Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 18

Al-A'raf

(al-ʾAʿrāf)

௧௭௧

۞ وَاِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَاَنَّهٗ ظُلَّةٌ وَّظَنُّوْٓا اَنَّهٗ وَاقِعٌۢ بِهِمْۚ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ࣖ ١٧١

wa-idh nataqnā
وَإِذْ نَتَقْنَا
சமயம்/பிடுங்கினோம்
l-jabala
ٱلْجَبَلَ
மலையை
fawqahum
فَوْقَهُمْ
அவர்களுக்கு மேல்
ka-annahu
كَأَنَّهُۥ
போன்று/அது
ẓullatun
ظُلَّةٌ
நிழலிடும் மேகம்
waẓannū
وَظَنُّوٓا۟
இன்னும் எண்ணினர்
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக அது
wāqiʿun
وَاقِعٌۢ
விழுந்துவிடும்
bihim
بِهِمْ
அவர்கள் மீது
khudhū
خُذُوا۟
பிடியுங்கள்
mā ātaynākum
مَآ ءَاتَيْنَٰكُم
எதை/கொடுத்தோம்/உங்களுக்கு
biquwwatin
بِقُوَّةٍ
பலமாக
wa-udh'kurū
وَٱذْكُرُوا۟
இன்னும் நினைவு கூருங்கள்
mā fīhi
مَا فِيهِ
எது/அதில்
laʿallakum tattaqūna
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் அஞ்சுவதற்காக
தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக் கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப் போல் நிறுத்தி (அவர்களை நோக்கி) "நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை (எப்பொழுதும்) கவனத்தில் வையுங்கள்; (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாகி விடலாம்" (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௭௧)
Tafseer
௧௭௨

وَاِذْ اَخَذَ رَبُّكَ مِنْۢ بَنِيْٓ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّيَّتَهُمْ وَاَشْهَدَهُمْ عَلٰٓى اَنْفُسِهِمْۚ اَلَسْتُ بِرَبِّكُمْۗ قَالُوْا بَلٰىۛ شَهِدْنَا ۛاَنْ تَقُوْلُوْا يَوْمَ الْقِيٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِيْنَۙ ١٧٢

wa-idh
وَإِذْ
சமயம்
akhadha
أَخَذَ
எடுத்தான்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
min banī ādama
مِنۢ بَنِىٓ ءَادَمَ
ஆதமின் சந்ததிகளில்
min ẓuhūrihim
مِن ظُهُورِهِمْ
இருந்து/முதுகுகள்/அவர்களுடைய
dhurriyyatahum
ذُرِّيَّتَهُمْ
அவர்களின் சந்ததிகளை
wa-ashhadahum
وَأَشْهَدَهُمْ
இன்னும் சாட்சியாக்கினான்/அவர்களை
ʿalā
عَلَىٰٓ
மீதே
anfusihim
أَنفُسِهِمْ
அவர்கள்
alastu
أَلَسْتُ
நான் இல்லையா?
birabbikum
بِرَبِّكُمْۖ
உங்கள் இறைவனாக
qālū
قَالُوا۟
கூறினர்
balā
بَلَىٰۛ
ஏன் இல்லை
shahid'nā
شَهِدْنَآۛ
நாங்கள் சாட்சி கூறினோம்
an taqūlū
أَن تَقُولُوا۟
நீங்கள் கூறாமல் இருப்பதற்காக
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
இருந்தோம்
ʿan hādhā
عَنْ هَٰذَا
இதை விட்டு
ghāfilīna
غَٰفِلِينَ
கவனமற்றவர்களாக
(நபியே!) உங்களது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாகவும் வைத்து (அவர்களை நோக்கி) "நான் உங்கள் இறைவனாக இல்லையா?" என்று கேட்டதற்கு, "ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்! என்று) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்" என்று அவர்கள் கூறியதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். ஏனென்றால் (இதனை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்" என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும், ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௭௨)
Tafseer
௧௭௩

