Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 3

An-Nisa

(an-Nisāʾ)

௨௧

وَكَيْفَ تَأْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا ٢١

wakayfa
وَكَيْفَ
எவ்வாறு ?
takhudhūnahu
تَأْخُذُونَهُۥ
அதை எடுப்பீர்கள்
waqad
وَقَدْ
திட்டமாக
afḍā
أَفْضَىٰ
கலந்து விட்டார்
baʿḍukum
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
ilā baʿḍin
إِلَىٰ بَعْضٍ
சிலருடன்
wa-akhadhna
وَأَخَذْنَ
(அப்பெண்கள்) வாங்கி இருக்கிறார்கள்
minkum
مِنكُم
உங்களிடம்
mīthāqan
مِّيثَٰقًا
வாக்குறுதியை
ghalīẓan
غَلِيظًا
உறுதியானது
அதனை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம். உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதியை (பலரும் அறிய) பெற்று உங்களில் ஒருவர் மற்றொருவருடன் (சேர்ந்து) கலந்து விட்டீர்களே! ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨௧)
Tafseer
௨௨

وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَاۤؤُكُمْ مِّنَ النِّسَاۤءِ اِلَّا مَا قَدْ سَلَفَ ۗ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًاۗ وَسَاۤءَ سَبِيْلًا ࣖ ٢٢

walā tankiḥū
وَلَا تَنكِحُوا۟
மணம் புரியாதீர்கள்
مَا
எவர்களை
nakaḥa
نَكَحَ
மணம் புரிந்தார்
ābāukum
ءَابَآؤُكُم
உங்கள் தந்தைகள்
mina
مِّنَ
இருந்து
l-nisāi
ٱلنِّسَآءِ
பெண்கள்
illā
إِلَّا
தவிர
mā qad salafa
مَا قَدْ سَلَفَۚ
எது/முன்னர் நடந்து விட்டது
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக இது
kāna
كَانَ
இருக்கிறது
fāḥishatan
فَٰحِشَةً
மானக்கேடானதாக
wamaqtan
وَمَقْتًا
இன்னும் வெறுக்கப்பட்டதாக
wasāa
وَسَآءَ
இன்னும் கெட்டுவிட்டது
sabīlan
سَبِيلًا
பழக்கம்
முன்னர் நடந்துபோன சம்பவங்களைத் தவிர உங்கள் தந்தைகள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும் (அவர்கள் இறந்த பின்னர் இனி) நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கக் கூடியதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨௨)
Tafseer
௨௩

حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِيْٓ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَاُمَّهٰتُ نِسَاۤىِٕكُمْ وَرَبَاۤىِٕبُكُمُ الّٰتِيْ فِيْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَاۤىِٕكُمُ الّٰتِيْ دَخَلْتُمْ بِهِنَّۖ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ ۖ وَحَلَاۤىِٕلُ اَبْنَاۤىِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ ۗ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۔ ٢٣

