وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ ٢٠١
- wamin'hum
- وَمِنْهُم
- அவர்களில்
- man
- مَّن
- எவர்
- yaqūlu
- يَقُولُ
- கூறுகிறார்
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- ātinā
- ءَاتِنَا
- எங்களுக்குத் தா
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இம்மையில்
- ḥasanatan
- حَسَنَةً
- அழகியதை
- wafī l-ākhirati
- وَفِى ٱلْءَاخِرَةِ
- இன்னும் மறுமையில்
- ḥasanatan
- حَسَنَةً
- அழகியதை
- waqinā
- وَقِنَا
- இன்னும் காத்துக்கொள்/ எங்களை
- ʿadhāba
- عَذَابَ
- வேதனையிலிருந்து
- l-nāri
- ٱلنَّارِ
- (நரக) நெருப்பின்
அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௧)Tafseer
اُولٰۤىِٕكَ لَهُمْ نَصِيْبٌ مِّمَّا كَسَبُوْا ۗ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ٢٠٢
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- naṣībun
- نَصِيبٌ
- பங்கு
- mimmā
- مِّمَّا
- எதிலிருந்து
- kasabū
- كَسَبُوا۟ۚ
- செய்தார்கள்
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- sarīʿu
- سَرِيعُ
- விரைவானவன்
- l-ḥisābi
- ٱلْحِسَابِ
- கணக்கிடுவதில்/ விசாரணையில்
தாங்கள் செய்த (நற்)செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் வெகு விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமன்று). ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௨)Tafseer
۞ وَاذْكُرُوا اللّٰهَ فِيْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍ ۗ فَمَنْ تَعَجَّلَ فِيْ يَوْمَيْنِ فَلَآ اِثْمَ عَلَيْهِ ۚوَمَنْ تَاَخَّرَ فَلَآ اِثْمَ عَلَيْهِۙ لِمَنِ اتَّقٰىۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّكُمْ اِلَيْهِ تُحْشَرُوْنَ ٢٠٣
- wa-udh'kurū
- وَٱذْكُرُوا۟
- இன்னும் நினைவு கூருங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- fī ayyāmin
- فِىٓ أَيَّامٍ
- நாள்களில்
- maʿdūdātin
- مَّعْدُودَٰتٍۚ
- எண்ணப்பட்டவை
- faman
- فَمَن
- இன்னும் எவர்
- taʿajjala
- تَعَجَّلَ
- அவசரப்பட்டார்
- fī yawmayni
- فِى يَوْمَيْنِ
- இரண்டு நாள்களில்
- falā ith'ma
- فَلَآ إِثْمَ
- அறவே பாவமில்லை
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- waman ta-akhara
- وَمَن تَأَخَّرَ
- இன்னும் எவர்/தாமதித்தார்
- falā ith'ma
- فَلَآ إِثْمَ
- அறவே பாவமில்லை
- ʿalayhi
- عَلَيْهِۚ
- அவர் மீது
- limani
- لِمَنِ
- எவருக்கு
- ittaqā
- ٱتَّقَىٰۗ
- அஞ்சினார்
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- இன்னும் அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- இன்னும் அறிந்துகொள்ளுங்கள்
- annakum
- أَنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- ilayhi
- إِلَيْهِ
- அவனிடமே
- tuḥ'sharūna
- تُحْشَرُونَ
- ஒன்று திரட்டப்படுவீர்கள்
(நம்பிக்கையாளர்களே! துல்ஹஜ்ஜு மாதத்தில்) குறிப்பிடப்பட்ட (மூன்று) நாள்கள் வரை ("மினா" என்னும் இடத்தில் தாமதித்திருந்து) அல்லாஹ்வை "திக்ரு" செய்யுங்கள். ஆனால், எவரேனும் இரண்டாம் நாளில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரேனும் (மூன்று நாள்களுக்குப்) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. அவர் இறை அச்சமுடையவராக (இருந்து ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) இருந்தால் (மட்டும்) போதுமானது. ஆகவே (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே (நியாயத் தீர்ப்புக்கு எழுப்பிக்) கொண்டு வரப்படுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௩)Tafseer