اَوْ تَقُوْلُوْٓا اِنَّمَآ اَشْرَكَ اٰبَاۤؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِّنْۢ بَعْدِهِمْۚ اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ ١٧٣

aw
أَوْ
அல்லது
taqūlū
تَقُولُوٓا۟
நீங்கள் கூறாதிருப்பதற்காக
innamā
إِنَّمَآ
எல்லாம்
ashraka
أَشْرَكَ
இணைவைத்தார்(கள்)
ābāunā
ءَابَآؤُنَا
எங்கள் மூதாதைகள்
min qablu
مِن قَبْلُ
முன்னர்
wakunnā
وَكُنَّا
இருக்கிறோம்
dhurriyyatan
ذُرِّيَّةً
சந்ததிகளாக
min baʿdihim
مِّنۢ بَعْدِهِمْۖ
பின்னர்/அவர்களுக்கு
afatuh'likunā
أَفَتُهْلِكُنَا
அழிப்பாயா?/எங்களை
bimā faʿala
بِمَا فَعَلَ
செய்ததற்காக
l-mub'ṭilūna
ٱلْمُبْطِلُونَ
பொய்யர்கள்
அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கிய தெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்துவிடலாமா?" என்று கூறாதிருப்பதற்காகவே (இதனை நாம் ஞாபகமூட்டுகிறோம் என்று நபியே! நீங்கள் கூறுங்கள்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௭௩)
Tafseer
௧௭௪

وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُوْنَ ١٧٤

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
nufaṣṣilu
نُفَصِّلُ
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
walaʿallahum yarjiʿūna
وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ
இன்னும் அவர்கள் திரும்புவதற்காக
அவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வதற்காக (நம்முடைய) வசனங்களை இவ்வாறு (தெளிவாக) விவரித்துக் கூறுகிறோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௭௪)
Tafseer
௧௭௫

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ الَّذِيْٓ اٰتَيْنٰهُ اٰيٰتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّيْطٰنُ فَكَانَ مِنَ الْغٰوِيْنَ ١٧٥

wa-ut'lu
وَٱتْلُ
ஓதிக் காட்டுவீராக
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
naba-a
نَبَأَ
செய்தியை
alladhī
ٱلَّذِىٓ
எவன்
ātaynāhu
ءَاتَيْنَٰهُ
கொடுத்தோம்/அவனுக்கு
āyātinā
ءَايَٰتِنَا
நம் அத்தாட்சிகளை
fa-insalakha
فَٱنسَلَخَ
கழண்டான்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
fa-atbaʿahu
فَأَتْبَعَهُ
பின்தொடர்ந்தான்/அவனை
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
fakāna
فَكَانَ
ஆகிவிட்டான்
mina l-ghāwīna
مِنَ ٱلْغَاوِينَ
வழிகெட்டவர்களில்
(நபியே!) நீங்கள் அவர்களுக்கு ("பல்ஆம் இப்னு பாஊர்" என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பியுங்கள். அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் "(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௭௫)
Tafseer
௧௭௬

وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰكِنَّهٗٓ اَخْلَدَ اِلَى الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰىهُۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْكَلْبِۚ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ اَوْ تَتْرُكْهُ يَلْهَثْۗ ذٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ ١٧٦

walaw shi'nā
وَلَوْ شِئْنَا
நாம் நாடியிருந்தால்
larafaʿnāhu
لَرَفَعْنَٰهُ
உயர்த்தியிருப்போம்/அவனை
bihā
بِهَا
அவற்றைக் கொண்டு
walākinnahu
وَلَٰكِنَّهُۥٓ
என்றாலும்/நிச்சயமாக அவன்
akhlada
أَخْلَدَ
நிரந்தரம் தேடினான்
ilā l-arḍi
إِلَى ٱلْأَرْضِ
பூமியில்
wa-ittabaʿa
وَٱتَّبَعَ
இன்னும் பின்பற்றினான்
hawāhu
هَوَىٰهُۚ
தன் ஆசையை
famathaluhu
فَمَثَلُهُۥ
ஆகவே அவனுடைய உதாரணம்
kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப் போன்று
l-kalbi
ٱلْكَلْبِ
நாய்
in taḥmil
إِن تَحْمِلْ
நீர் துரத்தினால்
ʿalayhi
عَلَيْهِ
அதை
yalhath
يَلْهَثْ
அது நாக்கைத் தொங்கவிடும்
aw
أَوْ
அல்லது
tatruk'hu
تَتْرُكْهُ
நீர் விட்டு விட்டால்/அதை
yalhath
يَلْهَثۚ
அது நாக்கைத் தொங்கவிடும்
dhālika mathalu
ذَّٰلِكَ مَثَلُ
இது/உதாரணம்
l-qawmi alladhīna
ٱلْقَوْمِ ٱلَّذِينَ
மக்கள்/எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَاۚ
நம் வசனங்களை
fa-uq'ṣuṣi
فَٱقْصُصِ
விவரிப்பீராக
l-qaṣaṣa
ٱلْقَصَصَ
சரித்திரத்தை
laʿallahum yatafakkarūna
لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
அவர்கள் சிந்திப்பதற்காக
நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. நீங்கள் அதனைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதனை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௭௬)
Tafseer
௧௭௭

