وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖٓ اِذْ قَالُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنْ شَيْءٍۗ قُلْ مَنْ اَنْزَلَ الْكِتٰبَ الَّذِيْ جَاۤءَ بِهٖ مُوْسٰى نُوْرًا وَّهُدًى لِّلنَّاسِ تَجْعَلُوْنَهٗ قَرَاطِيْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِيْرًاۚ وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْٓا اَنْتُمْ وَلَآ اٰبَاۤؤُكُمْ ۗقُلِ اللّٰهُ ۙثُمَّ ذَرْهُمْ فِيْ خَوْضِهِمْ يَلْعَبُوْنَ ٩١
- wamā qadarū
- وَمَا قَدَرُوا۟
- அவர்கள் அறியவில்லை
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- ḥaqqa
- حَقَّ
- தகுந்தாற்போல்
- qadrihi
- قَدْرِهِۦٓ
- அவனுடைய தகுதி
- idh qālū
- إِذْ قَالُوا۟
- போது/கூறினர்
- mā anzala
- مَآ أَنزَلَ
- இறக்கவில்லை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- basharin
- بَشَرٍ
- மனிதர்கள்
- min shayin
- مِّن شَىْءٍۗ
- எதையும்
- qul
- قُلْ
- கூறுவீராக
- man
- مَنْ
- யார்?
- anzala
- أَنزَلَ
- இறக்கினான்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- alladhī jāa
- ٱلَّذِى جَآءَ
- எது/வந்தார்
- bihi
- بِهِۦ
- அதைக் கொண்டு
- mūsā
- مُوسَىٰ
- மூஸா
- nūran
- نُورًا
- ஒளியாக
- wahudan
- وَهُدًى
- இன்னும் நேர்வழியாக
- lilnnāsi
- لِّلنَّاسِۖ
- மக்களுக்கு
- tajʿalūnahu
- تَجْعَلُونَهُۥ
- ஆக்குகிறீர்கள்/அதை
- qarāṭīsa
- قَرَاطِيسَ
- பல ஏடுகளாக
- tub'dūnahā
- تُبْدُونَهَا
- வெளிப்படுத்தினீர்கள்/அவற்றை
- watukh'fūna
- وَتُخْفُونَ
- இன்னும் மறைத்து விடுகிறீர்கள்
- kathīran
- كَثِيرًاۖ
- அதிகமானதை
- waʿullim'tum
- وَعُلِّمْتُم
- இன்னும் கற்பிக்கப்பட்டீர்கள்
- mā lam taʿlamū
- مَّا لَمْ تَعْلَمُوٓا۟
- எதை/நீங்கள்அறியவில்லை
- antum
- أَنتُمْ
- நீங்கள்
- walā
- وَلَآ
- இன்னும் இல்லை
- ābāukum
- ءَابَآؤُكُمْۖ
- மூதாதைகள்/உங்கள்
- quli
- قُلِ
- கூறுவீராக
- l-lahu
- ٱللَّهُۖ
- அல்லாஹ்
- thumma
- ثُمَّ
- பிறகு
- dharhum
- ذَرْهُمْ
- விடுவீராக/அவர்களை
- fī khawḍihim
- فِى خَوْضِهِمْ
- அவர்கள் மூழ்குவதில்
- yalʿabūna
- يَلْعَبُونَ
- விளையாடியவர்களாக
அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால் "மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) யாதொன்றையும் அல்லாஹ் அருளவேயில்லை" என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய ("தவ்றாத்" என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமலிருந்தவைகள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்?" இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன! நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)" என்று கூறி அவர்கள் (தங்களுடைய) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும் படியும் விட்டுவிடுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௧)Tafseer
وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ مُّصَدِّقُ الَّذِيْ بَيْنَ يَدَيْهِ وَلِتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَاۗ وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ يُؤْمِنُوْنَ بِهٖ وَهُمْ عَلٰى صَلَاتِهِمْ يُحٰفِظُوْنَ ٩٢
