குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௯௩
Qur'an Surah Ali 'Imran Verse 193
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبَّنَآ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِيْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا ۖرَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِۚ (آل عمران : ٣)
- rabbanā
- رَّبَّنَآ
- Our Lord
- எங்கள் இறைவா
- innanā
- إِنَّنَا
- indeed we
- நிச்சயமாக நாங்கள்
- samiʿ'nā
- سَمِعْنَا
- [we] heard
- செவிமடுத்தோம்
- munādiyan
- مُنَادِيًا
- a caller
- ஓர் அழைப்பாளரை
- yunādī
- يُنَادِى
- calling
- அழைக்கிறார்
- lil'īmāni
- لِلْإِيمَٰنِ
- to the faith
- நம்பிக்கையின் பக்கம்
- an āminū
- أَنْ ءَامِنُوا۟
- that "Believe
- நம்பிக்கை கொள்ளுங்கள் என்று
- birabbikum
- بِرَبِّكُمْ
- in your Lord"
- உங்கள் இறைவனை
- faāmannā
- فَـَٔامَنَّاۚ
- so we have believed
- ஆகவே நம்பிக்கை கொண்டோம்
- rabbanā
- رَبَّنَا
- Our Lord
- எங்கள் இறைவா
- fa-igh'fir lanā
- فَٱغْفِرْ لَنَا
- so forgive for us
- ஆகவே மன்னி/எங்களுக்கு
- dhunūbanā
- ذُنُوبَنَا
- our sins
- எங்கள் பாவங்களை
- wakaffir
- وَكَفِّرْ
- and remove
- இன்னும் அகற்றிடு
- ʿannā
- عَنَّا
- from us
- எங்களை விட்டு
- sayyiātinā
- سَيِّـَٔاتِنَا
- our evil deeds
- தீமைகளை/எங்கள்
- watawaffanā
- وَتَوَفَّنَا
- and cause us to die
- இன்னும் மரணத்தைத் தா/எங்களுக்கு
- maʿa
- مَعَ
- with
- உடன்
- l-abrāri
- ٱلْأَبْرَارِ
- the righteous
- நல்லோர்
Transliteration:
Rabbanaaa innanaa sami'naa munaadiyai yunaadee lil eemaani an aaminoo bi Rabbikum fa aamannaa; Rabbanaa faghfir lanaa zunoobanaa wa kaffir 'annaa saiyi aatina wa tawaffanaa ma'al abraar(QS. ʾĀl ʿImrān:193)
English Sahih International:
Our Lord, indeed we have heard a caller [i.e., Prophet Muhammad (^)] calling to faith, [saying], 'Believe in your Lord,' and we have believed. Our Lord, so forgive us our sins and remove from us our misdeeds and cause us to die among the righteous. (QS. Ali 'Imran, Ayah ௧௯௩)
Abdul Hameed Baqavi:
எங்கள் இறைவனே! (உன் தூதரின்) அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின் பக்கம் அழைத்து "உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப் பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்வாயாக! (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௯௩)
Jan Trust Foundation
“எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” (என்றும்;)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எங்கள் இறைவா! "உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று நம்பிக்கையின் பக்கம் அழைக்கின்ற ஓர் அழைப்பாளரை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! ஆகவே, எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னி! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அகற்றிடு! நல்லோருடன் எங்களுக்கு மரணத்தைத் தா!