Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 14

An-Nisa

(an-Nisāʾ)

௧௩௧

وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِيَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ۗوَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَكَانَ اللّٰهُ غَنِيًّا حَمِيْدًا ١٣١

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ் விற்குரியனவே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
எவை/வானங்களில்
wamā
وَمَا
இன்னும் எவை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۗ
பூமியில்
walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
waṣṣaynā
وَصَّيْنَا
உபதேசித்தோம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களுக்கு
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
min qablikum
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
wa-iyyākum
وَإِيَّاكُمْ
இன்னும் உங்களுக்கு
ani ittaqū
أَنِ ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
wa-in takfurū
وَإِن تَكْفُرُوا۟
நீங்கள் நிராகரித்தால்
fa-inna lillahi
فَإِنَّ لِلَّهِ
நிச்சயமாக அல்லாஹ்விற்கு
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
எவை/வானங்களில்
wamā
وَمَا
இன்னும் எவை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ghaniyyan
غَنِيًّا
நிறைவானவனாக, மகா செல்வனாக
ḥamīdan
حَمِيدًا
புகழுக்குரியவனாக
(ஏனென்றால்) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்குரியனவே! (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் "அல்லாஹ் ஒருவனுக்கே பயப்படுங்கள்" என்றே நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். ஆகவே (அவனுக்கு) நீங்கள் மாறுசெய்தால் (அதனால் அவனுக்கொன்றும் நஷ்டமில்லை.) நிச்சயமாக வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்குரியனவாகவே இருக்கின்றன. அல்லாஹ் தேவையற்ற வனாகவும், (அனைவராலும்) புகழப்பட்டவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩௧)
Tafseer
௧௩௨

وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ۗوَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا ١٣٢

walillahi mā
وَلِلَّهِ مَا
அல்லாஹ்விற்கே உரியன/எவை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wamā fī
وَمَا فِى
இன்னும் எவை
l-arḍi
ٱلْأَرْضِۚ
பூமியில்
wakafā
وَكَفَىٰ
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
wakīlan
وَكِيلًا
பொறுப்பாளனாக
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (இவற்றிலுள்ள எதனைக் கொண்டும் உங்களுக்கு உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமான பொறுப்பாளியாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩௨)
Tafseer
௧௩௩

اِنْ يَّشَأْ يُذْهِبْكُمْ اَيُّهَا النَّاسُ وَيَأْتِ بِاٰخَرِيْنَۗ وَكَانَ اللّٰهُ عَلٰى ذٰلِكَ قَدِيْرًا ١٣٣

in yasha
إِن يَشَأْ
அவன் நாடினால்
yudh'hib'kum
يُذْهِبْكُمْ
போக்கி விடுவான்/உங்களை
ayyuhā l-nāsu
أَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே
wayati
وَيَأْتِ
இன்னும் வருவான்
biākharīna
بِـَٔاخَرِينَۚ
மற்றவர்களைக் கொண்டு
wakāna
وَكَانَ
இன்னும் இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
dhālika
ذَٰلِكَ
அது
qadīran
قَدِيرًا
பேராற்றலுடையவனாக
மனிதர்களே! அவன் விரும்பினால் உங்களை அழித்து (உங்களுக்குப் பதிலாக) வேறு மனிதர்களைக் கொண்டு வந்து விடுவான். அல்லாஹ் இவ்வாறு செய்ய ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩௩)
Tafseer
௧௩௪

مَنْ كَانَ يُرِيْدُ ثَوَابَ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۗوَكَانَ اللّٰهُ سَمِيْعًاۢ بَصِيْرًا ࣖ ١٣٤

man kāna
مَّن كَانَ
எவர்/இருந்தார்
yurīdu
يُرِيدُ
நாடுகிறார்
thawāba
ثَوَابَ
பலனை
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலகத்தின்
faʿinda l-lahi
فَعِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
thawābu
ثَوَابُ
பலன்
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலகத்தின்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِۚ
இன்னும் மறுமையின்
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
samīʿan
سَمِيعًۢا
நன்கு செவியுறுபவனாக
baṣīran
بَصِيرًا
உற்று நோக்குபவனாக
(நம்பிக்கையாளர்களே!) இம்மையின் பலனை மட்டும் எவன் விரும்புவான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை மற்றும் மறுமையின் பலன் இருக்கின்றது. அல்லாஹ் (ஒவ்வொருவரின் பிரார்த்தனை யையும்) செவியுறுபவனாகவும், (ஒவ்வொருவரின் உள்ளத்தையும்) உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩௪)
Tafseer
௧௩௫

