Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 16

Al-A'raf

(al-ʾAʿrāf)

௧௫௧

قَالَ رَبِّ اغْفِرْ لِيْ وَلِاَخِيْ وَاَدْخِلْنَا فِيْ رَحْمَتِكَ ۖوَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ ࣖ ١٥١

qāla
قَالَ
கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
igh'fir lī
ٱغْفِرْ لِى
மன்னிப்பு வழங்கு/எனக்கு
wali-akhī
وَلِأَخِى
இன்னும் என் சகோதரருக்கு
wa-adkhil'nā
وَأَدْخِلْنَا
இன்னும் சேர்த்துக்கொள்/எங்களை
fī raḥmatika
فِى رَحْمَتِكَۖ
உன் கருணையில்
wa-anta arḥamu
وَأَنتَ أَرْحَمُ
நீ மகா கருணையாளன்
l-rāḥimīna
ٱلرَّٰحِمِينَ
கருணையாளர்களில்
(பிறகு மூஸா இறைவனை நோக்கி) "என் இறைவனே! எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக! உன்னுடைய அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக! நீ கிருபை செய்பவர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன்" என்று (பிரார்த்தனை செய்து) கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௫௧)
Tafseer
௧௫௨

اِنَّ الَّذِيْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّةٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَاۗ وَكَذٰلِكَ نَجْزِى الْمُفْتَرِيْنَ ١٥٢

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
l-ʿij'la
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
sayanāluhum
سَيَنَالُهُمْ
அடையும்/அவர்களை
ghaḍabun
غَضَبٌ
கோபம்
min
مِّن
இருந்து
rabbihim
رَّبِّهِمْ
அவர்களின் இறைவன்
wadhillatun
وَذِلَّةٌ
இன்னும் இழிவு
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
l-dun'yā
ٱلدُّنْيَاۚ
உலகம்
wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
najzī
نَجْزِى
கூலி கொடுப்போம்
l-muf'tarīna
ٱلْمُفْتَرِينَ
இட்டுக்கட்டுபவர்களுக்கு
(பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) "எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௫௨)
Tafseer
௧௫௩

وَالَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْۢ بَعْدِهَا وَاٰمَنُوْٓا اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ ١٥٣

wa-alladhīna ʿamilū
وَٱلَّذِينَ عَمِلُوا۟
எவர்கள்/செய்தனர்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை
thumma
ثُمَّ
பிறகு
tābū
تَابُوا۟
திருந்தி திரும்பினர்
min baʿdihā
مِنۢ بَعْدِهَا
அவற்றுக்குப் பின்னர்
waāmanū
وَءَامَنُوٓا۟
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
inna rabbaka
إِنَّ رَبَّكَ
நிச்சயமாக உம் இறைவன்
min baʿdihā
مِنۢ بَعْدِهَا
அதற்குப் பின்னர்
laghafūrun
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
(எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர் களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ (அவர்களின் பாவத்தை,) அதற்குப் பின்னர் நிச்சயமாக உங்கள் இறைவன் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௫௩)
Tafseer
௧௫௪

وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَى الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَۖ وَفِيْ نُسْخَتِهَا هُدًى وَّرَحْمَةٌ لِّلَّذِيْنَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُوْنَ ١٥٤

walammā
وَلَمَّا
போது
sakata
سَكَتَ
தனிந்தது, அடங்கியது, அமைதியானது
ʿan mūsā
عَن مُّوسَى
மூஸாவிற்கு
l-ghaḍabu
ٱلْغَضَبُ
கோபம்
akhadha l-alwāḥa
أَخَذَ ٱلْأَلْوَاحَۖ
எடுத்தார்/பலகைகளை
wafī nus'khatihā
وَفِى نُسْخَتِهَا
அவற்றில் எழுதப்பட்டதில்
hudan
هُدًى
நேர்வழி
waraḥmatun
وَرَحْمَةٌ
இன்னும் கருணை
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
hum
هُمْ
அவர்கள்
lirabbihim
لِرَبِّهِمْ
தங்கள் இறைவனை
yarhabūna
يَرْهَبُونَ
பயப்படுகிறார்கள்
மூஸாவுடைய கோபம் தணிந்த பின்னர் அவர் (அக்கற்) பலகைகளை எடுத்துக் கொண்டார். அதில் தங்கள் இறைவனுக்கு அஞ்சுபவர்களுக்கு நேரான வழியும் அருளும் இருந்தன. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௫௪)
Tafseer
௧௫௫

