وَقَالُوْا لَنْ يَّدْخُلَ الْجَنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰى ۗ تِلْكَ اَمَانِيُّهُمْ ۗ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١١١
- waqālū
- وَقَالُوا۟
- கூறினார்கள்
- lan yadkhula
- لَن يَدْخُلَ
- நுழையவே மாட்டார்
- l-janata
- ٱلْجَنَّةَ
- சொர்க்கத்தில்
- illā man
- إِلَّا مَن
- தவிர/எவர்(கள்)
- kāna
- كَانَ
- இருக்கிறார்(கள்)
- hūdan
- هُودًا
- யூதர்களாக
- aw
- أَوْ
- அல்லது
- naṣārā
- نَصَٰرَىٰۗ
- கிறித்துவர்களாக
- til'ka
- تِلْكَ
- அவை
- amāniyyuhum
- أَمَانِيُّهُمْۗ
- வீண் நம்பிக்கைகள்/அவர்களுடைய
- qul
- قُلْ
- கூறுவீராக
- hātū
- هَاتُوا۟
- கொண்டு வாருங்கள்
- bur'hānakum
- بُرْهَٰنَكُمْ
- ஆதாரத்தை/உங்கள்
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
(நபியே!) கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருப்பவரைத் தவிர (மற்ற எவரும்) சுவர்க்கம் நுழையவே மாட்டார்கள் என அவ(ரவ)ர்கள் கூறுகிறார்கள். இது அவர்களுடைய வீண் நம்பிக்கையே(யன்றி உண்மையல்ல. ஆதலால் அவர்களை நோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் உங்களுடைய (இவ்வார்த்தைக்குரிய) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்." ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௧)Tafseer
بَلٰى مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗٓ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖۖ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ࣖ ١١٢
- balā
- بَلَىٰ
- அவ்வாறன்று
- man
- مَنْ
- எவர்
- aslama
- أَسْلَمَ
- பணியவைத்தார்
- wajhahu
- وَجْهَهُۥ
- தன் முகத்தை
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- wahuwa
- وَهُوَ
- அவரோ
- muḥ'sinun
- مُحْسِنٌ
- நன்மை செய்பவர்
- falahu
- فَلَهُۥٓ
- அவருக்கு
- ajruhu
- أَجْرُهُۥ
- அவருடைய கூலி
- ʿinda rabbihi
- عِندَ رَبِّهِۦ
- இடம்/இறைவன்/அவருடைய
- walā khawfun
- وَلَا خَوْفٌ
- இன்னும் பயம் இல்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
(உண்மை) அவ்வாறன்று! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை (முற்றிலும்) அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறாரோ அவருக்கே அவர் செய்யும் நன்மையின் கூலி அவருடைய இறைவனிடம் உண்டு. அன்றி, இத்தகையவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௨)Tafseer
وَقَالَتِ الْيَهُوْدُ لَيْسَتِ النَّصٰرٰى عَلٰى شَيْءٍۖ وَّقَالَتِ النَّصٰرٰى لَيْسَتِ الْيَهُوْدُ عَلٰى شَيْءٍۙ وَّهُمْ يَتْلُوْنَ الْكِتٰبَۗ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ ۚ فَاللّٰهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ ١١٣
- waqālati
- وَقَالَتِ
- இன்னும் கூறினா(ர்க)ள்
- l-yahūdu
- ٱلْيَهُودُ
- யூதர்கள்
- laysati
- لَيْسَتِ
- இல்லை
- l-naṣārā
- ٱلنَّصَٰرَىٰ
- கிறித்துவர்கள்
- ʿalā shayin
- عَلَىٰ شَىْءٍ
- எதிலும்
- waqālati
- وَقَالَتِ
- கூறினா(ர்க)ள்
- l-naṣārā
- ٱلنَّصَٰرَىٰ
- கிறித்துவர்கள்
- laysati
- لَيْسَتِ
- இல்லை
- l-yahūdu
- ٱلْيَهُودُ
- யூதர்கள்
- ʿalā shayin
- عَلَىٰ شَىْءٍ
- எதிலும்
- wahum
- وَهُمْ
- அவர்களுமோ
- yatlūna
- يَتْلُونَ
- ஓதுகிறார்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَۗ
