Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 17

An-Nisa

(an-Nisāʾ)

௧௬௧

وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ۗوَاَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَلِيْمًا ١٦١

wa-akhdhihimu
وَأَخْذِهِمُ
இன்னும் அவர்கள் வாங்குவது
l-riba
ٱلرِّبَوٰا۟
வட்டியை
waqad nuhū
وَقَدْ نُهُوا۟
அவர்களுமோ தடுக்கப்பட்டிருக்க
ʿanhu
عَنْهُ
அதிலிருந்து
wa-aklihim
وَأَكْلِهِمْ
இன்னும் அவர்கள் சாப்பிடுவது
amwāla
أَمْوَٰلَ
செல்வங்களை
l-nāsi
ٱلنَّاسِ
மக்களின்
bil-bāṭili
بِٱلْبَٰطِلِۚ
தப்பான வழியில்
wa-aʿtadnā
وَأَعْتَدْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
min'hum
مِنْهُمْ
அவர்களில்
ʿadhāban
عَذَابًا
வேதனையை
alīman
أَلِيمًا
துன்புறுத்தக் கூடிய(து)
அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதனை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம். மறுமையிலோ) அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬௧)
Tafseer
௧௬௨

لٰكِنِ الرَّاسِخُوْنَ فِى الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ يُؤْمِنُوْنَ بِمَآ اُنْزِلَ اِلَيْكَ وَمَآ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَالْمُقِيْمِيْنَ الصَّلٰوةَ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۗ اُولٰۤىِٕكَ سَنُؤْتِيْهِمْ اَجْرًا عَظِيْمًا ࣖ ١٦٢

lākini
لَّٰكِنِ
எனினும்
l-rāsikhūna
ٱلرَّٰسِخُونَ
தேர்ச்சி பெற்றவர்கள்
fī l-ʿil'mi
فِى ٱلْعِلْمِ
கல்வியில்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
wal-mu'minūna
وَٱلْمُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கையாளர்கள்
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்
bimā unzila
بِمَآ أُنزِلَ
எதை/இறக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
உமக்கு
wamā
وَمَآ
இன்னும் எது
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
min qablika
مِن قَبْلِكَۚ
உமக்கு முன்னர்
wal-muqīmīna
وَٱلْمُقِيمِينَ
இன்னும் நிலை நிறுத்துபவர்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَۚ
தொழுகையை
wal-mu'tūna
وَٱلْمُؤْتُونَ
இன்னும் கொடுப்பவர்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wal-mu'minūna
وَٱلْمُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் மறுமை நாளை
ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
sanu'tīhim
سَنُؤْتِيهِمْ
கொடுப்போம்/இவர்களுக்கு
ajran ʿaẓīman
أَجْرًا عَظِيمًا
கூலியை/மகத்தானது
எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உங்கள்மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உங்களுக்கு முன்னர் அருளப்பட்டிருந்த (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புவார்கள். இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬௨)
Tafseer
௧௬௩

۞ اِنَّآ اَوْحَيْنَآ اِلَيْكَ كَمَآ اَوْحَيْنَآ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖۚ وَاَوْحَيْنَآ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ ۚوَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًاۚ ١٦٣

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
awḥaynā
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
kamā
كَمَآ
போன்றே
awḥaynā
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
ilā nūḥin
إِلَىٰ نُوحٍ
நூஹுக்கு
wal-nabiyīna
وَٱلنَّبِيِّۦنَ
இன்னும் நபிமார்களுக்கு
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦۚ
அவருக்குப் பின்னர்
wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
இன்னும் வஹீ அறிவித்தோம்
ilā ib'rāhīma
إِلَىٰٓ إِبْرَٰهِيمَ
இப்ராஹீமுக்கு
wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
wayaʿqūba
وَيَعْقُوبَ
இன்னும் யஃகூப்
wal-asbāṭi
وَٱلْأَسْبَاطِ
இன்னும் சந்ததிகள்
waʿīsā
وَعِيسَىٰ
இன்னும் ஈஸா
wa-ayyūba
وَأَيُّوبَ
இன்னும் அய்யூப்
wayūnusa
وَيُونُسَ
இன்னும் யூனுஸ்
wahārūna
وَهَٰرُونَ
இன்னும் ஹாரூன்
wasulaymāna
وَسُلَيْمَٰنَۚ
இன்னும் ஸுலைமான்
waātaynā
وَءَاتَيْنَا
இன்னும் கொடுத்தோம்
dāwūda
دَاوُۥدَ
தாவூதுக்கு
zabūran
زَبُورًا
ஸபூரை
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தவாறே உங்களுக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம். அன்றி இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் (இவ்வாறே) நாம் வஹீ அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு "ஜபூர்" என்னும் வேதத்தை நாமே கொடுத்தோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬௩)
Tafseer
௧௬௪

وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ ۗوَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًاۚ ١٦٤

warusulan
وَرُسُلًا
இன்னும் தூதர்களை
qad
قَدْ
திட்டமாக
qaṣaṣnāhum ʿalayka
قَصَصْنَٰهُمْ عَلَيْكَ
விவரித்தோம்/அவர்களை/உமக்கு
min qablu
مِن قَبْلُ
முன்னர்
warusulan
وَرُسُلًا
இன்னும் தூதர்களை
lam naqṣuṣ'hum
لَّمْ نَقْصُصْهُمْ
விவரிக்கவில்லை/அவர்களை
ʿalayka
عَلَيْكَۚ
உமக்கு
wakallama l-lahu
وَكَلَّمَ ٱللَّهُ
பேசினான்/அல்லாஹ்
mūsā
مُوسَىٰ
மூஸாவுடன்
taklīman
تَكْلِيمًا
பேசுதல்
(இவர்களைப் போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்.) அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உங்களுக்குக் கூறியிருக்கின்றோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கின்றோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உங்களுக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹீ அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬௪)
Tafseer
௧௬௫

رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ ۢ بَعْدَ الرُّسُلِ ۗوَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا ١٦٥

rusulan mubashirīna
رُّسُلًا مُّبَشِّرِينَ
தூதர்களை/நற்செய்தி கூறுபவர்களாக
wamundhirīna
وَمُنذِرِينَ
இன்னும் எச்சரிப்பவர்களாக
li-allā yakūna
لِئَلَّا يَكُونَ
இல்லாதிருக்க
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
ḥujjatun
حُجَّةٌۢ
ஓர் ஆதாரம்
baʿda
بَعْدَ
பின்னர்
l-rusuli
ٱلرُّسُلِۚ
தூதர்கள்
wakāna l-lahu
وَكَانَ ٱللَّهُ
அல்லாஹ் இருக்கின்றான்
ʿazīzan
عَزِيزًا
மிகைத்தவனாக
ḥakīman
حَكِيمًا
மகா ஞானவானாக
அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு யாதொரு வழியும் இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப் பின்னரும் (யஹ்யா போன்ற வேறு) பல தூதர்களை (சுவர்க்கத்தைக் கொண்டு) நற்செய்தி கூறுகின்றவர்களாகவும், (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (நாம் அனுப்பி வைத்தோம்.) அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬௫)
Tafseer
௧௬௬

لٰكِنِ اللّٰهُ يَشْهَدُ بِمَآ اَنْزَلَ اِلَيْكَ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ ۚوَالْمَلٰۤىِٕكَةُ يَشْهَدُوْنَ ۗوَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًاۗ ١٦٦

lākini l-lahu
لَّٰكِنِ ٱللَّهُ
என்றாலும்/அல்லாஹ்
yashhadu
يَشْهَدُ
சாட்சி கூறுகிறான்
bimā anzala
بِمَآ أَنزَلَ
இறக்கியதற்கு
ilayka
إِلَيْكَۖ
உமக்கு
anzalahu
أَنزَلَهُۥ
இறக்கினான்/அதை
biʿil'mihi
بِعِلْمِهِۦۖ
அவனுடைய அறிவைக் கொண்டே
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
yashhadūna
يَشْهَدُونَۚ
சாட்சி கூறுகின்றனர்
wakafā
وَكَفَىٰ
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
shahīdan
شَهِيدًا
சாட்சியாளனாக
(நபியே! இவர்கள் உங்களை நிராகரித்து விட்டதனால் ஆவதென்ன?) உங்கள்மீது அருளப்பட்ட வேதம் உண்மையான தென்றும் (உங்களுடைய மேலான தகுதியை) அறிந்தே அதனை (உங்கள்மீது அவன்) இறக்கி வைத்தான் என்றும் அல்லாஹ்வே சாட்சியம் கூறுகின்றான். (அவ்வாறே) மலக்குகளும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ்வின் சாட்சியமே போதுமானது. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬௬)
Tafseer
௧௬௭

