Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 12

Al-An'am

(al-ʾAnʿām)

௧௧௧

۞ وَلَوْ اَنَّنَا نَزَّلْنَآ اِلَيْهِمُ الْمَلٰۤىِٕكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتٰى وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَّا كَانُوْا لِيُؤْمِنُوْٓا اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ يَجْهَلُوْنَ ١١١

walaw annanā nazzalnā
وَلَوْ أَنَّنَا نَزَّلْنَآ
நிச்சயமாக நாம் இறக்கினாலும்
ilayhimu
إِلَيْهِمُ
அவர்களிடம்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
wakallamahumu
وَكَلَّمَهُمُ
இன்னும் பேசினாலும்/அவர்களிடம்
l-mawtā
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்கள்
waḥasharnā
وَحَشَرْنَا
இன்னும் ஒன்று திரட்டினாலும்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு முன்னால்
kulla shayin
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
qubulan
قُبُلًا
கண்ணெதிரே
mā kānū
مَّا كَانُوا۟
அவர்கள் இல்லை
liyu'minū
لِيُؤْمِنُوٓا۟
அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக
illā an yashāa
إِلَّآ أَن يَشَآءَ
தவிர/நாடுவது
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
walākinna
وَلَٰكِنَّ
எனினும் நிச்சயமாக
aktharahum
أَكْثَرَهُمْ
அவர்களில் அதிகமானோர்
yajhalūna
يَجْهَلُونَ
அறியமாட்டார்கள்
(அவர்கள் விரும்புகின்றவாறு) மெய்யாகவே நாம் அவர்களிடம் (நேராக) மலக்குகளை இறக்கி வைத்தாலும், இறந்தவர்களை (எழுப்பி) அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், (மறைவாயிருக்கும்) அனைத்தையும் அவர்கள் (கண்) முன் கொண்டு வந்து சேர்த்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், ஆனால் அல்லாஹ் நாடினாலே தவிர. அவர்களில் பெரும் பான்மையினர் (அறிவில்லாத) மூடர்களாகவே இருக்கின்றனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௧௧)
Tafseer
௧௧௨

وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ وَالْجِنِّ يُوْحِيْ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا ۗوَلَوْ شَاۤءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ ١١٢

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கினோம்
likulli nabiyyin
لِكُلِّ نَبِىٍّ
ஒவ்வொரு நபிக்கும்
ʿaduwwan
عَدُوًّا
எதிரிகளாக
shayāṭīna
شَيَٰطِينَ
ஷைத்தான்களை
l-insi
ٱلْإِنسِ
மனிதர்களில்
wal-jini
وَٱلْجِنِّ
இன்னும் ஜின்களில்
yūḥī
يُوحِى
அறிவிக்கிறார்
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
ilā baʿḍin
إِلَىٰ بَعْضٍ
சிலருக்கு
zukh'rufa l-qawli
زُخْرُفَ ٱلْقَوْلِ
அலங்காரமான சொல்லாக
ghurūran
غُرُورًاۚ
ஏமாற்றுவதற்காக
walaw shāa
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
mā faʿalūhu
مَا فَعَلُوهُۖ
அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்/அதை
fadharhum
فَذَرْهُمْ
ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக!
wamā yaftarūna
وَمَا يَفْتَرُونَ
இன்னும் எதை/இட்டுக்கட்டுகின்றனர்
இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும், ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக்கி இருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றுவதற்காக அழகான வார்த்தைகளை (காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். உங்களுடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டுவிடுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௧௨)
Tafseer
௧௧௩

وَلِتَصْغٰٓى اِلَيْهِ اَفْـِٕدَةُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوْا مَا هُمْ مُّقْتَرِفُوْنَ ١١٣

walitaṣghā
وَلِتَصْغَىٰٓ
இன்னும் செவிசாய்ப்பதற்காக
ilayhi
إِلَيْهِ
அதன் பக்கம்
afidatu
أَفْـِٔدَةُ
உள்ளங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களுடைய
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்ப மாட்டார்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
waliyarḍawhu
وَلِيَرْضَوْهُ
இன்னும் அவர்கள் திருப்தி கொள்வதற்காக/அதை
waliyaqtarifū
وَلِيَقْتَرِفُوا۟
இன்னும் அவர்கள் செய்வதற்காக
mā hum
مَا هُم
எவற்றை/அவர்கள்
muq'tarifūna
مُّقْتَرِفُونَ
செய்பவர்கள்
மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் (ஷைத்தானாகிய) அவர்களுக்கு செவிசாய்த்து அதனை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் தீய செயல்களை இவர்களும் செய்வதற்காகவும் (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௧௩)
Tafseer
௧௧௪

