Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௦௨

Qur'an Surah Al-Baqarah Verse 202

ஸூரத்துல் பகரா [௨]: ௨௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ لَهُمْ نَصِيْبٌ مِّمَّا كَسَبُوْا ۗ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ (البقرة : ٢)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those -
அவர்கள்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
naṣībun
نَصِيبٌ
(is) a share
பங்கு
mimmā
مِّمَّا
of what
எதிலிருந்து
kasabū
كَسَبُوا۟ۚ
they earned
செய்தார்கள்
wal-lahu
وَٱللَّهُ
and Allah
இன்னும் அல்லாஹ்
sarīʿu
سَرِيعُ
(is) swift
விரைவானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
(in taking) account
கணக்கிடுவதில்/ விசாரணையில்

Transliteration:

Ulaaa'ika lahum naseebum mimmaa kasaboo; wal laahu saree'ul hisaab (QS. al-Baq̈arah:202)

English Sahih International:

Those will have a share of what they have earned, and Allah is swift in account. (QS. Al-Baqarah, Ayah ௨௦௨)

Abdul Hameed Baqavi:

தாங்கள் செய்த (நற்)செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் வெகு விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமன்று). (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௦௨)

Jan Trust Foundation

இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் செய்ததிலிருந்து பங்கு அவர்களுக்கு உண்டு. அல்லாஹ் (கணக்கிடுவதில்) விசாரணையில் விரைவானவன்