وَاخْتَارَ مُوْسٰى قَوْمَهٗ سَبْعِيْنَ رَجُلًا لِّمِيْقَاتِنَا ۚفَلَمَّآ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِيَّايَۗ اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَاۤءُ مِنَّاۚ اِنْ هِيَ اِلَّا فِتْنَتُكَۗ تُضِلُّ بِهَا مَنْ تَشَاۤءُ وَتَهْدِيْ مَنْ تَشَاۤءُۗ اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ ١٥٥

wa-ikh'tāra
وَٱخْتَارَ
தேர்ந்தெடுத்தார்
mūsā
مُوسَىٰ
மூஸா
qawmahu
قَوْمَهُۥ
தன் சமுதாயத்தில்
sabʿīna
سَبْعِينَ
எழுபது
rajulan
رَجُلًا
ஆண்களை
limīqātinā
لِّمِيقَٰتِنَاۖ
நம் குறிப்பிட்ட நேரத்திற்கு
falammā
فَلَمَّآ
போது
akhadhathumu
أَخَذَتْهُمُ
பிடித்தது/அவர்களை
l-rajfatu
ٱلرَّجْفَةُ
இடிமுழக்கம்
qāla
قَالَ
கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
law shi'ta
لَوْ شِئْتَ
நீ நாடியிருந்தால்
ahlaktahum
أَهْلَكْتَهُم
அழித்திருப்பாய்/அவர்களை
min qablu
مِّن قَبْلُ
(இதற்கு) முன்னரே
wa-iyyāya
وَإِيَّٰىَۖ
இன்னும் என்னை
atuh'likunā
أَتُهْلِكُنَا
அழிப்பாயா/எங்களை
bimā faʿala
بِمَا فَعَلَ
செய்ததற்காக
l-sufahāu
ٱلسُّفَهَآءُ
அறிவீனர்கள்
minnā
مِنَّآۖ
எங்களில்
in hiya
إِنْ هِىَ
இல்லை/இது
illā
إِلَّا
தவிர
fit'natuka
فِتْنَتُكَ
உன் சோதனையே
tuḍillu
تُضِلُّ
வழிகெடுக்கிறாய்
bihā
بِهَا
இதைக் கொண்டு
man
مَن
எவரை
tashāu
تَشَآءُ
நாடுகிறாய்
watahdī
وَتَهْدِى
இன்னும் நேர்வழி செலுத்துகிறாய்
man
مَن
எவரை
tashāu
تَشَآءُۖ
நாடுகிறாய்
anta
أَنتَ
நீ
waliyyunā
وَلِيُّنَا
எங்கள் பாதுகாவலன்
fa-igh'fir lanā
فَٱغْفِرْ لَنَا
ஆகவே மன்னிப்பு வழங்கு/எங்களுக்கு
wa-ir'ḥamnā
وَٱرْحَمْنَاۖ
கருணைபுரி/எங்களுக்கு
wa-anta khayru
وَأَنتَ خَيْرُ
நீ மிகச் சிறந்தவன்
l-ghāfirīna
ٱلْغَٰفِرِينَ
மன்னிப்பவர்களில்
மூஸா, நாம் குறித்த நேரத்தி(ல் "தூர்" என்னும் மலைக்குத் தம்முடன் வருவத)ற்காக தம் மக்களில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை பூகம்பம் பிடித்(து மூர்ச்சையாகி விழுந்)ததும் அவர் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (எங்களை அழித்துவிட வேண்டுமென்று) நீ கருதியிருந்தால் இதற்கு முன்னதாகவே என்னையும் இவர்களையும் நீ அழித்திருக்கலாமே. எங்களிலுள்ள சில அறிவீனர்கள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா? இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை. இதனைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவற விடுகிறாய்; நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறாய். நீதான் எங்களுடைய இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக! மன்னிப்பவர்கள் அனைவரிலும் நீ மிக்க மேலானவன்" என்று(ம் பிரார்த்தித்துக்) கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௫௫)
Tafseer
௧௫௬

