Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௦௩

Qur'an Surah Al-Baqarah Verse 203

ஸூரத்துல் பகரா [௨]: ௨௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاذْكُرُوا اللّٰهَ فِيْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍ ۗ فَمَنْ تَعَجَّلَ فِيْ يَوْمَيْنِ فَلَآ اِثْمَ عَلَيْهِ ۚوَمَنْ تَاَخَّرَ فَلَآ اِثْمَ عَلَيْهِۙ لِمَنِ اتَّقٰىۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّكُمْ اِلَيْهِ تُحْشَرُوْنَ (البقرة : ٢)

wa-udh'kurū
وَٱذْكُرُوا۟
And remember
இன்னும் நினைவு கூருங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
fī ayyāmin
فِىٓ أَيَّامٍ
during days
நாள்களில்
maʿdūdātin
مَّعْدُودَٰتٍۚ
numbered
எண்ணப்பட்டவை
faman
فَمَن
Then (he) who
இன்னும் எவர்
taʿajjala
تَعَجَّلَ
hurries
அவசரப்பட்டார்
fī yawmayni
فِى يَوْمَيْنِ
in two days
இரண்டு நாள்களில்
falā ith'ma
فَلَآ إِثْمَ
then no sin
அறவே பாவமில்லை
ʿalayhi
عَلَيْهِ
upon him
அவர் மீது
waman ta-akhara
وَمَن تَأَخَّرَ
and whoever delays
இன்னும் எவர்/தாமதித்தார்
falā ith'ma
فَلَآ إِثْمَ
then no sin
அறவே பாவமில்லை
ʿalayhi
عَلَيْهِۚ
upon him
அவர் மீது
limani
لِمَنِ
for (the one) who
எவருக்கு
ittaqā
ٱتَّقَىٰۗ
fears
அஞ்சினார்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
and know
இன்னும் அறிந்துகொள்ளுங்கள்
annakum
أَنَّكُمْ
that you
நிச்சயமாக நீங்கள்
ilayhi
إِلَيْهِ
unto Him
அவனிடமே
tuḥ'sharūna
تُحْشَرُونَ
will be gathered
ஒன்று திரட்டப்படுவீர்கள்

Transliteration:

Wazkurul laaha feee ayyaamim ma'doodaat; faman ta'ajjala fee yawmaini falaaa ismaa 'alaihi wa man taakhkhara falaaa isma 'alayh; limanit-taqaa; wattaqul laaha wa'lamooo annakum ilaihi tuhsharoon (QS. al-Baq̈arah:203)

English Sahih International:

And remember Allah during [specific] numbered days. Then whoever hastens [his departure] in two days – there is no sin upon him; and whoever delays [until the third] – there is no sin upon him – for him who fears Allah. And fear Allah and know that unto Him you will be gathered. (QS. Al-Baqarah, Ayah ௨௦௩)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! துல்ஹஜ்ஜு மாதத்தில்) குறிப்பிடப்பட்ட (மூன்று) நாள்கள் வரை ("மினா" என்னும் இடத்தில் தாமதித்திருந்து) அல்லாஹ்வை "திக்ரு" செய்யுங்கள். ஆனால், எவரேனும் இரண்டாம் நாளில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரேனும் (மூன்று நாள்களுக்குப்) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. அவர் இறை அச்சமுடையவராக (இருந்து ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) இருந்தால் (மட்டும்) போதுமானது. ஆகவே (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே (நியாயத் தீர்ப்புக்கு எழுப்பிக்) கொண்டு வரப்படுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௦௩)

Jan Trust Foundation

குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எண்ணப்பட்ட நாள்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். எவர் இரண்டு நாள்களில் (புறப்பட) அவசரப்பட்டாரோ அவர் மீது அறவே பாவமில்லை. எவர் தாமதித்தாரோ அவர் மீதும் அறவே பாவமில்லை. (அதாவது) அல்லாஹ்வை அஞ்சியவருக்கு (பாவமில்லை). அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.