Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 20

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௧௯௧

الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِيْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًاۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ١٩١

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yadhkurūna
يَذْكُرُونَ
நினைவுகூர்வார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
qiyāman
قِيَٰمًا
நின்றவர்களாக
waquʿūdan
وَقُعُودًا
இன்னும் உட்கார்ந்தவர்களாக
waʿalā
وَعَلَىٰ
இன்னும் மீது
junūbihim
جُنُوبِهِمْ
விலாக்கள்/ அவர்களுடைய
wayatafakkarūna
وَيَتَفَكَّرُونَ
இன்னும் சிந்திப்பார்கள்
fī khalqi
فِى خَلْقِ
படைக்கப் பட்டிருப்பதில்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
mā khalaqta
مَا خَلَقْتَ
நீ படைக்கவில்லை
hādhā bāṭilan
هَٰذَا بَٰطِلًا
இதை/வீணாக
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
தூய்மைப்படுத்துகிறோம்/உன்னை
faqinā
فَقِنَا
ஆகவே காப்பாற்று/எங்களை
ʿadhāba
عَذَابَ
வேதனையிலிருந்து
l-nāri
ٱلنَّارِ
(நரக) நெருப்பின்
இத்தகையவர்கள் (தங்கள்) நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், "எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக! ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௧)
Tafseer
௧௯௨

رَبَّنَآ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهٗ ۗ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ ١٩٢

rabbanā
رَبَّنَآ
எங்கள்இறைவா
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
man
مَن
எவரை
tud'khili
تُدْخِلِ
நுழைக்கிறாய்
l-nāra
ٱلنَّارَ
நரக நெருப்பில்
faqad
فَقَدْ
திட்டமாக
akhzaytahu
أَخْزَيْتَهُۥۖ
இழிவு படுத்தினாய்/அவரை
wamā
وَمَا
இன்னும் இல்லை
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
min anṣārin
مِنْ أَنصَارٍ
உதவியாளர்களில்
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய். (அத்தகைய) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவரும்) இல்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௨)
Tafseer
௧௯௩

رَبَّنَآ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِيْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا ۖرَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِۚ ١٩٣

rabbanā
رَّبَّنَآ
எங்கள் இறைவா
innanā
إِنَّنَا
நிச்சயமாக நாங்கள்
samiʿ'nā
سَمِعْنَا
செவிமடுத்தோம்
munādiyan
مُنَادِيًا
ஓர் அழைப்பாளரை
yunādī
يُنَادِى
அழைக்கிறார்
lil'īmāni
لِلْإِيمَٰنِ
நம்பிக்கையின் பக்கம்
an āminū
أَنْ ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள் என்று
birabbikum
بِرَبِّكُمْ
உங்கள் இறைவனை
faāmannā
فَـَٔامَنَّاۚ
ஆகவே நம்பிக்கை கொண்டோம்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
fa-igh'fir lanā
فَٱغْفِرْ لَنَا
ஆகவே மன்னி/எங்களுக்கு
dhunūbanā
ذُنُوبَنَا
எங்கள் பாவங்களை
wakaffir
وَكَفِّرْ
இன்னும் அகற்றிடு
ʿannā
عَنَّا
எங்களை விட்டு
sayyiātinā
سَيِّـَٔاتِنَا
தீமைகளை/எங்கள்
watawaffanā
وَتَوَفَّنَا
இன்னும் மரணத்தைத் தா/எங்களுக்கு
maʿa
مَعَ
உடன்
l-abrāri
ٱلْأَبْرَارِ
நல்லோர்
எங்கள் இறைவனே! (உன் தூதரின்) அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின் பக்கம் அழைத்து "உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப் பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்வாயாக! ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௩)
Tafseer
௧௯௪

رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيٰمَةِ ۗ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ ١٩٤

rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
waātinā
وَءَاتِنَا
இன்னும் தா/எங்களுக்கு
mā waʿadttanā
مَا وَعَدتَّنَا
எதை/நீ வாக்களித்தாய்/எங்களுக்கு
ʿalā
عَلَىٰ
மூலம்
rusulika
رُسُلِكَ
உன் தூதர்கள்
walā
وَلَا
இழிவுபடுத்தாதே
tukh'zinā
تُخْزِنَا
இழிவுபடுத்தாதே எங்களை
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
lā tukh'lifu
لَا تُخْلِفُ
மாற்றமாட்டாய்
l-mīʿāda
ٱلْمِيعَادَ
வாக்குறுதியை
எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள்புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்திவிடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல" (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௪)
Tafseer
௧௯௫

فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّيْ لَآ اُضِيْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى ۚ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍ ۚ فَالَّذِيْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاُوْذُوْا فِيْ سَبِيْلِيْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ۗ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ ١٩٥

fa-is'tajāba
فَٱسْتَجَابَ
பதிலளித்தான்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
rabbuhum
رَبُّهُمْ
அவர்களுடைய இறைவன்
annī
أَنِّى
நிச்சயமாக நான்
lā uḍīʿu
لَآ أُضِيعُ
வீணாக்கமாட்டேன்
ʿamala
عَمَلَ
(நற்)செயலை
ʿāmilin
عَٰمِلٍ
(நற்)செயல்புரிபவரின்
minkum
مِّنكُم
உங்களில்
min
مِّن
இருந்து
dhakarin
ذَكَرٍ
ஆண்
aw
أَوْ
அல்லது
unthā
أُنثَىٰۖ
பெண்கள்
baʿḍukum
بَعْضُكُم
உங்களில் சிலர்
min
مِّنۢ
இருந்து
baʿḍin
بَعْضٍۖ
சிலர்
fa-alladhīna
فَٱلَّذِينَ
எவர்கள்
hājarū
هَاجَرُوا۟
ஹிஜ்ரா சென்றார்கள்
wa-ukh'rijū
وَأُخْرِجُوا۟
இன்னும் வெளியேற்றப்பட்டார்கள்
min
مِن
இருந்து
diyārihim
دِيَٰرِهِمْ
ஊர்கள்/தங்கள்
waūdhū
وَأُوذُوا۟
இன்னும் துன்புறுத்தப் பட்டார்கள்
fī sabīlī
فِى سَبِيلِى
எனது பாதையில்
waqātalū
وَقَٰتَلُوا۟
இன்னும் போர்செய்தார்கள்
waqutilū
وَقُتِلُوا۟
இன்னும் கொல்லப்பட்டார்கள்
la-ukaffiranna
لَأُكَفِّرَنَّ
நிச்சயமாக அகற்றிடுவேன்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
sayyiātihim
سَيِّـَٔاتِهِمْ
தீமைகளை/ அவர்களுடைய
wala-ud'khilannahum
وَلَأُدْخِلَنَّهُمْ
இன்னும் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்
jannātin tajrī
جَنَّٰتٍ تَجْرِى
சொர்க்கங்கள்/ஓடும்
min
مِن
இருந்து
taḥtihā
تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
thawāban
ثَوَابًا
நன்மை
min
مِّنْ
இருந்து
ʿindi l-lahi
عِندِ ٱللَّهِۗ
அல்லாஹ்விடம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿindahu
عِندَهُۥ
அவனிடத்தில்தான்
ḥus'nu l-thawābi
حُسْنُ ٱلثَّوَابِ
அழகிய/நற்கூலி
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் "உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிட மாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என்னுடைய பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழைய வைப்போம்" (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதனைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கின்றது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௫)
Tafseer
௧௯௬

لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِيْنَ كَفَرُوْا فِى الْبِلَادِۗ ١٩٦

lā yaghurrannaka
لَا يَغُرَّنَّكَ
நிச்சயம் மயக்கிட வேண்டாம்/உம்மை
taqallubu
تَقَلُّبُ
சுற்றித்திரிவது
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
எவர்கள்/ நிராகரித்தார்கள்
fī l-bilādi
فِى ٱلْبِلَٰدِ
நகரங்களில்
(நபியே!) நிராகரிப்பவர்கள் (பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உங்களை மயக்கி (ஏமாற்றி) விடவேண்டாம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௬)
Tafseer
௧௯௭