۞ وَاكْتُبْ لَنَا فِيْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ اِنَّا هُدْنَآ اِلَيْكَۗ قَالَ عَذَابِيْٓ اُصِيْبُ بِهٖ مَنْ اَشَاۤءُۚ وَرَحْمَتِيْ وَسِعَتْ كُلَّ شَيْءٍۗ فَسَاَكْتُبُهَا لِلَّذِيْنَ يَتَّقُوْنَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِنَا يُؤْمِنُوْنَۚ ١٥٦

wa-uk'tub
وَٱكْتُبْ
எழுதுவாயாக, விதிப்பாயாக
lanā
لَنَا
எங்களுக்கு
fī hādhihi l-dun'yā
فِى هَٰذِهِ ٱلدُّنْيَا
இம்மையில்
ḥasanatan
حَسَنَةً
அழகியதை, நல்ல வாழ்வை
wafī l-ākhirati
وَفِى ٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமையில்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
hud'nā
هُدْنَآ
திரும்பினோம்
ilayka
إِلَيْكَۚ
உன் பக்கம்
qāla
قَالَ
கூறினான்
ʿadhābī
عَذَابِىٓ
என் வேதனை
uṣību
أُصِيبُ
அடைவேன்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
man ashāu
مَنْ أَشَآءُۖ
எவரை/நாடுவேன்
waraḥmatī
وَرَحْمَتِى
என் கருணை
wasiʿat
وَسِعَتْ
விசாலமாக்கி விட்டது
kulla shayin
كُلَّ شَىْءٍۚ
எல்லாவற்றையும்
fasa-aktubuhā
فَسَأَكْتُبُهَا
விதிப்பேன்/அதை
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
yattaqūna
يَتَّقُونَ
அஞ்சுவார்கள்
wayu'tūna
وَيُؤْتُونَ
இன்னும் கொடுப்பார்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
hum
هُم
அவர்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
அன்றி "(இறைவனே!) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையை முடிவு செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும் (செய்வாயாக!) நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே முன்னோக்கினோம்" (என்றும் பிரார்த்தித்தார்.) அ(தற்கு இறை)வன் "நான் நாடியவர்களை என்னுடைய வேதனை வந்தடையும். எனினும், என்னுடைய அருட்கொடை அனைத்தையும் விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என்னுடைய அருளை) நான் முடிவு செய்வேன்" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௫௬)
Tafseer
௧௫௭

اَلَّذِيْنَ يَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِيَّ الْاُمِّيَّ الَّذِيْ يَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِى التَّوْرٰىةِ وَالْاِنْجِيْلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَيَنْهٰىهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤىِٕثَ وَيَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِيْ كَانَتْ عَلَيْهِمْۗ فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَاتَّبَعُوا النُّوْرَ الَّذِيْٓ اُنْزِلَ مَعَهٗٓ ۙاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ࣖ ١٥٧

