனிடமிருந்து
us'muhu
ٱسْمُهُ
அதன் பெயர்
l-masīḥu
ٱلْمَسِيحُ
அல் மஸீஹ்
ʿīsā
عِيسَى
ஈஸா
ub'nu maryama
ٱبْنُ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
wajīhan
وَجِيهًا
கம்பீரமானவராக
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமை
wamina l-muqarabīna
وَمِنَ ٱلْمُقَرَّبِينَ
நெருக்கமானவர்களில்
(மேலும், மர்யமை நோக்கி) மலக்குகள் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகின்றான்" என்றும் "அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்" என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்" என்றும் கூறினார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௫)
Tafseer
௪௬

وَيُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِيْنَ ٤٦

wayukallimu
وَيُكَلِّمُ
இன்னும் பேசுவார்
l-nāsa fī l-mahdi
ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ
மக்களிடம்தொட்டிலில்
wakahlan
وَكَهْلًا
இன்னும் வாலிபராக
wamina l-ṣāliḥīna
وَمِنَ ٱلصَّٰلِحِينَ
இன்னும் நல்லோரில்
அன்றி "அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்" (என்றும் கூறினார்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௬)
Tafseer
௪௭

قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِيْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِيْ بَشَرٌ ۗ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَاۤءُ ۗاِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ ٤٧

qālat
قَالَتْ
கூறினாள்
rabbi
رَبِّ
என் இறைவா
annā
أَنَّىٰ
எவ்வாறு
yakūnu
يَكُونُ
ஏற்படும்
لِى
எனக்கு
waladun
وَلَدٌ
குழந்தை
walam yamsasnī
وَلَمْ يَمْسَسْنِى
என்னைத் தொடாமல் இருக்க
basharun
بَشَرٌۖ
ஓர் ஆடவர்
qāla
قَالَ
கூறினான்
kadhāliki
كَذَٰلِكِ
இவ்வாறு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yakhluqu
يَخْلُقُ
படைக்கிறான்
مَا
எதை
yashāu
يَشَآءُۚ
நாடுகிறான்
idhā qaḍā
إِذَا قَضَىٰٓ
(அவன்) முடிவு செய்தால்
amran
أَمْرًا
ஒரு காரியத்தை
fa-innamā yaqūlu
فَإِنَّمَا يَقُولُ
அவன் கூறுவதெல்லாம்
lahu
لَهُۥ
அதற்கு
kun
كُن
ஆகுக
fayakūnu
فَيَكُونُ
உடனே ஆகிவிடும்
(அதற்கு மர்யம், தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (மனிதர்களில்) ஒருவருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டுவிடும்?" என்று கூறினார். (அதற்கு) "இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். அவன் ஒரு பொருளை (படைக்க) நாடினால் அதனை "ஆகுக" என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும்" என்று கூறினான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௭)
Tafseer
௪௮

وَيُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَۚ ٤٨

wayuʿallimuhu
وَيُعَلِّمُهُ
இன்னும் அவருக்கு கற்பிப்பான்
l-kitāba
ٱلْكِتَٰبَ
எழுதுவதை
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
wal-tawrāta wal-injīla
وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ
இன்னும் தவ்றாத்/இன்ஜீல்
மேலும் அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும், தவ்றாத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௮)
Tafseer
௪௯

وَرَسُوْلًا اِلٰى بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ەۙ اَنِّيْ قَدْ جِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙاَنِّيْٓ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّيْنِ كَهَيْـَٔةِ الطَّيْرِ فَاَنْفُخُ فِيْهِ فَيَكُوْنُ طَيْرًاۢ بِاِذْنِ اللّٰهِ ۚوَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْيِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ ۚوَاُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَ ۙفِيْ بُيُوْتِكُمْ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ ٤٩

