குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௧௧
Qur'an Surah Al-An'am Verse 111
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَلَوْ اَنَّنَا نَزَّلْنَآ اِلَيْهِمُ الْمَلٰۤىِٕكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتٰى وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَّا كَانُوْا لِيُؤْمِنُوْٓا اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ يَجْهَلُوْنَ (الأنعام : ٦)
- walaw annanā nazzalnā
- وَلَوْ أَنَّنَا نَزَّلْنَآ
- And (even) if [that] We (had) [We] sent down
- நிச்சயமாக நாம் இறக்கினாலும்
- ilayhimu
- إِلَيْهِمُ
- to them
- அவர்களிடம்
- l-malāikata
- ٱلْمَلَٰٓئِكَةَ
- the Angels
- வானவர்களை
- wakallamahumu
- وَكَلَّمَهُمُ
- and spoken to them
- இன்னும் பேசினாலும்/அவர்களிடம்
- l-mawtā
- ٱلْمَوْتَىٰ
- the dead
- இறந்தவர்கள்
- waḥasharnā
- وَحَشَرْنَا
- and We gathered
- இன்னும் ஒன்று திரட்டினாலும்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- before them
- அவர்களுக்கு முன்னால்
- kulla shayin
- كُلَّ شَىْءٍ
- every thing
- எல்லாவற்றையும்
- qubulan
- قُبُلًا
- face to face
- கண்ணெதிரே
- mā kānū
- مَّا كَانُوا۟
- not they were
- அவர்கள் இல்லை
- liyu'minū
- لِيُؤْمِنُوٓا۟
- to believe
- அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக
- illā an yashāa
- إِلَّآ أَن يَشَآءَ
- unless [that] wills
- தவிர/நாடுவது
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- walākinna
- وَلَٰكِنَّ
- But
- எனினும் நிச்சயமாக
- aktharahum
- أَكْثَرَهُمْ
- most of them
- அவர்களில் அதிகமானோர்
- yajhalūna
- يَجْهَلُونَ
- (are) ignorant
- அறியமாட்டார்கள்
Transliteration:
Wa law annanaa nazzal naaa ilaihimul malaaa'ikata wa kallamahumul mawtaa wa hasharnaa 'alaihim kulla shai'in qubulam maa kaanoo liyu'minooo illaaa ai yashaaa'al laahu wa laakinna aksarahum yajhaloon(QS. al-ʾAnʿām:111)
English Sahih International:
And even if We had sent down to them the angels [with the message] and the dead spoke to them [of it] and We gathered together every [created] thing in front of them, they would not believe unless Allah should will. But most of them, [of that], are ignorant. (QS. Al-An'am, Ayah ௧௧௧)
Abdul Hameed Baqavi:
(அவர்கள் விரும்புகின்றவாறு) மெய்யாகவே நாம் அவர்களிடம் (நேராக) மலக்குகளை இறக்கி வைத்தாலும், இறந்தவர்களை (எழுப்பி) அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், (மறைவாயிருக்கும்) அனைத்தையும் அவர்கள் (கண்) முன் கொண்டு வந்து சேர்த்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், ஆனால் அல்லாஹ் நாடினாலே தவிர. அவர்களில் பெரும் பான்மையினர் (அறிவில்லாத) மூடர்களாகவே இருக்கின்றனர். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௧௧)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள் கோரியபடி) நிச்சயமாக, நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கினாலும், இறந்தவர்கள் அவர்களிடம் பேசினாலும், எல்லாவற்றையும் அவர்களுக்கு முன்னால் கண்ணெதிரே ஒன்று திரட்டினாலும், (அவர்கள்) நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை அல்லாஹ் நாடினால் தவிர. எனினும் நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.