Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 5

Al-A'raf

(al-ʾAʿrāf)

௪௧

لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍۗ وَكَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ ٤١

lahum
لَهُم
அவர்களுக்கு
min jahannama
مِّن جَهَنَّمَ
நரகத்தில்
mihādun
مِهَادٌ
ஒரு விரிப்பு
wamin fawqihim
وَمِن فَوْقِهِمْ
இன்னும் அவர்களுக்கு மேல்
ghawāshin
غَوَاشٍۚ
போர்வைகள்
wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
najzī
نَجْزِى
கூலி கொடுப்போம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக்கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. அநியாயக்காரர்களை இவ்வாறே நாம் தண்டிப்போம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪௧)
Tafseer
௪௨

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٤٢

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
lā nukallifu
لَا نُكَلِّفُ
சிரமப்படுத்த மாட்டோம்
nafsan
نَفْسًا
ஓர் ஆன்மாவை
illā
إِلَّا
தவிர
wus'ʿahā
وُسْعَهَآ
அதன் சக்திக்குத் தக்கவாறே
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-janati
أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
சொர்க்கவாசிகள்
hum
هُمْ
அவர்கள்
fīhā
فِيهَا
அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்களால் இயன்ற வரையில்) நற்காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களில் ஒருவரையும் அவரது சக்தியின் அளவுக்கதிகமாக நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. இத்தகையவர்கள்தான் சுவனவாசிகள். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪௨)
Tafseer
௪௩

وَنَزَعْنَا مَا فِيْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِيْ مِنْ تَحْتِهِمُ الْانْهٰرُۚ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ هَدٰىنَا لِهٰذَاۗ وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَآ اَنْ هَدٰىنَا اللّٰهُ ۚ لَقَدْ جَاۤءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّۗ وَنُوْدُوْٓا اَنْ تِلْكُمُ الْجَنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٤٣

wanazaʿnā
وَنَزَعْنَا
நீக்கி விடுவோம்
mā fī ṣudūrihim
مَا فِى صُدُورِهِم
எதை/அவர்களுடைய நெஞ்சங்களில்
min ghillin
مِّنْ غِلٍّ
குரோதத்தை
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihimu
مِن تَحْتِهِمُ
அவர்களுக்குக் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُۖ
நதிகள்
waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறுவார்கள்
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
alladhī hadānā lihādhā
ٱلَّذِى هَدَىٰنَا لِهَٰذَا
எவன்/ நேர்வழிபடுத்தினான்/எங்களை/இதற்கு
wamā kunnā linahtadiya
وَمَا كُنَّا لِنَهْتَدِىَ
நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்
lawlā an hadānā
لَوْلَآ أَنْ هَدَىٰنَا
நேர்வழி செலுத்தி இருக்கவில்லையென்றால் /எங்களை
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
laqad jāat
لَقَدْ جَآءَتْ
திட்டமாக/வந்தா(ர்க)ள்
rusulu
رُسُلُ
தூதர்கள்
rabbinā
رَبِّنَا
எங்கள் இறைவனின்
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
உண்மையைக் கொண்டு
wanūdū
وَنُودُوٓا۟
இன்னும் அழைக்கப்படுவார்கள்
an til'kumu l-janatu
أَن تِلْكُمُ ٱلْجَنَّةُ
இந்த சொர்க்கம்
ūrith'tumūhā
أُورِثْتُمُوهَا
இதற்கு வாரிசாக்கப்பட்டீர்கள்
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்ததனால்
அன்றி, (இவ்வுலகில் ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(கள் பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி அவர்கள் "இந்த (சுவனபதியை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதனை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்" என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) "பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்" என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪௩)
Tafseer
௪௪

وَنَادٰٓى اَصْحٰبُ الْجَنَّةِ اَصْحٰبَ النَّارِ اَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ۗقَالُوْا نَعَمْۚ فَاَذَّنَ مُؤَذِّنٌۢ بَيْنَهُمْ اَنْ لَّعْنَةُ اللّٰهِ عَلَى الظّٰلِمِيْنَ ٤٤

