Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Page: 11

Al-Ma'idah

(al-Māʾidah)

௧௦௧

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَسْـَٔلُوْا عَنْ اَشْيَاۤءَ اِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ ۚوَاِنْ تَسْـَٔلُوْا عَنْهَا حِيْنَ يُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَكُمْ ۗعَفَا اللّٰهُ عَنْهَا ۗوَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ ١٠١

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
لَا
கேள்வி கேட்காதீர்கள்
tasalū
تَسْـَٔلُوا۟
பல விஷயங்கள் பற்றி
ʿan ashyāa in
عَنْ أَشْيَآءَ إِن
அவை வெளியாக்கப்பட்டால்/உங்களுக்கு
tub'da
تُبْدَ
வருத்தமளிக்கும்/உங்களுக்கு
lakum tasu'kum
لَكُمْ تَسُؤْكُمْ
நீங்கள் கேள்வி கேட்டால்
wa-in
وَإِن
அவற்றைப் பற்றி
tasalū
تَسْـَٔلُوا۟
நேரத்தில்
ʿanhā
عَنْهَا
இறக்கப்படும்
ḥīna
حِينَ
குர்ஆன்
yunazzalu
يُنَزَّلُ
வெளியாக்கப்படும்/உங்களுக்கு
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
மன்னித்தான்
tub'da lakum
تُبْدَ لَكُمْ
அல்லாஹ்/அவற்றை
ʿafā
عَفَا
அல்லாஹ்
l-lahu
ٱللَّهُ
மகா மன்னிப்பாளன்
ʿanhā
عَنْهَاۗ
பெரும் சகிப்பாளன்
wal-lahu
وَٱللَّهُ
Err
ghafūrun
غَفُورٌ
Err
ḥalīmun
حَلِيمٌ
Err
நம்பிக்கையாளர்களே! (நபியிடம் அவசியமின்றி) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் (துருவித்துருவிக்) கேட்டுக்கொண்டிருக் காதீர்கள். (பல விஷயங்கள்) உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும். அதிலும் இந்தக் குர்ஆன் அருளப்பெறும் சமயத்தில், அத்தகைய விஷயங்களைப் பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டு (கடமையாகி)விடும். (அதனால் நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விடலாம். எனினும், இதுசமயம்) அதனைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், சகித்துக்கொள்பவனாகவும் இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦௧)
Tafseer
௧௦௨

قَدْ سَاَلَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِيْنَ ١٠٢

qad sa-alahā
قَدْ سَأَلَهَا
திட்டமாக/கேட்டார்(கள்)/அவற்றைப் பற்றி
qawmun
قَوْمٌ
சில மக்கள்
min qablikum
مِّن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்பு
thumma
ثُمَّ
பிறகு
aṣbaḥū bihā
أَصْبَحُوا۟ بِهَا
மாறிவிட்டனர்/அவற்றை
kāfirīna
كَٰفِرِينَ
நிராகரிப்பவர்களாக
உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) பின்னர் அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக(த்தான்) மாறி விட்டார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦௨)
Tafseer
௧௦௩

مَا جَعَلَ اللّٰهُ مِنْۢ بَحِيْرَةٍ وَّلَا سَاۤىِٕبَةٍ وَّلَا وَصِيْلَةٍ وَّلَا حَامٍ ۙوَّلٰكِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَۗ وَاَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ ١٠٣

mā jaʿala
مَا جَعَلَ
ஏற்படுத்தவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min
مِنۢ
எதையும்
baḥīratin
بَحِيرَةٍ
பஹீரா
walā sāibatin
وَلَا سَآئِبَةٍ
ஸாயிபா
walā waṣīlatin
وَلَا وَصِيلَةٍ
வஸீலா
walā ḥāmin
وَلَا حَامٍۙ
ஹறாம்
walākinna alladhīna
وَلَٰكِنَّ ٱلَّذِينَ
எனினும்/எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
yaftarūna
يَفْتَرُونَ
கற்பனை செய்கின்றனர்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ் மீது
l-kadhiba
ٱلْكَذِبَۖ
பொய்யை
wa-aktharuhum
وَأَكْثَرُهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
lā yaʿqilūna
لَا يَعْقِلُونَ
புரிய மாட்டார்கள்
பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (போன்ற) இவைகளெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தியவைகளல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவைகள் அல்லாஹ் ஏற்படுத்தியவைகள் என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு) கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦௩)
Tafseer
௧௦௪

وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَآ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَاۤءَنَا ۗ اَوَلَوْ كَانَ اٰبَاۤؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْـًٔا وَّلَا يَهْتَدُوْنَ ١٠٤

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
taʿālaw
تَعَالَوْا۟
வாருங்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
mā anzala
مَآ أَنزَلَ
எது/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
wa-ilā
وَإِلَى
இன்னும் பக்கம்
l-rasūli
ٱلرَّسُولِ
தூதர்
qālū
قَالُوا۟
கூறினர்
ḥasbunā
حَسْبُنَا
எங்களுக்குப் போதும்
mā wajadnā
مَا وَجَدْنَا
எது/கண்டோம்
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
ābāanā
ءَابَآءَنَآۚ
எங்கள் மூதாதைகளை
awalaw kāna
أَوَلَوْ كَانَ
இருந்தாலுமா?
ābāuhum
ءَابَآؤُهُمْ
மூதாதைகள் அவர்களுடைய
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
shayan
شَيْـًٔا
எதையும்
walā yahtadūna
وَلَا يَهْتَدُونَ
இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்
"அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய தூதரின் பக்கமும் வாருங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்" எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் யாதொன்றையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்!) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦௪)
Tafseer
௧௦௫

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْ ۚ لَا يَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَيْتُمْ ۗ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ١٠٥

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
ʿalaykum
عَلَيْكُمْ
காத்துக்கொள்ளுங்கள்
anfusakum
أَنفُسَكُمْۖ
உங்களை
lā yaḍurrukum
لَا يَضُرُّكُم
தீங்கிழைக்க மாட்டார்/உங்களுக்கு
man
مَّن
எவர்
ḍalla
ضَلَّ
வழிகெட்டார்
idhā ih'tadaytum
إِذَا ٱهْتَدَيْتُمْۚ
நீங்கள் நேர்வழி சென்றால்
ilā
إِلَى
பக்கம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
marjiʿukum
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
jamīʿan
جَمِيعًا
அனைவரும்
fayunabbi-ukum
فَيُنَبِّئُكُم
ஆகவே அறிவிப்பான்/உங்களுக்கு
bimā
بِمَا
எதை
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தப்பிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கின்றது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவைகளைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦௫)
Tafseer
௧௦௬

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَيْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِيْنَ الْوَصِيَّةِ اثْنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرٰنِ مِنْ غَيْرِكُمْ اِنْ اَنْتُمْ ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِيْبَةُ الْمَوْتِۗ تَحْبِسُوْنَهُمَا مِنْۢ بَعْدِ الصَّلٰوةِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِيْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰىۙ وَلَا نَكْتُمُ شَهَادَةَ اللّٰهِ اِنَّآ اِذًا لَّمِنَ الْاٰثِمِيْنَ ١٠٦