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَاۤءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ ۚ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَاۗ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ۚ وَاِنْ تَلْوٗٓا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا ١٣٥

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
kūnū
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
qawwāmīna
قَوَّٰمِينَ
நிலைநிறுத்துபவர்களாக
bil-qis'ṭi
بِٱلْقِسْطِ
நீதத்தை
shuhadāa
شُهَدَآءَ
சாட்சி கூறுபவர்களாக
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்காக
walaw
وَلَوْ
இருப்பினும்
ʿalā
عَلَىٰٓ
எதிராக
anfusikum
أَنفُسِكُمْ
உங்களுக்கு
awi
أَوِ
அல்லது
l-wālidayni
ٱلْوَٰلِدَيْنِ
பெற்றோருக்கு
wal-aqrabīna
وَٱلْأَقْرَبِينَۚ
இன்னும் உறவினர்களுக்கு
in yakun
إِن يَكُنْ
அவர் இருந்தால்
ghaniyyan
غَنِيًّا
ஒரு செல்வந்தனாக
aw
أَوْ
அல்லது
faqīran
فَقِيرًا
ஓர் ஏழையாக
fal-lahu
فَٱللَّهُ
அல்லாஹ்
awlā
أَوْلَىٰ
மிக ஏற்றமானவன்
bihimā
بِهِمَاۖ
அவ்விருவருக்கும்
falā tattabiʿū
فَلَا تَتَّبِعُوا۟
பின்பற்றாதீர்கள்
l-hawā
ٱلْهَوَىٰٓ
ஆசைகளை
an taʿdilū
أَن تَعْدِلُوا۟ۚ
நீங்கள் நீதி செலுத்துவதில்
wa-in talwū
وَإِن تَلْوُۥٓا۟
நீங்கள் மாற்றினால்
aw
أَوْ
அல்லது
tuʿ'riḍū
تُعْرِضُوا۟
புறக்கணித்தால்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
bimā
بِمَا
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
khabīran
خَبِيرًا
ஆழ்ந்தறிந்தவனாக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தைக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் (உண்மையையே கூறுங்கள். ஏனென்றால்) அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன். ஆகவே, நீங்கள் (உங்கள்) ஆசை (அபிலாஷை)களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்! (பரிவு அல்லது குரோதத்தை முன்னிட்டு) நீங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (சாட்சி) கூற மறுத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய (இத்தவறான) செயலை நன்கறிந்து கொள்வான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩௫)
Tafseer
௧௩௬

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِيْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِيْٓ اَنْزَلَ مِنْ قَبْلُ ۗوَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰۤىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا ۢ بَعِيْدًا ١٣٦

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
āminū
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
warasūlihi
وَرَسُولِهِۦ
இன்னும் அவனின் தூதரை
wal-kitābi alladhī
وَٱلْكِتَٰبِ ٱلَّذِى
இன்னும் வேதத்தை/எது
nazzala
نَزَّلَ
இறக்கினான்
ʿalā
عَلَىٰ
மீது
rasūlihi
رَسُولِهِۦ
தன் தூதர்
wal-kitābi
وَٱلْكِتَٰبِ
இன்னும் வேதத்தை
alladhī
ٱلَّذِىٓ
எது
anzala
أَنزَلَ
இறக்கினான்
min qablu
مِن قَبْلُۚ
முன்னர்
waman
وَمَن
எவர்
yakfur
يَكْفُرْ
நிராகரிப்பார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wamalāikatihi
وَمَلَٰٓئِكَتِهِۦ
இன்னும் அவனின் வானவர்களை
wakutubihi
وَكُتُبِهِۦ
இன்னும் அவனின் வேதங்களை
warusulihi
وَرُسُلِهِۦ
இன்னும் அவனின் தூதர்களை
wal-yawmi
وَٱلْيَوْمِ
இன்னும் நாளை
l-ākhiri
ٱلْءَاخِرِ
மறுமை
faqad
فَقَدْ
திட்டமாக
ḍalla
ضَلَّ
வழிகெட்டார்
ḍalālan
ضَلَٰلًۢا
வழிகேடாக
baʿīdan
بَعِيدًا
தூரமானது
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்னுடைய (இத்)தூதர் மீது அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில்தான் செல்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩௬)
Tafseer
௧௩௭

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ يَكُنِ اللّٰهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيْلًاۗ ١٣٧