- wahādhā
- وَهَٰذَا
- இது
- kitābun
- كِتَٰبٌ
- ஒரு வேதம்
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- இதை இறக்கினோம்
- mubārakun
- مُبَارَكٌ
- அருள் வளமிக்கது
- muṣaddiqu
- مُّصَدِّقُ
- உண்மைப்படுத்தக் கூடியது
- alladhī
- ٱلَّذِى
- எதை
- bayna yadayhi
- بَيْنَ يَدَيْهِ
- தனக்கு முன்னால்
- walitundhira
- وَلِتُنذِرَ
- இன்னும் நீர் எச்சரிப்பதற்காக
- umma l-qurā
- أُمَّ ٱلْقُرَىٰ
- மக்காவை
- waman ḥawlahā
- وَمَنْ حَوْلَهَاۚ
- இன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களை
- wa-alladhīna yu'minūna
- وَٱلَّذِينَ يُؤْمِنُونَ
- எவர்கள்/நம்பிக்கை கொள்வார்கள்
- bil-ākhirati
- بِٱلْءَاخِرَةِ
- மறுமையை
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்பவர்கள்
- bihi
- بِهِۦۖ
- இதை
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- ʿalā ṣalātihim
- عَلَىٰ صَلَاتِهِمْ
- தங்கள் தொழுகையை
- yuḥāfiẓūna
- يُحَافِظُونَ
- பேணுவார்கள்
(நபியே!) இது நாம் உங்கள் மீது இறக்கிய மிக்க பாக்கியமுடைய ஒரு வேதமாகும். இது அவர்களிடம் உள்ள (வேதத்)தையும் உண்மைபடுத்துகிறது. ஆகவே நீங்கள் (இதனைக் கொண்டு தாய்நாட்டினராகிய) மக்காவாசிகளுக்கும், அதைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். எவர்கள் மறுமையை நம்புகின்றார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் (அவசியம்) நம்புவார்கள். அன்றி, அவர்கள் தவறாது தொழுதும் வருவார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௨)Tafseer
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِيَ اِلَيَّ وَلَمْ يُوْحَ اِلَيْهِ شَيْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَآ اَنْزَلَ اللّٰهُ ۗوَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ فِيْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰۤىِٕكَةُ بَاسِطُوْٓا اَيْدِيْهِمْۚ اَخْرِجُوْٓا اَنْفُسَكُمْۗ اَلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ غَيْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ اٰيٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ ٩٣
- waman aẓlamu
- وَمَنْ أَظْلَمُ
- யார்?/மிகப்பெரிய அநியாயக்காரன்
- mimmani
- مِمَّنِ
- எவனைவிட
- if'tarā
- ٱفْتَرَىٰ
- இட்டுக்கட்டினான்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- kadhiban
- كَذِبًا
- பொய்யை
- aw
- أَوْ
- அல்லது
- qāla
- قَالَ
- கூறினான்
- ūḥiya
- أُوحِىَ
- வஹீ அறிவிக்கப்பட்டது
- ilayya
- إِلَىَّ
- எனக்கு
- walam yūḥa
- وَلَمْ يُوحَ
- அறிவிக்கப்படவில்லை
- ilayhi
- إِلَيْهِ
- அவனுக்கு
- shayon
- شَىْءٌ
- எதுவும்
- waman
- وَمَن
- இன்னும் எவன்
- qāla
- قَالَ
- கூறினான்
- sa-unzilu
- سَأُنزِلُ
- இறக்குவேன்
- mith'la
- مِثْلَ
- போல்
- mā
- مَآ
- எதை
- anzala
- أَنزَلَ
- இறக்கினான்
- l-lahu
- ٱللَّهُۗ
- அல்லாஹ்
- walaw tarā
- وَلَوْ تَرَىٰٓ
- நீர் பார்த்தால்
- idhi
- إِذِ
- போது
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- அக்கிரமக்காரர்கள்
- fī ghamarāti
- فِى غَمَرَٰتِ
- வேதனைகளில்
- l-mawti
- ٱلْمَوْتِ
- மரணம்
- wal-malāikatu