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
shahādatu
شَهَٰدَةُ
சாட்சியாக இருக்க வேண்டும்
baynikum
بَيْنِكُمْ
உங்கள் மத்தியில்
idhā ḥaḍara
إِذَا حَضَرَ
சமீபித்தால்
aḥadakumu
أَحَدَكُمُ
உங்களில் ஒருவருக்கு
l-mawtu
ٱلْمَوْتُ
மரணம்
ḥīna
حِينَ
நேரத்தில்
l-waṣiyati
ٱلْوَصِيَّةِ
மரண சாஸனம்
ith'nāni
ٱثْنَانِ
இருவர்
dhawā ʿadlin
ذَوَا عَدْلٍ
நீதமான இருவர்
minkum
مِّنكُمْ
உங்களில்
aw
أَوْ
அல்லது
ākharāni
ءَاخَرَانِ
வேறிருவர்
min
مِنْ
சேர்ந்த
ghayrikum
غَيْرِكُمْ
நீங்கள் அல்லாத
in antum ḍarabtum
إِنْ أَنتُمْ ضَرَبْتُمْ
நீங்கள் பயணித்தால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fa-aṣābatkum
فَأَصَٰبَتْكُم
அடைந்தால்/உங்களை
muṣībatu
مُّصِيبَةُ
சோதனை
l-mawti
ٱلْمَوْتِۚ
மரணம்
taḥbisūnahumā
تَحْبِسُونَهُمَا
தடுத்து வையுங்கள்/அவ்விருவரை
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
l-ṣalati
ٱلصَّلَوٰةِ
தொழுகை
fayuq'simāni
فَيُقْسِمَانِ
அவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
ini ir'tabtum
إِنِ ٱرْتَبْتُمْ
நீங்கள் சந்தேகித்தால்
lā nashtarī
لَا نَشْتَرِى
வாங்கமாட்டோம்
bihi
بِهِۦ
அதற்குப் பகரமாக
thamanan
ثَمَنًا
ஓர் ஆதாயத்தை
walaw kāna
وَلَوْ كَانَ
அவர் இருந்தாலும்
dhā qur'bā
ذَا قُرْبَىٰۙ
உறவினராக
walā naktumu
وَلَا نَكْتُمُ
இன்னும் மறைக்க மாட்டோம்
shahādata
شَهَٰدَةَ
சாட்சி கூறியதில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்விற்காக
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
idhan
إِذًا
அப்போது
lamina l-āthimīna
لَّمِنَ ٱلْءَاثِمِينَ
பாவிகளில்
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாஸனம் கூற விரும்பினால்) அவர் மரண சாஸனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாஸனத்தின் சாட்சிக்காக முஸ்லிமாகிய இருவர் கிடைக்காவிடில்) உங்களை அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில் உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும். அவ்விருவரும் "நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு யாதொரு பொருளையும் அதற்காக நாங்கள் அடைய விரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் யாதொன்றையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦௬)
Tafseer
௧௦௭

فَاِنْ عُثِرَ عَلٰٓى اَنَّهُمَا اسْتَحَقَّآ اِثْمًا فَاٰخَرٰنِ يَقُوْمٰنِ مَقَامَهُمَا مِنَ الَّذِيْنَ اسْتَحَقَّ عَلَيْهِمُ الْاَوْلَيٰنِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ لَشَهَادَتُنَآ اَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَمَا اعْتَدَيْنَآ ۖاِنَّآ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ ١٠٧

fa-in ʿuthira
فَإِنْ عُثِرَ
கண்டுபிடிக்கப்பட்டால்
ʿalā
عَلَىٰٓ
மீது
annahumā
أَنَّهُمَا
நிச்சயமாக அவ்விருவரும்
is'taḥaqqā
ٱسْتَحَقَّآ
உரியவர்களாகி விட்டனர்
ith'man
إِثْمًا
பாவத்திற்கு
faākharāni
فَـَٔاخَرَانِ
வேறு இருவர்
yaqūmāni
يَقُومَانِ
நிற்பார்கள்
maqāmahumā
مَقَامَهُمَا
அவ்விருவருடைய இடத்தில்
mina
مِنَ
இருந்து
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
is'taḥaqqa
ٱسْتَحَقَّ
உரிமை ஏற்பட்டது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்களுக்கு
l-awlayāni
ٱلْأَوْلَيَٰنِ
நெருங்கிய இரு வாரிசுகள்
fayuq'simāni
فَيُقْسِمَانِ
அவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
lashahādatunā
لَشَهَٰدَتُنَآ
நிச்சயமாக எங்கள்சாட்சியம்
aḥaqqu
أَحَقُّ
மிக உண்மையானது
min shahādatihimā
مِن شَهَٰدَتِهِمَا
அவ்விருவரின் சாட்சியத்தைவிட
wamā iʿ'tadaynā
وَمَا ٱعْتَدَيْنَآ
நாங்கள்வரம்புமீறவில்லை
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
idhan
إِذًا
அப்போது
lamina l-ẓālimīna
لَّمِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்தான்
(இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியதிலும்) அவர்கள் பொய்யே கூறினார்கள் என்று நிச்சயமாக தெரியவந்தால் (இந்தப் பொய் சாட்சியத்தினால்) எவருக்கு நஷ்டமேற்பட்டதோ அவர் சார்பில் வேறு இருவர் (சத்தியம் செய்த) அவர்களுடைய இடத்தில் நின்று கொண்டு "அவர்களுடைய சாட்சியத்தைவிட எங்களுடைய சாட்சியம்தான் உண்மையானது (என உறுதி கூறுகிறோம்.) நாங்கள் தவறாக ஏதும் கூறவில்லை. அவ்வாறு கூறினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்" என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦௭)
Tafseer
௧௦௮