ḥurrimat
حُرِّمَتْ
தடுக்கப்பட்டுள்ளது
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ummahātukum
أُمَّهَٰتُكُمْ
உங்கள் தாய்கள்
wabanātukum
وَبَنَاتُكُمْ
இன்னும் உங்கள் மகள்கள்
wa-akhawātukum
وَأَخَوَٰتُكُمْ
இன்னும் உங்கள்சகோதரிகள்
waʿammātukum
وَعَمَّٰتُكُمْ
இன்னும் உங்கள் மாமிகள்
wakhālātukum
وَخَٰلَٰتُكُمْ
இன்னும் உங்கள் தாயின் சகோதரிகள்
wabanātu
وَبَنَاتُ
இன்னும் மகள்கள்
l-akhi
ٱلْأَخِ
சகோதரனின்
wabanātu
وَبَنَاتُ
இன்னும் மகள்கள்
l-ukh'ti
ٱلْأُخْتِ
சகோதரியின்
wa-ummahātukumu
وَأُمَّهَٰتُكُمُ
இன்னும் உங்கள் தாய்கள்
allātī
ٱلَّٰتِىٓ
எவர்கள்
arḍaʿnakum
أَرْضَعْنَكُمْ
பாலூட்டினர்/ உங்களுக்கு
wa-akhawātukum
وَأَخَوَٰتُكُم
இன்னும் உங்கள்சகோதரிகள்
mina l-raḍāʿati
مِّنَ ٱلرَّضَٰعَةِ
பால்குடியினால்
wa-ummahātu
وَأُمَّهَٰتُ
தாய்கள்
nisāikum
نِسَآئِكُمْ
உங்கள்மனைவிகளின்
warabāibukumu
وَرَبَٰٓئِبُكُمُ
இன்னும் உங்கள் வளர்ப்புப் பிள்ளைகள்
allātī
ٱلَّٰتِى
எவர்கள்
fī ḥujūrikum
فِى حُجُورِكُم
உங்கள் மடிகளில்
min
مِّن
இருந்து
nisāikumu
نِّسَآئِكُمُ
உங்கள் மனைவிகள்
allātī
ٱلَّٰتِى
எவர்கள்
dakhaltum
دَخَلْتُم
உறவு கொண்டீர்கள்
bihinna
بِهِنَّ
அவர்களுடன்
fa-in lam takūnū
فَإِن لَّمْ تَكُونُوا۟
நீங்கள் இல்லையென்றால்
dakhaltum
دَخَلْتُم
உறவு கொண்டீர்கள்
bihinna
بِهِنَّ
அவர்களுடன்
falā junāḥa
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
waḥalāilu
وَحَلَٰٓئِلُ
இன்னும் மனைவிகள்
abnāikumu
أَبْنَآئِكُمُ
உங்கள் மகன்களின்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min
مِنْ
இருந்து
aṣlābikum
أَصْلَٰبِكُمْ
உங்கள் முதுகந்தண்டு
wa-an tajmaʿū
وَأَن تَجْمَعُوا۟
இன்னும் நீங்கள் ஒன்று சேர்ப்பது
bayna
بَيْنَ
மத்தியில்
l-ukh'tayni
ٱلْأُخْتَيْنِ
இரு சகோதரிகள்
illā
إِلَّا
தவிர
مَا
எது
qad salafa
قَدْ سَلَفَۗ
முன்னர் நடந்தது
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கின்றான்
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
உங்கள் தாய்மார்களும், உங்கள் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரியின் பெண்பிள்ளைகளும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியின் தாய்மார்களும் (ஆகிய இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் நீங்கள் வீடு கூடிவிட்டால் அவளுக்கு முந்திய கணவனுக்குப் பிறந்த மகளையும் (நீங்கள் திருமணம் செய்வது கூடாது). அவளைத் திருமணம் செய்த பின்னர் அவளுடன் வீடு கூடாதிருந்தாலோ (அவளை நீக்கிவிட்டு அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளை திருமணம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவிகளையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்ள விலக்கப்பட்டிருக்கிறது). இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்த்து வைப்பதும் கூடாது. இதற்கு முன்னர் நடந்து விட்டவைகளைத் தவிர (அறியாத நிலைமையில் முன்னர் நீங்கள் செய்துவிட்டதை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨௩)
Tafseer
௨௪

۞ وَالْمُحْصَنٰتُ مِنَ النِّسَاۤءِ اِلَّا مَا مَلَكَتْ اَيْمَانُكُمْ ۚ كِتٰبَ اللّٰهِ عَلَيْكُمْ ۚ وَاُحِلَّ لَكُمْ مَّا وَرَاۤءَ ذٰلِكُمْ اَنْ تَبْتَغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ ۗ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِيْضَةً ۗوَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا تَرَاضَيْتُمْ بِهٖ مِنْۢ بَعْدِ الْفَرِيْضَةِۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ٢٤

