Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௫௦

Qur'an Surah Al-A'raf Verse 50

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَادٰٓى اَصْحٰبُ النَّارِ اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ اَفِيْضُوْا عَلَيْنَا مِنَ الْمَاۤءِ اَوْ مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ۗقَالُوْٓا اِنَّ اللّٰهَ حَرَّمَهُمَا عَلَى الْكٰفِرِيْنَۙ (الأعراف : ٧)

wanādā
وَنَادَىٰٓ
And (will) call out
அழைப்பார்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِ
(the) companions (of) the Fire
நரகவாசிகள்
aṣḥāba l-janati
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
(to the) companions (of) Paradise
சொர்க்கவாசிகளை
an afīḍū
أَنْ أَفِيضُوا۟
[that] "Pour
ஊற்றுங்கள் என்று
ʿalaynā
عَلَيْنَا
upon us
எங்கள் மீது
mina l-māi
مِنَ ٱلْمَآءِ
[of] (some) water
நீரிலிருந்து
aw
أَوْ
or
அல்லது
mimmā
مِمَّا
of what
எதிலிருந்து
razaqakumu
رَزَقَكُمُ
(has been) provided (to) you"
உணவளித்தான்/உங்களுக்கு
l-lahu
ٱللَّهُۚ
(by) Allah"
அல்லாஹ்
qālū
قَالُوٓا۟
They (will) say
கூறுவார்கள்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
"Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
ḥarramahumā
حَرَّمَهُمَا
has forbidden both
தடைசெய்தான்/அவ்விரண்டையும்
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
to the disbelievers
நிராகரிப்பவர்கள் மீது

Transliteration:

Wa naadaaa Ashaabun Naari Ashaabal jannati an afeedoo 'alainaa minal maaa'i aw mimma razaqakumul laah; qaaloo innal laaha harrama humaa 'alal kaafireen (QS. al-ʾAʿrāf:50)

English Sahih International:

And the companions of the Fire will call to the companions of Paradise, "Pour upon us some water or from whatever Allah has provided you." They will say, "Indeed, Allah has forbidden them both to the disbelievers (QS. Al-A'raf, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

நரகவாசிகள் சுவர்க்கவாசிகளை நோக்கி "எங்கள் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்கு (புசிக்க) அளித்திருப்பவற்றில் (ஒரு சிறிதேனும்) எங்களுக்குத் தாருங்கள்" என்று (கெஞ்சிக்) கேட்பார்கள். அதற்கு அவர்கள் "நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இவ்விரண்டையும் விலக்கி விட்டான்" என்று பதிலளிப்பார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௫௦)

Jan Trust Foundation

நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்| “நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“எங்கள் மீது நீரிலிருந்து (கொஞ்சம்) ஊற்றுங்கள் அல்லது அல்லாஹ் உங்களுக்கு உணவளித்தவற்றிலிருந்து (கொஞ்சம் உணவளியுங்கள்).” என்று (கூறி) நரகவாசிகள் சொர்க்கவாசிகளை அழைப்பார்கள். “நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்கள் மீது அவ்விரண்டையும் தடைசெய்தான்”என்று (சொர்க்கவாசிகள்) கூறுவார்கள்.