ذٰلِكَ اَدْنٰٓى اَنْ يَّأْتُوْا بِالشَّهَادَةِ عَلٰى وَجْهِهَآ اَوْ يَخَافُوْٓا اَنْ تُرَدَّ اَيْمَانٌۢ بَعْدَ اَيْمَانِهِمْۗ وَاتَّقُوا اللّٰهَ وَاسْمَعُوْا ۗوَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ ࣖ ١٠٨

dhālika adnā
ذَٰلِكَ أَدْنَىٰٓ
அது/மிக்கசுலபமானது
an yatū
أَن يَأْتُوا۟
அவர்கள் வருவதற்கு
bil-shahādati
بِٱلشَّهَٰدَةِ
சாட்சியத்தைக் கொண்டு
ʿalā wajhihā
عَلَىٰ وَجْهِهَآ
அதற்குரிய முறையில்
aw
أَوْ
அல்லது
yakhāfū
يَخَافُوٓا۟
அவர்கள் பயப்படுவது
an turadda
أَن تُرَدَّ
மறுக்கப்படும்
aymānun baʿda
أَيْمَٰنٌۢ بَعْدَ
சத்தியங்கள்/பின்னர்
aymānihim
أَيْمَٰنِهِمْۗ
அவர்களுடைய சத்தியங்கள்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-is'maʿū
وَٱسْمَعُوا۟ۗ
செவிசாயுங்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
கூட்டத்தை
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான
உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு இது மிக்க சுலபமான வழி. அன்றி, அவர்கள் (பொய்) சத்தியம் செய்தாலும், மற்றவரின் சத்தியம் அதனைத் தடுத்துவிடும் என்று அவர்கள் பயப்படுவதற்கும் (இது மிக்க சுலபமான வழி.) ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அவன் கட்டளைக்கே) நீங்கள் செவிசாயுங்கள். (இதற்கு மாறு செய்யும்) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦௮)
Tafseer
௧௦௯

۞ يَوْمَ يَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَيَقُوْلُ مَاذَٓا اُجِبْتُمْ ۗ قَالُوْا لَا عِلْمَ لَنَا ۗاِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ ١٠٩

yawma
يَوْمَ
நாளில்
yajmaʿu
يَجْمَعُ
ஒன்று சேர்ப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-rusula
ٱلرُّسُلَ
தூதர்களை
fayaqūlu
فَيَقُولُ
கூறுவான்
mādhā
مَاذَآ
என்ன?
ujib'tum
أُجِبْتُمْۖ
பதில் கூறப்பட்டீர்கள்
qālū
قَالُوا۟
கூறுவார்கள்
lā ʿil'ma
لَا عِلْمَ
அறவே ஞானமில்லை
lanā
لَنَآۖ
எங்களுக்கு
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ʿallāmu
عَلَّٰمُ
மிக மிக அறிந்தவன்
l-ghuyūbi
ٱلْغُيُوبِ
மறைவானவற்றை
(நபியே!) ஒரு நாளில் அல்லாஹ் (தன்னுடைய) தூதர்களை ஒன்று சேர்த்து "நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?" என்று கேட்பான். அதற்கவர்கள் ("நாங்கள் உயிருடன் இருந்த வரையில் அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான யாவையும் நன்கறிந்தவன்" என்று கூறுவார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦௯)
Tafseer
௧௧௦

