Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௪௮

Qur'an Surah An-Nisa Verse 148

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ لَا يُحِبُّ اللّٰهُ الْجَهْرَ بِالسُّوْۤءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ ۗ وَكَانَ اللّٰهُ سَمِيْعًا عَلِيْمًا (النساء : ٤)

lā yuḥibbu
لَّا يُحِبُّ
(Does) not love
விரும்ப மாட்டான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
l-jahra
ٱلْجَهْرَ
the public mention
பகிரங்கப்படுத்தி பேசுவதை
bil-sūi
بِٱلسُّوٓءِ
of [the] evil
தீமையை
mina l-qawli
مِنَ ٱلْقَوْلِ
[of] [the] words
பேச்சில்
illā man
إِلَّا مَن
except (by the one) who
தவிர/எவர்
ẓulima
ظُلِمَۚ
has been wronged
அநீதி இழைக்கப்பட்டார்
wakāna
وَكَانَ
And is
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
samīʿan
سَمِيعًا
All-Hearing
நன்குசெவியுறுபவனாக
ʿalīman
عَلِيمًا
All-Knowing
நன்கறிபவனாக

Transliteration:

Laa yuhibbullaahul jahra bis sooo'i minal qawli illaa man zulim; wa kaanallaahu Samee'an 'Aleeman (QS. an-Nisāʾ:148)

English Sahih International:

Allah does not like the public mention of evil except by one who has been wronged. And ever is Allah Hearing and Knowing. (QS. An-Nisa, Ayah ௧௪௮)

Abdul Hameed Baqavi:

அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ் செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௪௮)

Jan Trust Foundation

அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அநீதியிழைக்கப்பட்டவரைத் தவிர (மற்றவர் எவரும் தனக்கு இழைக்கப்பட்ட) பேச்சில் தீமையைப் பகிரங்கப்படுத்தி பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, நன்கறிபவனாக இருக்கிறான்.