- வேதத்தை
- kadhālika
- كَذَٰلِكَ
- இப்படியே
- qāla
- قَالَ
- கூறினார்(கள்)
- alladhīna lā yaʿlamūna
- ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
- எவர்கள்/அறிய மாட்டார்கள்
- mith'la
- مِثْلَ
- போன்றே
- qawlihim
- قَوْلِهِمْۚ
- இவர்களுடைய கூற்று
- fal-lahu
- فَٱللَّهُ
- ஆகவே அல்லாஹ்
- yaḥkumu
- يَحْكُمُ
- தீர்ப்பளிப்பான்
- baynahum
- بَيْنَهُمْ
- இவர்களுக்கு மத்தியில்
- yawma
- يَوْمَ
- நாளன்று
- l-qiyāmati
- ٱلْقِيَٰمَةِ
- மறுமை
- fīmā
- فِيمَا
- எதில்
- kānū
- كَانُوا۟
- இருந்தார்கள்
- fīhi
- فِيهِ
- அதில்
- yakhtalifūna
- يَخْتَلِفُونَ
- தர்க்கிக்கிறார்கள்
தவிர, "கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை" என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறே) "யூதர்கள் எ(ந்த மார்க்கத்) திலுமில்லை" எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால் இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் "பழைய ஏற்பாடாகிய" தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக் கொள்வதுபோலவே (வேதத்தை) அறிந்துகொள்ளாத (இணைவைத்து வணங்குப)வர்கள் ("யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்களல்ல" எனக்) கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௩)Tafseer
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ يُّذْكَرَ فِيْهَا اسْمُهٗ وَسَعٰى فِيْ خَرَابِهَاۗ اُولٰۤىِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ يَّدْخُلُوْهَآ اِلَّا خَاۤىِٕفِيْنَ ەۗ لَهُمْ فِى الدُّنْيَا خِزْيٌ وَّلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ١١٤
- waman
- وَمَنْ
- இன்னும் யார்
- aẓlamu
- أَظْلَمُ
- மகா அநியாயக்காரன்
- mimman
- مِمَّن
- எவனைவிட
- manaʿa
- مَّنَعَ
- தடுத்தான்
- masājida
- مَسَٰجِدَ
- மஸ்ஜிதுகளை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- an yudh'kara
- أَن يُذْكَرَ
- கூறப்படுவதை
- fīhā
- فِيهَا
- அவற்றில்
- us'muhu
- ٱسْمُهُۥ
- பெயர்/அவனுடைய
- wasaʿā
- وَسَعَىٰ
- இன்னும் முயற்சித்தான்
- fī kharābihā
- فِى خَرَابِهَآۚ
- பாழாகுவதில்/அவை
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- mā kāna
- مَا كَانَ
- இருக்கவில்லை
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு(அனுமதி)
- an yadkhulūhā
- أَن يَدْخُلُوهَآ
- அவர்கள் நுழைய/அவற்றில்
- illā
- إِلَّا
- தவிர
- khāifīna
- خَآئِفِينَۚ
- பயந்தவர்களாக
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இவ்வுலகில்
- khiz'yun
- خِزْىٌ
- இழிவு
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- ʿadhābun ʿaẓīmun
- عَذَابٌ عَظِيمٌ
- வேதனை/பெரியது
அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அச்சத்துடனன்றி அவைகளில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௪)Tafseer
وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِيْمٌ ١١٥
- walillahi
- وَلِلَّهِ
- அல்லாஹ்வுக்கே
- l-mashriqu
- ٱلْمَشْرِقُ
- கிழக்கு
- wal-maghribu
- وَٱلْمَغْرِبُۚ
- இன்னும் மேற்கு
- fa-aynamā
- فَأَيْنَمَا
- ஆகவே எங்கெல்லாம்
- tuwallū
- تُوَلُّوا۟
- திருப்புகிறீர்கள்
- fathamma
- فَثَمَّ
- அங்கு
- wajhu