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yattabiʿūna
يَتَّبِعُونَ
பின்பற்றுவார்கள்
l-rasūla
ٱلرَّسُولَ
இத்தூதரை
l-nabiya
ٱلنَّبِىَّ
நபியான
l-umiya
ٱلْأُمِّىَّ
எழுதப் படிக்கத் தெரியாதவர்
alladhī
ٱلَّذِى
எவர்
yajidūnahu
يَجِدُونَهُۥ
காண்கின்றனர்/அவரை
maktūban
مَكْتُوبًا
குறிப்பிடப்பட்டவராக
ʿindahum
عِندَهُمْ
அவர்களிடம்
fī l-tawrāti
فِى ٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்தில்
wal-injīli
وَٱلْإِنجِيلِ
இன்னும் இன்ஜீலில்
yamuruhum
يَأْمُرُهُم
ஏவுவார் அவர்களுக்கு
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
wayanhāhum
وَيَنْهَىٰهُمْ
இன்னும் தடுப்பார்/அவர்களை
ʿani l-munkari
عَنِ ٱلْمُنكَرِ
தீமையைவிட்டு
wayuḥillu
وَيُحِلُّ
இன்னும் ஆகுமாக்குவார்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-ṭayibāti
ٱلطَّيِّبَٰتِ
நல்ல,சுத்தமானவற்றை
wayuḥarrimu
وَيُحَرِّمُ
இன்னும் தடை செய்வார்
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்களுக்கு
l-khabāitha
ٱلْخَبَٰٓئِثَ
கெட்டவற்றை, கெடுதி செய்பவற்றை
wayaḍaʿu
وَيَضَعُ
இன்னும் அகற்றுவார்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
iṣ'rahum
إِصْرَهُمْ
கடின சுமையை/அவர்களுடைய
wal-aghlāla
وَٱلْأَغْلَٰلَ
இன்னும் விலங்குகளை
allatī kānat
ٱلَّتِى كَانَتْ
எவை/இருந்தன
ʿalayhim
عَلَيْهِمْۚ
அவர்கள் மீது
fa-alladhīna
فَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
bihi
بِهِۦ
அவரை
waʿazzarūhu
وَعَزَّرُوهُ
இன்னும் பாதுகாத்தனர்/அவரை
wanaṣarūhu
وَنَصَرُوهُ
இன்னும் உதவினர்/அவருக்கு
wa-ittabaʿū
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினர்
l-nūra
ٱلنُّورَ
ஒளியை
alladhī unzila
ٱلَّذِىٓ أُنزِلَ
எது/இறக்கப்பட்டது
maʿahu
مَعَهُۥٓۙ
அவருடன்
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்
(ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். அன்றி, அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௫௭)
Tafseer
௧௫௮

قُلْ يٰٓاَيُّهَا النَّاسُ اِنِّيْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ جَمِيْعًا ۨالَّذِيْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَ يُحْيٖ وَيُمِيْتُۖ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِيِّ الْاُمِّيِّ الَّذِيْ يُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ١٥٨

qul
قُلْ
கூறுவீராக
yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே
innī
إِنِّى
நிச்சயமாக நான்
rasūlu
رَسُولُ
தூதர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ilaykum jamīʿan
إِلَيْكُمْ جَمِيعًا
உங்கள் அனைவருக்கும்
alladhī
ٱلَّذِى
எவன்
lahu
لَهُۥ
அவனுக்குரியதே
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியின்
lā ilāha
لَآ إِلَٰهَ
அறவே இல்லை
illā
إِلَّا
வணங்கப்படும் இறைவன்
huwa
هُوَ
அவனைத்தவிர
yuḥ'yī
يُحْىِۦ
உயிர்ப்பிக்கிறான்
wayumītu
وَيُمِيتُۖ
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
faāminū
فَـَٔامِنُوا۟
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
warasūlihi
وَرَسُولِهِ
இன்னும் அவனுடைய தூதரை
l-nabiyi
ٱلنَّبِىِّ
நபி
l-umiyi
ٱلْأُمِّىِّ
எழுதப்படிக்கத் தெரியாதவர்
alladhī
ٱلَّذِى
எவர்
yu'minu
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
wakalimātihi
وَكَلِمَٰتِهِۦ
இன்னும் அவனுடைய வாக்குகளை
wa-ittabiʿūhu
وَٱتَّبِعُوهُ
பின்பற்றுங்கள்/அவரை
laʿallakum tahtadūna
لَعَلَّكُمْ تَهْتَدُونَ
நீங்கள் நேர்வழிபெறுவதற்காக
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதர். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குடையதே! (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௫௮)
Tafseer
௧௫௯

وَمِنْ قَوْمِ مُوْسٰٓى اُمَّةٌ يَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ يَعْدِلُوْنَ ١٥٩

wamin qawmi
وَمِن قَوْمِ
சமுதாயத்தில்
mūsā
مُوسَىٰٓ
மூஸாவுடைய
ummatun
أُمَّةٌ
ஒரு கூட்டம்
yahdūna
يَهْدُونَ
வழி காட்டுகிறார்கள்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்தின்படி
wabihi
وَبِهِۦ
இன்னும் அதைக்கொண்டு
yaʿdilūna
يَعْدِلُونَ
நீதியாக நடக்கின்றனர்
மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௫௯)
Tafseer
௧௬௦