وَمِنَ النَّاسِ مَنْ يُّعْجِبُكَ قَوْلُهٗ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللّٰهَ عَلٰى مَا فِيْ قَلْبِهٖ ۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ ٢٠٤
- wamina l-nāsi
- وَمِنَ ٱلنَّاسِ
- இன்னும் மக்களில்
- man
- مَن
- எவர்
- yuʿ'jibuka
- يُعْجِبُكَ
- வியக்க வைக்கிறது/உம்மை
- qawluhu
- قَوْلُهُۥ
- அவனுடைய பேச்சு
- fī l-ḥayati
- فِى ٱلْحَيَوٰةِ
- வாழ்க்கையைப் பற்றி
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- இவ்வுலகம்
- wayush'hidu
- وَيُشْهِدُ
- இன்னும் சாட்சியாக்குவான்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- ʿalā
- عَلَىٰ
- மீது
- mā fī qalbihi
- مَا فِى قَلْبِهِۦ
- எது/அவனுடைய உள்ளத்தில்
- wahuwa
- وَهُوَ
- அவன்
- aladdu
- أَلَدُّ
- கடுமையான வாதி
- l-khiṣāmi
- ٱلْخِصَامِ
- வாதிகளில்
(நபியே! உங்களிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப் பேசும்பொழுது) தன்னுடைய (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு. அவன் (உங்கள்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். (உண்மையில்) அவன்தான் (உங்களுக்குக்) கொடிய எதிரியாவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௪)Tafseer
وَاِذَا تَوَلّٰى سَعٰى فِى الْاَرْضِ لِيُفْسِدَ فِيْهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ۗ وَ اللّٰهُ لَا يُحِبُّ الْفَسَادَ ٢٠٥
- wa-idhā tawallā
- وَإِذَا تَوَلَّىٰ
- இன்னும் அவன் திரும்பிச் சென்றால்
- saʿā
- سَعَىٰ
- முயற்சிக்கிறான்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- liyuf'sida fīhā
- لِيُفْسِدَ فِيهَا
- அவன் விஷமம் செய்வதற்காக/அதில்
- wayuh'lika
- وَيُهْلِكَ
- இன்னும் அழிக்கிறான்
- l-ḥartha
- ٱلْحَرْثَ
- விளை நிலத்தை
- wal-nasla
- وَٱلنَّسْلَۗ
- இன்னும் கால்நடையை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- விரும்ப மாட்டான்
- l-fasāda
- ٱلْفَسَادَ
- விஷமத்தை
அவன் (உங்களிலிருந்து) விலகினாலோ, பூமியில் விஷமம் செய்து (உங்கள்) விவசாயத்தையும் கால்நடைகளையும் அழித்துவிட முயற்சி செய்கின்றான். விஷமத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௫)Tafseer
وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ۗ وَلَبِئْسَ الْمِهَادُ ٢٠٦
- wa-idhā qīla
- وَإِذَا قِيلَ
- கூறப்பட்டால்
- lahu
- لَهُ
- அவனுக்கு
- ittaqi
- ٱتَّقِ
- அஞ்சிக்கொள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- akhadhathu
- أَخَذَتْهُ
- அவனைப் பிடித்துக் கொள்கிறது
- l-ʿizatu
- ٱلْعِزَّةُ
- பெருமை
- bil-ith'mi
- بِٱلْإِثْمِۚ
- பாவத்தைக் கொண்டு
- faḥasbuhu
- فَحَسْبُهُۥ
- எனவே அவனுக்குப்போதும்
- jahannamu
- جَهَنَّمُۚ
- நரகம்
- walabi'sa
- وَلَبِئْسَ
- இன்னும் திட்டமாக கெட்டுவிட்டது
- l-mihādu
- ٱلْمِهَادُ
- தங்குமிடம்
தவிர, "நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)" என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக் கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௬)Tafseer
وَمِنَ النَّاسِ مَنْ يَّشْرِيْ نَفْسَهُ ابْتِغَاۤءَ مَرْضَاتِ اللّٰهِ ۗوَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ٢٠٧
- wamina l-nāsi
- وَمِنَ ٱلنَّاسِ
- இன்னும் மக்களில்
- man
- مَن
- எவர்
- yashrī
- يَشْرِى
- விற்கிறார்
- nafsahu
- نَفْسَهُ
- தன் உயிரை
- ib'tighāa
- ٱبْتِغَآءَ
- தேடுதல்
- marḍāti
- مَرْضَاتِ
- பொருத்தம்