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ قَدْ ضَلُّوْا ضَلٰلًا ۢ بَعِيْدًا ١٦٧

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
waṣaddū
وَصَدُّوا۟
இன்னும் தடுத்தார்கள்
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
qad ḍallū
قَدْ ضَلُّوا۟
திட்டமாக வழி கெட்டனர்
ḍalālan
ضَلَٰلًۢا
வழிகேடாக
baʿīdan
بَعِيدًا
தூரமான(து)
(நபியே! உங்களை) எவர்கள் நிராகரித்து (மற்றவர்களையும்) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து தடுத்துக் கொண்டார்களோ அவர்கள் நிச்சயமாக வெகுதூரமான ஒரு வழிகேட்டில்தான் சென்றுவிட்டனர். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬௭)
Tafseer
௧௬௮

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَظَلَمُوْا لَمْ يَكُنِ اللّٰهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيْقًاۙ ١٦٨

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
waẓalamū
وَظَلَمُوا۟
இன்னும் அநியாயம் செய்தார்கள்
lam yakuni
لَمْ يَكُنِ
இல்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyaghfira
لِيَغْفِرَ
மன்னிப்பவனாக
lahum
لَهُمْ
அவர்களை
walā
وَلَا
இன்னும் இல்லை
liyahdiyahum
لِيَهْدِيَهُمْ
அவர்களுக்கு வழிகாட்டுபவனாக
ṭarīqan
طَرِيقًا
ஒரு வழியை
(நபியே!) எவர்கள் (உங்களை) நிராகரித்துவிட்டு அநியாயம் செய்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬௮)
Tafseer
௧௬௯

اِلَّا طَرِيْقَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗوَكَانَ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا ١٦٩

illā ṭarīqa
إِلَّا طَرِيقَ
தவிர/வழி
jahannama
جَهَنَّمَ
நரகத்தின்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَآ
அதில்
abadan
أَبَدًاۚ
என்றென்றும்
wakāna dhālika
وَكَانَ ذَٰلِكَ
ஆகிவிட்டது/இது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வுக்கு
yasīran
يَسِيرًا
சுலபமாக
நரகத்தின் வழியைத்தவிர வேறு நேரான வழியில் அவர்களைச் செலுத்தவும் மாட்டான். அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கியும் விடுவார்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ் வுக்கு மிகச் சுலபமே! ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬௯)
Tafseer
௧௭௦

يٰٓاَيُّهَا النَّاسُ قَدْ جَاۤءَكُمُ الرَّسُوْلُ بِالْحَقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَيْرًا لَّكُمْ ۗوَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا ١٧٠

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
qad
قَدْ
வந்து விட்டார்
jāakumu
جَآءَكُمُ
உங்களிடம்
l-rasūlu
ٱلرَّسُولُ
இத்தூதர்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
min
مِن
இருந்து
rabbikum
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
faāminū
فَـَٔامِنُوا۟
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
khayran
خَيْرًا
மிக்க நன்று
lakum
لَّكُمْۚ
உங்களுக்கு
wa-in takfurū
وَإِن تَكْفُرُوا۟
நீங்கள் நிராகரித்தால்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
எவை/வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமி
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
மகா ஞானவானாக
மனிதர்களே! உங்கள் இறைவனால் முற்றிலும் உண்மையைக் கொண்டே அனுப்பப்பட்ட ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார். ஆகவே, நீங்கள் அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கே மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்து விட்டால் (அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடாது. ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௭௦)
Tafseer