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِيْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ ۘاِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِۗ تُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَ ۚوَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـَٔةِ الطَّيْرِ بِاِذْنِيْ فَتَنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًاۢ بِاِذْنِيْ وَتُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِيْ ۚوَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِيْ ۚوَاِذْ كَفَفْتُ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ ١١٠

idh qāla
إِذْ قَالَ
சமயம்/கூறினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yāʿīsā
يَٰعِيسَى
ஈஸாவே
ib'na
ٱبْنَ
மகன்
maryama
مَرْيَمَ
மர்யமுடைய
udh'kur
ٱذْكُرْ
நினைவு கூர்வீராக
niʿ'matī
نِعْمَتِى
என் அருளை
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
waʿalā wālidatika
وَعَلَىٰ وَٰلِدَتِكَ
இன்னும் மீது/உம் தாய்
idh
إِذْ
சமயம்
ayyadttuka
أَيَّدتُّكَ
பலப்படுத்தினேன்/உம்மை
birūḥi
بِرُوحِ
ஆத்மாவைக்கொண்டு
l-qudusi
ٱلْقُدُسِ
பரிசுத்தமான
tukallimu
تُكَلِّمُ
பேசுவீர்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களிடம்
fī l-mahdi
فِى ٱلْمَهْدِ
தொட்டிலில்
wakahlan
وَكَهْلًاۖ
இன்னும் வாலிபராக
wa-idh
وَإِذْ
இன்னும் சமயம்
ʿallamtuka
عَلَّمْتُكَ
கற்பித்தேன்/உமக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
எழுதுவதை
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
wal-tawrāta
وَٱلتَّوْرَىٰةَ
இன்னும் தவ்றாத்தை
wal-injīla
وَٱلْإِنجِيلَۖ
இன்னும் இன்ஜீலை
wa-idh takhluqu
وَإِذْ تَخْلُقُ
இன்னும் சமயம்/படைப்பீர்
mina
مِنَ
இருந்து
l-ṭīni
ٱلطِّينِ
களிமண்
kahayati
كَهَيْـَٔةِ
உருவத்தைப் போல்
l-ṭayri
ٱلطَّيْرِ
பறவையின்
bi-idh'nī
بِإِذْنِى
என் அனுமதியினால்
fatanfukhu
فَتَنفُخُ
ஊதுவீர்
fīhā
فِيهَا
அதில்
fatakūnu
فَتَكُونُ
அது/ஆகிவிடும்
ṭayran
طَيْرًۢا
பறவையாக
bi-idh'nī
بِإِذْنِىۖ
என் அனுமதியினால்
watub'ri-u
وَتُبْرِئُ
இன்னும் சுகமளிப்பீர்
l-akmaha
ٱلْأَكْمَهَ
பிறவிக் குருடரை
wal-abraṣa
وَٱلْأَبْرَصَ
இன்னும் வெண்குஷ்டரை
bi-idh'nī
بِإِذْنِىۖ
என் அனுமதியினால்
wa-idh
وَإِذْ
இன்னும் சமயம்
tukh'riju
تُخْرِجُ
வெளியாக்குவீர்
l-mawtā
ٱلْمَوْتَىٰ
மரணித்தவர்களை
bi-idh'nī
بِإِذْنِىۖ
என் அனுமதியினால்
wa-idh kafaftu
وَإِذْ كَفَفْتُ
இன்னும் சமயம்/தடுத்தேன்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
ʿanka
عَنكَ
உம்மைவிட்டு
idh
إِذْ
போது
ji'tahum
جِئْتَهُم
வந்தீர்/அவர்களிடம்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
faqāla
فَقَالَ
கூறினார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
in hādhā illā
إِنْ هَٰذَآ إِلَّا
இல்லை/இது/தவிர
siḥ'run mubīnun
سِحْرٌ مُّبِينٌ
சூனியம்/தெளிவானது
பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள்மீதும், உங்கள் தாய் மீது (நான் புரிந்து)ள்ள என்னுடைய அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உங்களுக்கு உதவி புரிந்து (உங்கள் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீங்கள் தொட்டிற்குழந்தையாக இருந்த சமயத்திலும் (உங்கள் தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உங்களைப் பேசச் செய்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உங்களுக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) அன்றி, நீங்கள் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீங்கள் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையானதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகி யையும் என் உதவியினால் நீங்கள் சுகமாக்கியதையும் (நினைத்துப் பாருங்கள்.) நீங்கள் என் அருளைக் கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) அன்றி, இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீங்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உங்களுக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உங்களை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பாருங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௦)
Tafseer