- وَٱلْمَلَٰٓئِكَةُ
- இன்னும் வானவர்கள்
- bāsiṭū
- بَاسِطُوٓا۟
- நீட்டுகிறார்கள்
- aydīhim
- أَيْدِيهِمْ
- தங்கள் கைகளை
- akhrijū
- أَخْرِجُوٓا۟
- வெளியேற்றுங்கள்
- anfusakumu
- أَنفُسَكُمُۖ
- உங்கள் உயிர்களை
- l-yawma
- ٱلْيَوْمَ
- இன்று
- tuj'zawna
- تُجْزَوْنَ
- கூலி கொடுக்கப்படுவீர்கள்
- ʿadhāba
- عَذَابَ
- வேதனையை
- l-hūni
- ٱلْهُونِ
- இழிவான
- bimā kuntum
- بِمَا كُنتُمْ
- இருந்த காரணத்தால்
- taqūlūna
- تَقُولُونَ
- கூறுவீர்கள்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- ghayra l-ḥaqi
- غَيْرَ ٱلْحَقِّ
- உண்மை அல்லாத
- wakuntum
- وَكُنتُمْ
- இன்னும் இருந்தீர்கள்
- ʿan āyātihi
- عَنْ ءَايَٰتِهِۦ
- அவனுடைய வசனங்களை விட்டு
- tastakbirūna
- تَسْتَكْبِرُونَ
- பெருமையடிக்கிறீர்கள்
(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹீ மூலம் அவனுக்கொன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க "தனக்கும் வஹீ வந்தது" என்று கூறுபவனைவிட அல்லது "அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்" என்று கூறுபவனைவிட அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீங்கள் அவர்களைப் பார்ப்பீராயின், மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) "உங்களுடைய உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களையும் பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்" (என்று கூறுவதை நீங்கள் காண்பீர்கள்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௩)Tafseer
وَلَقَدْ جِئْتُمُوْنَا فُرَادٰى كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّتَرَكْتُمْ مَّا خَوَّلْنٰكُمْ وَرَاۤءَ ظُهُوْرِكُمْۚ وَمَا نَرٰى مَعَكُمْ شُفَعَاۤءَكُمُ الَّذِيْنَ زَعَمْتُمْ اَنَّهُمْ فِيْكُمْ شُرَكٰۤؤُا ۗ لَقَدْ تَّقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنْكُمْ مَّا كُنْتُمْ تَزْعُمُوْنَ ࣖ ٩٤
- walaqad ji'tumūnā
- وَلَقَدْ جِئْتُمُونَا
- வந்து விட்டீர்கள்/நம்மிடம்
- furādā
- فُرَٰدَىٰ
- தனி நபர்களாக
- kamā
- كَمَا
- போல்
- khalaqnākum
- خَلَقْنَٰكُمْ
- உங்களைப் படைத்தோம்
- awwala
- أَوَّلَ
- முதல்
- marratin
- مَرَّةٍ
- முறை
- wataraktum
- وَتَرَكْتُم
- விட்டுவிட்டீர்கள்
- mā khawwalnākum
- مَّا خَوَّلْنَٰكُمْ
- எதை/கொடுத்தோம்/உங்களுக்கு
- warāa
- وَرَآءَ
- பின்னால்
- ẓuhūrikum
- ظُهُورِكُمْۖ
- முதுகுகள்/உங்கள்
- wamā narā
- وَمَا نَرَىٰ
- நாம் காணவில்லை
- maʿakum
- مَعَكُمْ
- உங்களுடன்
- shufaʿāakumu
- شُفَعَآءَكُمُ
- பரிந்துரையாளர்களை/உங்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- zaʿamtum
- زَعَمْتُمْ
- எண்ணினீர்கள்
- annahum
- أَنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- fīkum
- فِيكُمْ
- உங்களுக்கு
- shurakāu
- شُرَكَٰٓؤُا۟ۚ
- துணைகள்
- laqad taqaṭṭaʿa
- لَقَد تَّقَطَّعَ
- அறுந்து விட்டது
- baynakum
- بَيْنَكُمْ
- உங்களுக்கு மத்தியில்
- waḍalla
- وَضَلَّ
- தவறிவிட்டன
- ʿankum
- عَنكُم
- உங்களை விட்டு
- mā
- مَّا
- எவை
- kuntum
- كُنتُمْ
- இருந்தீர்கள்
- tazʿumūna
- تَزْعُمُونَ
- எண்ணுகிறீர்கள்