wanādā
وَنَادَىٰٓ
அழைப்பார்(கள்)
aṣḥābu l-janati
أَصْحَٰبُ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகள்
aṣḥāba l-nāri
أَصْحَٰبَ ٱلنَّارِ
நரகவாசிகளை
an qad wajadnā
أَن قَدْ وَجَدْنَا
என்று/பெற்றுக் கொண்டோம்
mā waʿadanā
مَا وَعَدَنَا
எதை/வாக்களித்தான்/எங்களுக்கு
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
ḥaqqan
حَقًّا
உண்மையில்
fahal wajadttum
فَهَلْ وَجَدتُّم
பெற்றீர்களா?
mā waʿada
مَّا وَعَدَ
எதை/வாக்களித்தான்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
ḥaqqan
حَقًّاۖ
உண்மையில்
qālū
قَالُوا۟
கூறுவார்கள்
naʿam
نَعَمْۚ
ஆம்!
fa-adhana
فَأَذَّنَ
ஆகவே அறிவிப்பார்
mu-adhinun
مُؤَذِّنٌۢ
ஓர் அறிவிப்பாளர்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
an laʿnatu
أَن لَّعْنَةُ
நிச்சயமாக சாபம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalā l-ẓālimīna
عَلَى ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள் மீது
(அந்நாளில்) சுவனவாசிகள் நரகவாசிகளை நோக்கி "எங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொண்டோம்; நீங்களும் உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?" என்று (சப்தமிட்டுக்) கேட்பார்கள். அதற்கவர்கள் "ஆம்! (பெற்றுக் கொண்டோம்)" என்று கூறுவார்கள். அது சமயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு முனாதி (அறிவிப்பாளர்) கூறுவார்: "நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக!" ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪௪)
Tafseer
௪௫

اَلَّذِيْنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَبْغُوْنَهَا عِوَجًاۚ وَهُمْ بِالْاٰخِرَةِ كٰفِرُوْنَۘ ٤٥

alladhīna yaṣuddūna
ٱلَّذِينَ يَصُدُّونَ
எவர்கள்/தடுத்தனர்
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wayabghūnahā
وَيَبْغُونَهَا
இன்னும் அதில்தேடுகிறார்கள்
ʿiwajan
عِوَجًا
கோணலை
wahum
وَهُم
அவர்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
kāfirūna
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்
(ஏனென்றால்,) அவர்கள் அல்லாஹ்வின் பாதையைத் தடுத்து அதனைக் கோணலாக்க விரும்பினார்கள். அன்றி, அவர்கள் மறுமையையும் நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்.’ ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪௫)
Tafseer
௪௬

وَبَيْنَهُمَا حِجَابٌۚ وَعَلَى الْاَعْرَافِ رِجَالٌ يَّعْرِفُوْنَ كُلًّا ۢ بِسِيْمٰىهُمْۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ سَلٰمٌ عَلَيْكُمْۗ لَمْ يَدْخُلُوْهَا وَهُمْ يَطْمَعُوْنَ ٤٦

wabaynahumā
وَبَيْنَهُمَا
அவ்விருவருக்குமிடையில்
ḥijābun
حِجَابٌۚ
ஒரு மதில்
waʿalā
وَعَلَى
மீது
l-aʿrāfi
ٱلْأَعْرَافِ
சிகரங்கள்
rijālun
رِجَالٌ
(சில) மனிதர்கள்
yaʿrifūna
يَعْرِفُونَ
அறிவார்கள்
kullan
كُلًّۢا
ஒவ்வொருவரையும்
bisīmāhum
بِسِيمَىٰهُمْۚ
அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு
wanādaw
وَنَادَوْا۟
இன்னும் அழைப்பார்கள்
aṣḥāba l-janati
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகளை
an salāmun
أَن سَلَٰمٌ
என்று/ஈடேற்றம்
ʿalaykum
عَلَيْكُمْۚ
உங்கள் மீது
lam yadkhulūhā
لَمْ يَدْخُلُوهَا
அவர்கள் நுழையவில்லை/அதில்
wahum yaṭmaʿūna
وَهُمْ يَطْمَعُونَ
அவர்கள் ஆசைப்படுவார்கள்
(நரகவாசிகளும் சுவர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சுவர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சுவர்க்கவாசிகளை நோக்கி "(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாகுக!" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சுவர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪௬)
Tafseer
௪௭

۞ وَاِذَا صُرِفَتْ اَبْصَارُهُمْ تِلْقَاۤءَ اَصْحٰبِ النَّارِۙ قَالُوْا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ ࣖ ٤٧

wa-idhā ṣurifat
وَإِذَا صُرِفَتْ
திருப்பப்பட்டால்
abṣāruhum
أَبْصَٰرُهُمْ
பார்வைகள் இவர்களின்
til'qāa
تِلْقَآءَ
பக்கம்
aṣḥābi
أَصْحَٰبِ
வாசிகளின்
l-nāri
ٱلنَّارِ
நரக(ம்)
qālū
قَالُوا۟
கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
lā tajʿalnā
لَا تَجْعَلْنَا
எங்களை ஆக்கிவிடாதே
maʿa l-qawmi
مَعَ ٱلْقَوْمِ
மக்களுடன்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப் பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) "எங்கள் இறைவனே! அநியாயக்கார இந்த மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே!" என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪௭)
Tafseer
௪௮