wal-muḥ'ṣanātu
وَٱلْمُحْصَنَٰتُ
மணமானவர்கள்
mina
مِنَ
இருந்து
l-nisāi
ٱلنِّسَآءِ
பெண்களில்
illā
إِلَّا
தவிர
mā malakat
مَا مَلَكَتْ
எவர்கள்/சொந்தமாக்கிக் கொண்டது
aymānukum
أَيْمَٰنُكُمْۖ
உங்கள் வலக்கரங்கள்
kitāba
كِتَٰبَ
சட்டம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْۚ
உங்கள் மீது
wa-uḥilla
وَأُحِلَّ
அனுமதிக்கப்பட்டது
lakum
لَكُم
உங்களுக்கு
mā warāa
مَّا وَرَآءَ
எவர்கள்/தவிர
dhālikum
ذَٰلِكُمْ
இவர்(கள்)
an tabtaghū
أَن تَبْتَغُوا۟
நீங்கள் தேடுவது
bi-amwālikum
بِأَمْوَٰلِكُم
உங்கள் செல்வங்கள் மூலம்
muḥ'ṣinīna
مُّحْصِنِينَ
ஒழுக்கமுள்ளவர்களாக
ghayra musāfiḥīna
غَيْرَ مُسَٰفِحِينَۚ
விபச்சாரர்களாக இல்லாமல்
famā
فَمَا
எவள்
is'tamtaʿtum
ٱسْتَمْتَعْتُم
சுகம்அனுபவித்தீர்கள்
bihi
بِهِۦ
அவளிடம்
min'hunna
مِنْهُنَّ
அவர்களில்
faātūhunna
فَـَٔاتُوهُنَّ
கொடுங்கள் அவர்களுக்கு
ujūrahunna
أُجُورَهُنَّ
மஹர்களை அவர்களுடைய
farīḍatan
فَرِيضَةًۚ
கடமையாக
walā junāḥa
وَلَا جُنَاحَ
குற்றமில்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
fīmā
فِيمَا
எதில்
tarāḍaytum
تَرَٰضَيْتُم
விரும்பினீர்கள்
bihi
بِهِۦ
அதில்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
l-farīḍati
ٱلْفَرِيضَةِۚ
கடமை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
ʿalīman
عَلِيمًا
நன்கறிபவனாக
ḥakīman
حَكِيمًا
ஞானவானாக
கணவனுள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது. (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத்தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.) இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வத்தின் மூலம் (திருமணக் கட்டணமாகிய "மஹரைக்" கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், விபசாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரோடு வீடு கூடிவிட்டீர்களோ அவருக்கு குறிப்பிட்ட "மஹரை" அவரிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்து விடுங்கள். எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதனைக் குறைக்கவோ கூட்டவோ) இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது யாதொரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨௪)
Tafseer
௨௫

وَمَنْ لَّمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ يَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَكَتْ اَيْمَانُكُمْ مِّنْ فَتَيٰتِكُمُ الْمُؤْمِنٰتِۗ وَاللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِكُمْ ۗ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍۚ فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ وَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ بِالْمَعْرُوْفِ مُحْصَنٰتٍ غَيْرَ مُسٰفِحٰتٍ وَّلَا مُتَّخِذٰتِ اَخْدَانٍ ۚ فَاِذَآ اُحْصِنَّ فَاِنْ اَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِۗ ذٰلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنْكُمْ ۗ وَاَنْ تَصْبِرُوْا خَيْرٌ لَّكُمْ ۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ٢٥

