Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 15

An-Nisa

(an-Nisāʾ)

௧௪௧

ۨالَّذِيْنَ يَتَرَبَّصُوْنَ بِكُمْۗ فَاِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللّٰهِ قَالُوْٓا اَلَمْ نَكُنْ مَّعَكُمْ ۖ وَاِنْ كَانَ لِلْكٰفِرِيْنَ نَصِيْبٌ قَالُوْٓا اَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ وَنَمْنَعْكُمْ مِّنَ الْمُؤْمِنِيْنَ ۗ فَاللّٰهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۗ وَلَنْ يَّجْعَلَ اللّٰهُ لِلْكٰفِرِيْنَ عَلَى الْمُؤْمِنِيْنَ سَبِيْلًا ࣖ ١٤١

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yatarabbaṣūna
يَتَرَبَّصُونَ
எதிர்பார்க்கின்றனர்
bikum
بِكُمْ
உங்களுக்கு
fa-in kāna
فَإِن كَانَ
இருந்தால்
lakum
لَكُمْ
உங்களுக்கு
fatḥun
فَتْحٌ
ஒரு வெற்றி
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
qālū
قَالُوٓا۟
கூறினர்
alam nakun
أَلَمْ نَكُن
நாங்களும் இருக்க வில்லையா?
maʿakum
مَّعَكُمْ
உங்களுடன்
wa-in kāna
وَإِن كَانَ
இருந்தால்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
naṣībun
نَصِيبٌ
ஓர் அளவு
qālū
قَالُوٓا۟
கூறினர்
alam nastaḥwidh
أَلَمْ نَسْتَحْوِذْ
நாங்கள் வெற்றி கொள்ளவில்லையே
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
wanamnaʿkum
وَنَمْنَعْكُم
இன்னும் உங்களைப் பாதுகாக்க(வில்லையா)
mina
مِّنَ
இருந்து
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَۚ
நம்பிக்கையாளர்கள்
fal-lahu
فَٱللَّهُ
அல்லாஹ்
yaḥkumu
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
walan yajʿala
وَلَن يَجْعَلَ
ஆக்கவே மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
ʿalā
عَلَى
மீது
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
sabīlan
سَبِيلًا
ஒரு வழியை
(நயவஞ்சகர்களாகிய) இவர்கள் உங்களைக் கவனித்த வண்ணம் இருக்கின்றனர். அல்லாஹ்வி(ன் உதவியி)னால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால் (உங்களிடம் வந்து) நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர். நிராகரிப்பவர்களுக்கு ஏதும் வெற்றி கிடைத்துவிட்டால் (அவர்களிடம் சென்று) "நாங்கள் (நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவி புரிந்து) உங்களை வெற்றி கொள்ளக் கூடுமாயிருந்தும் நம்பிக்கை கொண்ட அவர்களிடமிருந்து நாம் உங்களைப் பாதுகாக்கவில்லையா?" என்று கூறுகின்றனர். உங்களுக்கும் அ(ந்நய)வ(ஞ்சக)ர்களுக்கும் இடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கை யாளர்களை வெற்றிகொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் வைக்க மாட்டான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪௧)
Tafseer
௧௪௨

اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْۚ وَاِذَا قَامُوْٓا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰىۙ يُرَاۤءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًاۖ ١٤٢

inna
إِنَّ
நிச்சயமாக
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்கள்
yukhādiʿūna
يُخَٰدِعُونَ
வஞ்சிக்கின்றனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wahuwa
وَهُوَ
அவன்
khādiʿuhum
خَٰدِعُهُمْ
வஞ்சிப்பவன்/அவர்களை
wa-idhā qāmū
وَإِذَا قَامُوٓا۟
அவர்கள் நின்றால்
ilā l-ṣalati
إِلَى ٱلصَّلَوٰةِ
தொழுகைக்கு
qāmū
قَامُوا۟
நிற்கின்றனர்
kusālā
كُسَالَىٰ
சோம்பேறிகளாக
yurāūna
يُرَآءُونَ
காண்பிக்கின்றனர்
l-nāsa
ٱلنَّاسَ
மனிதர்களுக்கு
walā yadhkurūna
وَلَا يَذْكُرُونَ
நினைவு கூரமாட்டார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًا
குறைவாகவே
நிச்சயமாக (நிராகரிக்கும்) இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக் கருது)கின்றனர். எனினும், அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகின்றான். அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு) கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪௨)
Tafseer
௧௪௩