مَتَاعٌ قَلِيْلٌ ۗ ثُمَّ مَأْوٰىهُمْ جَهَنَّمُ ۗوَبِئْسَ الْمِهَادُ ١٩٧

matāʿun
مَتَٰعٌ
ஓர் இன்பம்
qalīlun
قَلِيلٌ
அற்பம்
thumma
ثُمَّ
பிறகு
mawāhum
مَأْوَىٰهُمْ
தங்குமிடம் அவர்களுடைய
jahannamu
جَهَنَّمُۚ
நரகம்
wabi'sa
وَبِئْسَ
இன்னும் கெட்டது
l-mihādu
ٱلْمِهَادُ
தங்குமிடம்
(இது) அற்ப சுகமாகும். இதற்குப் பின்னர் அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௭)
Tafseer
௧௯௮

لٰكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ ۗ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ لِّلْاَبْرَارِ ١٩٨

lākini
لَٰكِنِ
எனினும்
alladhīna ittaqaw
ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
எவர்கள்/அஞ்சினர்
rabbahum
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
jannātun
جَنَّٰتٌ
சொர்க்கங்கள்
tajrī
تَجْرِى
ஓடும்
min
مِن
இருந்து
taḥtihā
تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَا
அதில்
nuzulan
نُزُلًا
விருந்தோம்பலாக
min
مِّنْ
இருந்து
ʿindi
عِندِ
இடம்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்
wamā
وَمَا
இன்னும் எது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
khayrun
خَيْرٌ
சிறந்தது
lil'abrāri
لِّلْأَبْرَارِ
நல்லோருக்கு
ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கின்றார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளுண்டு. அதில் அல்லாஹ்வின் விருந்தினராக (என்றென்றுமே) தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௮)
Tafseer
௧௯௯

وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتٰبِ لَمَنْ يُّؤْمِنُ بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْكُمْ وَمَآ اُنْزِلَ اِلَيْهِمْ خٰشِعِيْنَ لِلّٰهِ ۙ لَا يَشْتَرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًا ۗ اُولٰۤىِٕكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۗ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ ١٩٩

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
min ahli l-kitābi
مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
laman
لَمَن
திட்டமாக எவர்
yu'minu
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wamā unzila
وَمَآ أُنزِلَ
இன்னும் எது/இறக்கப்பட்டது
ilaykum
إِلَيْكُمْ
உங்களுக்கு
wamā unzila
وَمَآ أُنزِلَ
இன்னும் எது/இறக்கப்பட்டது
ilayhim
إِلَيْهِمْ
அவர்களுக்கு
khāshiʿīna
خَٰشِعِينَ
பணிந்தவர்களாக
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
lā yashtarūna
لَا يَشْتَرُونَ
வாங்க மாட்டார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களுக்கு பகரமாக
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
thamanan
ثَمَنًا
கிரயத்தை
qalīlan
قَلِيلًاۗ
சொற்பம்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ajruhum
أَجْرُهُمْ
கூலி/அவர்களுடைய
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْۗ
அவர்களின் இறைவனிடம்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
sarīʿu
سَرِيعُ
மிக விரைவானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
கணக்கெடுப்பதில்
(நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இத்தகையவர்களும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வைகளையும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இத்தகையவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௯)
Tafseer
௨௦௦

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْاۗ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ࣖ ٢٠٠

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
iṣ'birū
ٱصْبِرُوا۟
பொறுங்கள்
waṣābirū
وَصَابِرُوا۟
இன்னும் அதிகம் பொறுத்துக் கொள்ளுங்கள்
warābiṭū
وَرَابِطُوا۟
இன்னும் போருக்குத் தயாராகுங்கள்
wa-ittaqū l-laha
وَٱتَّقُوا۟ ٱللَّهَ
இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஒருவருக்கொருவர் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௦௦)
Tafseer