وَقَطَّعْنٰهُمُ اثْنَتَيْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًاۗ وَاَوْحَيْنَآ اِلٰى مُوْسٰٓى اِذِ اسْتَسْقٰىهُ قَوْمُهٗٓ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَۚ فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًاۗ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْۗ وَظَلَّلْنَا عَلَيْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰىۗ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْۗ وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْٓا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ ١٦٠

waqaṭṭaʿnāhumu
وَقَطَّعْنَٰهُمُ
பிரித்தோம்/அவர்களை
ith'natay ʿashrata
ٱثْنَتَىْ عَشْرَةَ
பன்னிரெண்டு
asbāṭan
أَسْبَاطًا
சந்ததிகளாக
umaman
أُمَمًاۚ
கூட்டங்களாக
wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
இன்னும் வஹீ அறிவித்தோம்
ilā mūsā
إِلَىٰ مُوسَىٰٓ
மூஸாவிற்கு
idhi is'tasqāhu
إِذِ ٱسْتَسْقَىٰهُ
போது/தண்ணீர் கேட்டார்(கள்)/அவரிடம்
qawmuhu
قَوْمُهُۥٓ
அவருடைய சமுதாயம்
ani iḍ'rib
أَنِ ٱضْرِب
அடிப்பீராக! என்று
biʿaṣāka
بِّعَصَاكَ
உமது தடியால்
l-ḥajara
ٱلْحَجَرَۖ
கல்லை
fa-inbajasat
فَٱنۢبَجَسَتْ
பீறிட்டன
min'hu
مِنْهُ
அதிலிருந்து
ith'natā ʿashrata
ٱثْنَتَا عَشْرَةَ
பன்னிரெண்டு
ʿaynan
عَيْنًاۖ
ஊற்று(கள்)
qad ʿalima
قَدْ عَلِمَ
அறிந்து கொண்டார்(கள்)
kullu
كُلُّ
எல்லாம்
unāsin
أُنَاسٍ
மக்கள்
mashrabahum
مَّشْرَبَهُمْۚ
தங்கள் அருந்துமிடத்தை
waẓallalnā
وَظَلَّلْنَا
இன்னும் நிழலிடச் செய்தோம்
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-ghamāma
ٱلْغَمَٰمَ
மேகத்தை
wa-anzalnā
وَأَنزَلْنَا
இன்னும் இறக்கினோம்
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-mana
ٱلْمَنَّ
‘மன்னு’ஐ
wal-salwā
وَٱلسَّلْوَىٰۖ
இன்னும் ஸல்வாவை
kulū
كُلُوا۟
உண்ணுங்கள்
min ṭayyibāti
مِن طَيِّبَٰتِ
நல்லவற்றை
mā razaqnākum
مَا رَزَقْنَٰكُمْۚ
எவை/(உணவு) அளித்தோம்/உங்களுக்கு
wamā ẓalamūnā
وَمَا ظَلَمُونَا
அவர்கள் அநீதியிழைக்கவில்லை/நமக்கு
walākin kānū
وَلَٰكِن كَانُوٓا۟
எனினும்/இருந்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கே
yaẓlimūna
يَظْلِمُونَ
அநீதியிழைப்பவர்களாக
மூஸாவின் மக்களைப் பன்னிரெண்டு கூட்டங்களாகப் பிரித்தோம். மூஸாவிடம் அவர்கள் குடிதண்ணீர் கேட்டபோது (நாம் அவரை நோக்கி) "உங்களுடைய (கைத்) தடியைக் கொண்டு இக்கல்லை அடியுங்கள்!" என்று அவருக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அவர் அடிக்கவே) அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுக்கள் பீறிட்டோடின. (பன்னிரெண்டு வகுப்பினரில்) ஒவ்வொரு வகுப்பினரும் (அவற்றில்) தாங்கள் அருந்தும் ஊற்றை (குறிப்பாக) அறிந்து கொண்டனர். அன்றி, அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம். அவர்களுக்காக "மன்னு ஸல்வா"வையும் இறக்கி வைத்து "உங்களுக்குக் கொடுக்கும் இந்த நல்ல உணவுகளை (அன்றாடம்) புசித்து வாருங்கள். (அதில் எதையும் நாளைக்கென்று சேகரித்து வைக்காதீர்கள்" என்றும் கூறினோம். அவ்வாறிருந்தும் அவர்கள் நமக்கு மாறுசெய்தனர். இதனால்) அவர்கள் நமக்கொன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௬௦)
Tafseer