Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪௯

Qur'an Surah Al-A'raf Verse 49

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَهٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ اللّٰهُ بِرَحْمَةٍۗ اُدْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَآ اَنْتُمْ تَحْزَنُوْنَ (الأعراف : ٧)

ahāulāi
أَهَٰٓؤُلَآءِ
Are these
இவர்கள்தானா?
alladhīna aqsamtum
ٱلَّذِينَ أَقْسَمْتُمْ
the ones whom you had sworn
எவர்கள்/சத்தியம் செய்தீர்கள்
lā yanāluhumu
لَا يَنَالُهُمُ
(that) not (will) grant them
அடையமாட்டான்/ அவர்களை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
biraḥmatin
بِرَحْمَةٍۚ
Mercy?
கருணையைக் கொண்டு
ud'khulū
ٱدْخُلُوا۟
"Enter
நுழையுங்கள்
l-janata
ٱلْجَنَّةَ
Paradise
சொர்க்கத்தில்
lā khawfun
لَا خَوْفٌ
(There will be) no fear
பயமில்லை
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
walā antum taḥzanūna
وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ
and not you will grieve"
நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்

Transliteration:

A haaa'ulaaa'il lazeena aqsamtum laa yanaaluhumul laahu birahma; udkhulul Jannata laa khawfun 'alaikum wa laaa antum tahzanoon (QS. al-ʾAʿrāf:49)

English Sahih International:

[Allah will say], "Are these the ones whom you [inhabitants of Hell] swore that Allah would never offer them mercy? Enter Paradise, [O people of the Elevations]. No fear will there be concerning you, nor will you grieve." (QS. Al-A'raf, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

(சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து) "அல்லாஹ் அருள் புரியமாட்டான் என்று (நரகவாசிகளாகிய) நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் (இதோ சுவனபதியில் இருக்கும்) இவர்கள் அல்லவா?" (என்றும் கூறுவார்கள். பிறகு, சுவனவாசிகளை நோக்கி) "நீங்கள் சுவனபதி சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் துக்கிக்கவும் மாட்டீர்கள் (என்று இறைவன் கூறிவிட்டான்) என்றும்" கூறுவார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௪௯)

Jan Trust Foundation

“அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(சிகரவாசிகளை சுட்டிக் காண்பித்து) “அல்லாஹ் அவர்களை (தன்) கருணையைக் கொண்டு அடையமாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்தது இவர்கள்தானா?” (என்று பெருமையடித்து மறுத்தவர்களிடம் அல்லாஹ் கேட்பான். பிறகு,) “நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள். உங்கள் மீது பயமில்லை. நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்”(என்று அல்லாஹ் சிகரவாசிகளுக்குக் கூறுவான்.)