Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௨௪

Qur'an Surah An-Nisa Verse 24

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَالْمُحْصَنٰتُ مِنَ النِّسَاۤءِ اِلَّا مَا مَلَكَتْ اَيْمَانُكُمْ ۚ كِتٰبَ اللّٰهِ عَلَيْكُمْ ۚ وَاُحِلَّ لَكُمْ مَّا وَرَاۤءَ ذٰلِكُمْ اَنْ تَبْتَغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ ۗ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِيْضَةً ۗوَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا تَرَاضَيْتُمْ بِهٖ مِنْۢ بَعْدِ الْفَرِيْضَةِۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا (النساء : ٤)

wal-muḥ'ṣanātu
وَٱلْمُحْصَنَٰتُ
And (prohibited are) the ones who are married
மணமானவர்கள்
mina
مِنَ
of
இருந்து
l-nisāi
ٱلنِّسَآءِ
the women
பெண்களில்
illā
إِلَّا
except
தவிர
mā malakat
مَا مَلَكَتْ
whom you possess
எவர்கள்/சொந்தமாக்கிக் கொண்டது
aymānukum
أَيْمَٰنُكُمْۖ
rightfully
உங்கள் வலக்கரங்கள்
kitāba
كِتَٰبَ
Decree
சட்டம்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْۚ
upon you
உங்கள் மீது
wa-uḥilla
وَأُحِلَّ
And are lawful
அனுமதிக்கப்பட்டது
lakum
لَكُم
to you
உங்களுக்கு
mā warāa
مَّا وَرَآءَ
what (is) beyond
எவர்கள்/தவிர
dhālikum
ذَٰلِكُمْ
that
இவர்(கள்)
an tabtaghū
أَن تَبْتَغُوا۟
that you seek
நீங்கள் தேடுவது
bi-amwālikum
بِأَمْوَٰلِكُم
with your wealth
உங்கள் செல்வங்கள் மூலம்
muḥ'ṣinīna
مُّحْصِنِينَ
desiring to be chaste
ஒழுக்கமுள்ளவர்களாக
ghayra musāfiḥīna
غَيْرَ مُسَٰفِحِينَۚ
not (to be) lustful
விபச்சாரர்களாக இல்லாமல்
famā
فَمَا
So what
எவள்
is'tamtaʿtum
ٱسْتَمْتَعْتُم
you benefit[ed]
சுகம்அனுபவித்தீர்கள்
bihi
بِهِۦ
of it
அவளிடம்
min'hunna
مِنْهُنَّ
from them
அவர்களில்
faātūhunna
فَـَٔاتُوهُنَّ
so you give them
கொடுங்கள் அவர்களுக்கு
ujūrahunna
أُجُورَهُنَّ
their bridal due
மஹர்களை அவர்களுடைய
farīḍatan
فَرِيضَةًۚ
(as) an obligation
கடமையாக
walā junāḥa
وَلَا جُنَاحَ
And (there is) no sin
குற்றமில்லை
ʿalaykum
عَلَيْكُمْ
on you
உங்கள் மீது
fīmā
فِيمَا
concerning what
எதில்
tarāḍaytum
تَرَٰضَيْتُم
you mutually agree
விரும்பினீர்கள்
bihi
بِهِۦ
of it
அதில்
min baʿdi
مِنۢ بَعْدِ
from beyond
பின்னர்
l-farīḍati
ٱلْفَرِيضَةِۚ
the obligation
கடமை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கிறான்
ʿalīman
عَلِيمًا
All-Knowing
நன்கறிபவனாக
ḥakīman
حَكِيمًا
All-Wise
ஞானவானாக

Transliteration:

Walmuhsanaatu minan nisaaa'i illaa maa malakat aimaanukum kitaabal laahi 'alaikum; wa uhilla lakum maa waraaa'a zaalikum an tabtaghoo bi amwaali kum muhsineena ghaira musaa fiheen; famastamta'tum bihee minhunna fa aatoohunna ujoorahunna fareedah; wa laa junaaha 'alaikum feemaa taraadaitum bihee mim ba'dil fareedah; innal laaha kaana 'Aleeman Hakeemaa (QS. an-Nisāʾ:24)

English Sahih International:

And [also prohibited to you are all] married women except those your right hands possess. [This is] the decree of Allah upon you. And lawful to you are [all others] beyond these, [provided] that you seek them [in marriage] with [gifts from] your property, desiring chastity, not unlawful sexual intercourse. So for whatever you enjoy [of marriage] from them, give them their due compensation as an obligation. And there is no blame upon you for what you mutually agree to beyond the obligation. Indeed, Allah is ever Knowing and Wise. (QS. An-Nisa, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

கணவனுள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது. (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத்தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.) இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வத்தின் மூலம் (திருமணக் கட்டணமாகிய "மஹரைக்" கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், விபசாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரோடு வீடு கூடிவிட்டீர்களோ அவருக்கு குறிப்பிட்ட "மஹரை" அவரிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்து விடுங்கள். எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதனைக் குறைக்கவோ கூட்டவோ) இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது யாதொரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௨௪)

Jan Trust Foundation

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பெண்களில் மணமானவர்களும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளனர்).உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர. (இவர்களை திருமணம் செய்யலாம்.) (இவை) உங்கள் மீது (விதிக்கப்பட்ட) அல்லாஹ்வின் சட்டமாகும். (மேல் விவரிக்கப்பட்ட) இவர்களைத் தவிர உள்ளவர்களை உங்கள் செல்வங்கள் மூலம் (‘மஹர்' கொடுத்து மணம்புரியத்) தேடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது, (நீங்களோ) விபசாரர்களாக இல்லாமல் ஒழுக்கமுள்ளவர்களாக (இருக்கவேண்டும்). அவர்களில் எவரிடம் நீங்கள் (மணமுடித்து) சுகம் அனுபவித்தீர்களோ அவர்களுக்கு அவர்களுடைய மஹர்களை கடமையாக கொடுத்து விடுங்கள். கடமை(யான மஹரு)க்குப் பின்னர் நீங்கள் விரும்பி (குறைத்து)க் கொள்வதில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கின்றான்.