مُّذَبْذَبِيْنَ بَيْنَ ذٰلِكَۖ لَآ اِلٰى هٰٓؤُلَاۤءِ وَلَآ اِلٰى هٰٓؤُلَاۤءِ ۗ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا ١٤٣

mudhabdhabīna
مُّذَبْذَبِينَ
தடுமாறியவர்களாக
bayna
بَيْنَ
இடையில்
dhālika
ذَٰلِكَ
அதற்கு
لَآ
இல்லை
ilā hāulāi
إِلَىٰ هَٰٓؤُلَآءِ
இவர்களுடன்
walā
وَلَآ
இல்லை
ilā
إِلَىٰ
உடன்
hāulāi
هَٰٓؤُلَآءِۚ
இவர்கள்
waman
وَمَن
எவரை
yuḍ'lili
يُضْلِلِ
வழிகெடுப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
falan tajida
فَلَن تَجِدَ
அறவே பெறமாட்டீர்
lahu
لَهُۥ
அவருக்கு
sabīlan
سَبِيلًا
ஒரு வழியை
இவர்கள் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுடனுமில்லை. (வஞ்சகர்களாகிய) இவர்களுடனுமில்லை. மத்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எவர்களை அல்லாஹ் வழிதவறவிட்டு விட்டானோ அவர்களுக்கு நீங்கள் யாதொரு வழியும் காண மாட்டீர்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪௩)
Tafseer
௧௪௪

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكٰفِرِيْنَ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ۚ اَتُرِيْدُوْنَ اَنْ تَجْعَلُوْا لِلّٰهِ عَلَيْكُمْ سُلْطٰنًا مُّبِيْنًا ١٤٤

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā tattakhidhū
لَا تَتَّخِذُوا۟
ஆக்காதீர்கள்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
awliyāa
أَوْلِيَآءَ
பொறுப்பாளர்களாக
min dūni
مِن دُونِ
அன்றி
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَۚ
நம்பிக்கையாளர்கள்
aturīdūna
أَتُرِيدُونَ
நாடுகிறீர்களா?
an tajʿalū
أَن تَجْعَلُوا۟
நீங்கள் ஆக்குவது
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு எதிராக
sul'ṭānan
سُلْطَٰنًا
ஒரு சான்றை
mubīnan
مُّبِينًا
தெளிவானது
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களையன்றி நிராகரிப்பவர்களை (உங்களுக்குப்) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (இதன் மூலம் உங்களைத் தண்டிக்க) அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான அத்தாட்சியை ஏற்படுத்திவிட நீங்கள் விரும்புகின்றீர்களா? ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪௪)
Tafseer
௧௪௫

اِنَّ الْمُنٰفِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًاۙ ١٤٥

inna
إِنَّ
நிச்சயமாக
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்கள்
fī l-darki
فِى ٱلدَّرْكِ
அடுக்கில்
l-asfali
ٱلْأَسْفَلِ
மிகக் கீழ்
mina l-nāri
مِنَ ٱلنَّارِ
நரகத்தின்
walan tajida
وَلَن تَجِدَ
காணமாட்டீர்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
naṣīran
نَصِيرًا
ஓர் உதவியாளரை
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்ப்பாகத்தில் தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪௫)
Tafseer
௧௪௬

اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِيْنَهُمْ لِلّٰهِ فَاُولٰۤىِٕكَ مَعَ الْمُؤْمِنِيْنَۗ وَسَوْفَ يُؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ اَجْرًا عَظِيْمًا ١٤٦

illā alladhīna
إِلَّا ٱلَّذِينَ
தவிர/எவர்கள்
tābū
تَابُوا۟
திருந்தி பாவமன்னிப்புக் கோரினார்
wa-aṣlaḥū
وَأَصْلَحُوا۟
இன்னும் சீர்திருத்தினர்
wa-iʿ'taṣamū
وَٱعْتَصَمُوا۟
இன்னும் பற்றிப் பிடித்தனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wa-akhlaṣū
وَأَخْلَصُوا۟
இன்னும் தூய்மைப்படுத்தினர்
dīnahum
دِينَهُمْ
தங்கள் வழிபாட்டை
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
maʿa
مَعَ
உடன்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَۖ
நம்பிக்கையாளர்கள்
wasawfa yu'ti
وَسَوْفَ يُؤْتِ
கொடுப்பான்
l-lahu l-mu'minīna
ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ
அல்லாஹ்/நம்பிக்கையாளர்களுக்கு
ajran ʿaẓīman
أَجْرًا عَظِيمًا
கூலியை/மகத்தானது
எனினும் எவர்கள் (தங்கள் பாவத்திற்காக கைசேதப்பட்டு அதிலிருந்து) விலகி, நற்செயல்களையும் செய்து, அல்லாஹ்வை (அவனுடைய கட்டளைகளை) உறுதியாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகக் கலப்பற்றதாகவும் ஆக்கி வைக்கின்றார்களோ அவர்கள் உண்மை நம்பிக்கையாளர்களுடன் தான் (நேசமாக) இருப்பார்கள். இத்தகைய உண்மை நம்பிக்கையாளர் களுக்கு (மறுமையில்) அல்லாஹ் மகத்தான (நற்)கூலியை அளிப்பான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪௬)
Tafseer
௧௪௭