waman
وَمَن
எவர்
lam yastaṭiʿ
لَّمْ يَسْتَطِعْ
சக்தி பெறவில்லை
minkum
مِنكُمْ
உங்களில்
ṭawlan
طَوْلًا
பொருளாதாரம்
an yankiḥa
أَن يَنكِحَ
மணம் முடிப்பதற்கு
l-muḥ'ṣanāti
ٱلْمُحْصَنَٰتِ
சுதந்திர பெண்களை
l-mu'mināti
ٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கைகொண்ட பெண்களை
famin
فَمِن
ஆகவே, இருந்து
mā malakat
مَّا مَلَكَتْ
எவர்கள்/ சொந்தமாக்கின
aymānukum
أَيْمَٰنُكُم
உங்கள் வலக்கரங்கள்
min
مِّن
இருந்து
fatayātikumu
فَتَيَٰتِكُمُ
உங்கள் அடிமைப் பெண்கள்
l-mu'mināti
ٱلْمُؤْمِنَٰتِۚ
நம்பிக்கைகொண்ட பெண்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
biīmānikum
بِإِيمَٰنِكُمۚ
உங்கள் நம்பிக்கையை
baʿḍukum
بَعْضُكُم
உங்களில் சிலர்
min baʿḍin
مِّنۢ بَعْضٍۚ
சிலரைச் சேர்ந்தவரே
fa-inkiḥūhunna
فَٱنكِحُوهُنَّ
ஆகவே மணமுடியுங்கள் அவர்களை
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதியுடன்
ahlihinna
أَهْلِهِنَّ
அவர்களின் உரிமையாளரின்
waātūhunna
وَءَاتُوهُنَّ
கொடுங்கள்/ அவர்களுக்கு
ujūrahunna
أُجُورَهُنَّ
அவர்களுடைய மஹர்களை
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
நல்ல முறையில்
muḥ'ṣanātin
مُحْصَنَٰتٍ
பத்தினிகளாக
ghayra musāfiḥātin
غَيْرَ مُسَٰفِحَٰتٍ
விபச்சாரிகளாக இல்லாமல்
walā muttakhidhāti
وَلَا مُتَّخِذَٰتِ
ஆக்கிக் கொள்ளாதவர்களாக
akhdānin
أَخْدَانٍۚ
ரகசிய நண்பர்களை
fa-idhā uḥ'ṣinna
فَإِذَآ أُحْصِنَّ
அல்லது மணமுடிக்கப்பட்டால்
fa-in atayna
فَإِنْ أَتَيْنَ
அவர்கள் செய்தால்
bifāḥishatin
بِفَٰحِشَةٍ
மானக்கேடானதை
faʿalayhinna
فَعَلَيْهِنَّ
அவர்கள் மீது
niṣ'fu
نِصْفُ
பாதி
mā ʿalā
مَا عَلَى
எது/மீது
l-muḥ'ṣanāti
ٱلْمُحْصَنَٰتِ
சுதந்திரமானபெண்கள்
mina
مِنَ
இருந்து
l-ʿadhābi
ٱلْعَذَابِۚ
தண்டனை
dhālika
ذَٰلِكَ
இது
liman
لِمَنْ
எவருக்கு
khashiya
خَشِىَ
பயந்தார்
l-ʿanata
ٱلْعَنَتَ
பாவத்தை
minkum
مِنكُمْۚ
உங்களில்
wa-an taṣbirū
وَأَن تَصْبِرُوا۟
நீங்கள்சகித்திருப்பது
khayrun
خَيْرٌ
நன்று
lakum
لَّكُمْۗ
உங்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துகொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்களுடைய நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கின்றான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்கவேண்டும். விபச்சாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகின்றாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨௫)
Tafseer
௨௬

يُرِيْدُ اللّٰهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ وَيَتُوْبَ عَلَيْكُمْ ۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٢٦

yurīdu
يُرِيدُ
நாடுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyubayyina
لِيُبَيِّنَ
தெளிவுபடுத்துவதற்கு
lakum
لَكُمْ
உங்களுக்கு
wayahdiyakum
وَيَهْدِيَكُمْ
இன்னும் நேர்வழி நடத்துவதற்கு/உங்களை
sunana
سُنَنَ
வழிகளை
alladhīna
ٱلَّذِينَ
எவர்களின்
min qablikum
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
wayatūba
وَيَتُوبَ
இன்னும் பிழை பொறுப்பதற்கு
ʿalaykum
عَلَيْكُمْۗ
உங்கள் மீது
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
அல்லாஹ் (தன்னுடைய கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக்கி உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் செலுத்தி (உங்கள் குற்றங்களை மன்னித்து) உங்கள் மீது அன்பு புரிவதையே விரும்புகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨௬)
Tafseer
௨௭

