Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௯௮

Qur'an Surah Ali 'Imran Verse 198

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لٰكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ ۗ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ لِّلْاَبْرَارِ (آل عمران : ٣)

lākini
لَٰكِنِ
But
எனினும்
alladhīna ittaqaw
ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
those who fear
எவர்கள்/அஞ்சினர்
rabbahum
رَبَّهُمْ
their Lord
தங்கள் இறைவனை
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
jannātun
جَنَّٰتٌ
(will be) Gardens
சொர்க்கங்கள்
tajrī
تَجْرِى
flows
ஓடும்
min
مِن
from
இருந்து
taḥtihā
تَحْتِهَا
underneath them
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
the rivers
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
will abide forever
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَا
in it -
அதில்
nuzulan
نُزُلًا
a hospitality
விருந்தோம்பலாக
min
مِّنْ
from
இருந்து
ʿindi
عِندِ
[near]
இடம்
l-lahi
ٱللَّهِۗ
Allah
அல்லாஹ்
wamā
وَمَا
And that
இன்னும் எது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
(which is) with Allah
அல்லாஹ்விடம்
khayrun
خَيْرٌ
(is) best
சிறந்தது
lil'abrāri
لِّلْأَبْرَارِ
for the righteous
நல்லோருக்கு

Transliteration:

Laakinil lazeenat taqaw Rabbahum lahum Jannnaatun tajree min tahtihal anhaaru khaalideena feehaa nuzulammin 'indil laah; wa maa 'indal laahi khairul lil abraar (QS. ʾĀl ʿImrān:198)

English Sahih International:

But those who feared their Lord will have gardens beneath which rivers flow, abiding eternally therein, as accommodation from Allah. And that which is with Allah is best for the righteous. (QS. Ali 'Imran, Ayah ௧௯௮)

Abdul Hameed Baqavi:

ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கின்றார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளுண்டு. அதில் அல்லாஹ்வின் விருந்தினராக (என்றென்றுமே) தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௯௮)

Jan Trust Foundation

ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்| (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனினும், தங்கள் இறைவனை அஞ்சியவர்கள், அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து விருந்தோம்பலாக நதிகள் ஓடும் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். அல்லாஹ்விடம் உள்ளது நல்லோருக்கு மிகச் சிறந்ததாகும்.