مَا يَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْۗ وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِيْمًا ۔ ١٤٧

mā yafʿalu
مَّا يَفْعَلُ
என்ன?/செய்வான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
biʿadhābikum
بِعَذَابِكُمْ
உங்களை வேதனை செய்வது கொண்டு
in shakartum
إِن شَكَرْتُمْ
நீங்கள் நன்றி செலுத்தினால்
waāmantum
وَءَامَنتُمْۚ
இன்னும் நீங்கள் நம்பிக்கை கொண்டால்
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
shākiran
شَاكِرًا
நன்றியாளனாக
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப் போகிறான்? அல்லாஹ்வோ (நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலி கொடுப்பவனாகவும், யாவையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪௭)
Tafseer
௧௪௮

۞ لَا يُحِبُّ اللّٰهُ الْجَهْرَ بِالسُّوْۤءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ ۗ وَكَانَ اللّٰهُ سَمِيْعًا عَلِيْمًا ١٤٨

lā yuḥibbu
لَّا يُحِبُّ
விரும்ப மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-jahra
ٱلْجَهْرَ
பகிரங்கப்படுத்தி பேசுவதை
bil-sūi
بِٱلسُّوٓءِ
தீமையை
mina l-qawli
مِنَ ٱلْقَوْلِ
பேச்சில்
illā man
إِلَّا مَن
தவிர/எவர்
ẓulima
ظُلِمَۚ
அநீதி இழைக்கப்பட்டார்
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
samīʿan
سَمِيعًا
நன்குசெவியுறுபவனாக
ʿalīman
عَلِيمًا
நன்கறிபவனாக
அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ் செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪௮)
Tafseer
௧௪௯

اِنْ تُبْدُوْا خَيْرًا اَوْ تُخْفُوْهُ اَوْ تَعْفُوْا عَنْ سُوْۤءٍ فَاِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا قَدِيْرًا ١٤٩

in tub'dū
إِن تُبْدُوا۟
நீங்கள்வெளிப்படுத்தினால்
khayran
خَيْرًا
நன்மையை
aw
أَوْ
அல்லது
tukh'fūhu
تُخْفُوهُ
நீங்கள் மறைத்தால்/அதை
aw
أَوْ
அல்லது
taʿfū
تَعْفُوا۟
நீங்கள் மன்னித்தால்
ʿan sūin
عَن سُوٓءٍ
ஒரு கெடுதியை
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
ʿafuwwan
عَفُوًّا
பெரிதும் பிழை பொறுப்பவனாக
qadīran
قَدِيرًا
பேராற்றலுடையவனாக
(ஒருவருக்குச் செய்யும்) நன்மையை நீங்கள் வெளியாக்கினாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீங்கை நீங்கள் மன்னித்து விட்டாலும் (அது உங்களுக்கே மிக நன்று. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪௯)
Tafseer
௧௫௦

اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِهٖ وَيُرِيْدُوْنَ اَنْ يُّفَرِّقُوْا بَيْنَ اللّٰهِ وَرُسُلِهٖ وَيَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍۙ وَّيُرِيْدُوْنَ اَنْ يَّتَّخِذُوْا بَيْنَ ذٰلِكَ سَبِيْلًاۙ ١٥٠

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yakfurūna
يَكْفُرُونَ
நிராகரிக்கிறார்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
warusulihi
وَرُسُلِهِۦ
இன்னும் அவனுடைய தூதர்களை
wayurīdūna
وَيُرِيدُونَ
இன்னும் நாடுகிறார்கள்
an yufarriqū
أَن يُفَرِّقُوا۟
அவர்கள் பிரிவினை செய்வது
bayna
بَيْنَ
இடையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
warusulihi
وَرُسُلِهِۦ
இன்னும் அவனுடைய தூதர்களை
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
nu'minu
نُؤْمِنُ
நம்பிக்கை கொள்வோம்
bibaʿḍin
بِبَعْضٍ
சிலரை
wanakfuru
وَنَكْفُرُ
இன்னும் நிராகரிப்போம்
bibaʿḍin
بِبَعْضٍ
சிலரை
wayurīdūna
وَيُرِيدُونَ
இன்னும் நாடுகிறார்கள்
an yattakhidhū
أَن يَتَّخِذُوا۟
அவர்கள் ஏற்படுத்த
bayna
بَيْنَ
மத்தியில்
dhālika
ذَٰلِكَ
அதற்கு
sabīlan
سَبِيلًا
ஒரு பாதையை
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்துவிடக் கருதி (தூதர் களில்) "சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" எனவும் கூறி (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த விரும்புகின்றார்களோ, ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫௦)
Tafseer