warasūlan
وَرَسُولًا
இன்னும் தூதராக
ilā
إِلَىٰ
பக்கம்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்கள்
annī
أَنِّى
நிச்சயமாக நான்
qad ji'tukum
قَدْ جِئْتُكُم
உங்களிடம் வந்திருக்கின்றேன்
biāyatin
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
min rabbikum
مِّن رَّبِّكُمْۖ
உங்கள் இறைவனிடமிருந்து
annī
أَنِّىٓ
நிச்சயமாக நான்
akhluqu
أَخْلُقُ
படைப்பேன்
lakum
لَكُم
உங்களுக்கு
mina l-ṭīni
مِّنَ ٱلطِّينِ
களிமண்ணிலிருந்து
kahayati
كَهَيْـَٔةِ
அமைப்பைப் போல்
l-ṭayri
ٱلطَّيْرِ
பறவையின்
fa-anfukhu fīhi
فَأَنفُخُ فِيهِ
இன்னும் ஊதுவேன்/அதில்
fayakūnu
فَيَكُونُ
(அது) ஆகிவிடும்
ṭayran
طَيْرًۢا
பறவையாக
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
wa-ub'ri-u
وَأُبْرِئُ
இன்னும் குணப்படுத்துவேன்
l-akmaha
ٱلْأَكْمَهَ
பிறவிக் குருடரை
wal-abraṣa
وَٱلْأَبْرَصَ
இன்னும் வெண்குஷ்டரை
wa-uḥ'yī
وَأُحْىِ
இன்னும் உயிர்ப்பிப்பேன்
l-mawtā
ٱلْمَوْتَىٰ
மரணித்தோரை
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
wa-unabbi-ukum
وَأُنَبِّئُكُم
இன்னும் உங்களுக்கு அறிவிப்பேன்
bimā takulūna
بِمَا تَأْكُلُونَ
எதை/புசிக்கிறீர்கள்
wamā
وَمَا
இன்னும் எது
taddakhirūna
تَدَّخِرُونَ
சேமிக்கிறீர்கள்
fī buyūtikum
فِى بُيُوتِكُمْۚ
உங்கள் வீடுகளில்
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக/இதில்
laāyatan
لَءَايَةً
திட்டமாக ஓர் அத்தாட்சி
lakum
لَّكُمْ
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் ஆக்குவான் (என்றும் இறைவன் கூறினான். பின்னர், ஈஸா பிறந்து தன் வாலிபத்தை அடைந்து இஸ்ராயீலின் சந்ததிகளிடம் சென்றபொழுது அவர்களை நோக்கிக் கூறியதாவது:) "நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக) உங்களுக்கு ஒரு அத்தாட்சி கொண்டு வந்திருக் கின்றேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (பறக்கும்) பறவை ஆகிவிடும். பிறவிக் குருடனையும் வெண் குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித் தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவைகளையும், உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவைகளையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு (திருப்தி அளிக்கக்கூடிய) ஒரு அத்தாட்சி இருக்கின்றது (என்றும்,) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௯)
Tafseer
௫௦

وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرٰىةِ وَلِاُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِيْ حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْۗ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ٥٠

wamuṣaddiqan
وَمُصَدِّقًا
இன்னும் உண்மைப்படுத்துபவராக
limā bayna yadayya
لِّمَا بَيْنَ يَدَىَّ
எனக்கு முன்னுள்ளதை
mina l-tawrāti
مِنَ ٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்திலிருந்து
wali-uḥilla
وَلِأُحِلَّ
இன்னும் நான் ஆகுமாக்குவதற்காக
lakum
لَكُم
உங்களுக்கு
baʿḍa
بَعْضَ
சிலவற்றை
alladhī
ٱلَّذِى
எது
ḥurrima
حُرِّمَ
தடுக்கப்பட்டது
ʿalaykum
عَلَيْكُمْۚ
உங்கள் மீது
waji'tukum
وَجِئْتُكُم
இன்னும் உங்களிடம் வந்திருக்கிறேன்
biāyatin
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்
என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்ட வைகளில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற்காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னை பின்பற்றுங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௦)
Tafseer