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்வின்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- raūfun
- رَءُوفٌۢ
- மிக இரக்கமுடையவன்
- bil-ʿibādi
- بِٱلْعِبَادِ
- அடியார்கள் மீது
அல்லாஹ்வின் (திருப்) பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் கருணையுடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௭)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ كَاۤفَّةً ۖوَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِۗ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ٢٠٨
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- ud'khulū
- ٱدْخُلُوا۟
- நுழையுங்கள்
- fī l-sil'mi
- فِى ٱلسِّلْمِ
- இஸ்லாமில்
- kāffatan
- كَآفَّةً
- முழுமையாக
- walā tattabiʿū
- وَلَا تَتَّبِعُوا۟
- இன்னும் பின்பற்றாதீர்கள்
- khuṭuwāti
- خُطُوَٰتِ
- அடிச்சுவடுகளை
- l-shayṭāni
- ٱلشَّيْطَٰنِۚ
- ஷைத்தானின்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- ʿaduwwun
- عَدُوٌّ
- எதிரி
- mubīnun
- مُّبِينٌ
- பகிரங்கமான
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௮)Tafseer
فَاِنْ زَلَلْتُمْ مِّنْۢ بَعْدِ مَا جَاۤءَتْكُمُ الْبَيِّنٰتُ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ ٢٠٩
- fa-in zalaltum
- فَإِن زَلَلْتُم
- நீங்கள் சறுகினால்
- min baʿdi mā jāatkumu
- مِّنۢ بَعْدِ مَا جَآءَتْكُمُ
- பின்னர்/வந்தது/உங்களிடம்
- l-bayinātu
- ٱلْبَيِّنَٰتُ
- தெளிவான சான்றுகள்
- fa-iʿ'lamū
- فَٱعْلَمُوٓا۟
- அறிந்து கொள்ளுங்கள்
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿazīzun
- عَزِيزٌ
- மிகைத்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- மகா ஞானவான்
(மனிதர்களே! சந்தேகத்திற்கிடமில்லாத) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்தபின்னும் நீங்கள் (இஸ்லாமில் உறுதியாக இல்லாமல்) நழுவி விடுவீர்களானால் (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (உங்களை எவ்விதம் நடத்தவேண்டும் என்பதை நன்கறிந்த) நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௯)Tafseer
هَلْ يَنْظُرُوْنَ اِلَّآ اَنْ يَّأْتِيَهُمُ اللّٰهُ فِيْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰۤىِٕكَةُ وَقُضِيَ الْاَمْرُ ۗ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ࣖ ٢١٠
- hal yanẓurūna
- هَلْ يَنظُرُونَ
- எதிர்பார்க்கிறார்களா?
- illā
- إِلَّآ
- தவிர
- an yatiyahumu
- أَن يَأْتِيَهُمُ
- அவர்களிடம்வருவதை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- fī ẓulalin
- فِى ظُلَلٍ
- நிழல்களில்
- mina l-ghamāmi
- مِّنَ ٱلْغَمَامِ
- மேகங்களின்
- wal-malāikatu
- وَٱلْمَلَٰٓئِكَةُ
- இன்னும் வானவர்கள்
- waquḍiya
- وَقُضِىَ
- இன்னும் முடிக்கப்பட்டது
- l-amru
- ٱلْأَمْرُۚ
- காரியம்
- wa-ilā l-lahi
- وَإِلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் பக்கமே
- tur'jaʿu
- تُرْجَعُ
- திருப்பப்படும்
- l-umūru
- ٱلْأُمُورُ
- காரியங்கள்
(நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களையும் நிராகரிக்கும் அவர்கள்) அல்லாஹ்வும் மலக்குகளும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து) அவர்களின் வேலையை முடிப்பதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ? (அவர்களுடைய) எல்லா விஷயங்களும் (மறுமையில்) அல்லாஹ்விடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படும். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௧௦)Tafseer