- وَجْهُ
- முகம்
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வுடைய
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- wāsiʿun
- وَٰسِعٌ
- விசாலமானவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அது அல்லாஹ்வின் திசையே! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௫)Tafseer
وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙسُبْحٰنَهٗ ۗ بَلْ لَّهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ ١١٦
- waqālū
- وَقَالُوا۟
- கூறுகின்றனர்
- ittakhadha
- ٱتَّخَذَ
- எடுத்துக் கொண்டான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- waladan
- وَلَدًاۗ
- குழந்தையை,சந்ததியை
- sub'ḥānahu
- سُبْحَٰنَهُۥۖ
- அவன் மிகப் பரிசுத்தமானவன்
- bal lahu
- بَل لَّهُۥ
- மாறாக/அவனுக்கு
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- எவை/வானங்களில்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۖ
- இன்னும் பூமி
- kullun
- كُلٌّ
- எல்லோரும்
- lahu
- لَّهُۥ
- அவனுக்கு
- qānitūna
- قَٰنِتُونَ
- பணிந்தவர்கள்
"அல்லாஹ் (தனக்கு) சந்ததி ஏற்படுத்திக் கொண்டான்" என்றும் கூறுகின்றனர். அவ்வாறன்று; அவனோ மிக்க பரிசுத்தமானவன். அன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே! இவை அனைத்தும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன(வே அன்றி சந்ததியாகக் கூடிய தகுதியில் எந்த ஒன்றுமே இல்லை). ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௬)Tafseer
بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ ١١٧
- badīʿu
- بَدِيعُ
- புதுமையான படைப்பாளன்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۖ
- இன்னும் பூமி
- wa-idhā qaḍā
- وَإِذَا قَضَىٰٓ
- இன்னும் அவன் முடிவு செய்தால்
- amran
- أَمْرًا
- ஒரு காரியத்தை
- fa-innamā
- فَإِنَّمَا
- அவன் கூறுவதெல்லாம்
- yaqūlu lahu
- يَقُولُ لَهُۥ
- அதற்கு
- kun
- كُن
- ஆகு!
- fayakūnu
- فَيَكُونُ
- உடனே அது ஆகிவிடும்
(அன்றி) அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை "ஆகுக!" எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௭)Tafseer
وَقَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ لَوْلَا يُكَلِّمُنَا اللّٰهُ اَوْ تَأْتِيْنَآ اٰيَةٌ ۗ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّثْلَ قَوْلِهِمْ ۗ تَشَابَهَتْ قُلُوْبُهُمْ ۗ قَدْ بَيَّنَّا الْاٰيٰتِ لِقَوْمٍ يُّوْقِنُوْنَ ١١٨
- waqāla
- وَقَالَ
- இன்னும் கூறினார்(கள்)
- alladhīna lā yaʿlamūna
- ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
- எவர்கள்/அறிய மாட்டார்கள்
- lawlā yukallimunā l-lahu
- لَوْلَا يُكَلِّمُنَا ٱللَّهُ
- பேச வேண்டாமா/நம்மிடம்/அல்லாஹ்
- aw
- أَوْ
- அல்லது
- tatīnā
- تَأْتِينَآ
- வரவேண்டாமா/நமக்கு
- āyatun
- ءَايَةٌۗ
- ஒரு வசனம்
- kadhālika
- كَذَٰلِكَ
- இப்படியே
- qāla
- قَالَ
- கூறினார்(கள்)
- alladhīna min qablihim
- ٱلَّذِينَ مِن قَبْلِهِم
- எவர்கள்/முன்னர்/இவர்களுக்கு
- mith'la
- مِّثْلَ
- போன்றே
- qawlihim
- قَوْلِهِمْۘ
- கூற்றை/இவர்களின்
- tashābahat
- تَشَٰبَهَتْ
- ஒப்பாகி விட்டன
- qulūbuhum
- قُلُوبُهُمْۗ
- உள்ளங்கள்/இவர்களுடைய
- qad bayyannā
- قَدْ بَيَّنَّا
