Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௭௦

Qur'an Surah An-Nisa Verse 170

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا النَّاسُ قَدْ جَاۤءَكُمُ الرَّسُوْلُ بِالْحَقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَيْرًا لَّكُمْ ۗوَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا (النساء : ٤)

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
O mankind!
மக்களே
qad
قَدْ
Surely
வந்து விட்டார்
jāakumu
جَآءَكُمُ
has come to you
உங்களிடம்
l-rasūlu
ٱلرَّسُولُ
the Messenger
இத்தூதர்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
with the truth
சத்தியத்தைக் கொண்டு
min
مِن
from
இருந்து
rabbikum
رَّبِّكُمْ
your Lord
உங்கள் இறைவன்
faāminū
فَـَٔامِنُوا۟
so believe
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
khayran
خَيْرًا
(it is) better
மிக்க நன்று
lakum
لَّكُمْۚ
for you
உங்களுக்கு
wa-in takfurū
وَإِن تَكْفُرُوا۟
But if you disbelieve
நீங்கள் நிராகரித்தால்
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
lillahi
لِلَّهِ
to Allah (belongs)
அல்லாஹ்விற்கு
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
whatever (is) in the heavens
எவை/வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
இன்னும் பூமி
wakāna
وَكَانَ
And is
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ʿalīman
عَلِيمًا
All-Knowing
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
All-Wise
மகா ஞானவானாக

Transliteration:

Yaaa aiyuhan naasu qad jaaa'akumur Rasoolu bilhaqqi mir Rabbikum fa ammminoo khairal lakum; wa in takfuroo fainnna lillaahi maa fis samaawaati wal ard; wa kaanal laahu 'Aleemann hakeemaa (QS. an-Nisāʾ:170)

English Sahih International:

O mankind, the Messenger has come to you with the truth from your Lord, so believe; it is better for you. But if you disbelieve – then indeed, to Allah belongs whatever is in the heavens and earth. And ever is Allah Knowing and Wise. (QS. An-Nisa, Ayah ௧௭௦)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! உங்கள் இறைவனால் முற்றிலும் உண்மையைக் கொண்டே அனுப்பப்பட்ட ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார். ஆகவே, நீங்கள் அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கே மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்து விட்டால் (அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடாது. ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௭௦)

Jan Trust Foundation

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களே! இத்தூதர் உங்களிடம் உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்தைக் கொண்டு வந்துவிட்டார். ஆகவே, நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கு மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்தால், வானங்களிலும், பூமியிலுமுள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்குரியனவே! அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.