(அன்றி, இறைவன் மறுமையில் அவர்களை நோக்கி) "முன்னர் நாம் உங்களைப் படைத்தவாறே (உங்களுடன் ஒன்றுமில்லாது) நிச்சயமாக நீங்கள் தனியாகவே நம்மிடம் வந்து சேர்ந்தீர்கள். நாம் உங்களுக்குக் கொடுத்திருந்தவற்றையும் உங்கள் முதுகுப்புறமாகவே விட்டுவிட்டீர்கள். (உங்களைப் படைப்பதிலும் வளர்ப்பதிலும் இறைவனுக்குத்) துணையானவர்களென நீங்கள் எவர்களை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுக்குப் பரிந்து பேச இவ்விடத்தில் இருக்கவில்லையே! (அவர்களுக்கும்) உங்களுக்கு(ம்) இடையில் இருந்த சம்பந்தங்கள் எல்லாம் நீங்கி உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறி விட்டன" (என்று கூறுவான்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௪)Tafseer
۞ اِنَّ اللّٰهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوٰىۗ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَيِّ ۗذٰلِكُمُ اللّٰهُ فَاَنّٰى تُؤْفَكُوْنَ ٩٥
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- fāliqu
- فَالِقُ
- பிளப்பவன்
- l-ḥabi
- ٱلْحَبِّ
- வித்தை
- wal-nawā
- وَٱلنَّوَىٰۖ
- இன்னும் கொட்டையை
- yukh'riju
- يُخْرِجُ
- வெளியாக்குகிறான்
- l-ḥaya
- ٱلْحَىَّ
- உயிருள்ளதை
- mina
- مِنَ
- இருந்து
- l-mayiti
- ٱلْمَيِّتِ
- இறந்தது
- wamukh'riju
- وَمُخْرِجُ
- இன்னும் வெளியாக்குபவன்
- l-mayiti
- ٱلْمَيِّتِ
- இறந்ததை
- mina
- مِنَ
- இருந்து
- l-ḥayi
- ٱلْحَىِّۚ
- உயிருள்ளது
- dhālikumu
- ذَٰلِكُمُ
- அவன்தான்
- l-lahu
- ٱللَّهُۖ
- அல்லாஹ்
- fa-annā
- فَأَنَّىٰ
- எங்கு?
- tu'fakūna
- تُؤْفَكُونَ
- திருப்பப்படுகிறீர்கள்
வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்த வற்றையும் அவனே வெளியாக்குகின்றான். (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் உங்கள் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு வெருண்டோடுகிறீர்கள்? ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௫)Tafseer
فَالِقُ الْاِصْبَاحِۚ وَجَعَلَ الَّيْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ۗذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ ٩٦
- fāliqu
- فَالِقُ
- பிளப்பவன்
- l-iṣ'bāḥi
- ٱلْإِصْبَاحِ
- ஒளியை
- wajaʿala
- وَجَعَلَ
- இன்னும் ஆக்கினான்
- al-layla
- ٱلَّيْلَ
- இரவை
- sakanan
- سَكَنًا
- அமைதி பெறுவதற்காக
- wal-shamsa
- وَٱلشَّمْسَ
- இன்னும் சூரியனை
- wal-qamara
- وَٱلْقَمَرَ
- இன்னும் சந்திரனை
- ḥus'bānan
- حُسْبَانًاۚ
- கணக்கிற்காக
- dhālika
- ذَٰلِكَ
- இவை
- taqdīru
- تَقْدِيرُ
- ஏற்பாடு
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- மிகைத்தவன்
- l-ʿalīmi
- ٱلْعَلِيمِ
- நன்கறிந்தவன்
அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவனும், மிக்க அறிந்தவனு(ம் ஆகிய அல்லாஹ் உ)டைய ஏற்பாடாகும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௬)Tafseer
وَهُوَ الَّذِيْ جَعَلَ لَكُمُ النُّجُوْمَ لِتَهْتَدُوْا بِهَا فِيْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِۗ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ ٩٧
- wahuwa
- وَهُوَ
- அவன்
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- jaʿala