- திட்டமாக தெளிவாக்கினோம்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- வசனங்களை
- liqawmin
- لِقَوْمٍ
- சமுதாயத்திற்கு
- yūqinūna
- يُوقِنُونَ
- உறுதி கொள்வார்கள்
மேலும் கல்வி (அறிவு) இல்லாதோர் "அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?" எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கின்றன. (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௮)Tafseer
اِنَّآ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِيْرًا وَّنَذِيْرًاۙ وَّلَا تُسْـَٔلُ عَنْ اَصْحٰبِ الْجَحِيْمِ ١١٩
- innā
- إِنَّآ
- நிச்சயமாக நாம்
- arsalnāka
- أَرْسَلْنَٰكَ
- அனுப்பினோம்/ உம்மை
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- உண்மையைக் கொண்டு
- bashīran
- بَشِيرًا
- நற்செய்தி கூறுபவராக
- wanadhīran
- وَنَذِيرًاۖ
- இன்னும் எச்சரிப்பவராக
- walā tus'alu
- وَلَا تُسْـَٔلُ
- இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்
- ʿan
- عَنْ
- பற்றி
- aṣḥābi l-jaḥīmi
- أَصْحَٰبِ ٱلْجَحِيمِ
- நரகவாசிகள்
(நபியே! நன்மை செய்பவர்களுக்கு) இவ்வேதத்தின் மூலம் நீங்கள் நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டுமே) நாம் உங்களை அனுப்பி வைத்திருக்கிறோம். ஆகவே (அவர்கள் உங்களுடைய சொல்லை நிராகரித்து நரகம் சென்றால், அந்)நரகவாசிகளைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௯)Tafseer
وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى ۗ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَاۤءَهُمْ بَعْدَ الَّذِيْ جَاۤءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ ١٢٠
- walan tarḍā
- وَلَن تَرْضَىٰ
- திருப்தியடையவே மாட்டா(ர்க)ள்
- ʿanka
- عَنكَ
- உம்மைப் பற்றி
- l-yahūdu
- ٱلْيَهُودُ
- யூதர்கள்
- walā l-naṣārā
- وَلَا ٱلنَّصَٰرَىٰ
- இன்னும் கிறித்துவர்கள்
- ḥattā tattabiʿa
- حَتَّىٰ تَتَّبِعَ
- நீர்பின்பற்றும்வரை
- millatahum
- مِلَّتَهُمْۗ
- மார்க்கத்தை/அவர்களுடைய
- qul
- قُلْ
- கூறுவீராக
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- hudā
- هُدَى
- நேர்வழி
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- huwa l-hudā
- هُوَ ٱلْهُدَىٰۗ
- அதுதான்/நேர்வழி
- wala-ini ittabaʿta
- وَلَئِنِ ٱتَّبَعْتَ
- நீர் பின்பற்றினால்
- ahwāahum
- أَهْوَآءَهُم
- மன விருப்பங்களை அவர்களுடைய
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- alladhī
- ٱلَّذِى
- எது
- jāaka
- جَآءَكَ
- வந்தது/உமக்கு
- mina
- مِنَ
- இருந்து
- l-ʿil'mi
- ٱلْعِلْمِۙ
- ஞானத்தில்
- mā
- مَا
- இல்லை
- laka
- لَكَ
- உமக்கு
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- min waliyyin
- مِن وَلِىٍّ
- பொறுப்பாளர்
- walā naṣīrin
- وَلَا نَصِيرٍ
- இன்னும் உதவியாளர் இல்லை
(நபியே!) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) "அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்) தான் நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்)" எனக் கூறிவிடுங்கள். அன்றி உங்களுக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உங்களை காப்பவனுமில்லை; உங்களுக்கு உதவி செய்பவனுமில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨௦)Tafseer