وَنَادٰٓى اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا يَّعْرِفُوْنَهُمْ بِسِيْمٰىهُمْ قَالُوْا مَآ اَغْنٰى عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ ٤٨

wanādā
وَنَادَىٰٓ
அழைப்பார்(கள்)
aṣḥābu l-aʿrāfi
أَصْحَٰبُ ٱلْأَعْرَافِ
சிகரவாசிகள்
rijālan
رِجَالًا
சில மனிதர்களை
yaʿrifūnahum
يَعْرِفُونَهُم
அறிவார்கள் அவர்களை
bisīmāhum
بِسِيمَىٰهُمْ
முகஅடையாளத்தைக் கொண்டு/அவர்களின்
qālū
قَالُوا۟
கூறுவார்கள்
mā aghnā
مَآ أَغْنَىٰ
பலனளிக்கவில்லை
ʿankum
عَنكُمْ
உங்களுக்கு
jamʿukum
جَمْعُكُمْ
உங்கள் சேமிப்பு
wamā kuntum tastakbirūna
وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ
நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும்
அந்த சிகரங்களில் உள்ளவர்கள் அவர்களின் (முக) அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக்குள்ளானவர்கள் என தாங்கள் அறிந்த சில மனிதர்களை நோக்கி) "நீங்கள் (உலகத்தில் சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவைகளும், நீங்கள் எவைகளைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவைகளும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!" என்றும், ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪௮)
Tafseer
௪௯

اَهٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ اللّٰهُ بِرَحْمَةٍۗ اُدْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَآ اَنْتُمْ تَحْزَنُوْنَ ٤٩

ahāulāi
أَهَٰٓؤُلَآءِ
இவர்கள்தானா?
alladhīna aqsamtum
ٱلَّذِينَ أَقْسَمْتُمْ
எவர்கள்/சத்தியம் செய்தீர்கள்
lā yanāluhumu
لَا يَنَالُهُمُ
அடையமாட்டான்/ அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
biraḥmatin
بِرَحْمَةٍۚ
கருணையைக் கொண்டு
ud'khulū
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
lā khawfun
لَا خَوْفٌ
பயமில்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
walā antum taḥzanūna
وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ
நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்
(சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து) "அல்லாஹ் அருள் புரியமாட்டான் என்று (நரகவாசிகளாகிய) நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் (இதோ சுவனபதியில் இருக்கும்) இவர்கள் அல்லவா?" (என்றும் கூறுவார்கள். பிறகு, சுவனவாசிகளை நோக்கி) "நீங்கள் சுவனபதி சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் துக்கிக்கவும் மாட்டீர்கள் (என்று இறைவன் கூறிவிட்டான்) என்றும்" கூறுவார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪௯)
Tafseer
௫௦

وَنَادٰٓى اَصْحٰبُ النَّارِ اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ اَفِيْضُوْا عَلَيْنَا مِنَ الْمَاۤءِ اَوْ مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ۗقَالُوْٓا اِنَّ اللّٰهَ حَرَّمَهُمَا عَلَى الْكٰفِرِيْنَۙ ٥٠

wanādā
وَنَادَىٰٓ
அழைப்பார்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِ
நரகவாசிகள்
aṣḥāba l-janati
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகளை
an afīḍū
أَنْ أَفِيضُوا۟
ஊற்றுங்கள் என்று
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
mina l-māi
مِنَ ٱلْمَآءِ
நீரிலிருந்து
aw
أَوْ
அல்லது
mimmā
مِمَّا
எதிலிருந்து
razaqakumu
رَزَقَكُمُ
உணவளித்தான்/உங்களுக்கு
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
qālū
قَالُوٓا۟
கூறுவார்கள்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ḥarramahumā
حَرَّمَهُمَا
தடைசெய்தான்/அவ்விரண்டையும்
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்கள் மீது
நரகவாசிகள் சுவர்க்கவாசிகளை நோக்கி "எங்கள் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்கு (புசிக்க) அளித்திருப்பவற்றில் (ஒரு சிறிதேனும்) எங்களுக்குத் தாருங்கள்" என்று (கெஞ்சிக்) கேட்பார்கள். அதற்கு அவர்கள் "நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இவ்விரண்டையும் விலக்கி விட்டான்" என்று பதிலளிப்பார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫௦)
Tafseer