Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௪௬

Qur'an Surah Ali 'Imran Verse 46

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِيْنَ (آل عمران : ٣)

wayukallimu
وَيُكَلِّمُ
And he will speak
இன்னும் பேசுவார்
l-nāsa fī l-mahdi
ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ
(to) the people in the cradle
மக்களிடம்தொட்டிலில்
wakahlan
وَكَهْلًا
and (in) maturity;
இன்னும் வாலிபராக
wamina l-ṣāliḥīna
وَمِنَ ٱلصَّٰلِحِينَ
and (he will be) of the righteous"
இன்னும் நல்லோரில்

Transliteration:

Wa yukallimun naasa filmahdi wa kahlanw wa minassaaliheen (QS. ʾĀl ʿImrān:46)

English Sahih International:

He will speak to the people in the cradle and in maturity and will be of the righteous." (QS. Ali 'Imran, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

அன்றி "அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்" (என்றும் கூறினார்கள்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௪௬)

Jan Trust Foundation

“மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"அவர் தொட்டிலில் இருக்கும்போதும், வாலிபராக இருக்கும்போதும் மக்களிடம் பேசுவார். இன்னும் (அவர்) நல்லோரில் உள்ளவர்" (என்றும் வானவர்கள் கூறினார்கள்).