Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௪௧

Qur'an Surah Ali 'Imran Verse 41

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبِّ اجْعَلْ لِّيْٓ اٰيَةً ۗ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَيَّامٍ اِلَّا رَمْزًا ۗ وَاذْكُرْ رَّبَّكَ كَثِيْرًا وَّسَبِّحْ بِالْعَشِيِّ وَالْاِبْكَارِ ࣖ (آل عمران : ٣)

qāla
قَالَ
He said
கூறினார்
rabbi
رَبِّ
"My Lord
என் இறைவா
ij'ʿal lī
ٱجْعَل لِّىٓ
make for me
ஆக்கு/எனக்கு
āyatan
ءَايَةًۖ
a sign"
ஓர் அத்தாட்சியை
qāla
قَالَ
He said
கூறினான்
āyatuka
ءَايَتُكَ
your sign
உம் அத்தாட்சி
allā tukallima
أَلَّا تُكَلِّمَ
(is) that not you will speak
நீர் பேசமால் இருப்பது
l-nāsa
ٱلنَّاسَ
(to) the people
மக்களிடம்
thalāthata ayyāmin
ثَلَٰثَةَ أَيَّامٍ
(for) three days
மூன்று நாட்கள்
illā ramzan
إِلَّا رَمْزًاۗ
except (with) gestures
தவிர/சாடையாக
wa-udh'kur
وَٱذْكُر
And remember
இன்னும் நினைவு கூறுவீராக
rabbaka
رَّبَّكَ
your Lord
உம் இறைவனை
kathīran
كَثِيرًا
much
அதிகம்
wasabbiḥ
وَسَبِّحْ
and glorify (Him)
இன்னும் துதித்து தூய்மைப்படுத்துவீராக
bil-ʿashiyi
بِٱلْعَشِىِّ
in the evening
மாலையில்
wal-ib'kāri
وَٱلْإِبْكَٰرِ
and (in) the morning"
இன்னும் காலையில்

Transliteration:

Qaala Rabbij 'al leee Aayatan qaala Aaayatuka allaa tukalliman naasa salaasata ayyaamin illa ramzaa; wzkur Rabbaka kaseeranw wa sabbih bil'ashiyyi wal ibkaar (QS. ʾĀl ʿImrān:41)

English Sahih International:

He said, "My Lord, make for me a sign." He said, "Your sign is that you will not [be able to] speak to the people for three days except by gesture. And remember your Lord much and exalt [Him with praise] in the evening and the morning." (QS. Ali 'Imran, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

(அதற்கு) ஜகரிய்யா "என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக" என்று கேட்டார். அதற்கு (இறைவன்) "உங்களுக்களிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரையில் ஜாடையாகவே தவிர நீங்கள் மனிதர்களுடன் பேசமாட்டீர்கள். (அந்நாள்களில்) நீங்கள் உங்கள் இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருங்கள்" என்று கூறினான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௪௧)

Jan Trust Foundation

“என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது| மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"என் இறைவா! எனக்கோர் அத்தாட்சியை ஆக்கு" என்று (ஸகரிய்யா) கூற. "உம் அத்தாட்சி, சாடையாக தவிர மூன்று நாட்கள் மக்களுடன் நீர் பேசாமல் இருப்பதாகும். உம் இறைவனை அதிகம் நினைவு கூறுவீராக! மாலையிலும் காலையிலும் அவனைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக!" என்று (அல்லாஹ் பதில்) கூறினான்.