Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௪௦

Qur'an Surah An-Nisa Verse 140

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُ بِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِيْ حَدِيْثٍ غَيْرِهٖٓ ۖ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ ۗ اِنَّ اللّٰهَ جَامِعُ الْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِيْ جَهَنَّمَ جَمِيْعًاۙ (النساء : ٤)

waqad nazzala
وَقَدْ نَزَّلَ
And surely He has revealed
இறக்கி விட்டான்
ʿalaykum
عَلَيْكُمْ
to you
உங்கள் மீது
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
in the Book
வேதத்தில்
an
أَنْ
that
என்று
idhā samiʿ'tum
إِذَا سَمِعْتُمْ
when you hear
நீங்கள் செவியுற்றால்
āyāti
ءَايَٰتِ
(the) Verses
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
yuk'faru
يُكْفَرُ
being rejected
நிராகரிக்கப்படுகிறது
bihā
بِهَا
[it]
அவற்றை
wayus'tahza-u
وَيُسْتَهْزَأُ
and ridiculed
இன்னும் பரிகசிக்கப்படுகிறது
bihā
بِهَا
at [it]
அவற்றை
falā taqʿudū
فَلَا تَقْعُدُوا۟
then do not sit
உட்காராதீர்கள்
maʿahum
مَعَهُمْ
with them
அவர்களுடன்
ḥattā
حَتَّىٰ
until
வரை
yakhūḍū
يَخُوضُوا۟
they engage
ஈடுபடுவார்கள்
fī ḥadīthin
فِى حَدِيثٍ
in a conversation
பேச்சில்
ghayrihi
غَيْرِهِۦٓۚ
other than that
அது அல்லாத வேறு
innakum
إِنَّكُمْ
Indeed you
நிச்சயமாக நீங்கள்
idhan
إِذًا
then
அப்போது
mith'luhum
مِّثْلُهُمْۗ
(would be) like them
அவர்களைப் போன்று
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
jāmiʿu
جَامِعُ
will gather
ஒன்று சேர்ப்பான்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
the hypocrites
நயவஞ்சகர்களை
wal-kāfirīna
وَٱلْكَٰفِرِينَ
and the disbelievers
இன்னும் நிராகரிப்பவர்களை
fī jahannama
فِى جَهَنَّمَ
in Hell
நரகத்தில்
jamīʿan
جَمِيعًا
all together
அனைவரையும்

Transliteration:

Wa qad nazzala 'alaikum fil Kitaabi an izaa sami'tum Aayaatil laahi yukfaru bihaa wa yustahza u bihaa falaa taq'udoo ma'ahum hattaa yakhoodoo fee hadeesin ghairih; innakum izam misluhum; innal laaha jaami'ul munaafiqeena wal kaafireena fee jahannama jamee'aa (QS. an-Nisāʾ:140)

English Sahih International:

And it has already come down to you in the Book [i.e., the Quran] that when you hear the verses of Allah [recited], they are denied [by them] and ridiculed; so do not sit with them until they enter into another conversation. Indeed, you would then be like them. Indeed, Allah will gather the hypocrites and disbelievers in Hell all together – (QS. An-Nisa, Ayah ௧௪௦)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௪௦)

Jan Trust Foundation

(முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் செவியுற்றால் (அவ்வாறு செய்யும்) அவர்கள் அது அல்லாத வேறு பேச்சில் ஈடுபடும்வரை அவர்களுடன் உட்காராதீர்கள். (அவ்வாறு உட்கார்ந்தால்) அப்போது நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்). என்று (அல்லாஹ்) உங்கள் மீது வேதத்தில் (சட்டத்தை) இறக்கி விட்டான். நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்கள், நிராகரிப்பவர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்ப்பான்.