اَفَغَيْرَ اللّٰهِ اَبْتَغِيْ حَكَمًا وَّهُوَ الَّذِيْٓ اَنْزَلَ اِلَيْكُمُ الْكِتٰبَ مُفَصَّلًا ۗوَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَعْلَمُوْنَ اَنَّهٗ مُنَزَّلٌ مِّنْ رَّبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ ١١٤

afaghayra
أَفَغَيْرَ
அல்லாதவரையா?
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
abtaghī
أَبْتَغِى
தேடுவேன்
ḥakaman
حَكَمًا
தீர்ப்பாளனாக
wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِىٓ
அவன்தான்/எவன்
anzala
أَنزَلَ
இறக்கினான்
ilaykumu
إِلَيْكُمُ
உங்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
mufaṣṣalan
مُفَصَّلًاۚ
நன்கு விவரிக்கப்பட்டதாக
wa-alladhīna ātaynāhumu
وَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிவார்கள்
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக இது
munazzalun
مُنَزَّلٌ
இறக்கப்பட்டது
min
مِّن
உம் இறைவனிடமிருந்து
rabbika bil-ḥaqi
رَّبِّكَ بِٱلْحَقِّۖ
உண்மையைக் கொண்டே
falā takūnanna
فَلَا تَكُونَنَّ
ஆகவே நிச்சயம் ஆகிவிடாதீர்
mina l-mum'tarīna
مِنَ ٱلْمُمْتَرِينَ
சந்தேகிப்பவர்களில்
"அல்லாஹ்வைத் தவிர மற்றவரையா (எங்களுக்கும் உங்களுக்கும் இடையில்) தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் எடுத்துக் கொள்வேன்? அவன்தான் எல்லா விபரங்களுமுள்ள இவ்வேதத்தை உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்" (என்று நபியே! நீங்கள் கூறுங்கள். இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள், இது மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே அருளப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக ஒருபோதும் ஆகிவிடவேண்டாம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௧௪)
Tafseer
௧௧௫

وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَّعَدْلًاۗ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ ۚوَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ١١٥

watammat
وَتَمَّتْ
முழுமையாகியது
kalimatu
كَلِمَتُ
வாக்கு
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
ṣid'qan
صِدْقًا
உண்மையால்
waʿadlan
وَعَدْلًاۚ
இன்னும் நீதத்தால்
lā mubaddila
لَّا مُبَدِّلَ
அறவே இல்லை/மாற்றுபவன்
likalimātihi
لِكَلِمَٰتِهِۦۚ
அவனுடைய வாக்குகளை
wahuwa
وَهُوَ
அவன்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
(நபியே!) உங்களது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகிவிட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (யாவையும்) செவியுறுபவ னாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௧௫)
Tafseer
௧௧௬

وَاِنْ تُطِعْ اَكْثَرَ مَنْ فِى الْاَرْضِ يُضِلُّوْكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗاِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ ١١٦

wa-in tuṭiʿ
وَإِن تُطِعْ
நீர் கீழ்ப்படிந்தால்
akthara
أَكْثَرَ
அதிகமானோருக்கு
man fī l-arḍi
مَن فِى ٱلْأَرْضِ
இப்பூமியில் உள்ளவர்களில்
yuḍillūka
يُضِلُّوكَ
வழிகெடுப்பார்கள்/ உம்மை
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையிலிருந்து
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
in yattabiʿūna
إِن يَتَّبِعُونَ
பின்பற்ற மாட்டார்கள்
illā l-ẓana
إِلَّا ٱلظَّنَّ
தவிர/யூகம்
wa-in hum
وَإِنْ هُمْ
இல்லை/அவர்கள்
illā yakhruṣūna
إِلَّا يَخْرُصُونَ
தவிர/கற்பனை செய்பவர்களாக
இப்புவியிலிருப்பவர்களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர். நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உங்களை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. அன்றி, (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கியிருக்கின்றனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௧௬)
Tafseer
௧௧௭

اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ مَنْ يَّضِلُّ عَنْ سَبِيْلِهٖۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ ١١٧

inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka huwa
رَبَّكَ هُوَ
உம் இறைவன்தான்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
man
مَن
எவரை
yaḍillu
يَضِلُّ
வழிகெடுவார்
ʿan
عَن
இருந்து
sabīlihi
سَبِيلِهِۦۖ
அவனுடைய பாதையில்
wahuwa
وَهُوَ
அவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bil-muh'tadīna
بِٱلْمُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களை
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன், தன் வழியில் இருந்து தவறியவர்கள் யார்? என்பதை நன்கறிவான். (அவ்வாறே) நேரான வழியில் இருப்பவர்களையும் அவன் நன்கறிவான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௧௭)
Tafseer
௧௧௮

فَكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ اِنْ كُنْتُمْ بِاٰيٰتِهٖ مُؤْمِنِيْنَ ١١٨

fakulū
فَكُلُوا۟
ஆகவே புசியுங்கள்
mimmā dhukira
مِمَّا ذُكِرَ
கூறப்பட்டதிலிருந்து
us'mu
ٱسْمُ
பெயர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
biāyātihi
بِـَٔايَٰتِهِۦ
அவனுடைய வசனங்களை
mu'minīna
مُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களாக
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர் களாயிருந்தால் அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்) டவற்றையே புசியுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௧௮)
Tafseer
௧௧௯

وَمَا لَكُمْ اَلَّا تَأْكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَّا حَرَّمَ عَلَيْكُمْ اِلَّا مَا اضْطُرِرْتُمْ اِلَيْهِ ۗوَاِنَّ كَثِيرًا لَّيُضِلُّوْنَ بِاَهْوَاۤىِٕهِمْ بِغَيْرِ عِلْمٍ ۗاِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِالْمُعْتَدِيْنَ ١١٩

wamā lakum
وَمَا لَكُمْ
உங்களுக்கு என்ன
allā takulū
أَلَّا تَأْكُلُوا۟
நீங்கள் புசிக்காதிருக்க
mimmā dhukira
مِمَّا ذُكِرَ
கூறப்பட்டதிலிருந்து
us'mu
ٱسْمُ
பெயர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
waqad faṣṣala
وَقَدْ فَصَّلَ
விவரித்து விட்டான்
lakum
لَكُم
உங்களுக்கு
mā ḥarrama
مَّا حَرَّمَ
எவற்றை/தடுத்தான்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
illā
إِلَّا
தவிர
mā uḍ'ṭurir'tum
مَا ٱضْطُرِرْتُمْ
எது/ நிர்பந்திக்கப்பட்டீர்கள்
ilayhi
إِلَيْهِۗ
அதன் பக்கம்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
kathīran
كَثِيرًا
அதிகமானோர்
layuḍillūna
لَّيُضِلُّونَ
வழி கெடுக்கின்றனர்
bi-ahwāihim
بِأَهْوَآئِهِم
தங்கள் ஆசைகளைக் கொண்டு
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍۗ
கல்வியின்றி
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
huwa
هُوَ
அவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிபவன்
bil-muʿ'tadīna
بِٱلْمُعْتَدِينَ
வரம்பு மீறிகளை
(உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவைகளில் அறுக்கும் பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன (தடை)? நீங்கள் நிர்பந்திக்கப் பட்டாலன்றி (புசிக்க) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எவையென அவன் உங்களுக்கு விவரித்துக் கூறியே இருக்கின்றான். (அவற்றைத் தவிர உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட அனைத்தையும் நீங்கள் புசிக்கலாம்.) எனினும், பெரும்பான்மையினர் அறியாமையின் காரணமாக தங்கள் இஷ்டப்படி எல்லாம் (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன் வரம்பு மீறுபவர்களை நன்கறிவான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௧௯)
Tafseer
௧௨௦

وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗ ۗاِنَّ الَّذِيْنَ يَكْسِبُوْنَ الْاِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوْا يَقْتَرِفُوْنَ ١٢٠

wadharū
وَذَرُوا۟
விடுங்கள்
ẓāhira
ظَٰهِرَ
வெளிப்படையானதை
l-ith'mi
ٱلْإِثْمِ
பாவத்தில்
wabāṭinahu
وَبَاطِنَهُۥٓۚ
இன்னும் அதில் மறைவானதை
inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaksibūna
يَكْسِبُونَ
சம்பாதிக்கிறார்கள்
l-ith'ma
ٱلْإِثْمَ
பாவத்தை
sayuj'zawna
سَيُجْزَوْنَ
கூ லி கொடுக்கப்படுவார்கள்
bimā kānū yaqtarifūna
بِمَا كَانُوا۟ يَقْتَرِفُونَ
எதற்கு/இருந்தனர்/செய்வார்கள்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும் ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை (மறுமையில்) அடைந்தே தீருவார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௨௦)
Tafseer