- جَعَلَ
- அமைத்தான்
- lakumu
- لَكُمُ
- உங்களுக்கு
- l-nujūma
- ٱلنُّجُومَ
- நட்சத்திரங்களை
- litahtadū
- لِتَهْتَدُوا۟
- நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
- bihā
- بِهَا
- அவற்றின் மூலம்
- fī ẓulumāti
- فِى ظُلُمَٰتِ
- இருள்களில்
- l-bari
- ٱلْبَرِّ
- தரையின்
- wal-baḥri
- وَٱلْبَحْرِۗ
- இன்னும் கடல்
- qad faṣṣalnā
- قَدْ فَصَّلْنَا
- விவரித்து விட்டோம்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- அத்தாட்சிகளை
- liqawmin
- لِقَوْمٍ
- ஒரு சமுதாயத்திற்கு
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- அறிவார்கள்
உங்களுக்காக நட்சத்திரங்களை அமைத்தவனும் அவனே. தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் அவைகளைக் கொண்டு நீங்கள் வழியறிந்து செல்கின்றீர்கள். (உண்மையை) அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக (இவ்வாறு) விவரிக்கின்றோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௭)Tafseer
وَهُوَ الَّذِيْٓ اَنْشَاَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَّمُسْتَوْدَعٌ ۗقَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّفْقَهُوْنَ ٩٨
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِىٓ
- அவன்/எவன்
- ansha-akum
- أَنشَأَكُم
- உங்களை உருவாக்கினான்
- min
- مِّن
- இருந்து
- nafsin
- نَّفْسٍ
- ஓர் ஆத்மா
- wāḥidatin
- وَٰحِدَةٍ
- ஒரே
- famus'taqarrun
- فَمُسْتَقَرٌّ
- ஆகவே ஒரு தங்குமிடமும்
- wamus'tawdaʿun
- وَمُسْتَوْدَعٌۗ
- இன்னும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும்
- qad faṣṣalnā
- قَدْ فَصَّلْنَا
- விவரித்துவிட்டோம்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- அத்தாட்சிகளை
- liqawmin
- لِقَوْمٍ
- ஒரு சமுதாயத்திற்கு
- yafqahūna
- يَفْقَهُونَ
- விளங்கிக் கொள்வார்கள்
(மனிதர்களே!) உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்து பின்னர் (உங்கள் தந்தையிடம்) தரித்திருக்கச் செய்து (உங்கள் தாயின் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே! சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக விவரித்தோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௮)Tafseer
وَهُوَ الَّذِيْٓ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۚ فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًاۚ وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍۗ اُنْظُرُوْٓا اِلٰى ثَمَرِهٖٓ اِذَٓا اَثْمَرَ وَيَنْعِهٖ ۗاِنَّ فِيْ ذٰلِكُمْ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٩٩
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِىٓ
- அவன்/எவன்
- anzala
- أَنزَلَ
- இறக்கினான்
- mina
- مِنَ
- இருந்து
- l-samāi
- ٱلسَّمَآءِ
- மேகம்
- māan
- مَآءً
- மழையை
- fa-akhrajnā
- فَأَخْرَجْنَا
- வெளியாக்கினோம்
- bihi
- بِهِۦ
- அதன் மூலம்
- nabāta
- نَبَاتَ
- தாவரத்தை
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின்
- fa-akhrajnā
- فَأَخْرَجْنَا
- வெளியாக்கினோம்
- min'hu
- مِنْهُ
- அதி லிருந்து
- khaḍiran
- خَضِرًا
- பசுமையானதை
- nukh'riju
- نُّخْرِجُ
- வெளியாக்குகிறோம்