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
thumma
ثُمَّ
பிறகு
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
thumma
ثُمَّ
பிறகு
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
thumma
ثُمَّ
பிறகு
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
thumma
ثُمَّ
பிறகு
iz'dādū
ٱزْدَادُوا۟
அதிகப்படுத்தினார்கள்
kuf'ran
كُفْرًا
நிராகரிப்பை
lam yakuni
لَّمْ يَكُنِ
இருக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyaghfira
لِيَغْفِرَ
அவன் மன்னிப்பதற்கு
lahum
لَهُمْ
அவர்களை
walā
وَلَا
இன்னும் இல்லை
liyahdiyahum
لِيَهْدِيَهُمْ
நேர்வழிகாட்டுவதற்கு/அவர்களை
sabīlan
سَبِيلًۢا
ஒரு வழியை
எவர்கள், நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்து, பின்னர் நம்பிக்கை கொண்டு (அதன்) பின்னரும் நிராகரித்து (அந்த) நிராகரிப்பையே மென்மேலும் அதிகரிக்கின்றார்களோ அவர்(களின் குற்றங்)களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பதில்லை. அன்றி, (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) அவர்களை நேரான பாதையில் செலுத்தவுமாட்டான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩௭)
Tafseer
௧௩௮

بَشِّرِ الْمُنٰفِقِيْنَ بِاَنَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًاۙ ١٣٨

bashiri
بَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களுக்கு
bi-anna
بِأَنَّ
நிச்சயமாக/என்று
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனை
alīman
أَلِيمًا
துன்புறுத்துகின்ற
(நபியே!) "இத்தகைய நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக உண்டு" என்று நீங்கள் அவர்களுக்கு நற்செய்தி கூறுங்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩௮)
Tafseer
௧௩௯

ۨالَّذِيْنَ يَتَّخِذُوْنَ الْكٰفِرِيْنَ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ۗ اَيَبْتَغُوْنَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَاِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًاۗ ١٣٩

alladhīna yattakhidhūna
ٱلَّذِينَ يَتَّخِذُونَ
எவர்கள்/எடுத்துக் கொள்கிறார்கள்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
awliyāa
أَوْلِيَآءَ
பாதுகாவலர்களாக
min dūni
مِن دُونِ
அன்றி
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَۚ
நம்பிக்கையாளர்களை
ayabtaghūna
أَيَبْتَغُونَ
தேடுகின்றார்களா?
ʿindahumu
عِندَهُمُ
அவர்களிடம்
l-ʿizata
ٱلْعِزَّةَ
கண்ணியத்தை
fa-inna l-ʿizata
فَإِنَّ ٱلْعِزَّةَ
நிச்சயமாக கண்ணியம்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
jamīʿan
جَمِيعًا
அனைத்தும்
இவர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களையே (தங்கள்) நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை(யடைய) விரும்புகின்றார்களா? நிச்சயமாக கண்ணியங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (அவர்களுக்குரியனவல்ல.) ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩௯)
Tafseer
௧௪௦

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُ بِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِيْ حَدِيْثٍ غَيْرِهٖٓ ۖ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ ۗ اِنَّ اللّٰهَ جَامِعُ الْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِيْ جَهَنَّمَ جَمِيْعًاۙ ١٤٠

waqad nazzala
وَقَدْ نَزَّلَ
இறக்கி விட்டான்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
வேதத்தில்
an
أَنْ
என்று
idhā samiʿ'tum
إِذَا سَمِعْتُمْ
நீங்கள் செவியுற்றால்
āyāti
ءَايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yuk'faru
يُكْفَرُ
நிராகரிக்கப்படுகிறது
bihā
بِهَا
அவற்றை
wayus'tahza-u
وَيُسْتَهْزَأُ
இன்னும் பரிகசிக்கப்படுகிறது
bihā
بِهَا
அவற்றை
falā taqʿudū
فَلَا تَقْعُدُوا۟
உட்காராதீர்கள்
maʿahum
مَعَهُمْ
அவர்களுடன்
ḥattā
حَتَّىٰ
வரை
yakhūḍū
يَخُوضُوا۟
ஈடுபடுவார்கள்
fī ḥadīthin
فِى حَدِيثٍ
பேச்சில்
ghayrihi
غَيْرِهِۦٓۚ
அது அல்லாத வேறு
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
idhan
إِذًا
அப்போது
mith'luhum
مِّثْلُهُمْۗ
அவர்களைப் போன்று
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
jāmiʿu
جَامِعُ
ஒன்று சேர்ப்பான்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களை
wal-kāfirīna
وَٱلْكَٰفِرِينَ
இன்னும் நிராகரிப்பவர்களை
fī jahannama
فِى جَهَنَّمَ
நரகத்தில்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪௦)
Tafseer