وَاللّٰهُ يُرِيْدُ اَنْ يَّتُوْبَ عَلَيْكُمْ ۗ وَيُرِيْدُ الَّذِيْنَ يَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِيْلُوْا مَيْلًا عَظِيْمًا ٢٧

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yurīdu
يُرِيدُ
நாடுகிறான்
an yatūba
أَن يَتُوبَ
பிழைபொறுக்க
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
wayurīdu
وَيُرِيدُ
நாடுகிறார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yattabiʿūna
يَتَّبِعُونَ
பின்பற்றுகிறார்கள்
l-shahawāti
ٱلشَّهَوَٰتِ
அற்ப ஆசைகளை
an tamīlū
أَن تَمِيلُوا۟
நீங்கள் சாய்வதை
maylan
مَيْلًا
சாய்வது
ʿaẓīman
عَظِيمًا
முற்றிலும்
அல்லாஹ்வோ, நீங்கள் பாவத்திலிருந்து மீளுவதையே விரும்புகின்றான். (எனினும்) முற்றிலும் (சரீர) இச்சைகளை பின்பற்றி நடப்பவர்களோ (நேரான வழியிலிருந்து) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (பாவத்தில் ஆழ்ந்து) விடுவதையே விரும்புகின்றனர். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨௭)
Tafseer
௨௮

يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْ ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا ٢٨

yurīdu
يُرِيدُ
நாடுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
an yukhaffifa
أَن يُخَفِّفَ
இலகுவாக்க
ʿankum
عَنكُمْۚ
உங்களுக்கு
wakhuliqa
وَخُلِقَ
இன்னும் படைக்கப்பட்டுள்ளான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
ḍaʿīfan
ضَعِيفًا
பலவீனனாக
அன்றி, அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகிறான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨௮)
Tafseer
௨௯

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَأْكُلُوْٓا اَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّآ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ ۗ وَلَا تَقْتُلُوْٓا اَنْفُسَكُمْ ۗ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا ٢٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā takulū
لَا تَأْكُلُوٓا۟
புசிக்காதீர்கள்
amwālakum
أَمْوَٰلَكُم
உங்கள் செல்வங்களை
baynakum
بَيْنَكُم
உங்களுக்கு மத்தியில்
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
தவறான முறையில்
illā
إِلَّآ
தவிர
an takūna
أَن تَكُونَ
இருப்பது
tijāratan
تِجَٰرَةً
வர்த்தகமாக
ʿan tarāḍin
عَن تَرَاضٍ
பரஸ்பர விருப்பத்துடன்
minkum
مِّنكُمْۚ
உங்களின்
walā taqtulū
وَلَا تَقْتُلُوٓا۟
இன்னும் கொல்லாதீர்கள்
anfusakum
أَنفُسَكُمْۚ
உங்கள் உயிர்களை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
bikum
بِكُمْ
உங்கள் மீது
raḥīman
رَحِيمًا
பெரும் கருணையாளனாக
நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். அன்றி (இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக் கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க அன்புடையவனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨௯)
Tafseer
௩௦

وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ عُدْوَانًا وَّظُلْمًا فَسَوْفَ نُصْلِيْهِ نَارًا ۗوَكَانَ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا ٣٠

waman
وَمَن
எவர்
yafʿal
يَفْعَلْ
செய்வாரோ
dhālika
ذَٰلِكَ
அதை
ʿud'wānan
عُدْوَٰنًا
வரம்பை மீறி
waẓul'man
وَظُلْمًا
இன்னும் அநியாயமாக
fasawfa nuṣ'līhi
فَسَوْفَ نُصْلِيهِ
எரிப்போம்/அவரை
nāran
نَارًاۚ
நரகத்தில்
wakāna
وَكَانَ
இருக்கிறது
dhālika
ذَٰلِكَ
அது
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
yasīran
يَسِيرًا
சுலபமாக
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதே! ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௦)
Tafseer