- min'hu
- مِنْهُ
- அதிலிருந்து
- ḥabban
- حَبًّا
- வித்துக்களை
- mutarākiban
- مُّتَرَاكِبًا
- அடர்ந்தது
- wamina l-nakhli
- وَمِنَ ٱلنَّخْلِ
- இன்னும் பேரீச்ச மரத்தில்
- min
- مِن
- இருந்து
- ṭalʿihā
- طَلْعِهَا
- அதன் பாளை
- qin'wānun
- قِنْوَانٌ
- பழக்குலைகள்
- dāniyatun
- دَانِيَةٌ
- நெருக்கமான
- wajannātin
- وَجَنَّٰتٍ
- இன்னும் தோட்டங்களை
- min aʿnābin
- مِّنْ أَعْنَابٍ
- திராட்சைகளின்
- wal-zaytūna
- وَٱلزَّيْتُونَ
- இன்னும் ஜைதூதூனை
- wal-rumāna
- وَٱلرُّمَّانَ
- இன்னும் மாதுளையை
- mush'tabihan
- مُشْتَبِهًا
- ஒப்பானது
- waghayra mutashābihin
- وَغَيْرَ مُتَشَٰبِهٍۗ
- இன்னும் ஒப்பாகாதது
- unẓurū
- ٱنظُرُوٓا۟
- பாருங்கள்
- ilā thamarihi
- إِلَىٰ ثَمَرِهِۦٓ
- அதன் கனிகளை
- idhā athmara
- إِذَآ أَثْمَرَ
- அவை காய்க்கும்போது
- wayanʿihi
- وَيَنْعِهِۦٓۚ
- இன்னும் அவை பழமாகுவதையும்
- inna fī dhālikum
- إِنَّ فِى ذَٰلِكُمْ
- நிச்சயமாக இதில்
- laāyātin
- لَءَايَٰتٍ
- அத்தாட்சிகள்
- liqawmin yu'minūna
- لِّقَوْمٍ يُؤْمِنُونَ
- மக்களுக்கு/நம்பிக்கை கொள்கிறார்கள்
அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்கி வைக்கின்றான். அதைக் கொண்டே சகல வகைப் புற்பூண்டுகளையும் நாம் முளைக்க வைத்து, அதில் இருந்து பசுமையான தழைகளையும் நாம் வெளியாக்குகின்றோம். அதிலிருந்தே அடர்ந்த வித்துக்களை (யுடைய கதிர்களை)யும் நாம் வெளியாக்குகின்றோம். பேரீச்ச மரத்தின் பாளைகளில் வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. (அவற்றையும் நாமே வெளியாக்குகின்றோம்.) திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் (ரசனையில்) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜெய்த்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாமே வெளியாக்குகின்றோம்.) அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் (மக்களே!) உற்று நோக்குங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௯)Tafseer
وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَاۤءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوْا لَهٗ بَنِيْنَ وَبَنٰتٍۢ بِغَيْرِ عِلْمٍۗ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَصِفُوْنَ ࣖ ١٠٠
- wajaʿalū
- وَجَعَلُوا۟
- ஆக்கினர்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- shurakāa
- شُرَكَآءَ
- இணையாளர்களாக
- l-jina
- ٱلْجِنَّ
- ஜின்களை
- wakhalaqahum
- وَخَلَقَهُمْۖ
- அவன் அவர்களைப் படைத்திருக்க
- wakharaqū
- وَخَرَقُوا۟
- இன்னும் கற்பனைசெய்தனர்
- lahu
- لَهُۥ
- அவனுக்கு
- banīna
- بَنِينَ
- மகன்களை
- wabanātin
- وَبَنَٰتٍۭ
- இன்னும் மகள்களை
- bighayri ʿil'min
- بِغَيْرِ عِلْمٍۚ
- அறிவின்றி
- sub'ḥānahu
- سُبْحَٰنَهُۥ
- அவன் மகாத்தூயவன்
- wataʿālā
- وَتَعَٰلَىٰ
- அவன் மிக உயர்ந்தவன்
- ʿammā
- عَمَّا
- எதைவிட்டு
- yaṣifūna
- يَصِفُونَ
- வருணிக்கிறார்கள்
(இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கின்றான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனும் உயர்ந்தவனாகவும் இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦௦)Tafseer