Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௨௯

Qur'an Surah An-Nisa Verse 29

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَأْكُلُوْٓا اَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّآ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ ۗ وَلَا تَقْتُلُوْٓا اَنْفُسَكُمْ ۗ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا (النساء : ٤)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe[d]!
நம்பிக்கையாளர்களே
lā takulū
لَا تَأْكُلُوٓا۟
(Do) not eat
புசிக்காதீர்கள்
amwālakum
أَمْوَٰلَكُم
your wealth
உங்கள் செல்வங்களை
baynakum
بَيْنَكُم
between yourselves
உங்களுக்கு மத்தியில்
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
unjustly
தவறான முறையில்
illā
إِلَّآ
But
தவிர
an takūna
أَن تَكُونَ
that (there) be
இருப்பது
tijāratan
تِجَٰرَةً
business
வர்த்தகமாக
ʿan tarāḍin
عَن تَرَاضٍ
on mutual consent
பரஸ்பர விருப்பத்துடன்
minkum
مِّنكُمْۚ
among you
உங்களின்
walā taqtulū
وَلَا تَقْتُلُوٓا۟
And (do) not kill
இன்னும் கொல்லாதீர்கள்
anfusakum
أَنفُسَكُمْۚ
yourselves
உங்கள் உயிர்களை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கிறான்
bikum
بِكُمْ
to you
உங்கள் மீது
raḥīman
رَحِيمًا
Most Merciful
பெரும் கருணையாளனாக

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanoo laa taakulooo amwaalakum bainakum bilbaatili 'illaaa an takoona tijaaratan 'an taraadim minkum; wa laa taqtulooo anfusakum; innal laaha kaana bikum Raheemaa (QS. an-Nisāʾ:29)

English Sahih International:

O you who have believed, do not consume one another's wealth unjustly but only [in lawful] business by mutual consent. And do not kill yourselves [or one another]. Indeed, Allah is to you ever Merciful. (QS. An-Nisa, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். அன்றி (இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக் கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க அன்புடையவனாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௨௯)

Jan Trust Foundation

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! உங்களின் பரஸ்பர விருப்பத்துடன் (நடைபெறும்) வர்த்தகமாக இருந்தால் தவிர, நீங்கள் உங்கள் செல்வங்களை உங்களுக்கு மத்தியில் தவறான முறையில் புசிக்காதீர்கள். உங்கள் உயிர்களை கொல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது பெரும் கருணையாளனாக இருக்கிறான்.