Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 19

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௧௮௧

لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَاۤءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَاۤءَ بِغَيْرِ حَقٍّۙ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ ١٨١

laqad samiʿa
لَّقَدْ سَمِعَ
திட்டமாக கேட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
qawla
قَوْلَ
கூற்றை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
faqīrun
فَقِيرٌ
ஏழை
wanaḥnu
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
aghniyāu
أَغْنِيَآءُۘ
சீமான்கள்
sanaktubu
سَنَكْتُبُ
பதிவு செய்வோம்
mā qālū
مَا قَالُوا۟
எதை/கூறினார்கள்
waqatlahumu
وَقَتْلَهُمُ
இன்னும் கொலை செய்ததை/அவர்கள்
l-anbiyāa
ٱلْأَنۢبِيَآءَ
நபிமார்களை
bighayri ḥaqqin
بِغَيْرِ حَقٍّ
நியாயமின்றி
wanaqūlu
وَنَقُولُ
இன்னும் கூறுவோம்
dhūqū
ذُوقُوا۟
சுவையுங்கள்
ʿadhāba
عَذَابَ
வேதனையை
l-ḥarīqi
ٱلْحَرِيقِ
எரிக்கக் கூடியது
எவர்கள் "நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்" என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இவ்வாறு) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்து கொண்டிருக் கின்றோம். (ஆகவே, மறுமையில் அவர்களை நோக்கி) "எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என நாம் கூறுவோம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௧)
Tafseer
௧௮௨

ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِۚ ١٨٢

dhālika
ذَٰلِكَ
அது
bimā qaddamat
بِمَا قَدَّمَتْ
எதன் காரணத்தால்/ முற்படுத்தியது
aydīkum
أَيْدِيكُمْ
உங்கள் கரங்கள்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
laysa
لَيْسَ
இல்லை
biẓallāmin
بِظَلَّامٍ
அநீதியிழைப்பவன்
lil'ʿabīdi
لِّلْعَبِيدِ
அடியார்களுக்கு
(அன்றி) "நீங்கள் உங்கள் கையால் தேடிக் கொண்டதுதான் இதற்குக் காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்வதில்லை" (என்றும் கூறுவோம்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௨)
Tafseer
௧௮௩

اَلَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَآ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَأْتِيَنَا بِقُرْبَانٍ تَأْكُلُهُ النَّارُ ۗ قُلْ قَدْ جَاۤءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِيْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِيْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٨٣

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿahida
عَهِدَ
உறுதிமொழி வாங்கினான்
ilaynā
إِلَيْنَآ
எங்களிடம்
allā nu'mina
أَلَّا نُؤْمِنَ
நாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று
lirasūlin
لِرَسُولٍ
ஒரு தூதருக்கு
ḥattā
حَتَّىٰ
வரை
yatiyanā
يَأْتِيَنَا
வருவார்/எங்களிடம்
biqur'bānin
بِقُرْبَانٍ
ஒரு பலியைக்கொண்டு
takuluhu
تَأْكُلُهُ
சாப்பிடும்/அதை
l-nāru
ٱلنَّارُۗ
நெருப்பு
qul
قُلْ
கூறுவீராக
qad
قَدْ
திட்டமாக
jāakum
جَآءَكُمْ
வந்தார்(கள்) உங்களிடம்
rusulun
رُسُلٌ
பல தூதர்கள்
min qablī
مِّن قَبْلِى
எனக்கு முன்னர்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
wabi-alladhī qul'tum
وَبِٱلَّذِى قُلْتُمْ
இன்னும் எதைக்கொண்டு/கூறினீர்கள்
falima qataltumūhum
فَلِمَ قَتَلْتُمُوهُمْ
ஆகவே ஏன்?/கொலை செய்தீர்கள்/அவர்களை
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(அன்றி) இவர்கள் "எத்தூதராயினும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும் வரையில் அவரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாதென்று நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக் கின்றான்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த நபிமார்களில் பலர் நீங்கள் கேட்ட இதனையும் (வேறு பல) தெளிவான அத்தாட்சி களையும் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருக்க உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?’ ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௩)
Tafseer
௧௮௪

فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَاۤءُوْ بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِيْرِ ١٨٤

fa-in kadhabūka
فَإِن كَذَّبُوكَ
ஆகவே அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
faqad kudhiba
فَقَدْ كُذِّبَ
திட்டமாகபொய்பிக்கப் பட்டார்(கள்)
rusulun
رُسُلٌ
தூதர்கள்
min qablika
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
jāū
جَآءُو
வந்தார்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
wal-zuburi
وَٱلزُّبُرِ
இன்னும் வேத நூல்கள்
wal-kitābi
وَٱلْكِتَٰبِ
இன்னும் வேதம்
l-munīri
ٱلْمُنِيرِ
ஒளி வீசக்கூடியது
(இதற்குப்) பின்னரும் அவர்கள் உங்களைப் பொய்யரெனக் கூறினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்,) உங்களுக்கு முன்னர் வந்த பல தூதர்களையும் அவர்கள் (இவ்வாறே) பொய்யரெனக் கூறினார்கள். அவர்களோ தெளிவான அத்தாட்சிகளையும், வேத நூல்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டுவந்தே இருந்தனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௪)
Tafseer
௧௮௫

كُلُّ نَفْسٍ ذَاۤىِٕقَةُ الْمَوْتِۗ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۗ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ١٨٥

kullu
كُلُّ
ஒவ்வொரு
nafsin
نَفْسٍ
ஆன்மா
dhāiqatu
ذَآئِقَةُ
சுவைக்கக் கூடியது
l-mawti
ٱلْمَوْتِۗ
மரணத்தை
wa-innamā
وَإِنَّمَا
எல்லாம்
tuwaffawna
تُوَفَّوْنَ
முழுமையாக நிறைவேற்றப்படுவீர்கள்
ujūrakum
أُجُورَكُمْ
உங்கள் கூலிகளை
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۖ
மறுமை நாளில்
faman
فَمَن
ஆகவே, எவர்
zuḥ'ziḥa
زُحْزِحَ
தூரமாக்கப்பட்டார்
ʿani l-nāri
عَنِ ٱلنَّارِ
நெருப்பி லிருந்து
wa-ud'khila
وَأُدْخِلَ
இன்னும் நுழைக்கப்பட்டார்
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
faqad fāza
فَقَدْ فَازَۗ
திட்டமாக வெற்றிபெற்றார்
wamā
وَمَا
இன்னும் இல்லை
l-ḥayatu
ٱلْحَيَوٰةُ
வாழ்க்கை
l-dun'yā
ٱلدُّنْيَآ
இவ்வுலகம்
illā matāʿu
إِلَّا مَتَٰعُ
தவிர/இன்பம்
l-ghurūri
ٱلْغُرُورِ
மயக்கக் கூடியது
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௫)
Tafseer
௧௮௬

۞ لَتُبْلَوُنَّ فِيْٓ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْۗ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْٓا اَذًى كَثِيْرًا ۗ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ١٨٦

latub'lawunna
لَتُبْلَوُنَّ
நிச்சயம் சோதிக்கப்படுவீர்கள்
fī amwālikum
فِىٓ أَمْوَٰلِكُمْ
செல்வங்களில்/உங்கள்
wa-anfusikum
وَأَنفُسِكُمْ
இன்னும் ஆன்மாக்கள்/ உங்கள்
walatasmaʿunna
وَلَتَسْمَعُنَّ
இன்னும் நிச்சயமாகசெவியுறுவீர்கள்
mina
مِنَ
இருந்து
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
min qablikum
مِن قَبْلِكُمْ
முன்னர்/உங்களுக்கு
wamina
وَمِنَ
இன்னும் இருந்து
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ashrakū
أَشْرَكُوٓا۟
இணைவைத்தார்கள்
adhan
أَذًى
வசை மொழியை
kathīran
كَثِيرًاۚ
அதிகமானது
wa-in taṣbirū
وَإِن تَصْبِرُوا۟
நீங்கள் பொறுத்தால்
watattaqū
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள்அஞ்சினால்
fa-inna dhālika
فَإِنَّ ذَٰلِكَ
நிச்சயமாக அதுதான்
min
مِنْ
இல்
ʿazmi
عَزْمِ
உறுதிமிக்க
l-umūri
ٱلْأُمُورِ
காரியங்கள்
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசைமொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய கஷ்டங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்து அல்லாஹ்வை பயந்தவர்களாக வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்.) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௬)
Tafseer
௧௮௭

وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَتُبَيِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗۖ فَنَبَذُوْهُ وَرَاۤءَ ظُهُوْرِهِمْ وَاشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۗ فَبِئْسَ مَا يَشْتَرُوْنَ ١٨٧

wa-idh akhadha
وَإِذْ أَخَذَ
வாங்கினான்/சமயம்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mīthāqa
مِيثَٰقَ
உறுதிமொழியை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
latubayyinunnahu
لَتُبَيِّنُنَّهُۥ
நிச்சயமாக நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்/அதை
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
walā taktumūnahu
وَلَا تَكْتُمُونَهُۥ
இன்னும் நீங்கள் மறைக்கக் கூடாது/அதை
fanabadhūhu
فَنَبَذُوهُ
எறிந்தனர்/அதை
warāa
وَرَآءَ
பின்னால்
ẓuhūrihim
ظُهُورِهِمْ
முதுகுகள் அவர்களுடைய
wa-ish'taraw
وَٱشْتَرَوْا۟
இன்னும் வாங்கினர்
bihi thamanan
بِهِۦ ثَمَنًا
அதற்குப் பகரமாக/கிரயத்தை
qalīlan
قَلِيلًاۖ
சொற்பம்
fabi'sa
فَبِئْسَ
மிகக் கெட்டது
mā yashtarūna
مَا يَشْتَرُونَ
எது/வாங்குகிறார்கள்
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் "(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது" என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதி மொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் பெற்றுக் கொண்டது மகா கெட்டதாகும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௭)
Tafseer
௧௮௮

لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ يَفْرَحُوْنَ بِمَآ اَتَوْا وَّيُحِبُّوْنَ اَنْ يُّحْمَدُوْا بِمَا لَمْ يَفْعَلُوْا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ١٨٨

lā taḥsabanna
لَا تَحْسَبَنَّ
நிச்சயம் எண்ணாதீர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yafraḥūna
يَفْرَحُونَ
மகிழ்ச்சி அடைகிறார்கள்
bimā ataw
بِمَآ أَتَوا۟
எதை செய்தார்கள்
wayuḥibbūna
وَّيُحِبُّونَ
இன்னும் விரும்புகிறார்கள்
an yuḥ'madū
أَن يُحْمَدُوا۟
அவர்கள் புகழப்படுவதை
bimā lam yafʿalū
بِمَا لَمْ يَفْعَلُوا۟
எதன் மூலம்/அவர்கள் செய்யவில்லை
falā taḥsabannahum
فَلَا تَحْسَبَنَّهُم
ஆகவே நிச்சயமாக எண்ணாதீர்/அவர்களை
bimafāzatin
بِمَفَازَةٍ
பாதுகாப்பில்
mina
مِّنَ
இருந்து
l-ʿadhābi
ٱلْعَذَابِۖ
வேதனை
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது
(நபியே!) எவர்கள் தாங்கள் செய்த (அற்ப) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாத (நன்மையான) காரியங் களைப் பற்றியும், (தாம் செய்ததாக மக்கள்) தம்மைப் புகழ்வதை விரும்புகின்றார்களோ அவர்கள் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று நிச்சயமாக (ஒரு காலமும்) நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௮)
Tafseer
௧௮௯

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ ١٨٩

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமி
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லா பொருள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮௯)
Tafseer
௧௯௦

اِنَّ فِيْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِۙ ١٩٠

inna
إِنَّ
நிச்சயமாக
fī khalqi
فِى خَلْقِ
படைத்திருப்பதில்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
wa-ikh'tilāfi
وَٱخْتِلَٰفِ
இன்னும் மாறுவது
al-layli wal-nahāri
ٱلَّيْلِ وَٱلنَّهَارِ
இரவு/இன்னும் பகல்
laāyātin
لَءَايَٰتٍ
திட்டமாக அத்தாட்சிகள்
li-ulī l-albābi
لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவுடையவர்களுக்கு
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯௦)
Tafseer