سَاۤءَ مَثَلًا ۨالْقَوْمُ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاَنْفُسَهُمْ كَانُوْا يَظْلِمُوْنَ ١٧٧

sāa
سَآءَ
கெட்டு விட்டனர்
mathalan
مَثَلًا
உதாரணமாக
l-qawmu alladhīna
ٱلْقَوْمُ ٱلَّذِينَ
மக்கள்/எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
wa-anfusahum
وَأَنفُسَهُمْ
தங்களுக்கே
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaẓlimūna
يَظْلِمُونَ
அநீதியிழைக்கிறார்கள்
நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய மக்களின் இவ்வுதாரணம் மிகக் கேவலமானது; அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௭௭)
Tafseer
௧௭௮

مَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِيْۚ وَمَنْ يُّضْلِلْ فَاُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ١٧٨

man yahdi
مَن يَهْدِ
எவரை/நேர்வழி செலுத்துகிறான்
l-lahu fahuwa
ٱللَّهُ فَهُوَ
அவர்தான்/அல்லாஹ்
l-muh'tadī
ٱلْمُهْتَدِىۖ
நேர்வழிபெற்றவர்
waman
وَمَن
இன்னும் எவர்(களை)
yuḍ'lil
يُضْلِلْ
வழிகெடுக்கிறான்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்
அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்து கின்றானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள்; எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே! ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௭௮)
Tafseer
௧௭௯

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِۖ لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَاۖ وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَاۖ وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَاۗ اُولٰۤىِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ۗ اُولٰۤىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ ١٧٩

walaqad dharanā
وَلَقَدْ ذَرَأْنَا
படைத்து விட்டோம்
lijahannama
لِجَهَنَّمَ
நரகத்திற்காக
kathīran
كَثِيرًا
அதிகமானோரை
mina l-jini
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
wal-insi
وَٱلْإِنسِۖ
இன்னும் மனிதர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
qulūbun
قُلُوبٌ
உள்ளங்கள்
lā yafqahūna
لَّا يَفْقَهُونَ
சிந்தித்து விளங்க மாட்டார்கள்
bihā
بِهَا
அவற்றைக் கொண்டு
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
aʿyunun
أَعْيُنٌ
கண்கள்
lā yub'ṣirūna
لَّا يُبْصِرُونَ
பார்க்க மாட்டார்கள்
bihā
بِهَا
அவற்றைக் கொண்டு
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ādhānun
ءَاذَانٌ
காதுகள்
lā yasmaʿūna
لَّا يَسْمَعُونَ
செவிசாய்க்க மாட்டார்கள்
bihā
بِهَآۚ
அவற்றைக் கொண்டு
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
kal-anʿāmi
كَٱلْأَنْعَٰمِ
கால்நடைகளைப் போன்று
bal hum
بَلْ هُمْ
மாறாக/அவர்கள்
aḍallu
أَضَلُّۚ
அதிகம் வழிகெட்டவர்(கள்)
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ghāfilūna
ٱلْغَٰفِلُونَ
கவனமற்றவர்கள்
நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழிகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௭௯)
Tafseer
௧௮௦

وَلِلّٰهِ الْاَسْمَاۤءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَاۖ وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِيْٓ اَسْمَاۤىِٕهٖۗ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ۖ ١٨٠

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கே
l-asmāu
ٱلْأَسْمَآءُ
பெயர்கள்
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰ
மிக அழகிய(வை)
fa-id'ʿūhu
فَٱدْعُوهُ
ஆகவே அழையுங்கள்/அவனை
bihā
بِهَاۖ
அவற்றைக் கொண்டு
wadharū
وَذَرُوا۟
விட்டு விடுங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
yul'ḥidūna
يُلْحِدُونَ
தவறிழைப்பார்கள்
fī asmāihi
فِىٓ أَسْمَٰٓئِهِۦۚ
அவனுடைய பெயர்களில்
sayuj'zawna
سَيُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவார்கள்
mā kānū
مَا كَانُوا۟
எதற்கு/இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்வார்கள்
அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௮௦)
Tafseer